இடைத்தங்கல் முகாமில் பாலியல் கொடுமைகள் : வெளிக்கொணருகிறது மற்றுமொரு சர்வதேச ஊடகமான Sky News
பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப்பிரதேசத்திற்கு வந்த தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் நடைபெறும் கொடுமைகள் பற்றி மற்றுமொரு சர்வதேச ஊடகம் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. பிரித்தானியாவின் Chanel4 தொலைக்காட்சிச் சேவை முதல் தடவையாக இடைத்தங்கல் முகாம்களில் வதியும் மக்களின் துயரங்களைப் பதிவு செய்தது.அதைத் தொடர்ந்து அந்தச் செய்திச் சேவையின் செய்தியாளர்கள் சிறிலங்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டார்கள்.
தற்போது மற்றுமொரு பிரபல சர்வதேசம் ஊடகமாகிய SkyNews இடைத்தங்கல் முகாம் கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.ஸ்கை நியூஸ் செய்தி சேவையின் ஆசிய பிராந்தியத்துக்கான நிருபர் அலெக்ஸ் க்ரௌவ்போர்ட் (Alex Crawford) தனது ஆய்வறிக்கையில் மோதல்களினால் இடம்பெயர்ந்து வந்து, இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களில், பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம் இளைஞர்கள் தனியாக கொண்டு செல்லப்படுதல் என்பவை நடைபெறுவதாக அவை குறித்து ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
தமது வீடுகளை இழந்து சுமார் இரண்டு இலட்சத்துக்கு அதிகமான மக்கள் 40 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கட்டுள்ள போதும், அவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தனித்தனியாக பிரிக்கப்படுகின்றனர். என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இம்மக்களுடன் விடுதலை புலிகளின் போராளிகள் கலந்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுவதாகவும் தெரிவித்த அவர், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணியை பேட்டி எடுத்த போது,
பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதும், இளைஞர்கள் காணாமற் போவதும் நடைபெறுவதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.பாதிப்புக்குள்ளானவர்களுக்கு என்ன நடைபெறுகிறது என்பது தொடர்பாக எமக்கு தெரிவதில்லை. காரணம் அவர்களை பற்றி தகவல்கள் எதுவும் கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை சர்வதேச தொண்டு நிறுவனங்களில் ஒன்றான 'ஒக்ஸ்பாம்' (Oxfam) இன் தலைமை அதிகாரியான டேவிட் தெரிவிக்கையில் எம்மால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிப்பொருட்கள் வழங்குவதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விடுதலை புலிகளின் ஆதரவாளர்களாக இருப்பவர்களுக்கு NGO தொண்டு நிறுவன ஊழியர்கள் கரிசனை காட்டுவதாக எம்மீது மறைமுகமாக குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.
இடைத்தங்கல் முகாம்களில் சிறுவர் துஷ்பிரயோகம் நடைபெறுவது தொடர்பாக, அலெக்ஸ், அரசாங்க பத்திரிகையாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பிய போது, இடைத்தங்கல் முகாம்களில் (Blue - eyed) சிறுவர்கள் இருப்பதாகவும், தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு, இது மகிழ்ச்சிகரமானதாக இருக்கலாம், அப்படியாயின் இம்முகாம்களில் நடைபெறும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பு அவர்களே எனவும் அரசாங்க தரப்பால் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது
இடைத்தங்கல் முகாமில் பாலியல் கொடுமைகள் : வெளிக்கொணருகிறது மற்றுமொரு சர்வதேச ஊடகமான Sky News
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
தொடர்புடைய இடுக்கைகள்:'மக்கள் பாதுகாப்பு வலயம்' கொலைக்களமாக எரிந்து கொண்டிருக்கிறது: அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன்
'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் அப்பகுதியில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அப்பகுதி தொடர்ந்தும் எரிந்து கொண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் பரப்புரைப் பேச்சாளர் திலீபன் தெரிவித்துள்ளார்.வன்னியில் உள்ள தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டுமாயின் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் இது தங்களது கடைசி வேண்டுகோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை மிகச்செறிவான ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களையும் வெள்ளைப் பொஸ்பரஸ் அடங்கிய இரசாயன ஆயுதங்களையும் கொண்டு தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. இதனால் 'மக்கள் பாதுகாப்பு வலய'ப் பகுதி தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கிறது.
உயிரிழந்த மக்களின் உடலங்கள் வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன. படுகாயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்கான எந்தவித வசதியும் இங்கு இல்லை. மருத்துவமனைகள் அற்ற நிலையிலும் மருத்துவ வசதிகள் அற்ற நிலையிலும் படுகாயமடைந்த மக்கள் வீதிகளில் கிடந்தவாறு கெஞ்சி அழுதவண்ணம் உள்ளனர். ஆனால் எந்த வசதியும் அற்ற நிலையில் அவர்களுக்கு எதுவுமே செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.
இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் கொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.இங்குள்ள ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேரை காப்பாற்ற வேண்டுமாயின் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இதனை எமது கடைசி வேண்டுகோளாகக் கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர்.
செய்திகள்: புதினம்
'மக்கள் பாதுகாப்பு வலயம்' கொலைக்களமாக எரிந்து கொண்டிருக்கிறது: அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
தொடர்புடைய இடுக்கைகள்:ஒரே இரவில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை!: பீரங்கிக் குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம்
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நோக்கி சிறிலங்கா படையினா நேற்றிரவு தொடக்கம் நடத்திய உச்சகட்ட கோரத் தாக்குதலில் 1,112-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட பகுதிகளை நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு 7:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் சகலவிதமான நாசகார ஆயுதங்களையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருவதாக வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இத்தாக்குதலினால் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் தூங்கிக்கொண்டிருந்த பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்தும் உள்ளனர்.பெருமளவிலான மக்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் காணப்படுகின்றன. காயமடைந்தவர்களில் பலர் காயங்களுடன் தரையில் கிடந்தவாறு தங்களைக் காப்பாற்றுமாறு அவலக்குரல் எழுப்புவதாகவும் 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அத்துடன் வீதி, வீதியாக மக்களின் உடலங்கள் காணப்படுவதாகவும் மீட்க முடியாத அளவுக்கு சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள் தொடர்ச்சியாகவும் தீவிரவமாகவும் இருக்கின்றது எனவும் காயமடைந்தவர்களை எடுத்துச் செல்வதற்கு பணியாளர்கள் எவரும் இல்லை என்றும் 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.இதுவரையில் 1,112 பேரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் இருப்பதால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000-க்கும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.முள்ளிவாய்க்காலில் இயங்கும் தற்காலிக மருத்துவமனைக்கு காயமடைந்த நிலையில் 814 பேர் இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் 112 சிறுவர்களும் அடங்குவதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ அத்தியகட்சகர் வீரகத்தி சண்முகராஜா தெரிக்கின்றார்.
மருத்தவமனைக்கு கொண்டுவரப்பட்ட 257 உடலங்களில் 67 பேர் சிறுவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.இதேவேளையில் சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் நட்டாங்கண்டல் மருத்துவமனையும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
செய்திகள் : புதினம்
ஒரே இரவில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை!: பீரங்கிக் குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
தொடர்புடைய இடுக்கைகள்:பிரித்தானியாவின் Channel - 4 சேவையில் வவுனியா முகாம்கள் தொடர்பான செய்திகள்
பிரித்தானியாவின் Channel - 4 தெலைக்காட்சிச் சேவையில் இன்று இடம்பெற்ற செய்திக் கண்ணோட்டத்தில் வவுனியாவின் முகாம்கள் தொடர்பாகவும் அங்குள்ள பணியாளர்கள் தெரிவித்த செய்திகளையும் தொகுத்து வழங்கியிருந்தனர்.
வவுனியாவின் வடக்குப்பகுதியிலுள்ள இடம் பெயர்ந்த தமிழ் அகதிகள் தடுப்பு முகாமிலிருந்து பிரித்தானிய Channel - 4 தொலைக் காட்சிச் சேவைக்குக் கிடைத்த செய்திகள் பிரகாரம் இளம் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவிற்கு உள்ளாவதக தெரியவருகிறது.அரசு சாரா ஊடகவியளார்கள் சுதந்திரமாக அனுமதிக்கப்படாத நிலையில், ஒளிப்படக் கருவியை மறைத்துவைத்து முகாமிற்குள் நுளைந்த Channel - 4 செய்தியாளர் ஒருவர் முதல் தடவையாக சுதந்திரமாக சில செய்திகளை ஆவணப்படுத்தியுள்ளார்.இச்செய்தி ஒளிப்பதிவானது முதல் தடவையாக சுதந்திரமாகப் பதிவுசெய்யப்பட்ட செய்தியென Channel - 4 கூறுகிறது.
நிக் பட்டனின் இச் செய்தி அறிக்கையின் படி இளம் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவது தவிர, இறந்த உடல்கள் முகாம்களுள் வெளியான இடங்கள் நாட்கணக்கில் கவனிப்பாரற்றுக் கிடப்பதாகவும் மேலும் கூறும் சனல் 4 செய்திகள் இம்முகாம்களில் எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை என மேலும் தெரிவிக்கிறது. தன்னை அடையாளம் காட்டவிரும்பாத உதவி அமைப்பாளர் ஒருவர், தனது முகாமில் நான்கு இறந்த உடல்கள் மூன்று நான்கு நாட்களாக கவனிப்பரற்றுக் கிடந்ததாகக் குறிப்பிடுகிறார்.
பிள்ளைகளுக்கு உணவு வழங்கமுடியாத தாய்மாரைப் காண்பதாகக் கூறும் இவர், ஒரு தாய் இரண்டு கரண்டி பாலுக்காக தன்னிடம் கெஞ்சி மன்றாடியதாகவும் குறிப்பிடுகிறார்.பல குழந்தைகள் தாய் தந்தையர் இல்லாமல் தவிக்கவிடப்பட்டுள்ளதாக முகாம் வாசி ஒருவர் குறிப்பிடுகிறார். இங்கு எமக்கு வாழ்க்கையில்லை இது ஒரு சிறைச்சாலை என மேலும் குறிப்பிடுகிறார்.உணவிற்காக நெரிசலில் சிக்குண்டு இறந்து போன இரு சிறார்களைப் பார்த்ததாக மேலும் சாட்சியமளிக்கும் இவர், புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வந்த தமிழர்களை மிரட்டுவதே அரசின் நோக்கம் எனவும் குறிப்பிடுகிறார்.
ஒரு பெண் உதவிப் பணியாளர் சாட்சியமளிக்கையில் இளம் பெண்கள் இராணுவத்தால் பிரித்தெடுக்கப்பட்டு, பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறுகிறார். முகாம்களிலிருந்து தனிமைப்படுத்தப்படும் பெரும்பாலனவர்க மீண்டும் திரும்புவதில்லை எனக் குறிப்பிடுகின்றார்.பெண்கள் எல்லோர் முன்னிலையிலும் குளிக்கவேண்டிய நிலையிலிருப்பதாகவும் இது அவர்களின் மிகப் பெரும் பாதுகாப்புப் பிரச்சனையாக இருப்பதாகவும் தெரிவிக்கும் இச்செய்தி நேற்று குளியற் பகுதியில் மூன்று பெண்களின் இறந்த உடல்கள் காணப்பட்டதாகவும் கூறுகிறது.
இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என லண்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.
எழுத்துருவில் : இனியொரு...
பிரித்தானியாவின் Channel - 4 சேவையில் வவுனியா முகாம்கள் தொடர்பான செய்திகள்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: News, அவலம், ஒளிக்காட்சிகள்
தொடர்புடைய இடுக்கைகள்:பிரித்தானியாவில் அவசரகால கவனயீர்ப்புப் போராட்டம்
சிங்கள அரச பயங்கரவாத படைகள் உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட இரசாயன படைக்கருவிகளுடன் 160.000 க்கு மேற்ப்பட்ட எமது உறவுகள் மீது எந்த நேரமும் தாக்குதல் நடாத்த தாயாராகிவரும் இந்த காலப்பகுதியை பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழீழமக்கள் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர்.
எனவே இக்காலப்பகுதியில் சகலவிதமான களியாட்ட விழாக்களையும் முற்றாக புறக்கணித்து எமது சகல நேரங்களையும் எமது உறவுகளை காக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவோம். எமது கவனயீர்ப்பு நிகழ்வுகளின் எதிரொலியாகவே மேற்கத்தேய நாடுகள் சில சிறிலங்கா அரசின் எமது மக்கள் மீதான இனப்படுகொலையை தடுக்க முயற்சிப்பதாக காட்ட முயல்கின்றனர்.
சிறிலங்கா இனவாத அரசானது எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாது எமது தமிழ் இனம் மீது ஒரு இனப்படுகொலையை நடாத்திக்கொண்டுள்ளது. ஆகவே எமது புலம் பெயர்மக்களின் தொடர்ச்சியான கவனயீர்ப்பு நிகழ்வுகளே மேற்கத்தேய நாடுகளை இதயசுத்தியுடன் இந்த நிகழ்கால உலகின் மிகப்பெரும் மனித அவலத்தை நிறுத்தமுடியும் என்ற எமது அசைக்கமுடியாத நம்பிக்கையுடனேயே இந்த அவசரகால பிரகடனத்தை நாம் செய்துள்ளோம்.
நாம் இங்கே ஒரு அமைதியான நாட்டில் எமது சகல உடல் உறுப்புகளுடனும் வாழ்கின்றோம் ஆனால் எமது உறவுகளின் நிலமை? எல்லோரும் யோசிப்போம் எமது உறவுகளை காப்பாற்ற உடனடியாக செயலாற்றுவோம். சகல களியாட்ட நிகழ்வுகளையும் பிற்போடுவோம் எமக்கு ஒரு காலம் வரும் அப்போது நாம் எல்லோரும் சேர்ந்து எமது களியாட்ட நிகழ்வுகளை கொண்டாடுவோம்.
நாம் இங்கே எந்தவகையான நிகழ்வுகள் களியாட்ட நிகழ்வு என்று கூறவில்லை காரணம் கவனயீர்ப்பு நிகழ்வு தவிர்ந்த சகல நிகழ்வுகளுமே களியாட்டங்கள் தான் உடனே தவிர்த்துகொள்ளுங்கள்.சில இனவிரோதிகள் எமது மக்களின் இன உணர்வை மழுங்கடிப்பதற்காக சில களியாட்ட நிகழ்வுகளை நடாத்த முயற்சிப்பதாகவும் நாம் அறிந்துள்ளோம்.
மக்களே!!
இனவிரோதிகளையும் எமது மக்களின் அவலங்களில் குளிர் காயமுயற்சிப்பவர்களையும் அடையாளம் கண்டு அவர்களை எமது சமூகத்தில் இருந்து புறம்தள்ளுங்கள்.!!!
விழிப்புத் தான் விடுதலையின் வேர்!
பிரித்தானியாவாழ் தமிழீழ மக்கள்.
எனக்குறிப்பிடப்பட்டுள்ள அந்த அழைப்பில் நாளை புதன்கிழமை காலை 7மணிக்கு சீனத்துதரகம் முன்பாகஆரம்பிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். எமது மக்களை சிறிலங்கா அரசின் இனப்படுகொலையில் இருந்து காப்பாற்ற உடன் செயலாற்றுவோம் என மேலும் குறிப்பிட்டுள்ள ஏற்ப்பாட்டாளர்கள் எமது மக்களை காப்பாற்ற ஒன்றுகூடாமல் இருந்துவிட்டு பின் கவலைப்படுவதில் எந்தவித பயனும் இல்லை நாளைநாளை செல்வோம் என கூறாமல் உடனே முதல்நாளே சீனத்துதரகம் முன்ஒன்றுகூடுமாறு அன்பாகவும் கண்டிப்பாகவும் அழைப்புவிடுத்துள்ளனர்.
இடம்: CHINESE EMBASSY, 49-51 PORTLAND PLACE, LONDON. W 1 1JL
அன்மைய தொடருந்து நிலையம் : REGENNTS' PARK & GREAT PORTLAND STREET
காலம் : காலை 7மணி
செய்திகள் : சங்கதி
பிரித்தானியாவில் அவசரகால கவனயீர்ப்புப் போராட்டம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: அவலம், செய்திகள், போராட்டம்
தொடர்புடைய இடுக்கைகள்:முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: நோயாளர்கள் உட்பட 64 பேர் பலி; 87 பேர் காயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளனர்.மக்கள் பாதுகாப்பு வலயமான முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவந்த முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மீது இன்று சனிக்கிழமை காலை 7:00 மணி தொடக்கம் 9:20 நிமிடம் வரை சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை அகோரமாக நடத்தியதாக 'புதினம்' செய்தியாளர் வன்னியில் இருந்து தெரிவிக்கின்றார்.
முதலாவது எறிகணைத் தாக்குதலில் 22 பேரும் இரண்டாவது தடவையாக நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் அதிகமானோரும் கொல்லப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் கூறுகின்றார்.
ஆறுக்கும் அதிகமான எறிகணைகள் மருத்துவமனை மீதும் சூழவுள்ள பகுதிகளிலும் வீழ்ந்து வெடித்தன.இத்தாக்குதலில் ஏற்கனவே காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 87 பேர் காயமடைந்தனர்.கொல்லப்பட்டவர்களில் நோயாளர்கள், நோயாளர்களுக்கு உதவியாக இருந்தவர்கள், வெளியிடங்களில் இருந்து சிகிச்சை பெறவந்த வெளிநோயாளர்கள் என பலரும் அடங்குவர்.
இத்தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டதனை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ அத்தியகட்சகர் வீரகத்தி சண்முகராஜா உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
செய்திகள் : புதினம்
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: நோயாளர்கள் உட்பட 64 பேர் பலி; 87 பேர் காயம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
தொடர்புடைய இடுக்கைகள்:முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது படையினர் கோரத் தாக்குதல்: 278 பொதுமக்கள் பலி; 298 பேர் காயம்
முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை வேளையில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் கடற்படையினரின் பீரங்கித் தாக்குதல்களில் 58 சிறுவர்கள் உட்பட 278 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 298 பேர் காயமடைந்துள்ளனர்.முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் மட்டும் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30 பேர் காயமடைந்திருக்கின்றனர்.
இரட்டைவாய்க்கால், சாளம்பன், முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, இரட்டைப்பனையடி ஆகிய பகுதிகளே சிறிலங்கா படையினரின் ஆட்லறி எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத அவலநிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் நோயாளர்களை ஏற்றிச்செல்லும் கப்பலில் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்கு வந்து அனைத்துலக செஞ்சிலுவை சங்கக் குழுவின் அதிகாரிகள் நிலைமைகளை பார்வையிட்டனர்.பார்வையிட்ட பின்னர் பிற்பகல் 1:30 நிமிடத்துக்கு சென்றதும் பிற்பகல் 3:00 மணியளவில் மருத்துவமனை மீது ஆட்லெறி எறிகணைத் தாக்குதல் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டது.
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு, இரத்த வங்கி, அறுவைச் சிகிச்சைக்கூடப் பகுதியில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர்களில் 19 பேர் கொல்லப்பட்டதுடன் 30 நோயாளர்கள் மேலும் காயமடைந்தனர்.இன்று புதன்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை நடத்தப்பட்ட சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் 58 சிறுவர்கள் உட்பட 278 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 298 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா கடற்படை பீரங்கித்தாக்குதலில் 10 பேர் துறைப் பகுதியில் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் நோயாளர்களை ஏற்றும் ஒழுங்கமைப்பில் ஈடுபடும் கடற்றொழிலாளர் சங்க சமாசத்தின் பொருளாளர் சதாசிவம் நாகராசாவும் உயிரிழந்தார்.மேலும் கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் பல பகுதிகளில் மீட்கப்படாமல் சிதறி கிடப்பதாகவும் அங்கிருந்து கடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனரக போர்க் கலங்களை பயன்படுத்தமாட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக நாடுகளுக்கு உறுதியளித்திருந்தது.ஆனாலும் இத்தாக்குதல்கள் கனரக போர்க் கலங்களை மக்கள் மத்தியில் சிறிலங்கா படையினர் பயன்படுத்துகின்றனர் என்பதை வெளிக்காட்டியுள்ளது.
செய்திகள்: தமிழ்வின்
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது படையினர் கோரத் தாக்குதல்: 278 பொதுமக்கள் பலி; 298 பேர் காயம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
தொடர்புடைய இடுக்கைகள்:24ம் நாளாகத் தொடரும் திரு.பரமேஸ்வரனின் உண்ணாநோன்பு போராட்டம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: News, அவலம், ஒளிக்காட்சிகள், செய்திகள், போராட்டம்
தொடர்புடைய இடுக்கைகள்:இலங்கை இராணுவத்தினரிடம் தஞ்சம் புகுந்த வன்னி மக்களின் அவலநிலை
வன்னியில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான வன்னி மக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சம் அடைந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றார்கள்.இவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்குச் சென்ற இராணுவத்தினர் ஒலிபெருக்கி மூலம் உங்கள் பிள்ளைகள் ஒருநாள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தாலும் தயவு செய்து முன்னரே பதிவு செய்து கொள்ளுங்கள் என உத்தரவிட்டனர்.
அத்துடன் உங்கள் பிள்ளைகளுக்கு எங்களால் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது. உங்கள் பிள்ளைகளை உங்களிடமிருந்து பிரிக்கமாட்டோம். பதிவு செய்யாமல் உங்களின் பிள்ளைகள் யாராவது விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்ததாக எங்களுக்குத் தெரியவரும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்கள்.இதை நம்பிய பெற்றோர் தங்களின் பிள்ளைகளைப் பதிவு செய்தார்கள். பதிவு செய்த பின் பிள்ளகளை பெற்றோருடன் விட்டுச்சென்ற இராணுவத்தினர் மறுநாள் காலையில் அனைத்து முகாமுகளுக்கும் சென்று, விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என பதிவு செய்த ஆண்கள் பெண்கள் என 400 ற்கும் மேற்பட்டவர்களை பலவந்தமாக ஏற்றி சென்றுள்ளனர்.
இவர்களின் நிலை என்ன என்று தெரியாமல் பெற்றோர்கள் தவிக்கின்றார்கள்.
செய்திகள்: தமிழ்வின்
இலங்கை இராணுவத்தினரிடம் தஞ்சம் புகுந்த வன்னி மக்களின் அவலநிலை
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
தொடர்புடைய இடுக்கைகள்:புறப்படுங்கள் தமிழர்களே பிரித்தானிய பாராளுமன்றம் நோக்கி...
கடந்த 21 நாட்களாக பிரித்தானியாவில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பரமேஸ்வரனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சற்றுமுன்னர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரின் இருதயம் துடிக்கும் வேகம் குறைவடைந்துள்ளதாக அறியப்படுகிறது.
பரமேஸ்வரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலையில் பிரித்தானியாவில் பாரிய எதிர்விளைவுகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. மாணவ சமூகம் தற்போது அவர் உண்ணாவிரதமிருக்கும் திடலில் குவிய ஆரம்பித்துள்ளனர். பரமேஸ்வரனின் இதயம் துடிப்பது குறைய ஆரம்பித்திருக்கலாம் ஆனால் அவரின் மன உறுதியும் இ பிரித்தானியா வாழ் தமிழர்களின் உணர்வும் இன்னமும் குறையவில்லை.
21 நாட்களாக ஆகாரமின்றி தன்னை வருத்தி ஈழத்தில் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட இவர் ஏற்றிய தீபம் தற்போது பிரித்தானிய தமிழரிடையே கொளுந்துவிட்டு எரிகின்ற நெருப்பாக மாறியுள்ளது. கடந்த 2 தினங்களாக நீர் அருந்துவதை கூட தவிர்த்துவிட்ட பரமேஸ்வரனின் நிலை இன்று மதியம் கவலையளிக்கும் நிலைக்கு சென்றுள்ளது.
இனியும் நாம் பொறுத்திருந்து என்ன செய்யப்பொகிறோம். ?? புறப்படுங்கள் தமிழர்களே பிரித்தானிய பாராளுமன்றம் நோக்கி...
புறப்படுங்கள் தமிழர்களே பிரித்தானிய பாராளுமன்றம் நோக்கி...
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
தொடர்புடைய இடுக்கைகள்:"மீட்கப்பட்ட மக்கள்"
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மக்கள் மிகப்பெரும் மனித அவலத்தில் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டுள்ளனர் என அந்த இரு இடங்களில் இருந்தும் 'புதினம்' செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக அவர்கள் அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா அரசின் அறிவித்தலின் படி - இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக புள்ளி விபரங்களை காட்டியுள்ளது.ஆனாலும் அவர்களில் பெரும் பகுதியினர் இன்னும் வவுனியாவில் உள்ள நலன்புரி முகாமுக்கு கொண்டுவரப்படவில்லை.இன்னும் பலர் பற்றிய புள்ளி விபரங்கள் மாத்திரமே உள்ளனவே தவிர அவர்களின் நிலை பற்றி சிறிலங்கா அரசு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
இவர்களில் பலர், வவுனியாவில் - ஆள் நடமாட்டம் அற்ற - ஓமந்தை மகாவித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில் சிறிலங்கா படையினரால் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை கணக்கு எடுத்துப் பதிவு செய்வதாகக் கூறி சிறிலங்கா படையினர் அங்கு தங்கவைத்து அவர்களைத் தரம் பிரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை அந்த பகுதியில் ஏராளமான இளவயது ஆண், பெண்கள் குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்கப்பட்டு வேறு எங்கோ கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பல குடும்பங்களில் வளர்ந்த வயதானவர்களையே பிரித்து வைத்து - அவைகளைச் சேரவிடாமல் சிறிலங்கா படையினர் தடுத்தும் வருகின்றனர்.
மாற்றுப் புடவை இன்றி உடுத்த உடையுடன் வந்தவர்களை தான் மீட்டு எடுத்து காப்பாற்றுவதாக சிறிலங்கா அரசு வெளியில் செய்துவரும் பரப்புரைக்கு அமைய அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகள் துளிகூட இன்னும் வழங்கப்படவில்லை. சிறிலங்கா அரசு மற்றும் படைத்தரப்பு அறிவிப்பு படி - 80 ஆயிரம் வரையான மக்கள் இன்னனும் ஓமந்தையில் பதிவுகளுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதுவித அடிப்படை வசதியும் அற்ற நிலையில் - மக்கள் நடமாட்டம் எதுவும் அற்ற சூழலில் - ஓமந்தை மகாவித்தியாலய கட்டடம் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிளில் அந்த மக்கள் சிறிலங்கா படையினரின் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.இது மட்டுமல்லாமல் - வவுனியா பகுதியில் இருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கூடச் சந்திக்க சிறிலங்கா படையினர் அனுமதி மறுத்துள்ளனர்.கடந்த திங்கட்கிழமை (20.04.09) தொடக்கம் மாலை ஒருவேளை மாத்திரம் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகின்றது.அத்துடன், குடிப்பதற்கு குளிப்பதற்கு இயற்கை கடன்களின் வசதிக்கு தேவையான தண்ணீர் முற்றுமுழுதாக அற்ற நிலையில் உள்ளது.இதேவேளையில் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மக்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளதாக அறிய முடிகின்றது.
முன்னரே இடம்பெயர்ந்து வந்த 6 ஆயிரம் வரையான மக்களுடன் தற்போது வந்துள்ள மேலும் பல ஆயிரம் மக்களையும் சிறிலங்கா படையினர் ஒரிரு இடங்களிலேயே தங்க வைத்துள்ளதுடன், யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட மக்களின் சரியான எண்ணிக்கை இதுவரை சிறிலங்கா படையினரால் வெளியிடப்படவில்லை.
தென்மராட்சியில் - நாவற்குழி பனை ஆராய்ச்சி நிலையம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி, கொடிகாமம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, திருநாவுக்கரசு வித்தியாலயம், மிருசுவில் திருக்குடும்ப கன்னியர் மடம், கைதடி சைவச் சிறார் இல்லம், கைதடி ஆயுள்வேத மருத்துவமனை மாணவர் விடுதி ஆகிய இடங்களில் இந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கும் அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.உடுத்த உடையுடன் வந்த இவர்கள் மாற்றுத்துணி கூட இல்லை.
பாடசாலை தண்ணீர் தொட்டிக்குள் சிறிலங்கா படையினரால் தண்ணீர் நிரப்பி விடப்பட்டு குடிநீராக அருந்தும்படி சொல்லப்பட்டுள்ளனர். இருந்தபோதும் - அதனை அள்ளி எடுப்பதற்கு சிறு கிண்ணம் கூட வழங்கப்படாததால், அவர்கள் காற்றில் பறந்து வரும் பிளாஸ்டிக் பைகளை தேடி எடுத்து அவற்றை வைத்து தண்ணீர் அள்ளி குடிக்கும் அவலத்தில் இருக்கின்றனர்.எல்லா மக்களையும் கட்டடங்களுக்குள் தங்க வைக்க முடியாத இட நெருக்கடி இருப்பதால் - பாடசாலை மைதானங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் - குறிப்பாக குழந்தைகள் - கொளுத்தும் வெயிலின் தாக்கத்தாலும், பசியாலும் துடிக்கின்றனர்.இந்த கொடுமைகளை நேரடியாகப் பார்த்தும் கூட, இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி ஏதும் செய்ய முடியாதுவாறு சிறிலங்கா படையினர் தடுத்து வருகின்றனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் படும் கொடுமைகளை வீதியால் செல்லும் ஏனைய தமிழர்கள் கண்டுவிடுவதை அறிந்த சிறிலங்கா படையினர், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடசாலை வேலிகள் மற்றும் மதில்களுக்கு உயரமாக மறைப்பிட்டு வருகின்றதுடன், அந்தப் பகுதிகளுக்கச் செல்லவிடாது மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.இதேவேளையில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முற்புற வாயில் கதவைக்கூட தகரம் இட்டு முட்கம்பிகளால் மறைப்பிட்டு வைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் பிற்பகல் 4:00 மணிக்கு மாத்திரம் ஒருவேளை உணவு வழங்கப்படுகின்றது. ஏனைய நேரங்களில் உணவு வழங்கப்படுவதில்லை.
இதற்குள் - யாழ்ப்பாணத்தில் இப்போது பொக்குளிப்பான், அம்மை நோய் பலருக்கு ஏற்பட்டுள்ளதால் இந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கும் அவை பரவும் ஆபத்து உருவாகின்றது.இதேநேரம் கடந்த சில நாட்களாக - பலாலி நோக்கி - கடும் காவலுக்கு மத்தியில் - 4 பேருந்துகளில் வன்னியில் இருந்து வந்த இளைய ஆண், பெண்கள் பலர் விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் பலர் கதறி அழுத நிலையில் பேருந்துகளில் ஏற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட்டதை வீதியோரங்களில் நின்ற பெருமளவு மக்கள் கண்டுள்ளனர்.
செய்திகள்:புதினம்
"மீட்கப்பட்ட மக்கள்"
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
தொடர்புடைய இடுக்கைகள்:சிறிலங்கா படையினரின் பாரிய படை நடவடிக்கையினால் பெரும் மனிதப் பேரவலம்: இன்று 988 தமிழர்கள் படுகொலை
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்டு வரும் பாரிய படை நடவடிக்கையின் போது பெரும் மனிதப் பேரவலம் நிகழ்ந்துள்ளது. இதில் 988-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதியை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை தன்னிடம் உள்ள அனைத்து நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
அதேவேளையில் மக்கள் மீதும் மக்கள் வாழ்விடங்கள் மீதும் ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, கனரக துப்பாக்கி, தொலைதூர துப்பாக்கி மற்றும் வான் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் அகோரமாக நடத்தியுள்ளனர்.இதில் 988-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.ஏலவே பொக்கணைப் பகுதிக்குச் சென்ற மக்களை கேடயமாக பாவித்துக்கொண்டு பாரிய நடவடிக்கையினை சிறிலங்கா படையினர் மேற்கொண்டதுடன், அதற்கு ஒத்துழைக்காத மக்கள் மீதும் சரசமாரியான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும் இதிலும் பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.பொதுமக்களின் இழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.
செய்திகள்:புதினம்
சிறிலங்கா படையினரின் பாரிய படை நடவடிக்கையினால் பெரும் மனிதப் பேரவலம்: இன்று 988 தமிழர்கள் படுகொலை
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: News, அவலம், போராட்டம்
தொடர்புடைய இடுக்கைகள்:பிரித்தானியப் பாராளுமன்றம் உட்பட தலைநகரின் பல வீதிகள் தமிழ் மக்களால் முடக்கம்
சிறிலங்கா மிக மொசமான இனப்படுகொலையை வன்னியில் இன்று நடத்தியுள்ள நிலையில் பிரித்தானியாவில் தமிழ் மக்கள் பெரும் எழுச்சியடைந்துள்ளனர்.பிரித்தானியாவில் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வரும் மக்கள் இன்று வன்னியில் இடம்பெற்றுள்ள அவலத்தை அறிந்து பெரும் சோகத்துடனும், அச்சத்துடனும் பிரித்தானிய பாராளுமன்றத்தை முடக்கி போராட்டத்தில் குதித்துள்ளனர்.பாராளுமன்றத்திற்கான நான்கு பிரதான வீதிகளும் தமிழ் மக்களால் முடக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்றத்திற்கான போக்குவரத்துக்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.
காணொளி:BBC
செய்திகள்:சங்கதி
பிரித்தானியப் பாராளுமன்றம் உட்பட தலைநகரின் பல வீதிகள் தமிழ் மக்களால் முடக்கம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: அவலம், அறிவித்தல்கள், செய்திகள், போராட்டம்
தொடர்புடைய இடுக்கைகள்:பரமேஸ்வரனிடமிருந்து அழைப்பு - பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும் திரண்டு வாருங்கள்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: News, அவலம், ஒளிக்காட்சிகள், பேட்டி, போராட்டம்
தொடர்புடைய இடுக்கைகள்:ஜனவரி தொடக்கம் மார்ச் வரையில் 3546 தமிழர்கள் படுகொலை படங்களுடன் விபரம் வெளியிடப்பட்டுள்ளது
வன்னியில் சிங்கள படையினரின் தமிழின படுகொலையில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் மார்ச் மாதம் வரையில் 3546 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 8370பேர் படுகாயமடைந்துள்ளதாக War Without Witness in Sri Lanka என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 23ஆம் திகதி வரையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையினையே அந்த அமைப்பு வெளியிட்டுள்ளதுடன் கொல்லப்பட்டர்களின் விபரங்கள் சிலவற்றினை படங்களுடன் விபரங்களையும் இணைத்துவெளியிட்டுள்ளது.இலங்கை அரசாங்கத்தினால் மக்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பிரதேசங்கள் மீது அதன் படைகள் நடத்திய தாக்குதலிலேயே அதிகமான தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மென்புத்தகத்தை தரவிறக்க..
ஜனவரி தொடக்கம் மார்ச் வரையில் 3546 தமிழர்கள் படுகொலை படங்களுடன் விபரம் வெளியிடப்பட்டுள்ளது
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: அவலம், செய்திகள், மென்புத்தகம்
தொடர்புடைய இடுக்கைகள்:பிரித்தானியாவின் Channel - 4 தெலைக்காட்சிச் சேவையில் இன்று இடம்பெற்ற இலங்கைக் கண்ணோட்டம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 1 பின்னூட்டம்(கள்)
வகைகள்: News, அவலம், ஒளிக்காட்சிகள்
தொடர்புடைய இடுக்கைகள்:அவுஸ்திரேலியாவில் தொடரும் போராட்டம்
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் உட்பட நால்வர் உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்கவிருக்கின்றனர்.
மெல்பேர்ண் நகரில் உள்ள DANDENONG பிராந்தியம் PULTNEY STREET ல் DANDENONG PARK ல் ச.ரமணா, ச.சந்திரன், ஊடகவியலாளரான ப.தெய்வீகன் மற்றும் கோ.பானு ஆகியோர் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்குகின்றனர்.
இவர்கள் முன்வைத்துள்ள நான்கு கோரிக்கைகள் வருமாறு:-
- உடனடியாகவும், நிரந்தரமாகவும் நடைமுறைப்படுத்தக் கூடியதுமான போர் நிறுத்தம் மேற்கொள்ளக் கோரி சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.
- வன்னியில் உள்ள தமிழ் உறவுகளுக்கு அத்தியாவசியமான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவி ஆகிய அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும் வகையில் சேர்ப்பிக்கப்பட வேண்டும்.
- தமிழ் மக்கள் சுதந்திரமாக தங்கள் இருப்பிடங்களை தேர்ந்தெடுக்க அனுமதி கொடுக்கப்பட வேண்டும்.
- தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் உடனடியான பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும்.
இவர்களின் உண்ணாநிலை போராட்டத்துக்கு மெல்பேர்ண் வாழ் தமிழ் உறவுகள் ஆதரவு அளித்து இலட்சியத்தின் வெற்றிப்பாதைக்கு உறுதுணையாக வந்து கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
செய்திகள்: தமிழ்வின்
அவுஸ்திரேலியாவில் தொடரும் போராட்டம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: News, அவலம், ஒளிக்காட்சிகள், செய்திகள், போராட்டம்
தொடர்புடைய இடுக்கைகள்:வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணை, வான் தாக்குதல்: 3 குழந்தைகளும் 11 சிறுவர்களும் உட்பட 31 தமிழர்கள் படுகொலை
வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, வான் மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 3 குழந்தைகளும் 11 சிறுவர்களும் உட்பட 31 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகளை நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, ஆர்பிஜி உந்துகணை, தொலைதூர துப்பாக்கிச் சூட்டு மற்றும் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 31 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 3 குழந்தைகளும் 11 சிறுவர்களும் அடங்குவர்.
- இராசமாணிக்கம் ஜோதிகா (8 மாத குழந்தை)
- சிவசக்தி தேவதாசன் (வயது 02)
- பாஸ்கரன் லோகேஸ்வரன் (வயது 2 வருடம் 6 மாதம்)
- சேதுகாவலன் மயூரதன் (வயது 05)
- தர்மேந்திரன் (வயது 06)
- தர்மேந்திரன் கார்த்திகா (வயது 06)
- கந்தசாமி தனுசன் (வயது 08)
- லோகநாதன் லோஜிதா (வயது 09)
- டினோசிலா (வயது 09)
- லோகநாதன் திசா (வயது 09)
- முருகானந்தம் தர்மினி (வயது 12)
- பாக்கியராஜா மதுசனா (வயது 13)
- முத்துலிங்கம் கம்சனா (வயது 14)
- தர்மராஜ் கிருத்திகா (வயது 14)
- சோதி (வயது 48)
- சிவராசா (வயது 35)
- பஞ்சலிங்கம் தனஞ்சிநாத் (வயது 28)
- ம.சந்திரன் (வயது 69)
- சிவகுருநாதன் புனிதலட்சுமி (வயது 57)
- இ.சுபாசினி (வயது 30)
- தில்லைநாதன் சுமதி (வயது 38)
- லோகநாதன் ஹேமா (வயது 32)
- சிவசுப்பிரமணியம் பாஸ்கரன் (வயது 34)
- செ.சுடரேந்தி (வயது 33)
- தர்மலிங்கம் வீரசிங்கம் (வயது 54)
- இந்திரராஜா (வயது 42)
- கேசவன் புனிதமலர் (வயது 32)
- செல்வரட்னம் செல்வமணி (வயது 38)
- கந்தையா கருணாகரன் (வயது 29)
- சிவபாதராஜா பார்வதி (வயது 42)
மேலும் மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினரின் தொலைதூர துப்பாக்கிச் சூட்டில் நாள்தோறும் பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.உணவுப் பொருட்களுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களே சிறிலங்கா படையினரின் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வருகின்றனர். அம்பலவன்பொக்கணை பகுதியில் நேற்று வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த 52 வயதுடைய இரத்தினம் சண்முகலிங்கம் என்பவர் சிறிலங்கா படையினரின் தொலைதூர துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளையில் அம்பலவன்பொக்கணை தொடக்க சுகாதார நிலையத்தில் இயங்கும் செம்மலை மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்திருந்த 22 வயதுடைய யோகேஸ்வரன் பரிமளா மற்றும் 18 வயதுடைய அ.ராகுலன் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது இவ்வாறிருக்க, சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக சிறுவர்களும் முதியவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உளவளத்துணையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.சிறார்கள் மத்தியில் பழக்கங்களில் மாற்றம், முதியவர்கள் மத்தியில் நோய்த்தாக்கம் அதிகரித்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.அதேவேளையில் சிறார்கள் மத்தியில் ஊட்டச்சத்து பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சிறிலங்கா படையினர் அடிக்கடி கப்பல் மீது தாக்குதல் நடத்துவதனனால் உணவுப்பொருட்களை ஏற்றுவதிலும் நோயாளர்களை கப்பலில் ஏற்றுவதிலும் பெரும் இடர்கள் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாச தலைவர் ம.குணசிங்கராசா தெரிவித்துள்ளார்.
செய்திகள்: புதினம்
வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணை, வான் தாக்குதல்: 3 குழந்தைகளும் 11 சிறுவர்களும் உட்பட 31 தமிழர்கள் படுகொலை
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
தொடர்புடைய இடுக்கைகள்:வன்னியில் வான், எறிகணைத் தாக்குதல்: இன்றும் 21 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை; 154 பேர் படுகாயம்
வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 21 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 154 பேர் காயமடைந்துள்ளனர்.'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் வான் குண்டுத் தாக்குதல், ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் கொத்துக்குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.இதில் 21 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 154 பேர் காயமடைந்துள்ளனர்.மக்களின் கூடார வதிவிடங்கள் மீதே சிறிலங்கா படையினர் இன்று பல நூற்றுக்கணக்கான எறிகணைகளை வீசியுள்ளனர்.மேலும் 28 வயதுடைய உதயகுமார் சந்திரிகா எனும் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொத்துக்குண்டு தாக்கியதில் படுகாயமடைந்ததால் அவரின் சிசு அரைகுறையாக வெளியில் வந்துள்ளது.
வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால் பகுதிகளிலேயே அதிகளவிலான மக்கள் கொத்துக்குண்டுத் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
- புலேந்திரன் பகிர்த்தனா (வயது 08)
- முருகையா சின்னம்மா (வயது 45)
- கந்தையா கேதீஸ்வரி (வயது 14)
- முருகையா செல்வேந்திரன் (வயது 30)
- முருகையா ரஞ்சனி (வயது 18)
- மாரிமுத்து இலட்சுமி (வயது 65)
- வேலும் மயிலும் சூரியகுமார் (வயது 36)
- சூரியகுமார் கார்த்திகேசன் (வயது 05)
- அரியதாஸ் விக்கினேஸ்வரி (வயது 32)
- பொன்னையா சுப்பிரமணியம் (வயது 57)
- ரவிக்குமார் சஜீவன் (வயது 11)
- அருள்தாஸ் தர்சிகா (வயது 08)
- தியாகராசா ஜிதா (வயது 48)
- கனகராசா பிரதீபன் (வயது 20)
- கனகலிங்கம் கோமதி (வயது 45)
- கனகலிங்கம் வசந்தகுமாரி (வயது 16)
- கனகலிங்கம் சாந்தகுமாரி (வயது 17)
- செல்வராசா ஜனார்த்தன் (வயது 16)
- ஜெயராசா தர்மிலன் (வயது 12)
- சூரியராசா வேல்விழி (வயது 39)
- யோகநாதன் பிரதீபா (வயது 26)
- மதியாவதனம் மணிவண்ணன் (வயது 29)
- பூமிபாலு விமலாதேவி (வயது 39)
- ஜெயராசா சுபாசினி (வயது 29)
- ஜெயராசன் ரதீபன் (வயது 13)
- செல்வேந்திரன் பத்மலோஜினி (வயது 30)
- வரதராசா சின்னராசா (வயது 45)
- இதயரூபன் கவிதா (வயது 32)
- இதயரூபன் விதுசா (வயது 03)
- கணபதிப்பிள்ளை ஜெதீஸ்வரன் (வயது 32)
- சின்னராசா ரத்தினமணி (வயது 48)
- துஸ்யந்தன் சுவீற்றி (வயது 22)
- வரதராசா சின்னராசா (வயது 46)
- முத்துசாமி வடிவேல் (வயது 47)
- இராமலிங்கம் பிரதீபன் (வயது 18)
- கனகலிங்கம் சாந்தகுமாரி (வயது 16)
- மேகநாதன் செலஸ்ரீனா (வயது 22)
- லட்சுமிகாந்தன் மாரிமுத்து (வயது 67)
- கந்தசாமி ரூபிகா (வயது 09)
- செல்வராசா நிசாந்தன் (வயது 16)
- மாடசாமி புவனேந்திரராசா (வயது 24)
- கிருசாந்தி (வயது 10)
- இராசு சிவகலா (வயது 25)
- வீரசாமி நாகம்மா (வயது 70)
- சர்வானந்தகரன் நிசாந்தி (வயது 24)
- புவேந்திரமகாராசா பகிர்த்தனா (வயது 14)
- மதியபரணம் ரோமியா (வயது 10)
- மதியாபரணம் இந்திராதேவி (வயது 43)
- மதியாபரணம் பார்த்தீபன் (வயது 14)
- முருகையா செல்வேந்திரன் (வயது 25)
- முருகையா ரஞ்சனி (வயது 19)
- முருகையா சின்னம்மா (வயது 56)
- ரவிக்குமார் சக்திவேல் (வயது 11)
- கார்த்திகேயன் பிந்துசா (வயது 07)
- பாலகுமாரன் பிரணவன் (வயது 09)
- தேவதாஸ் கவிதா (வயது 10)
- கோமகன் பிருந்தா (வயது 05)
- செல்வநாதன் பத்மலோஜா (வயது 30)
- கந்தசாமி ரூபிகா (வயது 11)
- முத்துச்சாமி மணிவேல் (வயது 45)
செய்திகள் : புதினம்
வன்னியில் வான், எறிகணைத் தாக்குதல்: இன்றும் 21 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை; 154 பேர் படுகாயம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
தொடர்புடைய இடுக்கைகள்:




