வன்னியில் வான், எறிகணைத் தாக்குதல்: இன்றும் 21 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை; 154 பேர் படுகாயம்

வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 21 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 154 பேர் காயமடைந்துள்ளனர்.'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் வான் குண்டுத் தாக்குதல், ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் கொத்துக்குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.இதில் 21 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 154 பேர் காயமடைந்துள்ளனர்.மக்களின் கூடார வதிவிடங்கள் மீதே சிறிலங்கா படையினர் இன்று பல நூற்றுக்கணக்கான எறிகணைகளை வீசியுள்ளனர்.மேலும் 28 வயதுடைய உதயகுமார் சந்திரிகா எனும் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொத்துக்குண்டு தாக்கியதில் படுகாயமடைந்ததால் அவரின் சிசு அரைகுறையாக வெளியில் வந்துள்ளது.
வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால் பகுதிகளிலேயே அதிகளவிலான மக்கள் கொத்துக்குண்டுத் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

  1. புலேந்திரன் பகிர்த்தனா (வயது 08)
  2. முருகையா சின்னம்மா (வயது 45)
  3. கந்தையா கேதீஸ்வரி (வயது 14)
  4. முருகையா செல்வேந்திரன் (வயது 30)
  5. முருகையா ரஞ்சனி (வயது 18)
  6. மாரிமுத்து இலட்சுமி (வயது 65)
  7. வேலும் மயிலும் சூரியகுமார் (வயது 36)
  8. சூரியகுமார் கார்த்திகேசன் (வயது 05)
  9. அரியதாஸ் விக்கினேஸ்வரி (வயது 32)
  10. பொன்னையா சுப்பிரமணியம் (வயது 57)
  11. ரவிக்குமார் சஜீவன் (வயது 11)
  12. அருள்தாஸ் தர்சிகா (வயது 08)
  13. தியாகராசா ஜிதா (வயது 48)
  14. கனகராசா பிரதீபன் (வயது 20)
  15. கனகலிங்கம் கோமதி (வயது 45)
  16. கனகலிங்கம் வசந்தகுமாரி (வயது 16)
  17. கனகலிங்கம் சாந்தகுமாரி (வயது 17)
  18. செல்வராசா ஜனார்த்தன் (வயது 16)
  19. ஜெயராசா தர்மிலன் (வயது 12)
  20. சூரியராசா வேல்விழி (வயது 39)
  21. யோகநாதன் பிரதீபா (வயது 26)
  22. மதியாவதனம் மணிவண்ணன் (வயது 29)
  23. பூமிபாலு விமலாதேவி (வயது 39)
  24. ஜெயராசா சுபாசினி (வயது 29)
  25. ஜெயராசன் ரதீபன் (வயது 13)
  26. செல்வேந்திரன் பத்மலோஜினி (வயது 30)
  27. வரதராசா சின்னராசா (வயது 45)
  28. இதயரூபன் கவிதா (வயது 32)
  29. இதயரூபன் விதுசா (வயது 03)
  30. கணபதிப்பிள்ளை ஜெதீஸ்வரன் (வயது 32)
  31. சின்னராசா ரத்தினமணி (வயது 48)
  32. துஸ்யந்தன் சுவீற்றி (வயது 22)
  33. வரதராசா சின்னராசா (வயது 46)
  34. முத்துசாமி வடிவேல் (வயது 47)
  35. இராமலிங்கம் பிரதீபன் (வயது 18)
  36. கனகலிங்கம் சாந்தகுமாரி (வயது 16)
  37. மேகநாதன் செலஸ்ரீனா (வயது 22)
  38. லட்சுமிகாந்தன் மாரிமுத்து (வயது 67)
  39. கந்தசாமி ரூபிகா (வயது 09)
  40. செல்வராசா நிசாந்தன் (வயது 16)
  41. மாடசாமி புவனேந்திரராசா (வயது 24)
  42. கிருசாந்தி (வயது 10)
  43. இராசு சிவகலா (வயது 25)
  44. வீரசாமி நாகம்மா (வயது 70)
  45. சர்வானந்தகரன் நிசாந்தி (வயது 24)
  46. புவேந்திரமகாராசா பகிர்த்தனா (வயது 14)
  47. மதியபரணம் ரோமியா (வயது 10)
  48. மதியாபரணம் இந்திராதேவி (வயது 43)
  49. மதியாபரணம் பார்த்தீபன் (வயது 14)
  50. முருகையா செல்வேந்திரன் (வயது 25)
  51. முருகையா ரஞ்சனி (வயது 19)
  52. முருகையா சின்னம்மா (வயது 56)
  53. ரவிக்குமார் சக்திவேல் (வயது 11)
  54. கார்த்திகேயன் பிந்துசா (வயது 07)
  55. பாலகுமாரன் பிரணவன் (வயது 09)
  56. தேவதாஸ் கவிதா (வயது 10)
  57. கோமகன் பிருந்தா (வயது 05)
  58. செல்வநாதன் பத்மலோஜா (வயது 30)
  59. கந்தசாமி ரூபிகா (வயது 11)
  60. முத்துச்சாமி மணிவேல் (வயது 45)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டனர்.
செய்திகள் : புதினம்

வன்னியில் வான், எறிகணைத் தாக்குதல்: இன்றும் 21 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை; 154 பேர் படுகாயம்SocialTwist Tell-a-Friend

வன்னியில் தொடரும் சிறிலங்காவின் இனப்படுகொலை: இன்றும் 16 சிறுவர்கள் உட்பட 49 தமிழர்கள் படுகொலை; 125 பேர் காயம்

வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 16 சிறுவா்கள் உட்பட 49 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 125 பேர் படுகாயமடைந்துள்ளனர். வலைஞர்மடத்தில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளன் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.இதில் 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அம்பலவன்பொக்கணையில் உள்ள பிள்ளையார்கோவில் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.இதில் 10 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால், இடைக்காடு மற்றும் பச்சைப்புல்மோட்டைப் பகுதிகளை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.இதில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 125 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டவர்களின் பெயர் விபரம் வருமாறு:
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான

  1. புலேந்திரமகாராஜா ராஜஸ்ரீ (வயது 30)
  2. புலேந்திரமகாராஜா புவிராசி (வயது 08)
  3. புலேந்திரமகாராஜா பைந்தனா (வயது 07)
  4. புலேந்திரமகாராஜா வைஸ்ணவி (வயது ஒன்றரை மாதம்)
  5. குலசேகரம் கந்தையா (வயது 65)
  6. பாலசுந்தரம் யுவராஜ் (வயது 49)
  7. பார்த்தீபன் (வயது 37)
  8. தவராசா டினு (வயது 03)
  9. தம்பிராசா ஜோன் நிவாஸ் (வயது 26)
  10. தியாகசிங்கம் கருணாநிதி (வயது 53)
  11. கோவிந்தசாமி (வயது 63)
  12. சுதாகரன் சுதர்மன் (வயது 12)
  13. மரியதாஸ் கேதீஸ்வரி (வயது 29)
  14. அன்ரனி மரியமலர் (வயது 32)
  15. காந்தரூபன் ஞானம்மா (வயது 35)
  16. குகநேசன் சுசீலா (வயது 45)
  17. கனகசபை கந்தசாமி (வயது 45)
  18. கனகசபை அழகம்மா (வயது 73)
  19. கோவிந்தசாமி இராசம்மா (வயது 53)
  20. கறுப்பையா தர்மலிங்கம் (வயது 55)
  21. வேலாயுதம் சுதாகர் (வயது 32)
  22. தேசிங்கு கருணாநிதி (வயது 53)
  23. கவிபாலன் சயந்தன் (வயது 07)
  24. கந்தையா புஸ்பராசர் (வயது 46)
  25. தவராசா டிலானி (வயது 03)
  26. தவராசா தர்மிளா (வயது 19)
  27. தவராசா தீபமலர் (வயது 40)
  28. தவராசா நிலக்சன் (வயது 12)
  29. கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 23)
  30. கணேசலிங்கம் யமுனாராணி (வயது 48)
  31. தர்மலிங்கம் தவராசா (வயது 38)
  32. காந்தரூபன் (வயது ஒன்றரை )
  33. காந்தரூபன் லதா (வயது 34)
  34. செ.புஸ்பராணி (வயது 48)
  35. கந்தன் தம்பையா (வயது 76)
  36. மருதன் கேதாரா (வயது 20)
  37. சேதுமாதவன் கிருஸ்ணன் (வயது 32)
  38. கார்மேகன் காருண்யா (வயது ஒன்றரை)
  39. தேவிபாலன் மதுசன் (வயது 5 மாதம்)
  40. வே.சின்னத்தம்பி (வயது 35)
  41. பா.குணாளன் (வயது 12)
  42. விஜிதரன் புவிதா (வயது 08)
  43. மதுரவாணன் பார்கவி (வயது 10)
  44. ஞானராஜ் மருதன் (வயது 07)
  45. கணேசலிங்கம் புவிதன் (வயது 03)
  46. கவிராசன் கவிதா (வயது 04)
  47. கேவின்ராஜ் பிருந்தன் (வயது 05)
  48. கோபாலபிள்ளை பார்கவி (வயது 25)
  49. தம்பிப்பிள்ளை மார்க்கண்டு (வயது 30)
ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்

செய்திகள் : புதினம்

வன்னியில் தொடரும் சிறிலங்காவின் இனப்படுகொலை: இன்றும் 16 சிறுவர்கள் உட்பட 49 தமிழர்கள் படுகொலை; 125 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் 28.03.09 (சனிக்கிழமை) 'உரிமைக்குரல்'

ஈழத் தமிழரின் தாயகம் - தேசியம் - தன்னாட்சி உரிமையினை முன்னிலைப்படுத்தி அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் நாளை மறுநாள் மாபெரும் 'உரிமைக்குரல்' நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது."சுதந்திர தமிழீழத்திற்கான உரிமைக்குரல் - Voice to Free Tamil Eelam" எனும் கருப்பொருளில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள இப்பேரணிக்கு தமிழ் இளையோர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.விடுதலை வேண்டி நிற்கும் தமிழினத்திற்குப் புலம்பெயர் உறவுகளின் பிளவுபடாத ஆதரவு, உந்துசக்தியாக அமையும் என்பதால் சிட்னி வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் இளையோர் அமைப்பினர் வேண்டிக்கொள்கின்றனர்.

இடம்: Martin Place
நாள்: 28.03.09 (சனிக்கிழமை)
நேரம்: முற்பகல் 11:00

செய்திகள் : புதினம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் 28.03.09 (சனிக்கிழமை) 'உரிமைக்குரல்'SocialTwist Tell-a-Friend

தமிழினத்தை கருவிலேயே அழிக்கின்றது சிங்களப் பேரினவாதம்: கர்ப்பிணிப் பெண்கள், சிசு உட்பட 61 தமிழர்கள் இன்று படுகொலை; 164 பேர் படுகாயம்

வன்னியில் சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய கொடூரமான எறிகணைத் தாக்குதல்களில் கர்ப்பிணிப் பெண்கள், சிசு உட்பட 61 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 164 பேர் படுகாயமடைந்துள்ளனர்.மாத்தளன் கப்பல் வீதி, அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் ஆர்பிஜி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

வலைஞர்மட பகுதியை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று நடத்திய தொலைதூர துப்பாக்கிச் சூட்டின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை துப்பாக்கி ரவை துளைத்துச் சென்றது.இதில் 20 வயதுடைய 8 மாத கர்ப்பிணிப் பெண்ணான சந்திரகுமார் கலைச்செல்வி என்பவரே படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்தார்.

இதேவேளையில் 27 வயதுடைய 6 மாத கர்ப்பிணிப் பெண்ணான ஜெகதீபன் சோதிமலர் என்பவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் 25 வயதுடைய 9 மாதம் கர்ப்பிணிப் பெண்ணான க.பாசமலர் என்பவரின் வயிற்றைத் துழைத்த ரவை, அவரின் சிசுவின் தலையைத் தாக்கியுள்ளது.இதனால், வயிற்றில் இருந்த அந்த சிசு உயிரிழந்து விட்டது. தற்போது ஆபத்தான நிலையில் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், 3 கர்ப்பிணிப் பெண்கள் நிகழ்விடத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர்களை உறுதிப்படுத்த அந்த இடத்தில் ஆட்கள் எவரும் இல்லை. அனைவரும் சிதறி ஓடிவிட்டனர்.ஆனாலும், அந்த இடத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் உயிரிழந்த, கருவுற்ற பெண்களின் உடலங்களை எடுத்து புதைத்தனர்.

இதேவேளையில் மருத்துவமனையில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் உடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.சிறிலங்கா படையினரின் இன்றைய தாக்குதல்களில் 15 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 40 சிறுவர்களும் காயமடைந்துள்ளனர்.இன்றைய தாக்குதலில் மாத்தளன் பகுதியிலேயே அதிகளவிலான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேநேரம், மாத்தளன் கப்பல் வீதியில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பணியாளரான 27 வயதுடைய பாலசிங்கம் சதீஸ்குமார் என்பவரும் இன்றைய தாக்குதலில் படுகாயமடைந்தார்.அத்துடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் சிறீதரன் என்பவரின் மனைவியான 25 வயதுடைய கேதீஸ்வரி என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரம் வருமாறு:

  1. கருணாகரன் சாரதாதேவி (வயது 40)
  2. நீக்கிலாப்பிள்ளை லைனாரட்ணராஜா (வயது 47)
  3. சரவணமுத்து கணபதிப்பிள்ளை (வயது 65)
  4. அந்தோனி அருளானந்தம் (வயது 64)
  5. ஜசிந்தா (வயது 19)
  6. சிறிகாந்தன் யதுர்சன் (வயது 13)
  7. இராசதுரை வசந்தகுமார் (வயது 36)
  8. வேலுப்பிள்ளை இரத்தினசிங்கம் (வயது 48)
  9. நடராசா ராகினி (வயது 40)
  10. சண்முகநாதன் இராசயோகம் (வயது 40)
  11. சிறிதரன் ஜெகதீஸ்வரி (வயது 35)
  12. ஞானசீலன் கோகிலா (வயது 16)
  13. தங்கவேலு கிருஸ்ணமூர்த்தி (வயது 49)
  14. வசந்தகுமார் நந்தினி (வயது 33)
  15. கலைச்செல்வி (வயது 20)
  16. யோகராசா புஸ்பராணி (வயது 40)
  17. சந்திரசேகர் சசிகுமார் (வயது 25)
  18. வியஜகுமார் தமிழினி (வயது 02)
  19. மகாலிங்கம் தேனஜா (வயது 32)
  20. சசிக்குமார் சுதாநந்தினி (வயது 35)
  21. சிவன்பன் ஜானகி (வயது 20)
  22. கணேஸ் சந்திரமோகன் (வயது 39)
  23. சிவகுமார் உதயமலர் (வயது 38)
  24. தர்மலிங்கம் பத்மாவதி (வயது 40)
  25. பஞ்சாட்சரம் (வயது 40)
  26. கிருசிகா (வயது 09)
  27. இராசதுரை வசந்தகுமார் (வயது 36)
  28. சிறிதரன் கேதீஸ்வரி (வயது 25)
  29. சிறிகாந்தன் யதுசன் (வயது 13)
  30. யோகராசா புஸ்பராணி (வயது 40)
  31. மெய்யழகன் வசந்தினி (வயது 25)
  32. இராசதுரை ரஞ்சினி (வயது 23)
  33. சுதந்திரராசா இராசாத்தி (வயது 50)
  34. செல்வலிங்கநாதன் கிருசிகா (வயது 09)
  35. சுப்பிரமணியம் திருநாவுக்கரசு (வயது 08)
  36. வேலாயுதம் சுதர்சினி (வயது 11)
  37. வேலாயுதம் மகேஸ்வரி (வயது 48)
  38. பரமாநந்தம் முத்தலிங்கம் (வயது 48)
  39. தர்மலிங்கம் பத்மாவதி (வயது 40)
  40. சிவகுமார் உதயமாஸ் (வயது 38)
  41. பஞ்சாட்சரம் (வயது 40)
  42. வேலாயுதம் தாரணி (வயது 21)
  43. செல்வரட்ணம் தியாநேசன் (வயது 43)
  44. கணேஸ் கமலேஸ்வரி (வயது 46)
  45. செல்லத்துரை யோகெஸ்வரன் (வயது 55)
  46. சந்திரகுமார் கலைச்செல்வி (வயது 08 மாதங்கள்)
  47. சுப்பிரமணியம் சுஜிபா (வயது 11)
  48. சரவணமுத்த செல்லத்துரை (வயது 48)
  49. செல்வலிங்கம் (வயது 55)
  50. தங்கராசா யொகேஸ்வரி (வயது 39)
  51. சரண்யா (வயது 12)
  52. பாய்க்கியம் (வயது 45)
  53. சந்திரன் கொளரியம்மா (வயது 29)
  54. அருளானந்தம் அந்தோனி (வயது 75)
  55. நடராசா ராசகிளி (வயது 35)
  56. அப்பன் ராசயோகம் (வயது 40)
  57. சிறிதரன் யெகதீஸ்வரி (வயது 30)
  58. கணேஸ் கிருபாகரன் (வயது 16)
  59. செல்வராசா மனோன்மணி (வயது 70)
  60. பெரியசாமி தமிழ்ச்செல்வி (வயது 13)
  61. ஒன்றரை அகவை கார்த்திகா (வயது 02)
ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

செய்திகள் : புதினம்

தமிழினத்தை கருவிலேயே அழிக்கின்றது சிங்களப் பேரினவாதம்: கர்ப்பிணிப் பெண்கள், சிசு உட்பட 61 தமிழர்கள் இன்று படுகொலை; 164 பேர் படுகாயம்SocialTwist Tell-a-Friend

வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணை- துப்பாக்கிச் சூடு: 25 சிறுவர்கள் உட்பட 102 தமிழர்கள் படுகொலை

வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை தொடக்கம் நடத்திய அகோர எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 140 பேர் காயமடைந்துள்ளனர்.'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம், இடைக்காடு, முள்ளிவாய்க்கால் மற்றும் அம்பலவன்பொக்கணை பகுதிகளில் இன்று திங்கட்கிழமை சிறிலங்கா படையினர் அதிகாலை தொடக்கம் அகோர எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர்.இதில் 25 சிறுவர்கள் உட்பட 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறார்கள் உட்பட 140 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்களில் நெக்கோட் நிறுவனப் பணியாளரும் கூட்டுறவுச் சங்கப்பணியாளர்கள் மூவரும் அடங்குகின்றனர்.

இதேவேளையில் மாத்தளன் பகுதியை நோக்கி இன்று காலை தொடக்கம் இரவு 7:00 மணிவரை சிறிலங்கா படையினர் நடத்திய அகோர ஆட்லெறி எறிகணை, ஆர்பிஜி உந்துகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் மட்டும் 68 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இடைவிடாது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முழுமையாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதிகமானோர் உடல் சிதறிப் பலியானதாகவும் வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தொடர்ச்சியான எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதல்களால் இப்பகுதியில் காயமடைந்தவர்களை மீட்புப் பணியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர் என்று 'புதினம்' செய்தியாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளையில் கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிவாரணக் கிளை மற்றும் அதன் தலைமைப் பணியகம் களஞ்சியம் ஊர்திகள் தரித்து நின்ற பகுதிகள் எல்லாம் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகின. அவை பெரும் அழிவுகளுக்கு உட்பட்டன. மேலும் நிவாரணம் பெற வந்தவர்கள் அதிகளவில் கொல்லப்பட்டும் காயமடைந்துள்ளனர் என்றும் எமது செய்தியாளர் கூறுகின்றார்.கொல்லப்பட்டவர்களில் இன்று மாலை வரை அடையாளம் காணப்பட்டவர்களின் பெயர் விபரம் வருமாறு:

  • து.நாகேஸ்வரி (வயது 26)
  • வீ.நெல்சன்குமார் (வயது 34)
  • வீ.உதயசேகர் (வயது 43)
  • சு.பாலசுப்பிரமணியம் (வயது 34)
  • சு.பாலசிங்கம் (வயது 45)
  • த.தருமலட்சுமி (வயது 60)
  • சு.மாரி (வயது 52)
  • கே.ரஜனிகாந்த் (வயது 29)
  • மோ.தர்சிகன் (வயது 06)
  • க.பஞ்சலிங்கம் (வயது 50)
  • தா.அற்புதம் (வயது 60)
  • தா.ஸ்ரீஸ்கந்தராசா (வயது 47)
  • ப.சந்திராதேவி (வயது 40)
  • வே.ஆறுமுகம் (வயது 75)
  • வெ.குஞ்சுப்பனி (வயது 76)
  • சி.சண்முகநாதன் (வயது 57)
  • கா.கலைவரதராசா (வயது 54)
  • வீ.சசிதரன் (வயது 38)
  • ல.சசிதரன் (வயது 37)
  • த.யோகமணி (வயது 36)
  • தே.தேவசகாயம் (வயது 59)
  • தே.அமராவதி (வயது 49)
  • கு.நாகேஸ்வரன் (வயது 21)
  • கே.ரஞ்சித் (வயது 28)
  • யோ.தர்சிகா (வயது 06)
  • கி.காவியா (வயது 30)
  • வி.செல்லையா (வயது 78)
  • செ.மாரிமுத்து (வயது 88)
  • சே.தவராசா (வயது 45)
  • த.கௌரி (வயது 25)
  • ம.தேனுஜா (வயது 03)
  • ந.ஜதுர்சிகன் (வயது 02 மாதங்கள்)
  • செ.லக்சனா (வயது 08 மாதங்கள்)
  • த.விபுசன் (வயது 13)
  • ச.கல்பனா (வயது 05)
  • செ.லக்சனா (வயது 08)
  • சிறீ.நிலானி (வயது 13)
  • மி.மரியமலர் (வயது 13)
  • க.துசியந்தன் (வயது 10)
  • சு.யதீஸ்வரன் (வயது 04)
  • சு.ஜனதீசன் (வயது 07)
  • சு.சந்திரகலா (வயது 17)
  • நீ.பாலகுமார் (வயது 11)
  • சி.கலைவாணி (வயது 35)
  • இ.கண்மணி (வயது 74)
  • க.ரீற்றா (வயது 47)
  • வீ.வீரம்மா (வயது 60)
  • கி.கணேசராசா (வயது 35)
ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.இதேவேளையில் கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த உலக உணவுத்திட்ட நிவாரணப்பொருட்கள், பொருட்களை ஏற்றி-இறக்க அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவால் வழங்கப்பட்ட எரிபொருள் மற்றும் நிவாரணப் பொருட்களை ஏற்றும் சுமையூர்திகள், உழுவூர்திகள் என்பனவும் சிறிலங்கா படையினரின் இன்றைய எறிகணைத் தாக்குதல்களில் அழிவுற்றுள்ளன.

செய்திகள்:புதினம்

வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணை- துப்பாக்கிச் சூடு: 25 சிறுவர்கள் உட்பட 102 தமிழர்கள் படுகொலைSocialTwist Tell-a-Friend

இலங்கை பிரச்சினை தொடர்பாக பிரித்தானியாவின் Press TV இல் ஒளிபரப்பாகிய - கருத்து மன்றம்

இலங்கை பிரச்சினை தொடர்பாக பிரித்தானியாவின் Press TV இல் ஒளிபரப்பாகிய - கருத்து மன்றம்SocialTwist Tell-a-Friend

மனிதம் கொன்று… மனம் தின்று…ஈழம் இன்று!

குண்டுகள் வீசப்படும்போது முதலில் பிணம் விழுகிறது. உயிரோடு பிழைப்பவரின் மனம் அடுத்ததாக விழுகிறது. ஓர் இனம் நடைப்பிணமாக மாறிக்கொண்டே இருக்கிறது.‘கவனமாகக் காலை வையுங்கள். கண்ணி வெடிகள் இருக்கலாம்’ என்ற வாசகம் ஈழ மக்கள் வாழ்க்கையில் இயல்பானது. ‘பாதங்களைப் பார்த்து வையுங்கள்… பிணங்கள் தட்டுப்படலாம்’ என்பதுதான் இன்றைய யதார்த்தம். பிணங்கள் பார்த்துப் பழகிய மனங்கள் இப்போது அழுவதில்லை. ‘கொடுத்துவைத்தவர்கள், சீக்கிரமாகப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்’ என்பது ஆறுதல்!

‘அரசியல் தீர்வு என்ன என்று சிலர் பேசுகிறார்கள், பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்குமா என்று பலர் கவலைப்படுகிறார்கள். அந்த மக்கள் உளவியல்ரீதியாகப் பெரும் பாதிப்பில் சிக்கி இருக்கிறார்களே… அதைப் பற்றி யார் பேசப் போவது?’ என்று கண்ணீர் வார்த்தைகளால் கேட்கிறார் யாழ் மாவட்டப் பாதிரியார்களில் ஒருவரான ஜெபனேசன் அடிகள்.

ஒரு நாள் இரவு மின்சாரம் இல்லையென்றால், மறுநாள் வாழ்க்கையே வெறுக்கிறது. பால்காரர் வராவிட்டால், வேலைக்காரம்மா லீவு போட்டால், கேபிள் கட்டானால் இங்கே பலருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடுகிறது. சில கல் தொலைவில் இலட்சக்கணக்கான மக்கள் உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல், கிடந்து துடிக்கிறார்கள். குடியிருக்க வீடு இல்லை, உணவில்லை, மாற்று உடையில்லை, மருந்து இல்லை. எல்லா ஊருக்கும் எருமையில் வரும் எமன், ஈழத்தில் மட்டும் ஏரோபிளேன் ஏறி வந்து குண்டுகள் வீசுகிறான்.

உயிர் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்பதைத் தவிர, சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை. ”81 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் இங்கு இருக்கிறார்கள்’ என்று புள்ளிவிவரம் சொல்கிறார், முல்லைத் தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்தீபன். மாத்தளன் கடற்கரைப் பகுதிக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் வந்து இறங்கியபோது, ‘எங்களக் காப்பாத்தச் சோறு போடுங்க’, ‘எம் புள்ளைகளைக் குணப்படுத்த மருந்து கொடுங்க’ என்று மொழி தெரியாத மனிதர்களிடம் பிச்சை கேட்டு ஆணும் பெண்ணுமாகக் கதறிய கோலம் காணச் சகிக்காதது. குண்டடி பட்டுச் செத்தவர்கள் போக, பாம்புக் கடி, நாய்க் கடியால் இறந்தவர்களும் மலேரியா காய்ச்சலுக்கு மருந்து இல்லாமல் மறைந்த வர்களும் அதிகம்.

18 பேர் நான்கு நாட்களில் தொடர்ச்சியாகச் செத்து விழுக, விநோதமான வியாதி ஏதாவது பரவிஇருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கிறது கொஞ்சம் அக்கறையுள்ள மருத்துவக் குழு. அவர்களால் காரணத்தை வெளியில் சொல்ல முடியவில்லை.‘உணவின்மை, ஊட்டச் சத்து இல்லாதது, நோய் எதிர்ப்புச் சக்தி இழந்தது என மூன்று காரணங்களால் நிறையப் பேர் தூங்கிய நிலையில் இறந்துகிடக்கிறார்கள்’ என்கிறது மருத்துவர் குழு. ‘பிள்ள சாப்பிட்டே மூணு நாள் ஆகியிருக்கும் போல இருக்கே’ என்று கேட்கிறார்.

தூக்கி வந்த அம்மா, அமைதியாகத் தலை கவிழ்ந்து நிற்கிறார். துக்க மிகுதியில் அழுவதற்கு உடலில் கண்ணீர் மிச்சம் இல்லாததே அவரது மயான மௌனத்துக்குக் காரணம்.பால் வளம் இழந்த மார்பின் காரணம் அறியுமா குழந்தை? சபேசன் சிந்து, சிவராசா சக்தி கணேசன் ஆகிய இரண்டு குழந்தைகள் பெயர் வரலாற்றில் இடம் பெறும். அம்மையிடம் பால் இல்லாமல் செத்த பிள்ளைகள். இனி, உலகில் வறுமைக்கு சோமாலியாவைச் சொல்ல வேண்டியதில்லை. நமது சொந்தங்களே இருக்கிறார்கள்.
தன் வளர்ப்பு மகனைத் தேடி, தயா தங்கராசா என்பவர் வன்னி மருத்துவமனைக்குப் போகிறார். அவர் சொல்லும் காட்சி… ”வைத்திய சாலைக்குள் அனைவரும் உறுப்புகளை இழந்தவர்களாக இருந்தார்கள். யாரையும் பார்க்க அவ்வளவாக அனுமதிக்கப்படவில்லை.

நோயாளிகளுக்குத் தங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றுகூடத் தெரியாது. தங்களது வலியின் காரணமாகவும் கெட்ட கனவுகள் காரணமாகவும் இரவு முழுவதும் கத்திக்கொண்டும் அழுதுகொண்டும் இருந்தார்கள்.இரண்டு கால்களையும் கைகளையும் இழந்த ஒரு கர்ப்பிணித் தாய், தாதியை அழைத்து தான் சாவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கதறிக்கொண்டு இருந்தாள். ஒரு தாய் வெறுமையுடன் உட்கார்ந்திருந்தாள். குண்டு விழுந்து அவள் ஓடத் தொடங்கியபோது அவளது குழந்தை கொல்லப்பட்டதாம்.

ஒரு மண்வெட்டியை எடுத்து மண்ணைத் தோண்டி குழந்தையைப் புதைக்கும் துணிவு அவளுக்கு இருந்திருக்கிறது. தனது குழந்தையின் உடல் காட்டு விலங்குகளால் உண்ணப்படுவதை அவள் விரும்பவில்லை. இதைச் சொல்லும்போது அவள் அழவில்லை. உளவியல் பிரச்னைக்கு அவள் உட்பட்டிருந்தாள் என்பது உறுதி!”சாவைச் சட்டை பண்ணாமல்… ரத்தத்தை அலட்சியப்படுத்தி… சதைகள் பிய்ந்து தொங்கும்போது உணர்வில்லாமல் பார்த்து… குப்பைமேட்டைக் கொளுத்துவது போல மனித உடல்கள் எரிவதை வெறுமனே வேடிக்கை பார்க்க மக்கள் பழகிவிட்டால், அந்த மனம் என்னவாகும்?

குழந்தைகளுக்கு விருப்பமே விமானம் பார்ப்பதுதான். ஆனால், ஈழத்துக் குழந்தைக்கு அதுதான் எமன். 30 ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் இருந்து வாங்கி வரப்பட்ட விமானம்தான் குண்டு போடுவதைத் தமிழ்ப் பகுதிகளில் தொடங்கிவைத்தது. அதனுடைய கிர் ஒலியைக் கேட்டாலே, மக்களுக்குக் கிறுக்குப் பிடித்தது. அதிலிருந்து தப்பிக்கப் பதுங்கு குழிகள் வெட்டி, அதில் வாழப் பழகினார்கள். வெளிச்சத்தைப் பார்த்துக் கண் கூசும் அளவுக்குப் பலரது வாழ்க்கை பதுங்கு குழிக்குள் கழிந்தன. கடந்த ஆண்டில் மட்டும் 14 ஆயிரம் டன் குண்டுகள் விமானங்களின் மூலம் போடப்பட்டுள்ளதாக சிங்கள ராணுவம் பெருமையாக அறிவித்துள்ளது.

சமீபகாலமாகப் பயன்படுத்தப்படும் பீரங்கிக் குண்டுகள் ஏற்படுத்தும் சத்தம் காது சவ்வு மற்றும் தொப்புள் ஆகிய இரண்டையும் கிழிக்கிறதாம். இதனால், காது வழியாக ரத்தம் வடிந்த நிலையில் வாழ்வோரும் தொப்புள் வெடித்து வேறு எந்தக் காயமும் இல்லாமல் மரணிப்போரும் அதிகமாகி வருகிறார்களாம்.

கொடூரங்களைச் செய்வதைவிட அதைப் பரப்புவதையும் சரியாகவே சிங்கள ராணுவம் செய்து வருவதாகச் சொல்கிறார்கள். மக்களை மனரீதியாகப் பலவீனப்படுத்துவதில் ராணுவம் இறங்கி உள்ளது. கற்பழிப்புக் கதைகளை ராணுவம் இதனால்தான் அதிகம் பரப்பி வருகிறது. 100 பேர் சாவு, 200 பேர் சாவு என்ற தகவல்களைப் பரப்புவதை ‘உளவியல் யுத்தம்’ என்கிறார்கள். அதனால்தான் கடுமையான போர் ஆரம்பமாவதற்கு முன், கடந்த ஜூலை மாதம் விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழரை அடிமைப்படுத்த முயலும் எதிரி தனது சூழ்ச்சிகரமான உளவியல் போரைத் தொடுத்துள்ளான். வதந்திகளைப் பரப்பி மனங்களைக் குழப்பி வருகிறான்’ என்று எச்சரித்தது.

கற்பழிக்கப்படும் பெண்களது உடல்களைப் பொது இடங்களில் போட்டுவிட்டுப் போவது அப்படித்தான். பெண்களையும் சிறுவர்களையும் இது அதிகமாகப் பாதிக்கிறது. இழப்புகள், சோகங்கள், இடப் பெயர்வுகள் பல மாதங்களாகத் தொடர்வதால் தலைவலி, உடல் சோர்வு, அதிகக் கோபம், உணவில் விருப்பமின்மை, கவலை, சோகம், அச்சம், வேதனை என அத்தனை உளவியல் பாதிப்புகளும் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளன.

இந்த மனித மனங்களை மீண்டும் தட்டியெழுப்ப முடியுமா என்று மனநல மருத்துவர் ருத்ரனைக் கேட்டோம். ”நம் வீட்டில் ஒரு சாவு விழுந்தால், அது அதிகபட்சம் இரண்டு மூன்று மாதங்கள் நம் மனச் சிறையில் உட்கார்ந்து கிடக்கும். அந்தச் சோகம் மெள்ள மெள்ள மறைந்து, நாம் அடுத்த வேலைக்குத் தாவிவிடுவோம். நம் வீட்டிலேயே அடுத்தடுத்து மரணங்கள் சம்பவித்தால், மறுபடி மறுபடி நமது சோகம் தட்டியெழுப்பப்படும். அது மாதிரிதான், நிமிஷத்துக்கு நிமிஷம் நாள்கணக்கில், மாதக்கணக்கில் மரணங்கள் நடந்தால், அழுவதற்கு நம்மிடம் கண்ணீர் இல்லை. பழகிப்போகும். அப்படித்தான் மரணத்தைப் பார்த்து அம்மக்கள் மனசு பழகிப் போய்விட்டது.

அழுகை என்பது மனதின் தற்காப்பு. சொல்லிப் பயனில்லாததை அழுவதன் மூலமாக அறிவிக்கிறோம். அது எப்போதாவதுதான் சாத்தியம். தொடர்ச்சியாக அழ முடியாது. இவ்வளவு பேர் செத்து விழும்போதும் அம் மக்களால் அழ முடியாததற்குக் காரணம், அதைப் பார்த்து அவர்களுக்குச் சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதால்தான்.

குண்டு வீச்சையும், பீரங்கி வருகையையும் முதல் தடவை பார்க்கும் தலைமுறையாக இருந்தால், அவர்களுக்குப் பதற்றம் இருந்திருக்கும். 30 ஆண்டுகளாகப் பார்த்துச் சலித்துப்போன சத்தம். சென்னையில் குண்டு விழுகிறது என்றால், ஏற்படும் பதற்றம், அச்சம் அந்த மக்கள் மனதில் இல்லை. ஏனென்றால், அச்சத்தை நித்தமும் எதிர்பார்த்துதான் அவர்களது வாழ்க்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. ‘நாளை நலமடைவோம்’ என்று அவர்கள் நினைப்பதில்லை. ‘இன்றிருந்ததைவிட நாளை இன்னும் மோசமாகும்’ என்ற எதிர்பார்ப்புடனே மறுநாளை எதிர்கொள்கிறார்கள்.

பதற்றம் என்ற வார்த்தைதான் உளவியலில் ஆரம்பமான அளவு. ஆனால், அவர்களது மனதில் பதற்றம் அப்படியே பதிந்துபோய்விட்டது. போர்ச் சூழலில் கஷ்டப்படும் மக்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை. ஏனென்றால், அவர்களது பயமே மரணத்தைப் பார்த்துத்தான். அதனால், தற்கொலைக்கு முயற்சிக்க மாட்டார்கள். ஆபத்து, மரணம், துயரம் ஆகிய மூன்றையும் எதிர்பார்த்து வாழும் வாழ்க்கைதான் ஈழத் தமிழருடையது. அதனால்தான் அவர்கள் அழுவதில்லை. சோகமாவதில்லை. நிம்மதியற்ற அரசியல் சூழ்நிலை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வாழும் மக்களுக்கு இதுதான் தலைவிதி.

ஒருவனின் வாழ்க்கையை அவனது அனுபவம்தான் தீர்மானிக்கிறது. இவர்களுக்கு அனுபவமே அச்சம் கலந்ததாக இருக்கிறது. நிம்மதியான கடந்த காலம் இல்லாததால் நம்பிக்கையான எதிர்காலத்தைக் கற்பனை செய்ய முடியவில்லை. வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதைச் சொல்ல இயலவில்லை.

குழந்தைகள்கூட தொடர்ந்து இந்தச் சம்பவங்களைப் பார்த்துப் பழகிவிட்டார்கள். அவர்களுக்கு உடல் காயங்களால் வலி இருக்கலாம். அதிர்ச்சி குறைந்து போயிருக்கும். தனது தாய்-தகப்பனைத்தான் குழந்தைகள் தனது பாதுகாப்பாக நினைக்கும்.ஆனால், இலங்கையில் யார் யார்கூடவோ ஓடி, வாழ்ந்து பழகியதால் சமூகத்தைத் தனது பாதுகாப்பாக நினைக்க ஆரம்பிக்கும். குடும்பத்தை இழந்த குழந்தைக்குச் சமூகமே குடும்பமாக ஆகும். படிப்பை இழந்த பிள்ளைகள் மனதில் ஏற்பட்ட வெறுமைக்கு அளவு இல்லை.

இது இரண்டு தலைமுறைகளைப் பாதிக்கும். பணத்தால் வரும் தைரியம் கொஞ்ச நாள்தான். கல்வியால் வரும் தைரியம் ஆயுள் வரை இருக்கும். எனவே தைரியமற்ற, எந்தச் சிந்தனையுமற்ற, கோழையான, வெறுமையான மனிதர்களாக்கும் கொடுமையே அங்கு நிகழ்கிறது.

அங்கு ஓர் அரசியல் தீர்வு வரும் என்று வைத்துக்கொண்டாலும், போருக்குப் பின் அந்த மக்களை மறுபடியும் உடல், மன ஆரோக்கியத்துடன் கட்டமைக்கிற பணி மிகப் பெரிய சவால்!” என்கிறார் ருத்ரன்.சூனியம் ஓர் இனத்தைச் சூழ்வதும் அதன் சொந்தங்கள் சும்மா இருப்பதுமான சூழல் வேறு இனத்தில் நடக்காது. நாற்காலி யுத்தத்தில் தமிழகம் மும்முரமாகிவிட்டது. ஆனால், ஈழ மக்கள் வாழ்வோ உளவியல் யுத்தத்தில் உயிர்விட்டுக்கொண்டு இருக்கிறது!

ஆக்கம்:
ப.திருமாவேலன்
விகடன் - இந்தியா.

மனிதம் கொன்று… மனம் தின்று…ஈழம் இன்று!SocialTwist Tell-a-Friend

தொடரும் சிறிலங்கா படையினரின் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்: இன்று 12 சிறுவர்கள் உட்பட 38 தமிழர்கள் படுகொலை

வன்னிப் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் இரண்டு கைக்குழந்தைகளும் 12 சிறுவர்களும் உட்பட 38 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 90 பேர் காயமடைந்துள்ளனர்.'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் பகுதிகளில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேளையில் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.இதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த இழப்புக்கள் இரண்டு கொத்துக்குண்டுகளால் ஏற்பட்டவை ஆகும்.
இதேவேளையில் அம்பலவன்பொக்கணை மற்றும் மாத்தளன் பகுதிகளில் இன்று பகல் நேரத்தில் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.அதேவேளையில் சிறிலங்கா படையினரால் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.இந்த இரண்டு தாக்குதல்களிலும் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளையில் பச்சைப்புல்மோட்டைப் பகுதியில் இன்று சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நான்கு தடவை குண்டுத் தாக்குதல்களை நடத்தின.இத்தாக்குதல்களை காலை 7:40 நிமிடம், காலை 9:10 நிமிடம், பின்னர் பிற்பகல் 12:20 நிமிடம், பிற்பகல் 3:10 நிமிடம் ஆகிய நேரங்களில் சிறிலங்கா வான்படை நடத்தியுள்ளன.இதில் 15 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இன்றைய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 90 பேருக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

  1. க.வேலாயுதம் (வயது 60)
  2. வை.லலிதா (வயது 24)
  3. இ.தினேஸ்குமார் (வயது 16)
  4. ஜெ.தர்சிகா (வயது 09)
  5. சு.நிரோஜினி (வயது 10)
  6. இ.பரமேஸ்வரி (வயது 35)
  7. ரா.பிரசாந்த் (வயது 04)
  8. அ.தருமராசா (வயது 67)
  9. சி.பிரபாகரன் (வயது 29)
  10. இ.சாந்தரூபன் (வயது 26)
  11. அ.வேனுஜன் (வயது 08)
  12. வே.ஜெயந்தன் (வயது 24)
  13. வி.கிருசாந்தன் (வயது 11)
  14. செ.டானியல் (வயது 62)
  15. ந.இராசாம்பாள் (வயது 70)
  16. சொ.நிரோஜன் (வயது 09)
  17. த.சத்தியரூபி (வயது 36)
  18. சி.கலா (வயது 52)
  19. செ.பொன்னன் (வயது 52)
  20. ம.தாரா (வயது 32)
  21. ஆ.ஜெயகொளரி (வயது 29)
  22. த.வஜந்தினி (வயது 22)
  23. குலமோகன் (வயது 03)
  24. வி.பார்த்தீபன் (வயது 05)
  25. மு.சுதாகரன் (வயது 28)
  26. வி.செல்வராசா (வயது 48)
  27. ம.கஜந்தினி (வயது 06)
  28. இ.வீரசிங்கம் (வயது 28)
  29. ந.சரவணமுத்து (வயது 32)
  30. ஏ.பாலமணி (வயது 59)
  31. சு.முகுந்தன்( வயது 28)
  32. சு.அப்பையா( வயது 03)
  33. ச.சதீஸ் (வயது 45)
  34. அ.தமிழ்நிலவு (வயது 05 மாதம்)
  35. க.ஈழவேந்தன் (வயது 03 மாதம்)
  36. க.திலகேஸ்வரி (வயது 13)
ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரின் உடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.

செய்திகள் : புதினம்

தொடரும் சிறிலங்கா படையினரின் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்: இன்று 12 சிறுவர்கள் உட்பட 38 தமிழர்கள் படுகொலைSocialTwist Tell-a-Friend

வன்னியில் எறிகணை மற்றும் வான் தாக்குதலில் 67 தமிழர்கள் படுகொலை; மேலும் ஒரு செஞ்சிலுவைச் சங்க பணியாளர் படுகாயம்

வன்னிப்பெரு நிலப்பரப்பில் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் சிறிலங்கா படையினரின் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் நேற்றும் 67 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 97 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், மேலும் ஒரு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் படுகாயமடைந்துள்ளார்.'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம், இடைக்காடு, அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி நேற்று புதன்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.இதில் 30 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 45 பேர் காயமடைந்துள்ளனர்.இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி நேற்று காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.அதேவேளையில் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, வலைஞர்மடம் ஆகிய பகுதிகளின் மீது நேற்று சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 52 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

  1. த.சத்தியரூபி ((வயது 36)
  2. ந.ராசம்மா (வயது 70)
  3. செ.டானியன் (வயது 62)
  4. க.சிவக்கொழுந்து (வயது 60)
  5. அ.சுரேந்தினி (வயது 28)
  6. அ.சுஜாதா (வயது 03)
  7. ச.தங்கராசா (வயது 45)
  8. சி.நிரோசா (வயது 10)
  9. செ.நிரோஜன் (வயது 09)
  10. ச.சத்தியரூபி (வயது 26)
  11. இ.சபேசன் (வயது 24)
  12. த.தியாகராசா (வயது 65)
  13. யோ.ரெதீபன் (வயது 09)
  14. யோ.அந்தோனிப்பிள்ளை (வயது 59)
  15. க.கலைவாணன் (மாதம் 08)
  16. ரூ.சர்மிலா (வயது 30)
  17. ஜெ.சசிகலா (வயது 32)
  18. ந.திருபாலசிங்கம் (வயது 55)
  19. ந.ராசமணி (வயது 70)
  20. சி.நிரேயினி (வயது 10)
  21. ச.தர்சினி (வயது 26)
  22. த.தியாகராசா (வயது 60)
  23. து.துவாரகா (வயது 03)
  24. த.தர்மிகா (வயது 05)
  25. வே.சர்மியா (வயது 10)
  26. ச.கண்மணி (வயது 48)
  27. க.பத்மசீலா (வயது 58)
  28. நீ.வேணி (வயது 44)
  29. சி.கோபிகன் (வயது 16)
  30. சி.கலாதேவி (வயது 39)
  31. ச.ஜெனோபா (வயது 30)
ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர் விபரம் கிடைக்கப்பெறவில்லை.
இதேவேளையில் சிறிலங்கா படையினரின் துப்பாக்கிச் சூட்டில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மேலும் ஒரு பணியாளர் படுகாயமடைந்துள்ளார்.பணியில் இருந்த போது சிறிலங்கா படையினரின் துப்பாக்கிச் சூடு இவர் மீது பாய்ந்ததாக வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.மகேந்திரராசா ராம்குமார் (வயது 27) என்பவரே படுகாயமடைந்துள்ளார். அண்மைக்காலமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்கள் மீதான சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

செய்திகள் புதினம்

வன்னியில் எறிகணை மற்றும் வான் தாக்குதலில் 67 தமிழர்கள் படுகொலை; மேலும் ஒரு செஞ்சிலுவைச் சங்க பணியாளர் படுகாயம்SocialTwist Tell-a-Friend

வன்னியில் 30 நிமிடத்துக்கு ஒரு தடவை வான்குண்டுத் தாக்குதல்; எறிணைத் தாக்குதல்: 78 தமிழர்கள் படுகொலை; 188 பேர் காயம்

வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களில் 78 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 188 பேர் காயமடைந்துள்ளனர்.மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சைப்புல்மோட்டைப் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.

இதேவேளையில் புதுக்குடியிருப்பு, பச்சைப்புல்மோட்டை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது நேற்று காலை தொடக்கம் பிற்பகல் 5:00 மணிவரை சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.30 நிமிடத்துக்கு ஒரு தடவை என மாறி மாறி வந்த சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீது குண்டுத் தாக்குதலை நடத்தின.வான்குண்டுத் தாக்குதல்களில் மட்டும் 52 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையோர் எறிகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இரண்டு தாக்குதல்களிலும் 188 பேர் காயமடைந்துள்ளனர்.

செய்திகள் : புதினம்

வன்னியில் 30 நிமிடத்துக்கு ஒரு தடவை வான்குண்டுத் தாக்குதல்; எறிணைத் தாக்குதல்: 78 தமிழர்கள் படுகொலை; 188 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

Hunting the Tigers - SBS - இலங்கையின் தற்போதைய நடப்புக்கள் தொடா்பான ஒளிஆவணத்தொகுப்பு

Hunting the Tigers - SBS இன் Dateline நிகழ்ச்சியில் ஒளிபரப்பான இலங்கையின் தற்போதைய நடப்புக்கள் தொடா்பான ஒளிஆவணத்தொகுப்பு. இறுதிவரை பாருங்கள். பாதுகப்பு அமைச்சா் கோத்தபாய சில உண்மைகளைக் கூறுகிறார். பார்த்துமுடித்த பின் SBS இன் தளத்திற்க்குச்சென்று பின்னுாட்டங்களை இடுவது மட்டுமன்றி George.Negus@sbs.com.au, amos.roberts@sbs.com.au எனும் முகவரிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துவிடுங்கள்.



நன்றி : SBS இணையம்

Hunting the Tigers - SBS - இலங்கையின் தற்போதைய நடப்புக்கள் தொடா்பான ஒளிஆவணத்தொகுப்புSocialTwist Tell-a-Friend

கருவிலிருக்கும் குழந்தைகளையும் தாக்கத்தொடங்கியிருக்கும் இலங்கை அரச படையினா்

தாயின் வயிற்றைக் கிழித்து குழந்தையைத் தாக்கிய படையினர் எறிகணை நெஞ்சை உலுக்கும் சம்பவம்.சிறிலங்காவின் இனப்படுகொலையில் கர்ப்பிணிப் பெண்களும் பலியாகி வருகின்றனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை படையினரின் எறிகணையில் நான்கு கர்ப்பிணிப் பெண்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதேவேளை, கடந்த 2ம் திகதி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் நேற்று சனிக்கிழமை பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். பிறந்த குழந்தையில் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தில் இருந்த எறிகணைத் துண்டு உடனடியாக சத்திர சிகிச்சை செய்யப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.

தேராவில் விசுவமடு பகுதியில் வசித்துவந்த 24 வயதான பிரசாத் சிவதர்சினி என்பவரே படுகாயமடைந்த நிலையில் குழந்தையைப் பெற்றுள்ளார். இதேவேளை, கடும் எறிகணைத் தாக்குதல் அதிர்ச்சியில் ஆறு மாதக் கருவொன்று வயிற்றிலேயே இறந்துள்ளது. 28 வயதான கர்ப்பிணிப் பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வயிற்றில் இருந்து குழந்தை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டபோதும், தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலதிக செய்திகள்:தமிழ்வின்

கருவிலிருக்கும் குழந்தைகளையும் தாக்கத்தொடங்கியிருக்கும் இலங்கை அரச படையினா்SocialTwist Tell-a-Friend

சிறிலங்காப் பொருட்களுக்கு நாம் கொடுக்கும் விலை - எம்மக்களின் வாழ்விற்கு அது உலை!

உலக அரசுகளின் மௌனப் புன்னகையின் கீழ் தமிழின அழிப்பின் உச்சக்கட்ட நடவடிக்கைகள் எமது தாயகப் பகுதியில் நடந்தேறிவருகின்றன. ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வெளியுலகம் முழு மூச்சுடன் இலங்கை அரசிற்கு வழங்கிவருகின்றது. இவ்வேளையில், நாம் எம்மை அறியாமலேயே சிங்கள அரசின் பொருளாதார வளத்திற்குப் பலம் சேர்ப்பவர்களாகப் புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றோம். புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் செய்யவேண்டியது யாதெனில், எந்தெந்த வகையில் இலங்கை அரசு வருவாயை ஈட்டுகின்றது என்பதைக் கண்டறிந்து, அவ் வழிகளை உடனடியாக மூடவேண்டியதேயாகும்.

முதலில் நாம் அன்றாட மற்றும் ஆடம்பரத் தேவைகளுக்கு இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்போம். அதாவது, உணவு வகைகள் மற்றும் உணவு தயாரிக்கப் பயன்படும் பொருட்கள், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் போன்றவற்றை வாங்குவதை நிறுத்துவோம். ஏனெனில், நுகர்வோன் எதை விரும்புகிறானோ அதையே சில்லறை வியாபாரிகள் கொள்வனவு செய்வார்கள் சில்லறை வியாபாரிகள் எதை விரும்புகிறார்களோ அதையே மொத்த வியாபாரிகள் கொள்வனவு செய்வார்கள். மொத்த வியாபாரியின் தேவைகளே உற்பத்தியாளனை ஊக்குவிக்கின்றது. உற்பத்தி அதிகரித்தால் நாட்டின் வரி வருவாய் அதிகரிக்கும். உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது, நாட்டின் அந்நியச்செலாவணி அதிகரிக்கும். அந்த அந்நியச்செலாவணியைப் பயன்படுத்தி, வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்து, அந்த ஆயுதங்களால் எம்மினத்தை அழித்து வருகிறது இலங்கை அரசு. ஆக மொத்தத்தில், நாம் கொள்வனவு செய்யும் இலங்கையின் உற்பத்திப் பொருட்களே ஆயுதங்களாக மாறி எம்மக்களின் அழிவுக்கு வழிகோலுகிறது. ஆகவே, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களனைவரும் இலங்கை உற்பத்திகளைப் புறக்கணிப்போம். அப்பொருட்களைக் கொள்வனவு செய்யும் வேற்றின மக்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களையும் புறக்கணிக்கச் செய்வோம்.

பொருளாதார நெருக்கடியை இலங்கை அரசிற்கு வழங்குவதன் மூலம், அது முன்னெடுத்து வரும் இன அழிப்புப் போரை நிறுத்த முடியும் அல்லது தளர்த்தவாவது முடியும். எந்நேரமும் இலங்கை அரசிற்கு உதவிவரும் உலகநாடுகளும் பணவீக்கம், வேலையில்லாப் பிரச்சினை, பாரிய உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படுதல் முதலிய பிரச்சினைகளினால் நெருக்கடியிலிருக்கும் இவ்வேளையில், போருக்கான உதவிகளை அவர்களும் செய்ய முன்வர மாட்டார்கள். ஏற்கனவே இலங்கையில், மின்சாரசபை மற்றும் கடதாசித் தொழிற்சாலை போன்றவற்றில் பணிபுரிவோருக்கான ஊதியம் இரண்டு மாதங்களாக வழங்கப்படாத நிலையில், ஊழியர்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். ஆகவே, ஏற்கனவே சிக்கலில் இருக்கும் இலங்கையின் பொருளாதார நிலையை, அதன் உற்பத்திப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் மேலும் சிக்கலில் ஆழ்த்த முடியும். இதனால், சிங்கள மக்களின் கவனம் போரிலிருந்து விடுபட்டு சீரழிந்து வரும் பொருளாதார நிலையை நோக்கித் திரும்பும். இலங்கை அரசிற்கு எதிராக சிங்கள மக்களும் திரும்பும் போது வேறு வழியின்றிப் போரை நிற்றுத்தவேண்டிய நிலைப்பாடு ஒன்று இலங்கைக்கு உருவாகும். அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு கூட, பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கு நெடுநாளாகும். அந்த இடைவெளியில் சாவின் பிடியிலிருக்கும் எங்கள் மக்களை மீட்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.

லக சந்தையில் இலங்கைக்கு அந்நியச்செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் முக்கிய பணப்பயிராக விளங்குவது தேயிலை. பிரித்தானியரால் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள், வனாந்தரமாகக் கிடந்த மலையகப் பகுதியைத் தமது கடின உழைப்பினால் பெரும் செல்வமீட்டும் தேயிலைத் தோட்டங்களாக மாற்றியமைத்தனர். கடுங்குளிராலும், வன விலங்குகளாலும், வசதிக் குறைவினாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல இலட்சங்களைத் தாண்டும். அப்படிப்பட்ட எம் தமிழுறவுகளை இலங்கை சுதந்திரமடைந்ததும், இலங்கை அரசானது அவர்களின் குடியுரிமையைப் பறித்து, நாடற்றவர்களாக்கியது. பல தலைமுறைகளாக அவர்கள் மேற்கொண்ட கடின உழைப்பின் பயனாக உருவான தேயிலைத் தோட்டங்களில் விளைந்த தேயிலையை ஏற்றுமதி செய்து, அதனால் கிடைக்கும் பணவருவாயில், ஆயுதம் கொள்வனவு செய்து, எம் தமிழினத்தின் உயிரைக் குடிக்கிறது இலங்கை அரசு. செந்நிறத் தேநீரை உலகுக்கு வழங்கி, அந்த வருவாயில் தமிழரின் செங்குருதியைக் குடித்து மகிழ்கிறது சிங்கள அரசு. புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம், இதனைப் பல்லின மக்களுக்கும் எடுத்துக் கூறவேண்டும். இலங்கையை உலக சந்தையில் வீழ்ச்சி காணும்படி செய்ய வேண்டும். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களின் பலம் என்ன என்பதை இலங்கை அரசுக்கு நிரூபிக்க வேண்டும்.

அந்நியச்செலாவணியை இலங்கைக்கு சம்பாதித்துக் கொடுக்கும் வியாபாரங்களில் அடுத்து முக்கியத்துவம் பெறுவது, இறக்கி ஏற்றல் வியாபாரம். அதாவது, மூலப்பொருட்களைப்
பிறநாடுகளிலிருந்து தருவித்து, முடிவுப் பொருட்களாக மாற்றுதல் அல்லது பைகளில் அடைத்துப் பெயரிடுதல் போன்றவற்றைச் செய்தபின், ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல்.

அடுத்து முக்கியத்துவம் பெறுவது, தைத்த ஆடைகள் ஏற்றுமதி. தைத்த ஆடைகள் வியாபாரத்தில், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையையே கேந்திர நிலையமாகக் கொண்டு இயங்குகின்றன. ஐக்கிய இராச்சியத்தில், மார்க்ஸ் அன் ஸ்பென்சர் (M&S) இலங்கையிலிருந்து தைத்த ஆடைகளைப் பெருமளவில் கொள்வனவு செய்கிறது. புலம்பெயர்ந்து வாழும் எம்மவர் மத்தியில், இலங்கையின் யானை மார்க் குளிர்பானங்கள், நெஸ்லே மற்றும் மலிபன் தயாரிப்புக்கள் மிகவும் பிரசித்தம் பெற்றுக்
காணப்படுகின்றன. அவற்றைக் கொள்வனவு செய்யாது தவிர்க்க வேண்டும்.

இலங்கையின் பாதுகாப்பற்ற சூழலை மேற்கோள் காட்டி, அங்கு செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளை ஊக்கமிழக்கச் செய்தல், இலங்கையின் விமான சேவையைப் பயன்படுத்தாது தவிர்த்தல், இலங்கை வியாபார நிறுவனங்களின் பங்குகளை வாங்காது தவிர்த்தல், ஏற்கனவே பங்குதாரர்களாக இருப்பின், அப்பங்குகளை விற்றல் மற்றும் இலங்கையின் வங்கிகளில் எமது பெயர்களிலுள்ள சேமிப்பு வைப்புக்கள் முதலிய அனைத்து வங்கிக் கணக்குகளையும் மூடுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம், இலங்கை அரசிற்கு இலாபம் கிடைக்கின்ற பெரும்பாலான
வழிகளை மூட முடியும். இதை ஒவ்வொரு புலம்பெயர்ந்து வாழும் தமிழனும் மேற்கொள்வதுடன், தம்மைச் சுற்றியுள்ளவர்களிடையேயும், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்வோமேயானால், அதனால் கிடைக்கக்கூடிய பலனும், தமிழர் தம் பலமும் வருகின்ற நாட்களில் வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருக்கும். ஐக்கிய இராச்சியத்தின் தமிழ் இளையோரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்பணி வேகமாக முடுக்கிவிடப்பட்டு, வெற்றிகரமாக இலக்கை அடைவதற்கு அனைத்துத் தமிழுறவுகளும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டுமென
உரிமையோடும் அன்போடும் கேட்டுக் கொள்கிறார்கள் தமிழ் இளையோர்கள்.

இவை தொடர்பான மென்புத்தக வடிவிலான அறிவித்தல் தரவிறக்குங்கள்.


தமிழ் இளையோர்கள்
மேலதிக செய்திகளுக்கு :
Boycott Sri Lanka

சிறிலங்காப் பொருட்களுக்கு நாம் கொடுக்கும் விலை - எம்மக்களின் வாழ்விற்கு அது உலை!SocialTwist Tell-a-Friend

வன்னியில் சிறிலங்கா படையினர் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்: நேற்றும் நேற்று முன்நாளும் 57 தமிழர்கள் படுகொலை

வன்னிப்பெரு நிலப்பரப்பில் நேற்றும் நேற்று முன்நாளும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் 57 தமிழா்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.இதில் நேற்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர்.
உணவுப்பொருட்களை ஏற்றிய கப்பலில் வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் படகின் மூலம் நேற்று வியாழக்கிழமை காலை 8:30 நிமிடமளவில் கரையோரத்திற்கு வந்தபோது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.இதில் சம்பவ இடத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் இருவர் மருத்துமனையில் உயிரிழந்துள்ளனர்.

  • க.நாதன் (வயது 44)
  • தி.மேரி தியாகினி (வயது 14)
  • க.கனகநாதன் (வயது 47)
  • யோ.கோபிநாத் (வயது 27)
  • ஈ.சிலம்பரசன் (வயது 20)
  • க.கௌதம் (வயது 06)
  • க.கேதீஸ்வரி (வயது 46)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதி சென்று பார்வையிட்டுள்ளார்.
இதேவேளையில் அனைத்துலக சங்க பிரதிநிதிகள் கரைக்கு வந்த போது மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.மக்களை கொல்கின்ற சிறிலங்கா படை எறிகணைத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சை புல்மோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
  • சோ.சிந்துஜன் (வயது 14)
  • சோ.சுகன்யா (வயது 20)
  • அ.அனெக்ஸ்கிங்ஸ்ரன் (வயது 36)
  • பே.இந்திரன் (வயது 26)
  • சி.மனோறஞ்சிதம் (வயது 28)
  • சி.நாகேஸ்வரி (வயது 49)
  • சி.கமலகாந்தன் (வயது 35)
  • இ.பிரியதர்சினி (வயது 16)
  • க.கணநாதன் (வயது 45)
  • நோ.இந்திராணி (வயது 58)
  • ப.நவரத்தினராசா (வயது 50)
  • அ.இராஜேஸ்வரி (வயது 18)
  • இ.சுதர்சினி (வயது 15)
  • ரவிநாத் (10 மாதம்)
  • ப.பரமேஸ்வரி (வயது 30)
  • சு.ருக்குமணி (வயது 66)
  • த.சரண்யா (வயது 08)
  • செ.லக்சனா (வயது 04)
  • வி.பிரதீபன் (வயது 04)
ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.
அம்பலவன்பொக்கணை மற்றும் பச்சைபுல்மோட்டை பகுதியில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நேற்று குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.இதில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
  • சி.இரத்தினம் (வயது 70)
  • ந.கபில்ராஜ் (வயது 15)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளையில் மாத்தளன் மருத்துவமனையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட வேண்டிய 5 பொதுமக்கள் நேற்று உயிரிழந்துள்ளனர்.
  • ஞ.யோகேஸ்வரன் (வயது 22)
  • ஐ.கணபதி (வயது 68)
  • சோ.சிந்துஜா (வயது 17)
ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஏனைய இருவரின் பெயர் விபரம் கிடைக்கப்பெறவில்லை.அதேவேளை, மாத்தளன் பகுதியில் நேற்று முன்நாள் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.இதில் 25 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.

செய்திகள்:புதினம்

வன்னியில் சிறிலங்கா படையினர் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்: நேற்றும் நேற்று முன்நாளும் 57 தமிழர்கள் படுகொலைSocialTwist Tell-a-Friend

அவுஸ்ரேலியாவில் இன உரிமை போராட்டம்

அவுஸ்ரேலியாவில் இன உரிமை போராட்டம்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் இந்திய தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

சிறிலங்கா அரசுக்கு இந்தியா வழங்கி வரும் ஆயுத மற்றும் மனித வள உதவிகளை கண்டித்து பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளனர்.பிரித்தானிய தமிழ்ப் பெண்கள் ஏற்பாடு செய்துள்ள இக்கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:00 மணி தொடக்கம் பிற்பகல் 4:00 மணிவரை நடைபெறவுள்ளது.
நிகழ்வு நடைபெறும் இடம்: India House, Aldwych, London, WC 2B 4NA (Nearest Tube Stations: Temple, Holborn, Charing cross)

  • தமிழினப் படுகொலைகளைப் புரியும் மகிந்த அரசுக்கு உதவிகளை வழங்காதே
  • மகிந்த அரசுக்கான இராணுவ உதவிகளை நிறுத்து
  • வன்னியில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்ற உதவி புரியாதே
  • தமிழீழத் தாயகமே எமது முடிவு
  • எமது தேசியத் தலைவர் பிரபாகரன்
  • தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளதால் காலத்தின் தேவை கருதி பெருந்திரளாக மக்களை ஒன்றுகூடுமாறு தமிழ் மகளிர் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்திகள் : புதினம்

பிரித்தானியாவில் இந்திய தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்SocialTwist Tell-a-Friend

வன்னியில் தொடரும் இனப் படுகொலை புதன், வியாழனில் 83 தமிழர்கள் படுகொலை; 226 பேர் காயம்

வன்னியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்களில் நேற்றும் நேற்று முன்நாளும் 83 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 226 பேர் காயமடைந்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால், மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.இதில் 73 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 164 பேர் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா அரசால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட மாத்தளன், அம்பலவன்பொக்கனை, வலைஞர்மடம் பகுதிகளில் நேற்று அதிகாலை 1:30 நிமிடத்துக்கும் பிற்பகல் 12:00 மணிக்கும் இடையில் சிறிலங்கா படையினர் நடத்திய தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.இதில் மட்டும் கைக்குழந்தை உட்பட 25 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 123-க்கும் அதிகமானோர் காயமடைந்ததுள்ளனர்.

அதிகாலை வேளை நடத்தப்பட்ட தாக்குதலினால் தூக்கத்தில் இருந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் காயமடைந்த நிலையில் பெருமளவிலான மக்கள் இருளில் பெரும் அவலப்பட்டதாக 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

  • பா. சஜந்தினி (வயது 07)
  • சி. சாரூபன் (வயது 02)
  • சோ. நடராசா (வயது 45)
ஆகியோரின் பெயர் விவரங்கள் மட்டும் கிடைக்கப்பெற்றன. 23 உடலங்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
  • லோகேஸ்வரி (வயது 25)
  • க.சுபாகர் (வயது 28)
  • க.மணியம் (வயது 60)
  • சு.முத்தையா (வயது 52)
  • ஜெ.கலைவாணி (வயது 27)
  • சி.தர்சினி (வயது 31)
  • ந.இராசாத்தி (வயது 62)
  • சு.அர்ச்சனா (வயது 09)
  • சு.கணபதி (வயது 67)
  • ஆ.சந்திரகுமார் (வயது 50)
  • க.தங்கராஜா (வயது 53)
  • செ.றோசினி (வயது 26)
  • வே. மகேந்திரன் (வயது 31)
  • அ.தீபராஜ் (வயது 25)
  • பு.சுகந்தினி (வயது 26)
  • அ.ஜீவரட்ணம் (வயது 50)
  • பெ.ரவிச்சந்திரன் (வயது 31)
  • சி.றெபேகா (வயது 26)
  • கை.ஞானசீலன் (வயது 24)
  • து. முருகையா (வயது 31)
  • ஜெ.மஞ்சுளா (வயது 20)
  • க.ரவிச்சந்திரன் (வயது 39)
  • கோ.சுகந்தினி (வயது 26)
  • ஜெ.சுரேஸ்கோபி (வயது 07)
  • த.லோறன்ஸ் (வயது 35)
  • க.சிவபாக்கியம் (வயது 60)
  • க.உதயநிர்மலா (வயது 36)
  • க.யசோதா (வயது 21)
  • பா.தர்சினி (வயது 17)
  • இ.பாலசுப்பிரமணியம் (வயது 57)
  • வி.சண்முகலிங்கம் (வயது 69)
  • ப.ராஜ்குமார் (வயது 20)
  • இ.பார்த்தீபன் (வயது 17)
  • து.முருகா (வயது 37)
  • க.சத்தியமூர்த்தி (வயது 39)
  • செ.நாகேந்திரம் (வயது 52)
  • க.றஞ்சிதம் (வயது 50)
  • செ.கோமதி (வயது 32)
  • செ.ஜீசா (வயது 10)
  • ஆ.ராஜ்குமார் (வயது 44)
  • தி.சந்திரபாஸ் (வயது 45)
  • க.குமாரசாமி (வயது 63)
  • கி.தனுசன் (வயது 14)
  • மி.அசோக்குமார் (வயது 19)
  • ம.மேரிலிப்பிஸ் (வயது 50)
  • பா.இந்திராகாந்தி (வயது 44)
  • வா.கிருஸ்ணபிள்ளை (வயது 58)
  • சி.புவேந்தினி (வயது 12)
  • சீ.நல்லதேவி (வயது 55)
  • ஜொ.ரவீந்திரவதனி (வயது 47)
  • அ.ஜோன் (வயது 39)
  • க.நாகராசா (வயது 54)
  • க.லிங்கேஸ்வரி (வயது 29)
  • கே.கலைச்செல்வி (வயது 26)
  • மு.கலைரூபன் (வயது 24)
  • க.மகேஸ்வரன் (வயது 38)
  • க.நிருசா (வயது 25)
  • சி.சீவரத்தினம் (வயது 50)
  • தே.ஜீவலதா (வயது 31)
  • சி.சிவஞானம் (வயது 50)
  • க.குஞ்சுப்பிள்ளை (வயது 60)
  • அ.கேதீஸ்வரன் (வயது 30)
  • சி.சிவகீதன் (வயது 23)
  • சு.மாலினி (வயது 27)
  • செ.விஜயகுமார் (வயது 44)
  • வ.மரியாயி (வயது 50)
  • அ.சண்முகதேவி (வயது 52)
  • வே.கண்ணம்மா (வயது 57)
  • சு.அருட்பிரகாசம் (வயது 56)
  • ச.சுப்பையா (வயது 90)
  • சு.தர்மலிங்கம் (வயது 38)
  • சி.கோமதி (வயது 31)
  • மா.செல்வநாயகம் (வயது 48)
  • சி.பிரதீபன் (வயது 22)
  • இ.சுரேஸ் (வயது 38)
  • அ.அனுசாந்தகுமார் (வயது 29)
  • ந.ஐங்கீதன் (வயது 16)
  • பெ.நாகம்மா (வயது 34)
  • இ.சிறிதா (வயது 02)
  • இ.ரவீந்தினி (வயது 19)
  • சி.தங்கராசா (வயது 68)
  • அ.பரஞ்சோதி (வயது 30)
  • ஜெ.நாவேந்தன் (வயது 01)
  • ஜெ.இராஜேஸ்வரி (வயது 19)
  • பெ.ரஜனி (வயது 22)
  • த.தஸ்வினி (வயது 19)
  • த.தவப்பிரியா (வயது 12)
  • செ.சுபிதா (வயது 13)
  • து.இந்திரதாஸ் (வயது 31)
  • சி.கந்தசாமி (வயது 55)
  • கு.விஜயரூபன் (வயது 41)
  • து.திரேசம்மா (வயது 40)
  • சி.மேரி (வயது 60)
  • க.அகிலன் (வயது 34)
  • க.மகேஸ்வரன் (வயது 38)
  • கு.றெஜினா (வயது 57)
  • க.சுபாசினி (வயது 25)
  • பெ.சத்தியா (வயது 15)
  • சி.தெய்வானைப்பிள்ளை (வயது 62)
  • செ.விஜயகுமார் (வயது 44)
  • அ.மரியாயி (வயது 50)
  • அ.சண்முகதேவி (வயது 52)
ஆகியோர் காயமடைந்துள்ளனர். ஏனையோரின் பெயர் விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரட்டைவாய்க்கால்ப் பகுதியை நோக்கி நேற்று முன்நாள் புதன்கிழமை இரவு 7:45 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.இதில் 10 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 62 பேர் காயமடைந்துள்ளனர்.
  • மு.கிருஸ்ணகுமார் (வயது 56)
  • உ.மாணிக்கம் (வயது 49)
  • இ.இராசமணி (வயது 55)
  • இ.அருந்தவராசா (வயது 40)
  • ஜெ.தமிழ்வாணி (வயது 01)
  • இ. ஞானமணி
  • ச.சாரங்கன் (வயது 18)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.ஏனையோரின் பெயர் விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
  • சி.புஸ்பராணி (வயது 35)
  • த.ரகுராசா (வயது 20)
  • செ.அருள்மதி (வயது 30)
  • இ.கணேசன் (வயது 24)
  • ப.வினாயகமூர்த்தி (வயது 30)
  • ச.வள்ளிமயில் (வயது 50)
  • மு.சுந்தராம்பாள் (வயது 68)
  • கு.வேலு (வயது 60)
  • ஜெ.சாரூபன் (வயது 03)
  • தெய்வானை (வயது 63)
  • பொ.அருந்தவமலர் (வயது 53)
  • செஇராஜநாயகம் (வயமு 57)
  • கு.நடராசா (வயது 53)
  • செ.ராதிகா (வயது 16)
  • செ.கணேசானந்தராசா (வயது 57)
  • வ.சிவசுப்பிரமணியம் (வயது 72)
  • சி.கந்தசாமி (வய 49)
  • கு.கபிலன் (வயது 25)
  • நா.கிருஸ்ணன் (வயது 60)
  • த.சுரேஸ் (வயது 34)
  • சு.அஜித்குமார் (வயது 12)
  • அகவை ச.மிதுசன் (வயது மூன்றரை)
  • ச.லக்சுமி (வயது 22)
  • பொ.நந்தகுமார் (வயது 32)
  • ந.சந்திரவதனி (வயது 34)
  • ந.விதுசா (வயது 04)
  • ந.வேணுசன் (வயது 04)
  • ஏகாம்பரம் செல்வராசா (வயது 51)
  • கு.சின்னப்பா (வயது 70)
  • வி.செல்லக்குமாரி (வயது 33)
  • க.மணியம் (வயது 32)
  • சி.சுதர்சன் (வயது 20)
  • ஜெ.கமலேஸ்வரி (வயது 49)
  • சு.சர்வேஸ்வரன் (வயது 49)
  • ர.நிரோஜன் (வயது 14)
  • பொ.கமலநாதன் (வயது 52)
  • கி.சிவலோகநாதன் (வயது 56)
  • த.துவிசன் (வயது 07)
  • த.லூட்ஸ்மெபோதா (வயது 27)
  • இ.ஆறுமுகம் (வயது 59)
  • யோ.நிசாந்தன் (வயது 13)
  • சி.கௌரி (வயது 42)
  • மு.பிரதீபன் (வயது 18)
  • க.ஜெயக்குமார் (வயது 38)
  • செ.இராசநாயகம் (வயது 51)
  • கர்ப்பிணியான பி.சிவதர்சினி (வயது 24)
  • யே.சுரேஸ் (வயது 30)
  • பி.புருசோத்தமன் (வயது 14)
  • பொ.துரைசிங்கம் (வயது 70)
  • சி.ஜெயசீலன் (வயது 30)
  • இ.அற்புதராசா (வயது 45)
  • ஆ.அன்னப்பிள்ளை (வயது 85)
  • க.மணியம் (வயது 52)
  • அ.தெய்வானை (வயது 53)
  • அ.ஐயம்பிள்ளை (வயது 65)
  • வ.சாஜகான் (வயது 19)
  • செ.ராதிகா (வயது 14)
  • ஜெ.விஜிதா (வயது 30)
  • ரா.சரஸ்வதி (வயது 57)
ஆகியோர் காயமடைந்துள்ளனர். ஏனையோரின் பெயர் விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

செய்திகள்:புதினம்

வன்னியில் தொடரும் இனப் படுகொலை புதன், வியாழனில் 83 தமிழர்கள் படுகொலை; 226 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் (05.03.09) தமிழர்கள் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம்

வன்னி மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் உடனடியாக கிடைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளும்படி ஐக்கிய நாடுகள் சபைக்கும் பிரித்தானிய அரசுக்கும் தெரிவிப்பதற்கான மனிதச் சங்கிலி போராட்டம் ஒன்று லண்டனில் நடைபெற உள்ளது.இந்த மனிதச் சங்கிலி போராட்டம் நாளை வியாழக்கிழமை (05.03.09) பிற்பகல் 1:00 மணியில் இருந்து பிற்பகல் 6:00 மணி வரையும் இடம்பெறவுள்ளது.லண்டனில் மனிதச் சங்கிலி நடைபெறும் பகுதிகளாக:

லண்டன் நகரின் மத்தியில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அண்டர் கிறவுண்ட்டை மையப்படுத்தி, அதனை சுற்றியுள்ள
செறிங் குறஸ்,
கொல்போற்ன்,
ரொட்டணம் கோற்ட் றோட்,
பிக்கடிலி சேற்க்கஸ்,
கிறீன்பார்க்,
கைட்பார்க் கோற்னர்,
விக்டோறியா,
சென்- ஜேம்ஸ் பாற்க் ஆகிய அண்டர் கிறவுண்ட்கள் உள்ள வீதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலதிக விவரம் அறிந்து கொள்ள விரும்புகின்றவர்கள் (44) 7727899358 எனும் செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம்.

செய்திகள்: புதினம்

பிரித்தானியாவில் (05.03.09) தமிழர்கள் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம்SocialTwist Tell-a-Friend

மாத்தளன் மருத்துவமனை சுற்றயல் உட்பட பல பகுதிகளில் இன்றும் எறிகணைத் தாக்குதல்: 68 தமிழர்கள் படுகொலை

மாத்தளன் மருத்துவமனை சுற்றயல் உட்பட பல பகுதிகளில் இன்றும் [04-02-2009] எறிகணைத் தாக்குதல்: 68 தமிழர்கள் படுகொலை. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுமாத்தளன் மருத்துவமனை சுற்றயல் உட்பட பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 68 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 175 பேர் காயமடைந்துள்ளனர்.பாதுகாப்பு வலயத்தில் உள்ள புதுமாத்தளன் மருத்துவமனையின் சுற்றயல் பகுதி மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 5:15 தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.இதில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 58 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளையில் புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று காலை 5:30 நிமிடம் தொடக்கம் பிற்பகல் 3:30 நிமிடம் வரை ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.இதில் 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 117 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களினதும் காயமடைந்தவர்களினதும் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

செய்திகள்: புதினம்

மாத்தளன் மருத்துவமனை சுற்றயல் உட்பட பல பகுதிகளில் இன்றும் எறிகணைத் தாக்குதல்: 68 தமிழர்கள் படுகொலைSocialTwist Tell-a-Friend

இலங்கைப்பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம்

Box No 620 State House,
179 Station Road,
Harrow,
Middlesex,
HA1 2AE
அன்பான தமிழ் இறக்குமதியாளர்களே, வர்த்தகர்களே !

சர்வதேச முண்டுகொடுப்போடு எம் உறவுகள் மீது தினமும் குண்டுமழை பொழிந்து, நூற்றுக்கணக்கில் எம் மக்களை தினமும் கொன்றொழிக்கும் ஸ்ரீலங்கா அரசின் மீது பெரும் பொருளாதார யுத்தம் ஒன்றை முன்னெடுக்க வேண்டிய தேவையை காலம் எங்கள் கைகளில் விட்டிருக்கிறது. சிங்களம் இன்று தனது முழு மனித பொருளாதார வளங்களையும் திரட்டி இக்கொடிய போரை எம்மக்கள் மீது திணித்து வருகின்றது. இதன் மூலம் ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இந்நிலையில் நாம் கொடுக்கும் சிறிய அழுத்தமும் அவனது வீழ்ச்சியை விரைவாக்கும் என்பது பொருளாதார நிபுணர்களின் ஒருமித்த கருத்து.உலகப்பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம், போர்ச்செலவு போன்றவற்றினால் நாள்தோறும் வற்றிச் செல்லும் அந்நியச் செலவாணியை ஈடு செய்ய சிங்களம் வெளிநாட்டில் வதியும் ஸ்ரீலங்கர்களிடமிருந்து முதலீடாகவும், கடனாகவும் பெருமளவு நிதியை சேர்க்க திட்டம் தீட்டி செயற்பட்டு வருகிறது.

பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் சகல தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து BOYCOTT SRI LANKA எனும் போராட்ட இயக்கத்தை வித்திட்டு தொடர்ந்து பலசெயற்திட்டங்களை செயற்படுத்தவும் சிறிலங்காவுக்கு இலாபம் ஈட்டி தரும் தேயிலை, ஆடை ஏற்றுமதி, உல்லாசப்பயணத்துறை, SRILANKAN AIRLINES மற்றும் சிறிலங்காவில் இருந்து இறக்கப்படும் பொருட்களை பகிஷ்கரிக்க நாம் எம்மக்களையும் வேறு இன மக்களையும் கோரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். ஏற்கனவே ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தை வீழ்த்த பல்வேறு நாடுகளில் சுயமாகவும் அமைப்பு ரீதியாகவும் மக்கள் செயற்படத் தொடங்கி உள்ளதை நீங்கள் அறிவீர்கள்.நீங்கள் சிறிலங்காவிலிருந்து இறக்குமதி செய்கின்ற ஒவ்வொரு பொருட்களும் அந்த அரசுக்கு பெரும் அந்நியச்செலாவணியை ஈட்டி தருகிறது என்பதை அறிவீர்கள். இந்தப் பணம் மீண்டும் எங்கள் மக்கள் மீதே குண்டுகளாய் விழுகின்ற கொடுமையும் நடக்கிறது. ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராய் வீதிகளில் இறங்கி பெரும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கின்ற நாமே, எம் மக்கள் மீது வீசுகிற ஒவ்வொரு குண்டுக்கும் மறைமுகமாக பணம் கொடுத்து உதவலாமா என்பதை தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள்.

கடந்த காலங்களில் எம் தாயகம் மீது பற்றுக் கொண்டு நீங்கள் பல வழிகளிலும் ஆற்றிய பங்கை நாம் அறிவோம். இதன் அடுத்த கட்டமாக நாம் முன்னெடுக்கும் பொருளாதார பகிஷ்கரிப்புக்கு உங்கள் அதரவை உறுதி செய்யுங்கள்.இந்த பகிஷ்கரிப்பு போராட்டம் ஸ்ரீலங்கா அரசின் பொருளாதார நலன்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்படுகின்றது என்றபோதும், இதனால் உங்களுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார இழப்புக்களையும் நாம் உணர்கின்றோம். எனினும், சிறீலங்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மாற்றாக, வேறு நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் இந்த தற்காலிக இழப்புக்களை குறுகிய காலத்தில் நீங்கள் ஈடுகட்டமுடியும் அல்லவா ? ஏற்கனவே பல வர்த்தக நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து ஸ்ரீலங்கா பொருட்களின் விற்பனையை நிறுத்தியுள்ளமை இப்பகிஷ்கரிப்பிற்கான பங்களிப்பை உறுதிசெய்துள்ளது. எனவே, நாம் முன்னெடுத்துள்ள இந்த பகிஷ்கரிப்புக்கு உங்கள் ஆதரவு கிட்டுமென உறுதிகொள்கிறோம்.இப்பாரிய பகிஷ்கரிப்பை மட்டக்களப்பு மாநகரத்தில் இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக, அன்னை பூபதியினால் பட்டினி போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளான 19-03-09 வியாழன் அன்று நடைமுறைப்படுத்த உள்ளோம். எம்மண்ணில் தினமும் கொன்று குவிக்கப்படும் அப்பாவி மக்களின் பெயரால் இதனை நாம் உங்களிடம் உரிமையோடும் அன்போடும் வேண்டி நிற்கின்றோம்.

நன்றி.

BOYCOTT SRILANKA
நடவடிக்கை குழு

தொடர்புகளுக்கு -
075 2982 0565 - 075 2982 0566

இலங்கைப்பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம்SocialTwist Tell-a-Friend

அரை மணி நேரத்துக்கும் அதிகமாக எரிந்து சேதம் விளைவிக்கும் எரிகுண்டு தாக்குதல் நேற்று

புதுமாத்தளன் பிரதேசத்தில் நேற்று நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் புதிய வகையான, வித்தியாசமான எரிகுண்டுகள் வந்து வீழ்ந்ததாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் துரைராசா வரதராசா தெரிவித்துள்ளார்.இத்தாக்குதலில் எரிகாயமடைந்த 54 பேர் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் 5 பேர் சத்திர சிகிச்சை அளிப்பதற்கான மருந்துப் பொருட்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் இறந்ததாகவும் டாக்டர் வரதராசன் பி.பி.சி.க்கு வழங்கிய பேட்டியில் கூறினார்.

புதிய ரகமான குண்டுகள் அவை விழுந்த இடங்களில் அரை மணி நேரத்திற்குப் பின்னரும் எரிந்து கொண்டிருப்பதாகவும் தாம் கண்ட 4 சடலங்கள் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் பல இடங்களுக்கும் சென்றுவர முடியாத சூழ்நிலை காணப்பட்டதால் இழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிவித்த அவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு செயலிழக்கும் நிலை எற்பட்டுள்ளதாகவும் சொன்னார்.நாளாந்தம் 3000 க்கும் மேற்பட்டவர்கள் இங்கு சிகிச்சை பெறுவதாகவும் மருந்துகள் போதிய அளவில் இல்லாததால் 5 குளிசைகள் வழங்க வேண்டிய இடத்தில் 2 குளிசைகளே வழங்கப்படுவதாகவும் மக்களுக்குப் போதிய அளவில் போசாக்கான உணவு கிடைக்காமையினாலேயே அதிகளவில் நோய்த்தாக்கம் ஏற்படுகின்றது என்றும் டாக்டர் வரதராசன் கூறினார்.

செய்திகள் : தமிழ்வின்

அரை மணி நேரத்துக்கும் அதிகமாக எரிந்து சேதம் விளைவிக்கும் எரிகுண்டு தாக்குதல் நேற்றுSocialTwist Tell-a-Friend

700 சிறுவர்கள் அடங்கலாக 2018 தமிழர்கள் வன்னியில் கொல்லப்பட்டுள்ளனர்: புலிகளின் குரல்

கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 700 சிறுவர்கள் அடங்கலாக 2018 தமிழர்கள் வன்னியில் கொல்லப்பட்டுள்ளதாக புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளது. புலிகளின் குரல் வானொலியின் "உறவுப் பாலம்" நிகழ்ச்சியூடாக இச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவைத் தளமாக கொண்டு இயங்கும், மனித உரிமை அமைப்பும் 2000 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்க விடையமாகும். குறிப்பாக 700 சிறுவர்கள் கடந்த 2 மாதத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை அரசானது , திட்டமிட்ட ரீதியில் இளைய சமுதாயத்தினரையும், சிறுவர்களையும் கொலைசெய்து வருவது, வருங்கால தமிழ் சமுதாயத்தை தளைக்கவிடாமல் வேரோடு களையும் நோக்கமே என்பது புலனாகிறது.

செய்திகள் : தமிழ்வின்

700 சிறுவர்கள் அடங்கலாக 2018 தமிழர்கள் வன்னியில் கொல்லப்பட்டுள்ளனர்: புலிகளின் குரல்SocialTwist Tell-a-Friend