பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகதின் முன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.


இலங்கையில் நடைபெறுகின்ற தமிழின சுத்திகரிப்பை உடனே தடுத்து நிறுத்தக்கோரி பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதுவராலயத்தின் முன்னால் பிரித்தானியத் தமிழ் மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை புதன்கிழமை 10மணிமுதல் மதியம் 2 மணிவரை முன்னெடுக்கப்பட்டது.

குழந்தைகள், முதியவர்கள் என வயது வேறுபாடின்றி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றி தங்களது உணர்வுகளை கோஷமிட்டு வெளிப்படுத்திமை வீதியால் சென்ற அனைவரினதும் நெஞ்சை உருக்குவதாய் அமைந்திருந்தது.
அங்கு கூடியிருந்த மக்கள்:
"இந்தியா இந்தியா இலங்கையில் நடக்கும் போரை நிறுத்து"
"நிறுத்து நிறுத்து ஆயுத உதவியை நிறுத்து"
"நிறுத்து நிறுத்து நிதி உதவியை நிறுத்து"
"உதவு உதவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவு"
"இந்திய அரசே கண்ணைத் திறந்து பலியாகும் தமிழனைப் பார்"
"ஜ நா தடை செய்த கொத்துக்குண்டு தமிழனை கொள்வது தெரியவில்லையா?"
"வேண்டும் வேண்டும் சமாதானம் வேண்டும்"
"வேண்டும் வேண்டும் தமிழீழமே வேண்டும்"
போன்ற பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் தமது ஆதங்கங்களை இந்திய அரசின் துரோகத்தனத்திற்கெதிராக வெளிப்படுத்தினர் .

பிரித்தானிய தழிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் மகளிர் அமைப்பு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு இந்த ஏற்பாட்டை செய்திருந்தனர் ஆர்ப்பாட்டதின் முடிவில் இந்திய தூதுவராலயத்தில் மனு கையளிக்கப்பட்டது.

செய்திகள், புகைப்படங்கள்: தமிழ்வின்

பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகதின் முன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.SocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்