சுட்டுக்கொல்லப்படும் எம்மக்கள் - Channel 4 செய்திகள் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை வீடியோ ஆதாரங்களுடன் வெளியானது
சிங்களச் சிப்பாய்களால் தமிழ் மக்கள் சுட்டுக்கொல்லப்படுவதை ஒளிப்படமாக இன்று இங்கிலாந்தில் இருந்து இயங்கும் Channel 4 தொலைக்காட்சி ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.
சுட்டுக்கொல்லப்படும் எம்மக்கள் - Channel 4 செய்திகள் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை வீடியோ ஆதாரங்களுடன் வெளியானது
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: ஈழம், ஒளிக்காட்சிகள், செய்திகள்
தொடர்புடைய இடுக்கைகள்:இடைத்தங்கல் முகாமில் பாலியல் கொடுமைகள் : வெளிக்கொணருகிறது மற்றுமொரு சர்வதேச ஊடகமான Sky News
பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப்பிரதேசத்திற்கு வந்த தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் நடைபெறும் கொடுமைகள் பற்றி மற்றுமொரு சர்வதேச ஊடகம் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. பிரித்தானியாவின் Chanel4 தொலைக்காட்சிச் சேவை முதல் தடவையாக இடைத்தங்கல் முகாம்களில் வதியும் மக்களின் துயரங்களைப் பதிவு செய்தது.அதைத் தொடர்ந்து அந்தச் செய்திச் சேவையின் செய்தியாளர்கள் சிறிலங்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டார்கள்.
தற்போது மற்றுமொரு பிரபல சர்வதேசம் ஊடகமாகிய SkyNews இடைத்தங்கல் முகாம் கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.ஸ்கை நியூஸ் செய்தி சேவையின் ஆசிய பிராந்தியத்துக்கான நிருபர் அலெக்ஸ் க்ரௌவ்போர்ட் (Alex Crawford) தனது ஆய்வறிக்கையில் மோதல்களினால் இடம்பெயர்ந்து வந்து, இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களில், பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம் இளைஞர்கள் தனியாக கொண்டு செல்லப்படுதல் என்பவை நடைபெறுவதாக அவை குறித்து ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
தமது வீடுகளை இழந்து சுமார் இரண்டு இலட்சத்துக்கு அதிகமான மக்கள் 40 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கட்டுள்ள போதும், அவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தனித்தனியாக பிரிக்கப்படுகின்றனர். என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இம்மக்களுடன் விடுதலை புலிகளின் போராளிகள் கலந்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுவதாகவும் தெரிவித்த அவர், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணியை பேட்டி எடுத்த போது,
பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதும், இளைஞர்கள் காணாமற் போவதும் நடைபெறுவதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.பாதிப்புக்குள்ளானவர்களுக்கு என்ன நடைபெறுகிறது என்பது தொடர்பாக எமக்கு தெரிவதில்லை. காரணம் அவர்களை பற்றி தகவல்கள் எதுவும் கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை சர்வதேச தொண்டு நிறுவனங்களில் ஒன்றான 'ஒக்ஸ்பாம்' (Oxfam) இன் தலைமை அதிகாரியான டேவிட் தெரிவிக்கையில் எம்மால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிப்பொருட்கள் வழங்குவதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விடுதலை புலிகளின் ஆதரவாளர்களாக இருப்பவர்களுக்கு NGO தொண்டு நிறுவன ஊழியர்கள் கரிசனை காட்டுவதாக எம்மீது மறைமுகமாக குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.
இடைத்தங்கல் முகாம்களில் சிறுவர் துஷ்பிரயோகம் நடைபெறுவது தொடர்பாக, அலெக்ஸ், அரசாங்க பத்திரிகையாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பிய போது, இடைத்தங்கல் முகாம்களில் (Blue - eyed) சிறுவர்கள் இருப்பதாகவும், தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு, இது மகிழ்ச்சிகரமானதாக இருக்கலாம், அப்படியாயின் இம்முகாம்களில் நடைபெறும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பு அவர்களே எனவும் அரசாங்க தரப்பால் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது
இடைத்தங்கல் முகாமில் பாலியல் கொடுமைகள் : வெளிக்கொணருகிறது மற்றுமொரு சர்வதேச ஊடகமான Sky News
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
தொடர்புடைய இடுக்கைகள்:'மக்கள் பாதுகாப்பு வலயம்' கொலைக்களமாக எரிந்து கொண்டிருக்கிறது: அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன்
'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் அப்பகுதியில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அப்பகுதி தொடர்ந்தும் எரிந்து கொண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் பரப்புரைப் பேச்சாளர் திலீபன் தெரிவித்துள்ளார்.வன்னியில் உள்ள தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டுமாயின் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் இது தங்களது கடைசி வேண்டுகோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை மிகச்செறிவான ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களையும் வெள்ளைப் பொஸ்பரஸ் அடங்கிய இரசாயன ஆயுதங்களையும் கொண்டு தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. இதனால் 'மக்கள் பாதுகாப்பு வலய'ப் பகுதி தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கிறது.
உயிரிழந்த மக்களின் உடலங்கள் வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன. படுகாயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்கான எந்தவித வசதியும் இங்கு இல்லை. மருத்துவமனைகள் அற்ற நிலையிலும் மருத்துவ வசதிகள் அற்ற நிலையிலும் படுகாயமடைந்த மக்கள் வீதிகளில் கிடந்தவாறு கெஞ்சி அழுதவண்ணம் உள்ளனர். ஆனால் எந்த வசதியும் அற்ற நிலையில் அவர்களுக்கு எதுவுமே செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.
இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் கொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.இங்குள்ள ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேரை காப்பாற்ற வேண்டுமாயின் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இதனை எமது கடைசி வேண்டுகோளாகக் கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர்.
செய்திகள்: புதினம்
'மக்கள் பாதுகாப்பு வலயம்' கொலைக்களமாக எரிந்து கொண்டிருக்கிறது: அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
தொடர்புடைய இடுக்கைகள்:ஒரே இரவில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை!: பீரங்கிக் குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம்
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நோக்கி சிறிலங்கா படையினா நேற்றிரவு தொடக்கம் நடத்திய உச்சகட்ட கோரத் தாக்குதலில் 1,112-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட பகுதிகளை நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு 7:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் சகலவிதமான நாசகார ஆயுதங்களையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருவதாக வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இத்தாக்குதலினால் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் தூங்கிக்கொண்டிருந்த பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்தும் உள்ளனர்.பெருமளவிலான மக்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் காணப்படுகின்றன. காயமடைந்தவர்களில் பலர் காயங்களுடன் தரையில் கிடந்தவாறு தங்களைக் காப்பாற்றுமாறு அவலக்குரல் எழுப்புவதாகவும் 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அத்துடன் வீதி, வீதியாக மக்களின் உடலங்கள் காணப்படுவதாகவும் மீட்க முடியாத அளவுக்கு சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள் தொடர்ச்சியாகவும் தீவிரவமாகவும் இருக்கின்றது எனவும் காயமடைந்தவர்களை எடுத்துச் செல்வதற்கு பணியாளர்கள் எவரும் இல்லை என்றும் 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.இதுவரையில் 1,112 பேரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் இருப்பதால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000-க்கும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.முள்ளிவாய்க்காலில் இயங்கும் தற்காலிக மருத்துவமனைக்கு காயமடைந்த நிலையில் 814 பேர் இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் 112 சிறுவர்களும் அடங்குவதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ அத்தியகட்சகர் வீரகத்தி சண்முகராஜா தெரிக்கின்றார்.
மருத்தவமனைக்கு கொண்டுவரப்பட்ட 257 உடலங்களில் 67 பேர் சிறுவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.இதேவேளையில் சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் நட்டாங்கண்டல் மருத்துவமனையும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
செய்திகள் : புதினம்
ஒரே இரவில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை!: பீரங்கிக் குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
தொடர்புடைய இடுக்கைகள்:பிரித்தானியாவில் அவசரகால கவனயீர்ப்புப் போராட்டம்
சிங்கள அரச பயங்கரவாத படைகள் உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட இரசாயன படைக்கருவிகளுடன் 160.000 க்கு மேற்ப்பட்ட எமது உறவுகள் மீது எந்த நேரமும் தாக்குதல் நடாத்த தாயாராகிவரும் இந்த காலப்பகுதியை பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழீழமக்கள் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர்.
எனவே இக்காலப்பகுதியில் சகலவிதமான களியாட்ட விழாக்களையும் முற்றாக புறக்கணித்து எமது சகல நேரங்களையும் எமது உறவுகளை காக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவோம். எமது கவனயீர்ப்பு நிகழ்வுகளின் எதிரொலியாகவே மேற்கத்தேய நாடுகள் சில சிறிலங்கா அரசின் எமது மக்கள் மீதான இனப்படுகொலையை தடுக்க முயற்சிப்பதாக காட்ட முயல்கின்றனர்.
சிறிலங்கா இனவாத அரசானது எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாது எமது தமிழ் இனம் மீது ஒரு இனப்படுகொலையை நடாத்திக்கொண்டுள்ளது. ஆகவே எமது புலம் பெயர்மக்களின் தொடர்ச்சியான கவனயீர்ப்பு நிகழ்வுகளே மேற்கத்தேய நாடுகளை இதயசுத்தியுடன் இந்த நிகழ்கால உலகின் மிகப்பெரும் மனித அவலத்தை நிறுத்தமுடியும் என்ற எமது அசைக்கமுடியாத நம்பிக்கையுடனேயே இந்த அவசரகால பிரகடனத்தை நாம் செய்துள்ளோம்.
நாம் இங்கே ஒரு அமைதியான நாட்டில் எமது சகல உடல் உறுப்புகளுடனும் வாழ்கின்றோம் ஆனால் எமது உறவுகளின் நிலமை? எல்லோரும் யோசிப்போம் எமது உறவுகளை காப்பாற்ற உடனடியாக செயலாற்றுவோம். சகல களியாட்ட நிகழ்வுகளையும் பிற்போடுவோம் எமக்கு ஒரு காலம் வரும் அப்போது நாம் எல்லோரும் சேர்ந்து எமது களியாட்ட நிகழ்வுகளை கொண்டாடுவோம்.
நாம் இங்கே எந்தவகையான நிகழ்வுகள் களியாட்ட நிகழ்வு என்று கூறவில்லை காரணம் கவனயீர்ப்பு நிகழ்வு தவிர்ந்த சகல நிகழ்வுகளுமே களியாட்டங்கள் தான் உடனே தவிர்த்துகொள்ளுங்கள்.சில இனவிரோதிகள் எமது மக்களின் இன உணர்வை மழுங்கடிப்பதற்காக சில களியாட்ட நிகழ்வுகளை நடாத்த முயற்சிப்பதாகவும் நாம் அறிந்துள்ளோம்.
மக்களே!!
இனவிரோதிகளையும் எமது மக்களின் அவலங்களில் குளிர் காயமுயற்சிப்பவர்களையும் அடையாளம் கண்டு அவர்களை எமது சமூகத்தில் இருந்து புறம்தள்ளுங்கள்.!!!
விழிப்புத் தான் விடுதலையின் வேர்!
பிரித்தானியாவாழ் தமிழீழ மக்கள்.
எனக்குறிப்பிடப்பட்டுள்ள அந்த அழைப்பில் நாளை புதன்கிழமை காலை 7மணிக்கு சீனத்துதரகம் முன்பாகஆரம்பிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். எமது மக்களை சிறிலங்கா அரசின் இனப்படுகொலையில் இருந்து காப்பாற்ற உடன் செயலாற்றுவோம் என மேலும் குறிப்பிட்டுள்ள ஏற்ப்பாட்டாளர்கள் எமது மக்களை காப்பாற்ற ஒன்றுகூடாமல் இருந்துவிட்டு பின் கவலைப்படுவதில் எந்தவித பயனும் இல்லை நாளைநாளை செல்வோம் என கூறாமல் உடனே முதல்நாளே சீனத்துதரகம் முன்ஒன்றுகூடுமாறு அன்பாகவும் கண்டிப்பாகவும் அழைப்புவிடுத்துள்ளனர்.
இடம்: CHINESE EMBASSY, 49-51 PORTLAND PLACE, LONDON. W 1 1JL
அன்மைய தொடருந்து நிலையம் : REGENNTS' PARK & GREAT PORTLAND STREET
காலம் : காலை 7மணி
செய்திகள் : சங்கதி
பிரித்தானியாவில் அவசரகால கவனயீர்ப்புப் போராட்டம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: அவலம், செய்திகள், போராட்டம்
தொடர்புடைய இடுக்கைகள்:முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: நோயாளர்கள் உட்பட 64 பேர் பலி; 87 பேர் காயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளனர்.மக்கள் பாதுகாப்பு வலயமான முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவந்த முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மீது இன்று சனிக்கிழமை காலை 7:00 மணி தொடக்கம் 9:20 நிமிடம் வரை சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை அகோரமாக நடத்தியதாக 'புதினம்' செய்தியாளர் வன்னியில் இருந்து தெரிவிக்கின்றார்.
முதலாவது எறிகணைத் தாக்குதலில் 22 பேரும் இரண்டாவது தடவையாக நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் அதிகமானோரும் கொல்லப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் கூறுகின்றார்.
ஆறுக்கும் அதிகமான எறிகணைகள் மருத்துவமனை மீதும் சூழவுள்ள பகுதிகளிலும் வீழ்ந்து வெடித்தன.இத்தாக்குதலில் ஏற்கனவே காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 87 பேர் காயமடைந்தனர்.கொல்லப்பட்டவர்களில் நோயாளர்கள், நோயாளர்களுக்கு உதவியாக இருந்தவர்கள், வெளியிடங்களில் இருந்து சிகிச்சை பெறவந்த வெளிநோயாளர்கள் என பலரும் அடங்குவர்.
இத்தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டதனை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ அத்தியகட்சகர் வீரகத்தி சண்முகராஜா உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
செய்திகள் : புதினம்
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: நோயாளர்கள் உட்பட 64 பேர் பலி; 87 பேர் காயம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
தொடர்புடைய இடுக்கைகள்:பிரி்த்தானிய அரசின் உறுதிமொழியை அடுத்து பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது
கடந்த 24 நாளாக பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் “தமிழ் மறவன்”; பரமேஸ்வரனால் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் பிரித்தானியா அரசாங்கத்தின் உறுதி மொழியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் Simon Huges பழச்சாறு கொடுக்க தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியா அரசு தனக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தான் தற்காலிகமாக உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்தியுள்ளதாகவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் தன்னுடைய போராட்டம் தொடரும் எனவும் தெரித்தார்.இன்று மதியம் 12 மணியளவில் ஊடகங்களுக்கு உரை வழங்கும் போது பரமேஸ்வரன் இதனை அறிவித்துள்ளார்.
பரமேஸ்வரனின் உடல்நிலை மிகவும் தளர்ந்த நிலையில் அவரை பிரித்தானியா அவசர சிகிச்சை பிரிவினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அதன் பின் நாடாளுமன்றத்தில் அவர் சில சந்திப்புகளை தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மாணவர்களால் சுழற்சி முறையிலான உண்ணாநிலை போராட்டம் தொடர்கின்றது. பரமேஸ்வரனின் உண்ணாநிலை இடை நிறுத்தப்பட்டாலும் தங்களுடைய போராட்டம் மக்களின் ஆதரவுடன் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.அத்துடன் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டம் தமிழ் மக்களால் பரமேஸ்வரனின் கூடாரத்தில் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை பரமேஸ்வரனின் 5 அம்ச கோரிக்கையை முன் வைத்து ஸ்கொட்லாண்டின் எடின்பறோ நகரத்தில் மக்களால் போராட்டம் நடாத்தப்படுகின்றது.
செய்திகள்: தமிழ்வின்
பிரி்த்தானிய அரசின் உறுதிமொழியை அடுத்து பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: செய்திகள், படம் இணைப்பு, போராட்டம்
தொடர்புடைய இடுக்கைகள்:தமிழ் தேசிய ஊடகங்களை குறிவைத்து அழிக்கும் கூட்டுச்சதி-தமிழ்க்கதிர்,சங்கதி தளங்கள் செயலிழந்தன
தமிழ்த் தேசிய ஊடகங்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் கூட்டுச் சதி நடவடிக்கையில் தற்போது சங்கதி, தமிழ்க்கதிர் இணையத்தள ஊடகங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.
தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன அழிப்பு நடவடிக்கையை பல்வேறு ஆதாரங்களுடன் உடனுக்குடன் வெளியிட்டுவந்த இந்த ஊடகங்கள் சிறீலங்கா - இந்தியாவின் கூட்டுச் சதியில் சிதைக்கப்பட்டுள்ளதை நாங்கள் வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.
முன்னர் பதிவு இணையத்தளமும் இவ்வாறான ஒரு நெருக்கடிக்குள் சிக்குண்டு மீண்டிருந்தது. அதேபோல், தமிழர் தாயகத்தின் இனப்படுகொலையை மறைப்பதற்கு இந்த சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடித்து, மக்கள் அவலத்தையும், இனப்படுகொலைகளின் ஆதாரங்களையும் மீண்டும் சங்கதி, தமிழ்க்கதிர் ஊடகங்கள் விரைவில் வாசகர்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்.
அத்துடன், எமது இணையத்தள தரவுகளின் அடிப்படையில் உலகில் சங்கதியும், தமிழ்க்கதிரும் பார்வையிடுவோர் எண்ணிக்கையில் இலங்கை முதலிடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
செய்திகள்: தமிழ்வின்
பி.கு : எமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களில் படி இத்தளங்களுக்கு அதிகளவு வேண்டுகோள்களை அனுப்பி அவற்றை கையாள முடியாததாலேயே தளங்கள் செயல் இழக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. Dos Attack எனப்படும் முறையில் இது செயல் படுத்தப்படும். அதாவது குறிப்பிட்ட சில மென்பொருட்கள் மூலம் ஓர் வேண்டுகோளை 20,000 வேண்டுகோளாகவோ அல்லது அதற்க்கு மெற்பட்டதாகவோ ஓர் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட தளத்திற்க்கு அனுப்பும் போது போதிய தாங்குசக்தி இல்லாமையால் செயலிழந்து போகின்றது. இதனால் தளத்தின் தரவுகளுக்கு பாதிப்பு ஏற்படமாட்டாது. தளம் தற்காலிகமாக செயல் இழக்கும்.
எனவே தமிழ்க்கதிர்,சங்கதி தளங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்
தமிழ் தேசிய ஊடகங்களை குறிவைத்து அழிக்கும் கூட்டுச்சதி-தமிழ்க்கதிர்,சங்கதி தளங்கள் செயலிழந்தன
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 2 பின்னூட்டம்(கள்)
வகைகள்: செய்திகள்
தொடர்புடைய இடுக்கைகள்:முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது படையினர் கோரத் தாக்குதல்: 278 பொதுமக்கள் பலி; 298 பேர் காயம்
முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை வேளையில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் கடற்படையினரின் பீரங்கித் தாக்குதல்களில் 58 சிறுவர்கள் உட்பட 278 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 298 பேர் காயமடைந்துள்ளனர்.முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் மட்டும் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30 பேர் காயமடைந்திருக்கின்றனர்.
இரட்டைவாய்க்கால், சாளம்பன், முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, இரட்டைப்பனையடி ஆகிய பகுதிகளே சிறிலங்கா படையினரின் ஆட்லறி எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத அவலநிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் நோயாளர்களை ஏற்றிச்செல்லும் கப்பலில் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்கு வந்து அனைத்துலக செஞ்சிலுவை சங்கக் குழுவின் அதிகாரிகள் நிலைமைகளை பார்வையிட்டனர்.பார்வையிட்ட பின்னர் பிற்பகல் 1:30 நிமிடத்துக்கு சென்றதும் பிற்பகல் 3:00 மணியளவில் மருத்துவமனை மீது ஆட்லெறி எறிகணைத் தாக்குதல் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டது.
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு, இரத்த வங்கி, அறுவைச் சிகிச்சைக்கூடப் பகுதியில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர்களில் 19 பேர் கொல்லப்பட்டதுடன் 30 நோயாளர்கள் மேலும் காயமடைந்தனர்.இன்று புதன்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை நடத்தப்பட்ட சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் 58 சிறுவர்கள் உட்பட 278 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 298 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா கடற்படை பீரங்கித்தாக்குதலில் 10 பேர் துறைப் பகுதியில் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் நோயாளர்களை ஏற்றும் ஒழுங்கமைப்பில் ஈடுபடும் கடற்றொழிலாளர் சங்க சமாசத்தின் பொருளாளர் சதாசிவம் நாகராசாவும் உயிரிழந்தார்.மேலும் கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் பல பகுதிகளில் மீட்கப்படாமல் சிதறி கிடப்பதாகவும் அங்கிருந்து கடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனரக போர்க் கலங்களை பயன்படுத்தமாட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக நாடுகளுக்கு உறுதியளித்திருந்தது.ஆனாலும் இத்தாக்குதல்கள் கனரக போர்க் கலங்களை மக்கள் மத்தியில் சிறிலங்கா படையினர் பயன்படுத்துகின்றனர் என்பதை வெளிக்காட்டியுள்ளது.
செய்திகள்: தமிழ்வின்
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது படையினர் கோரத் தாக்குதல்: 278 பொதுமக்கள் பலி; 298 பேர் காயம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
தொடர்புடைய இடுக்கைகள்:24ம் நாளாகத் தொடரும் திரு.பரமேஸ்வரனின் உண்ணாநோன்பு போராட்டம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: News, அவலம், ஒளிக்காட்சிகள், செய்திகள், போராட்டம்
தொடர்புடைய இடுக்கைகள்:இலங்கை இராணுவத்தினரிடம் தஞ்சம் புகுந்த வன்னி மக்களின் அவலநிலை
வன்னியில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான வன்னி மக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சம் அடைந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றார்கள்.இவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்குச் சென்ற இராணுவத்தினர் ஒலிபெருக்கி மூலம் உங்கள் பிள்ளைகள் ஒருநாள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தாலும் தயவு செய்து முன்னரே பதிவு செய்து கொள்ளுங்கள் என உத்தரவிட்டனர்.
அத்துடன் உங்கள் பிள்ளைகளுக்கு எங்களால் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது. உங்கள் பிள்ளைகளை உங்களிடமிருந்து பிரிக்கமாட்டோம். பதிவு செய்யாமல் உங்களின் பிள்ளைகள் யாராவது விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்ததாக எங்களுக்குத் தெரியவரும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்கள்.இதை நம்பிய பெற்றோர் தங்களின் பிள்ளைகளைப் பதிவு செய்தார்கள். பதிவு செய்த பின் பிள்ளகளை பெற்றோருடன் விட்டுச்சென்ற இராணுவத்தினர் மறுநாள் காலையில் அனைத்து முகாமுகளுக்கும் சென்று, விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என பதிவு செய்த ஆண்கள் பெண்கள் என 400 ற்கும் மேற்பட்டவர்களை பலவந்தமாக ஏற்றி சென்றுள்ளனர்.
இவர்களின் நிலை என்ன என்று தெரியாமல் பெற்றோர்கள் தவிக்கின்றார்கள்.
செய்திகள்: தமிழ்வின்
இலங்கை இராணுவத்தினரிடம் தஞ்சம் புகுந்த வன்னி மக்களின் அவலநிலை
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
தொடர்புடைய இடுக்கைகள்:புறப்படுங்கள் தமிழர்களே பிரித்தானிய பாராளுமன்றம் நோக்கி...
கடந்த 21 நாட்களாக பிரித்தானியாவில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பரமேஸ்வரனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சற்றுமுன்னர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரின் இருதயம் துடிக்கும் வேகம் குறைவடைந்துள்ளதாக அறியப்படுகிறது.
பரமேஸ்வரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலையில் பிரித்தானியாவில் பாரிய எதிர்விளைவுகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. மாணவ சமூகம் தற்போது அவர் உண்ணாவிரதமிருக்கும் திடலில் குவிய ஆரம்பித்துள்ளனர். பரமேஸ்வரனின் இதயம் துடிப்பது குறைய ஆரம்பித்திருக்கலாம் ஆனால் அவரின் மன உறுதியும் இ பிரித்தானியா வாழ் தமிழர்களின் உணர்வும் இன்னமும் குறையவில்லை.
21 நாட்களாக ஆகாரமின்றி தன்னை வருத்தி ஈழத்தில் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட இவர் ஏற்றிய தீபம் தற்போது பிரித்தானிய தமிழரிடையே கொளுந்துவிட்டு எரிகின்ற நெருப்பாக மாறியுள்ளது. கடந்த 2 தினங்களாக நீர் அருந்துவதை கூட தவிர்த்துவிட்ட பரமேஸ்வரனின் நிலை இன்று மதியம் கவலையளிக்கும் நிலைக்கு சென்றுள்ளது.
இனியும் நாம் பொறுத்திருந்து என்ன செய்யப்பொகிறோம். ?? புறப்படுங்கள் தமிழர்களே பிரித்தானிய பாராளுமன்றம் நோக்கி...
புறப்படுங்கள் தமிழர்களே பிரித்தானிய பாராளுமன்றம் நோக்கி...
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
தொடர்புடைய இடுக்கைகள்:"மீட்கப்பட்ட மக்கள்"
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மக்கள் மிகப்பெரும் மனித அவலத்தில் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டுள்ளனர் என அந்த இரு இடங்களில் இருந்தும் 'புதினம்' செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக அவர்கள் அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா அரசின் அறிவித்தலின் படி - இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக புள்ளி விபரங்களை காட்டியுள்ளது.ஆனாலும் அவர்களில் பெரும் பகுதியினர் இன்னும் வவுனியாவில் உள்ள நலன்புரி முகாமுக்கு கொண்டுவரப்படவில்லை.இன்னும் பலர் பற்றிய புள்ளி விபரங்கள் மாத்திரமே உள்ளனவே தவிர அவர்களின் நிலை பற்றி சிறிலங்கா அரசு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
இவர்களில் பலர், வவுனியாவில் - ஆள் நடமாட்டம் அற்ற - ஓமந்தை மகாவித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில் சிறிலங்கா படையினரால் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை கணக்கு எடுத்துப் பதிவு செய்வதாகக் கூறி சிறிலங்கா படையினர் அங்கு தங்கவைத்து அவர்களைத் தரம் பிரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை அந்த பகுதியில் ஏராளமான இளவயது ஆண், பெண்கள் குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்கப்பட்டு வேறு எங்கோ கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பல குடும்பங்களில் வளர்ந்த வயதானவர்களையே பிரித்து வைத்து - அவைகளைச் சேரவிடாமல் சிறிலங்கா படையினர் தடுத்தும் வருகின்றனர்.
மாற்றுப் புடவை இன்றி உடுத்த உடையுடன் வந்தவர்களை தான் மீட்டு எடுத்து காப்பாற்றுவதாக சிறிலங்கா அரசு வெளியில் செய்துவரும் பரப்புரைக்கு அமைய அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகள் துளிகூட இன்னும் வழங்கப்படவில்லை. சிறிலங்கா அரசு மற்றும் படைத்தரப்பு அறிவிப்பு படி - 80 ஆயிரம் வரையான மக்கள் இன்னனும் ஓமந்தையில் பதிவுகளுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதுவித அடிப்படை வசதியும் அற்ற நிலையில் - மக்கள் நடமாட்டம் எதுவும் அற்ற சூழலில் - ஓமந்தை மகாவித்தியாலய கட்டடம் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிளில் அந்த மக்கள் சிறிலங்கா படையினரின் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.இது மட்டுமல்லாமல் - வவுனியா பகுதியில் இருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கூடச் சந்திக்க சிறிலங்கா படையினர் அனுமதி மறுத்துள்ளனர்.கடந்த திங்கட்கிழமை (20.04.09) தொடக்கம் மாலை ஒருவேளை மாத்திரம் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகின்றது.அத்துடன், குடிப்பதற்கு குளிப்பதற்கு இயற்கை கடன்களின் வசதிக்கு தேவையான தண்ணீர் முற்றுமுழுதாக அற்ற நிலையில் உள்ளது.இதேவேளையில் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மக்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளதாக அறிய முடிகின்றது.
முன்னரே இடம்பெயர்ந்து வந்த 6 ஆயிரம் வரையான மக்களுடன் தற்போது வந்துள்ள மேலும் பல ஆயிரம் மக்களையும் சிறிலங்கா படையினர் ஒரிரு இடங்களிலேயே தங்க வைத்துள்ளதுடன், யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட மக்களின் சரியான எண்ணிக்கை இதுவரை சிறிலங்கா படையினரால் வெளியிடப்படவில்லை.
தென்மராட்சியில் - நாவற்குழி பனை ஆராய்ச்சி நிலையம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி, கொடிகாமம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, திருநாவுக்கரசு வித்தியாலயம், மிருசுவில் திருக்குடும்ப கன்னியர் மடம், கைதடி சைவச் சிறார் இல்லம், கைதடி ஆயுள்வேத மருத்துவமனை மாணவர் விடுதி ஆகிய இடங்களில் இந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கும் அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.உடுத்த உடையுடன் வந்த இவர்கள் மாற்றுத்துணி கூட இல்லை.
பாடசாலை தண்ணீர் தொட்டிக்குள் சிறிலங்கா படையினரால் தண்ணீர் நிரப்பி விடப்பட்டு குடிநீராக அருந்தும்படி சொல்லப்பட்டுள்ளனர். இருந்தபோதும் - அதனை அள்ளி எடுப்பதற்கு சிறு கிண்ணம் கூட வழங்கப்படாததால், அவர்கள் காற்றில் பறந்து வரும் பிளாஸ்டிக் பைகளை தேடி எடுத்து அவற்றை வைத்து தண்ணீர் அள்ளி குடிக்கும் அவலத்தில் இருக்கின்றனர்.எல்லா மக்களையும் கட்டடங்களுக்குள் தங்க வைக்க முடியாத இட நெருக்கடி இருப்பதால் - பாடசாலை மைதானங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் - குறிப்பாக குழந்தைகள் - கொளுத்தும் வெயிலின் தாக்கத்தாலும், பசியாலும் துடிக்கின்றனர்.இந்த கொடுமைகளை நேரடியாகப் பார்த்தும் கூட, இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி ஏதும் செய்ய முடியாதுவாறு சிறிலங்கா படையினர் தடுத்து வருகின்றனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் படும் கொடுமைகளை வீதியால் செல்லும் ஏனைய தமிழர்கள் கண்டுவிடுவதை அறிந்த சிறிலங்கா படையினர், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடசாலை வேலிகள் மற்றும் மதில்களுக்கு உயரமாக மறைப்பிட்டு வருகின்றதுடன், அந்தப் பகுதிகளுக்கச் செல்லவிடாது மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.இதேவேளையில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முற்புற வாயில் கதவைக்கூட தகரம் இட்டு முட்கம்பிகளால் மறைப்பிட்டு வைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் பிற்பகல் 4:00 மணிக்கு மாத்திரம் ஒருவேளை உணவு வழங்கப்படுகின்றது. ஏனைய நேரங்களில் உணவு வழங்கப்படுவதில்லை.
இதற்குள் - யாழ்ப்பாணத்தில் இப்போது பொக்குளிப்பான், அம்மை நோய் பலருக்கு ஏற்பட்டுள்ளதால் இந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கும் அவை பரவும் ஆபத்து உருவாகின்றது.இதேநேரம் கடந்த சில நாட்களாக - பலாலி நோக்கி - கடும் காவலுக்கு மத்தியில் - 4 பேருந்துகளில் வன்னியில் இருந்து வந்த இளைய ஆண், பெண்கள் பலர் விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் பலர் கதறி அழுத நிலையில் பேருந்துகளில் ஏற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட்டதை வீதியோரங்களில் நின்ற பெருமளவு மக்கள் கண்டுள்ளனர்.
செய்திகள்:புதினம்
"மீட்கப்பட்ட மக்கள்"
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
தொடர்புடைய இடுக்கைகள்:பிரித்தானியப் பாராளுமன்றம் உட்பட தலைநகரின் பல வீதிகள் தமிழ் மக்களால் முடக்கம்
சிறிலங்கா மிக மொசமான இனப்படுகொலையை வன்னியில் இன்று நடத்தியுள்ள நிலையில் பிரித்தானியாவில் தமிழ் மக்கள் பெரும் எழுச்சியடைந்துள்ளனர்.பிரித்தானியாவில் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வரும் மக்கள் இன்று வன்னியில் இடம்பெற்றுள்ள அவலத்தை அறிந்து பெரும் சோகத்துடனும், அச்சத்துடனும் பிரித்தானிய பாராளுமன்றத்தை முடக்கி போராட்டத்தில் குதித்துள்ளனர்.பாராளுமன்றத்திற்கான நான்கு பிரதான வீதிகளும் தமிழ் மக்களால் முடக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்றத்திற்கான போக்குவரத்துக்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.
காணொளி:BBC
செய்திகள்:சங்கதி
பிரித்தானியப் பாராளுமன்றம் உட்பட தலைநகரின் பல வீதிகள் தமிழ் மக்களால் முடக்கம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: அவலம், அறிவித்தல்கள், செய்திகள், போராட்டம்
தொடர்புடைய இடுக்கைகள்:ஜனவரி தொடக்கம் மார்ச் வரையில் 3546 தமிழர்கள் படுகொலை படங்களுடன் விபரம் வெளியிடப்பட்டுள்ளது
வன்னியில் சிங்கள படையினரின் தமிழின படுகொலையில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் மார்ச் மாதம் வரையில் 3546 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 8370பேர் படுகாயமடைந்துள்ளதாக War Without Witness in Sri Lanka என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 23ஆம் திகதி வரையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையினையே அந்த அமைப்பு வெளியிட்டுள்ளதுடன் கொல்லப்பட்டர்களின் விபரங்கள் சிலவற்றினை படங்களுடன் விபரங்களையும் இணைத்துவெளியிட்டுள்ளது.இலங்கை அரசாங்கத்தினால் மக்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பிரதேசங்கள் மீது அதன் படைகள் நடத்திய தாக்குதலிலேயே அதிகமான தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மென்புத்தகத்தை தரவிறக்க..
ஜனவரி தொடக்கம் மார்ச் வரையில் 3546 தமிழர்கள் படுகொலை படங்களுடன் விபரம் வெளியிடப்பட்டுள்ளது
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: அவலம், செய்திகள், மென்புத்தகம்
தொடர்புடைய இடுக்கைகள்:பிரித்தானியாவில் 9 வது நாளாகத் தொடரும் ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க சதி !
பிரித்தானியா பாராளுமன்றம் முன் 9 வது நாளாகத் தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.மக்களின் எழுச்சிப் போராட்டத்தை எப்படியாவது முடக்க பிரித்தானியாக் காவல் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.எனினும் அது கைகூடாத நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து வருகின்றனர்.
எனினும் தொடரும் ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க சில தீய சக்திகள் சதி வேலைகளிலும் இறங்கியுள்ளன.வழமையாக இரவு பகல் பாராது போராட்டங்களில் கலந்துகொள்ளும் தாயக மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படுவது வழக்கம். இன்று மாலையும் அது போலவே சிலர் சிறுவர்களிடையே மயக்கமருந்து கலக்கப்பட்ட இனிப்புகளை வழங்கியிருக்கின்றனர் இதனால் 2 சிறுவர்கள் உடனடியாக மயக்கமாகியுள்ளனர். இதனையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. உடனடியாக விரைந்து செயற்பட்ட மாணவர்களும் பிரித்தானிய காவற்துறையினரும் இனிப்புக்களை வழங்கிய இருவரை பிடித்ததோடு ஏனையோரையும் தேடி வருகின்றனர்.
இவ்வாறான கோழைத்தனமான செயற்பாடுகள் இனியும் நடைபெறும் என்பதால் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறு காவற்துறையினரும் மாணவர்களும் தாயக உறவுகளிடம் கேட்டுக்கொள்கின்றனர்
இது தொடர்பான அறிக்கை ஒலி வடிவில்
பிரித்தானியாவில் 9 வது நாளாகத் தொடரும் ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க சதி !
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 2 பின்னூட்டம்(கள்)
வகைகள்: News, செய்திகள், போராட்டம்
தொடர்புடைய இடுக்கைகள்:அவுஸ்திரேலியாவில் தொடரும் போராட்டம்
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் உட்பட நால்வர் உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்கவிருக்கின்றனர்.
மெல்பேர்ண் நகரில் உள்ள DANDENONG பிராந்தியம் PULTNEY STREET ல் DANDENONG PARK ல் ச.ரமணா, ச.சந்திரன், ஊடகவியலாளரான ப.தெய்வீகன் மற்றும் கோ.பானு ஆகியோர் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்குகின்றனர்.
இவர்கள் முன்வைத்துள்ள நான்கு கோரிக்கைகள் வருமாறு:-
- உடனடியாகவும், நிரந்தரமாகவும் நடைமுறைப்படுத்தக் கூடியதுமான போர் நிறுத்தம் மேற்கொள்ளக் கோரி சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.
- வன்னியில் உள்ள தமிழ் உறவுகளுக்கு அத்தியாவசியமான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவி ஆகிய அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும் வகையில் சேர்ப்பிக்கப்பட வேண்டும்.
- தமிழ் மக்கள் சுதந்திரமாக தங்கள் இருப்பிடங்களை தேர்ந்தெடுக்க அனுமதி கொடுக்கப்பட வேண்டும்.
- தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் உடனடியான பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும்.
இவர்களின் உண்ணாநிலை போராட்டத்துக்கு மெல்பேர்ண் வாழ் தமிழ் உறவுகள் ஆதரவு அளித்து இலட்சியத்தின் வெற்றிப்பாதைக்கு உறுதுணையாக வந்து கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
செய்திகள்: தமிழ்வின்
அவுஸ்திரேலியாவில் தொடரும் போராட்டம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: News, அவலம், ஒளிக்காட்சிகள், செய்திகள், போராட்டம்
தொடர்புடைய இடுக்கைகள்:பிரித்தானியாவில் 5 அம்சக் கோரிக்கைகளுடன் இருவர் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம்
தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் இன அழிப்பைத் தடுத்து, அங்கு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சிவதர்சன் சிவகுமாரவேல் (21) , குட்டி மணியம் (28) ஆகிய இரு இளையவர்களே இவ் உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்துள்ளவர்களாவர்.
பிரித்தானியாவில் தமிழர்களால் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் வெஸ்ட்மினிஸ்ரர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் தமது சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.
- சிறிலங்காவில் உடனடியாக நிரந்தரமான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கீ மூன் அல்லது பிரித்தானியப் பிரதமர் கோடன் பிறவுண் தங்களை நேரில் சந்தித்து தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்து பரிசீலித்து உறுதிமொழி வழங்க வேண்டும்.
- வன்னியில் உள்ள மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்.
- இலங்கையில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதா அல்லது தனித்து நாடு அமைப்பதா என்பதை அறிய ஐ.நாவின் ஏற்பாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்
- தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும்.
இவர்களது சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக முன்னெடுக்கும் இப்போராட்டம் தாய் தேசத் தமிழுறவுகளின் அவலங்களிற்கு பிரித்தானியாவிடமிருந்து நிரந்தர முடிவு கிட்டும் வரை தொடரும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்' தமிழின விடிவிற்காக இந்திய அரசிற்கு எதிராக உண்ணாநிலையில் இருந்து உயிர்விட்ட தியாகி திலீபனின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது.தொடர் போராட்டத்தில் இறங்கியிருக்கும் மாணவர் சமூகத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைவரையும் இப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றார்கள்.
செய்திகள்: பதிவு
பிரித்தானியாவில் 5 அம்சக் கோரிக்கைகளுடன் இருவர் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம்
எழுதியது : இமயவரம்பன் நேரம் : 0 பின்னூட்டம்(கள்)
வகைகள்: News, செய்திகள், போராட்டம்
தொடர்புடைய இடுக்கைகள்:




