சிறிலங்கா படையினரின் தாக்குதலால் காயமடைந்தோரை கப்பலில் கொண்டு செல்லும் முயற்சி தடை

சிறிலங்கா படையினரின் எறிகணை, பல்குழல் வெடிகணை, வான் தாக்குதல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் காயமடைந்த பொதுமக்களை கப்பலில் கொண்டு செல்ல அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இன்று மேற்கொண்ட முயற்சி சிறிலங்கா படையினரின் தாக்குதலினால் தடைப்பட்டுள்ளது.
காயமடைந்தோரை மேலதிக சிகிச்சைக்காக கப்பல் மூலம் யாழ்ப்பாணத்துக்கும் புல்மோட்டைக்கும் கொண்டு செல்வதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் முயற்சியை மேற்கொண்டது.

மாத்தளன் கடற்கரையில் இருந்து நோயாளர்களை ஏற்றிச் செல்வதற்காக அந்த இடத்தை தெரிவு செய்து அதனை அறிவிப்பதற்கு கடற்கரைப் பகுதிக்கு இன்று திங்கட்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் சென்ற போது சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலை அடுத்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரி அந்த இடத்தில் இருந்து தப்பியோடி வந்து விட்டார்.

அத்துடன், சிறிலங்கா அரசாங்கம் அனைத்துல செஞ்சிலுவைச் சங்கத்தினை வன்னியை விட்டு வெறியேற வேண்டும் என உத்தரவிட்டதனையடுத்து அவர்களும் இன்று வன்னியை விட்டு

கப்பலில் வெளியேற இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா படையினரின் தாக்குதலால் காயமடைந்தோரை கப்பலில் கொண்டு செல்லும் முயற்சி தடைSocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்