Showing posts with label போராட்டம். Show all posts
Showing posts with label போராட்டம். Show all posts

பிரித்தானியாவில் அவசரகால கவனயீர்ப்புப் போராட்டம்

சிங்கள அரச பயங்கரவாத படைகள் உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட இரசாயன படைக்கருவிகளுடன் 160.000 க்கு மேற்ப்பட்ட எமது உறவுகள் மீது எந்த நேரமும் தாக்குதல் நடாத்த தாயாராகிவரும் இந்த காலப்பகுதியை பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழீழமக்கள் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர்.

எனவே இக்காலப்பகுதியில் சகலவிதமான களியாட்ட விழாக்களையும் முற்றாக புறக்கணித்து எமது சகல நேரங்களையும் எமது உறவுகளை காக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவோம். எமது கவனயீர்ப்பு நிகழ்வுகளின் எதிரொலியாகவே மேற்கத்தேய நாடுகள் சில சிறிலங்கா அரசின் எமது மக்கள் மீதான இனப்படுகொலையை தடுக்க முயற்சிப்பதாக காட்ட முயல்கின்றனர்.

சிறிலங்கா இனவாத அரசானது எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாது எமது தமிழ் இனம் மீது ஒரு இனப்படுகொலையை நடாத்திக்கொண்டுள்ளது. ஆகவே எமது புலம் பெயர்மக்களின் தொடர்ச்சியான கவனயீர்ப்பு நிகழ்வுகளே மேற்கத்தேய நாடுகளை இதயசுத்தியுடன் இந்த நிகழ்கால உலகின் மிகப்பெரும் மனித அவலத்தை நிறுத்தமுடியும் என்ற எமது அசைக்கமுடியாத நம்பிக்கையுடனேயே இந்த அவசரகால பிரகடனத்தை நாம் செய்துள்ளோம்.

நாம் இங்கே ஒரு அமைதியான நாட்டில் எமது சகல உடல் உறுப்புகளுடனும் வாழ்கின்றோம் ஆனால் எமது உறவுகளின் நிலமை? எல்லோரும் யோசிப்போம் எமது உறவுகளை காப்பாற்ற உடனடியாக செயலாற்றுவோம். சகல களியாட்ட நிகழ்வுகளையும் பிற்போடுவோம் எமக்கு ஒரு காலம் வரும் அப்போது நாம் எல்லோரும் சேர்ந்து எமது களியாட்ட நிகழ்வுகளை கொண்டாடுவோம்.

நாம் இங்கே எந்தவகையான நிகழ்வுகள் களியாட்ட நிகழ்வு என்று கூறவில்லை காரணம் கவனயீர்ப்பு நிகழ்வு தவிர்ந்த சகல நிகழ்வுகளுமே களியாட்டங்கள் தான் உடனே தவிர்த்துகொள்ளுங்கள்.சில இனவிரோதிகள் எமது மக்களின் இன உணர்வை மழுங்கடிப்பதற்காக சில களியாட்ட நிகழ்வுகளை நடாத்த முயற்சிப்பதாகவும் நாம் அறிந்துள்ளோம்.

மக்களே!!

இனவிரோதிகளையும் எமது மக்களின் அவலங்களில் குளிர் காயமுயற்சிப்பவர்களையும் அடையாளம் கண்டு அவர்களை எமது சமூகத்தில் இருந்து புறம்தள்ளுங்கள்.!!!
விழிப்புத் தான் விடுதலையின் வேர்!
பிரித்தானியாவாழ் தமிழீழ மக்கள்.

எனக்குறிப்பிடப்பட்டுள்ள அந்த அழைப்பில் நாளை புதன்கிழமை காலை 7மணிக்கு சீனத்துதரகம் முன்பாகஆரம்பிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். எமது மக்களை சிறிலங்கா அரசின் இனப்படுகொலையில் இருந்து காப்பாற்ற உடன் செயலாற்றுவோம் என மேலும் குறிப்பிட்டுள்ள ஏற்ப்பாட்டாளர்கள் எமது மக்களை காப்பாற்ற ஒன்றுகூடாமல் இருந்துவிட்டு பின் கவலைப்படுவதில் எந்தவித பயனும் இல்லை நாளைநாளை செல்வோம் என கூறாமல் உடனே முதல்நாளே சீனத்துதரகம் முன்ஒன்றுகூடுமாறு அன்பாகவும் கண்டிப்பாகவும் அழைப்புவிடுத்துள்ளனர்.

இடம்: CHINESE EMBASSY, 49-51 PORTLAND PLACE, LONDON. W 1 1JL
அன்மைய தொடருந்து நிலையம் : REGENNTS' PARK & GREAT PORTLAND STREET
காலம் : காலை 7மணி

செய்திகள் : சங்கதி

பிரித்தானியாவில் அவசரகால கவனயீர்ப்புப் போராட்டம்SocialTwist Tell-a-Friend

பிரி்த்தானிய அரசின் உறுதிமொழியை அடுத்து பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

கடந்த 24 நாளாக பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் “தமிழ் மறவன்”; பரமேஸ்வரனால் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் பிரித்தானியா அரசாங்கத்தின் உறுதி மொழியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் Simon Huges பழச்சாறு கொடுக்க தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியா அரசு தனக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தான் தற்காலிகமாக உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்தியுள்ளதாகவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் தன்னுடைய போராட்டம் தொடரும் எனவும் தெரித்தார்.இன்று மதியம் 12 மணியளவில் ஊடகங்களுக்கு உரை வழங்கும் போது பரமேஸ்வரன் இதனை அறிவித்துள்ளார்.

பரமேஸ்வரனின் உடல்நிலை மிகவும் தளர்ந்த நிலையில் அவரை பிரித்தானியா அவசர சிகிச்சை பிரிவினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அதன் பின் நாடாளுமன்றத்தில் அவர் சில சந்திப்புகளை தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மாணவர்களால் சுழற்சி முறையிலான உண்ணாநிலை போராட்டம் தொடர்கின்றது. பரமேஸ்வரனின் உண்ணாநிலை இடை நிறுத்தப்பட்டாலும் தங்களுடைய போராட்டம் மக்களின் ஆதரவுடன் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.அத்துடன் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டம் தமிழ் மக்களால் பரமேஸ்வரனின் கூடாரத்தில் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை பரமேஸ்வரனின் 5 அம்ச கோரிக்கையை முன் வைத்து ஸ்கொட்லாண்டின் எடின்பறோ நகரத்தில் மக்களால் போராட்டம் நடாத்தப்படுகின்றது.


செய்திகள்:
தமிழ்வின்

பிரி்த்தானிய அரசின் உறுதிமொழியை அடுத்து பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுSocialTwist Tell-a-Friend

24ம் நாளாகத் தொடரும் திரு.பரமேஸ்வரனின் உண்ணாநோன்பு போராட்டம்

24ம் நாளாகத் தொடரும் திரு.பரமேஸ்வரனின் உண்ணாநோன்பு போராட்டம்SocialTwist Tell-a-Friend

சிறிலங்கா படையினரின் பாரிய படை நடவடிக்கையினால் பெரும் மனிதப் பேரவலம்: இன்று 988 தமிழர்கள் படுகொலை

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்டு வரும் பாரிய படை நடவடிக்கையின் போது பெரும் மனிதப் பேரவலம் நிகழ்ந்துள்ளது. இதில் 988-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதியை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை தன்னிடம் உள்ள அனைத்து நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

அதேவேளையில் மக்கள் மீதும் மக்கள் வாழ்விடங்கள் மீதும் ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, கனரக துப்பாக்கி, தொலைதூர துப்பாக்கி மற்றும் வான் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் அகோரமாக நடத்தியுள்ளனர்.இதில் 988-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.ஏலவே பொக்கணைப் பகுதிக்குச் சென்ற மக்களை கேடயமாக பாவித்துக்கொண்டு பாரிய நடவடிக்கையினை சிறிலங்கா படையினர் மேற்கொண்டதுடன், அதற்கு ஒத்துழைக்காத மக்கள் மீதும் சரசமாரியான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும் இதிலும் பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.பொதுமக்களின் இழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

செய்திகள்:புதினம்

சிறிலங்கா படையினரின் பாரிய படை நடவடிக்கையினால் பெரும் மனிதப் பேரவலம்: இன்று 988 தமிழர்கள் படுகொலைSocialTwist Tell-a-Friend

பிரித்தானியப் பாராளுமன்றம் உட்பட தலைநகரின் பல வீதிகள் தமிழ் மக்களால் முடக்கம்


சிறிலங்கா மிக மொசமான இனப்படுகொலையை வன்னியில் இன்று நடத்தியுள்ள நிலையில் பிரித்தானியாவில் தமிழ் மக்கள் பெரும் எழுச்சியடைந்துள்ளனர்.பிரித்தானியாவில் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வரும் மக்கள் இன்று வன்னியில் இடம்பெற்றுள்ள அவலத்தை அறிந்து பெரும் சோகத்துடனும், அச்சத்துடனும் பிரித்தானிய பாராளுமன்றத்தை முடக்கி போராட்டத்தில் குதித்துள்ளனர்.பாராளுமன்றத்திற்கான நான்கு பிரதான வீதிகளும் தமிழ் மக்களால் முடக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்றத்திற்கான போக்குவரத்துக்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.
காணொளி:BBC
செய்திகள்:சங்கதி

பிரித்தானியப் பாராளுமன்றம் உட்பட தலைநகரின் பல வீதிகள் தமிழ் மக்களால் முடக்கம்SocialTwist Tell-a-Friend

பரமேஸ்வரனிடமிருந்து அழைப்பு - பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும் திரண்டு வாருங்கள்

பரமேஸ்வரனிடமிருந்து அழைப்பு - பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும் திரண்டு வாருங்கள்SocialTwist Tell-a-Friend

தமிழர் விடுதலைப் போராட்டமும் புதிய தலைமுறையின் வரலாற்றுப் பணியும்

சிங்களம் தனது இறுதி அழித்தொழிப்பிற்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது என்பதன் தார்ப்பரியத்தை விளங்காமல், ஆகக்குறைந்தது எங்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக்கூட அறிந்து கொள்ள முடியாதளவிற்கு நமது மக்கள் துண்டாடப்பட்டிருக்கின்றனர்.

ஈழத்தில் இருக்கும் தீவிர தமிழ்த் தேசிய ஆதரவு சக்திகள் கூட ஒருவித மனச்சோர்வுடனும் பதட்டத்துடனும் கானப்படுகின்றனர்.சில தினங்களுக்கு முன்னர் மூத்த அரசியல் ஆய்வாளரும் எனது நண்பருமான ஒருவருடன் பேசிபோது 'நான் பழைய நாவல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன் வேறு என்னதான் செய்வது இங்கிருந்து," என்று மிகுந்த மனச் சோர்வுடன் கூறினார்.

ஈழத்தில் இருக்கும் தமிழ்த் தேசிய சக்திகளின் மனச்சோர்வு இரண்டு நிலைப்பட்டது.மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறதே என்பது ஒன்று.

அடுத்தது களநிலைமைகளில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகள்.எனது கருத்தியல் நண்பர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சல் எனக்கும் ஏற்படாமலில்லை.

ஆனால் மனச்சோர்வும் பதட்டமும் எந்த நன்மையையும் ஏற்படுத்தப்போவதில்லை. கால யதார்த்தத்தை கருத்தில் கொண்டே நாம் இயங்க வேண்டியிருக்கிறது.

இந்த நிலைமைகள் சாதாரணமாக பார்த்தால் எதோ தனிமனித சோர்வு அல்லது மனவருத்தம் என்பது போன்று தெரியலாம். ஆனால் அடிப்படையில் இதன் அரசியல் உள்ளடக்கம் மிகவும் ஆபத்தானது.அடிப்படையில் நமது தேசிய அரசியல் மிகுந்த நுட்பத்துடன் அழிக்கப்பட்டு வருகின்றது என்பதுதான் உண்மை.

இதன் ஆரம்பம்தான் சில கிலோமீற்றர் தொலைவில் நமது தேசத்தின் ஒருபகுதி மக்கள் அழித்தொழி;க்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஏனைய பகுதிகளில் அது குறித்த எந்தவொரு கரிசனையும் இல்லாமல் கோயில் திருவிழாவிலும், கும்பாபிஷேகங்களிலும் நமது மக்களால் ஆர்வத்துடன் பங்கு கொள்ள முடிகின்றது.

நிலத்தில் இருக்கும் ஒரு தலைமுறை மிகவும் நேர்த்தியாக விடுதலை அரசியலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் அடுத்த தலைமுறையினர் மத்தியில் விடுதலை அரசியல் கருத்துக்களை கொண்டு சேர்க்கும் பணியை ஏற்றிருந்த கருத்திலாளர்கள் ஊடவியலாளர்கள் அனைவரும் மௌனிகளாக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த பின்புலத்தில்தான் நமது தேசத்தின் முழுக்கவனமும் புலம்பெயர் தமிழ் மக்களை நோக்கி திரும்பியிருக்கிறது. புலம்பெயர் தலைமுறையிலிருந்துதான் நமது தேசத்தின் அடுத்த கட்ட அரசியல் தொடங்கப் போகின்றது.ஆரம்பத்தில் போராட்டத்திற்கான பின்தளம் என்ற நிலையில் மட்டுமே நோக்கப்பட்ட புலம்பெயர் சூழல் தற்போது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான பிரதான அரசியல் தளமாக மாறியிருக்கின்றது.

மேற்கின் மூலம் சிறிலங்காவை நெருக்குவது என்ற அர்த்தத்தில் மட்டுமே புலம்பெயர் போராட்டங்களை சிலர் நோக்குவதுண்டு. அவ்வாறு நோக்குவது தவறானது.தமிழர் தேசத்தின் பிரச்சனைக்கு சிங்களத்துடன் சேர்ந்து அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் தீர்வு முறையின் காலம் முடிந்துவிட்டது.

மேற்கு அரசுகள் அவ்வாறானதொரு தீர்வை முன்மொழியும் தகுதியையும் இழந்துவிட்டன. ஒரு தேசியப் பிரச்சனைக்கு ஒரு தேசம் தனக்கானதொரு தேசிய அரசை உருவாக்குவதே ஒரேயொரு தீர்வு என்பதை தேசியத்தின் இயக்க விதிகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நிரூபித்துள்ளன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உச்ச இலக்கை அடைவதற்கான வரலாற்று பொறுப்பு புலம்பெயர் தலைமுறையினர் கைக்கு மாறியிருக்கிறது.அந்த இலக்கை அடைவதற்கு நமது தேசத்திற்கு இருக்கும் ஒரேயொரு ஆதாரம் புலம்பெயர் தலைமுறைதான்.

இதுவரை நமது அரசியல் இலக்கினை அடைவதற்கு இராணுவ வெற்றி என்ற ஒரு வழிமுறை பற்றியே நாம் அதிகம் அழுத்தியிருக்கிறோம்.ஆனால் தற்போதைய சூழலில் அதற்கு சமாந்தரமாக குறிப்பாக சொல்வதானால் இன்னும் சற்று மேலாக அரசியலை அழுத்த வேண்டிய காலத்தில் பிரவேசித்திருக்கிறோம்.

இதனை ஏற்றுக்கொள்வது சற்று கடினமாக இருந்தாலும் இதுதான் யதார்த்தம்.தற்போதைய அரசியல் நிலைமைகளை அவதானித்தால் நாம் ஒரு வியடத்தை தெளிவாக அவதானிக்கலாம்.

அது, புலம்பெயர் போராட்டங்களினால் மேற்கு மயப்படுத்தப்பட்டிருக்கும் தமிழர் அரசியலை தனது இராஜதந்திர வழிமுறைகள் மூலம் கட்டுப்படுத்த முடியாத சிங்களத்தின் தோல்வி, தற்போது மேற்குடனான முரண்பாடாக உருமாறிவருகிறது.

புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியை கருத்தில் கொண்டே ஒபாமா தலைமையிலான புதிய அமெரிக்க அரசுடன் தமிழர்கள் நெருங்கலாம் என்ற அச்சத்தில் எதிர் பிரச்சாரத்திற்காக அதிக நிதியை ஒதுக்கியுள்ளது கொழும்பு.

இதுவரை மேற்குலகம் இலங்கை அரசியல் மீதான தலையீட்டிற்கான ஒரு முகவராகவே (Pநயஉந யுபநnஉல ழக றநளவ) நோர்வேயை பயன்படுத்தி வந்தது.ஆனால் சிங்களம் தற்போது தடாலடியாக இலங்கையின் சமாதானத் தொடர்புகளிலிருந்து நோர்வேயை விலக்கியுள்ளது. இதன் மூலம் மேற்கின் இலங்கை மீதான சமாதான ஊடாட்டங்களை கொழும்பு மட்டுப்படுத்தியுள்ளது.

மேற்குலகம் யுத்த நிறுத்தத்திற்கான கரிசனையை வெளிப்படுத்தி வரும் சூழலில் நோர்வேயை முழுமையாக நீக்கியிருப்பதானது ஒருவகையில் மேற்கின் கரிசனையை சிங்களம் புறம் தள்ளியிருக்கிறது என்பதாகவும் நாம் கொள்ளலாம்.கொழும்பு பிராந்திய சக்திகளுடன் நெருக்கமான தொடர்புகளை பேணிவரும் சூழலில் மேற்குடன் முரண்படுவது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளும் நிலையிலுமில்லை.

நோர்வே நீக்கப்பட்டிருப்பதன் மூலம் இலங்கை மீதான முழுமையான ஈடுபாடு இந்தியாவின் வசமாகியுள்ளது. இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் கொழும்பு இந்திய ஆலோசனையை நிச்சமாக பெற்றிருக்கும்.ஏலவே மேற்கின் அதிக கவனம் இலங்கை மீது குவிந்து வருவதை ஓருவித அச்சத்துடனேயே இந்தியா அவதானித்து வந்தது.இந்த சூழலில் மேற்கின் சமாதான தொடர்பாளரை நீங்கியிருப்பதன் மூலம் அந்த அச்சத்தை சிங்களம் போக்கியிருக்கிறது.

கொழும்பிற்கும், மேற்கிற்குமான முரண்பாடுகளின் இடையில்தான் நமது செயற்பாடுகளை நகர்த்த வேண்டியிருக்கிறது. அதனை புலம்பெயர் சமூகங்களால்தான் செய்ய முடியும்.இது மிகுந்த நிதானத்துடன் கையாள வேண்டிய ஒன்றுமாகும். மேற்கின் ஜனநாயக வரம்புகளுக்குள் நின்று கொண்டே இதனை சாதிக்க வேண்டியிருக்கிறது.

காலத்தை தவற விடுவோமாயின் நமது அரசியல் ஒரு நூற்றாண்டு நோக்கி பின்தள்ளப்படுவது நிச்சயம். நமது அரசியல் பின்தள்ளப்படுவது என்பதும் நாம் அழிவது என்பதும் வேறு வேறல்ல.அமெரிக்கன் வீசிய குண்டுகளின் கீழே வியட்நாமியர் அழவில்லை.
அமெரிக்கன் விசிறிய நச்சுக் காற்றினால் அவர்கள் நடுக்கமுறவில்லை.
கூடி எழுந்தனர்.
குலையுறாது நிமிர்ந்தனர்.
விழுந்தவர் போக எஞ்சியோர் விடுதலையை தொடர்ந்தனர்.
தாயினும் பெரியது தாயகம் வாழ்வதிலும் பெரியது வரலாற்றுக் கடன்.
தலைமுறைக்கான பணி தாங்கி நடப்பதே மனுக்குலத்திற்குரிய மணிமகுடம்.
ஈழத் தமிழர் எவராயினும் எங்கிருப்பவராயினும் காலக் கடைமையை கையிலெடுப்போமெனில் நாளை நமதாகும்.
இல்லையெனில் இழிவுற்றுச் சாவோம்.

- புதுவை இரத்தினதுரை -

தமிழர் விடுதலைப் போராட்டமும் புதிய தலைமுறையின் வரலாற்றுப் பணியும்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் 9 வது நாளாகத் தொடரும் ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க சதி !

பிரித்தானியா பாராளுமன்றம் முன் 9 வது நாளாகத் தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.மக்களின் எழுச்சிப் போராட்டத்தை எப்படியாவது முடக்க பிரித்தானியாக் காவல் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.எனினும் அது கைகூடாத நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து வருகின்றனர்.

எனினும் தொடரும் ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க சில தீய சக்திகள் சதி வேலைகளிலும் இறங்கியுள்ளன.வழமையாக இரவு பகல் பாராது போராட்டங்களில் கலந்துகொள்ளும் தாயக மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படுவது வழக்கம். இன்று மாலையும் அது போலவே சிலர் சிறுவர்களிடையே மயக்கமருந்து கலக்கப்பட்ட இனிப்புகளை வழங்கியிருக்கின்றனர் இதனால் 2 சிறுவர்கள் உடனடியாக மயக்கமாகியுள்ளனர். இதனையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. உடனடியாக விரைந்து செயற்பட்ட மாணவர்களும் பிரித்தானிய காவற்துறையினரும் இனிப்புக்களை வழங்கிய இருவரை பிடித்ததோடு ஏனையோரையும் தேடி வருகின்றனர்.

இவ்வாறான கோழைத்தனமான செயற்பாடுகள் இனியும் நடைபெறும் என்பதால் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறு காவற்துறையினரும் மாணவர்களும் தாயக உறவுகளிடம் கேட்டுக்கொள்கின்றனர்

இது தொடர்பான அறிக்கை ஒலி வடிவில்

பிரித்தானியாவில் 9 வது நாளாகத் தொடரும் ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க சதி !SocialTwist Tell-a-Friend

அவுஸ்திரேலியாவில் தொடரும் போராட்டம்


வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்தி வரும் மனிதப் பேரவலத்தை உடனடியாக நிறுத்தக் கோரியும், உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நான்கு தமிழ் இளைஞர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டங்களை தொடங்கவுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் உட்பட நால்வர் உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்கவிருக்கின்றனர்.
மெல்பேர்ண் நகரில் உள்ள DANDENONG பிராந்தியம் PULTNEY STREET ல் DANDENONG PARK ல் ச.ரமணா, ச.சந்திரன், ஊடகவியலாளரான ப.தெய்வீகன் மற்றும் கோ.பானு ஆகியோர் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்குகின்றனர்.
இவர்கள் முன்வைத்துள்ள நான்கு கோரிக்கைகள் வருமாறு:-
  1. உடனடியாகவும், நிரந்தரமாகவும் நடைமுறைப்படுத்தக் கூடியதுமான போர் நிறுத்தம் மேற்கொள்ளக் கோரி சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.
  2. வன்னியில் உள்ள தமிழ் உறவுகளுக்கு அத்தியாவசியமான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவி ஆகிய அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும் வகையில் சேர்ப்பிக்கப்பட வேண்டும்.
  3. தமிழ் மக்கள் சுதந்திரமாக தங்கள் இருப்பிடங்களை தேர்ந்தெடுக்க அனுமதி கொடுக்கப்பட வேண்டும்.
  4. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் உடனடியான பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும்.
மேற்படி நான்கு அம்சக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வலியுறுத்தும் வரை இந்த உண்ணாநிலை போராட்டத்தில் நான்கு தமிழ் இளைஞர்களும் தொடரவிருக்கின்றனர்.
இவர்களின் உண்ணாநிலை போராட்டத்துக்கு மெல்பேர்ண் வாழ் தமிழ் உறவுகள் ஆதரவு அளித்து இலட்சியத்தின் வெற்றிப்பாதைக்கு உறுதுணையாக வந்து கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

செய்திகள்: தமிழ்வின்

அவுஸ்திரேலியாவில் தொடரும் போராட்டம்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் உண்ணா நிலை போராட்டம் மேற்கொள்ளும் பரமெஸ்வரன், சிவா உலகுக்கு வெளியிட்ட அறிக்கை.

தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் இன அழிப்பைத் தடுத்து, அங்கு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சிவதர்சன் சிவகுமாரவேல் (21) , குட்டி மணியம் (28) ஆகிய இரு இளையவர்களே இவ் உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்துள்ளவர்களாவர்.அவர்கள் உலகுக்குச் வெளியிட்ட அறிக்கை.



பிரித்தானியா ,
08-04-2009 .

எங்கள் அன்பான தமிழீழ மக்களே,
இது தமீழம் மலருவதற்கான நேரம். தனித்தமிழீழம் மலர்ந்தாலொழிய இதற்கு வேறு தீர்வே இல்லை.

எங்கள் அண்ணன் தியாக தீபம் திலீபன் அண்ணா வழியில் மீண்டும் உலகிற்கு உணர்த்துவோம். நாம் என்றும் அமைதியான நிலையான நிரந்தரமான சமாதானத்தை மட்டுமே விரும்புகிறவர்கள்.
தமிழர்கள் என்றுமே எவருக்கும் எந்த நாட்டினருக்கும் எதிரிகளாக இருந்ததில்லை. அனைவரும் எமது நன்பர்களே. எமது எதிரி எதைக்கொண்டு தாக்கினானோ அதைக்கொண்டே திருப்பித்தாக்கி எமது விடுதலை போராட்டத்தை துவக்கிவைத்தார் எமது தலைவர், பாசமிகு அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

எமது விடுதலைப்போராட்டத்திற்கு நாம் மீண்டும் மீண்டும் நம் கரம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாம் எவ்வித பின்வாங்கலும் செய்யப்போவதில்லை. எமக்கு அடுத்த சந்ததிக்கு நாம் எமது அழகான தமிழீழத்தை மட்டும்தான் கொடுக்கவேண்டுமே தவிர ஆயுதப்போராட்டத்தையோஅல்லது அறவழிப்போராட்டத்தையோ அல்ல.

தமிழீழத்தை போராடி பெற வேண்டியதே எமது முக்கிய கடமை. எமது இந்த அறவழிப்போராட்டமானது இந்நாட்டின் சட்டதிட்டத்திற்கு அமைவாகவே நாம் நடத்துகிறோம். ஆகவே மக்களே எவ்வித தயக்கமுமின்றி விரைந்து திரண்டு வந்து குரல் கொடுங்கள். இங்கே நாம் விதைக்கும் இந்த விதை அனைத்து நாட்டிலும் ஆழவிருச்சமாக அகண்டு விரிந்து ஆழ வேரூண்ட வேண்டும்.

அந்தந்த நாட்டில் வாழும் தமிழீழ மக்களே! கிளர்ந்தெழுந்துங்கள். இது எமக்கான நேரம், தேசியத்தலைவரே கூறியிருக்கின்றார், மாணவர்களே எமது தூண்கள். தமிழர்களையும் தமிழீழத்தையும் தாங்க அனைத்து நாடுகளிலும் அணி அணியாக திரண்டுவாருங்கள் தூண்களே! இந்த தூண்கள் என்றும் எதற்கும் சாயாத தூண்கள்.

கிபிராலும் அடிக்க முடியாதது, ஆட்லரியாலும் வீழ்த்த முடியாது, மல்ட்டிபரலாலும் மடிக்க முடியாத தூண்களே! திரண்டு கிழந்து எழுந்து வாருங்கள்.

தமிழீழம் பெற விரைந்து வாருங்கள்.

அன்புடன்
பரமேசுவரன்
சிவா


செய்திகள்: பதிவு

பிரித்தானியாவில் உண்ணா நிலை போராட்டம் மேற்கொள்ளும் பரமெஸ்வரன், சிவா உலகுக்கு வெளியிட்ட அறிக்கை.SocialTwist Tell-a-Friend

கனடியத் தமிழரின் தொடர் போராட்டம்: தலைநகரின் வீதிகள் தமிழரால் முடக்கம்

சிறீலங்கா இனவெறி அரசின் கொடூர கொலைவெறியினைத் தடுத்து நிறுத்த அழுத்தம் கொடுக்கக்கோரி கனடியத் தலைநகரில் தமிழர்களால் தொடர் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கனடியத் தமிழர் சமூகம் மற்றும் கனடியத் தமிழ் மாணவர்களின் ‘கனடிய அரசாங்கம் செயலில் ஈடுபடும் வரையான தொடர் போராட்டம்’ அழைப்பையேற்று தமிழ் மக்கள் அனைவரும் கனடியத் தலைநகரான ஒட்டாவா நோக்கி அணிதிரண்டு கொண்டுள்ளார்கள். செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, விடிகாலை 6 மணியிலிருந்து பேருந்துகள், தங்கள் தனிப்பட்ட வாகனங்கள் மூலம் போராட்டத்திற்காகத் தலைநகர் நோக்கி மக்கள் சென்று கொண்டுள்ளார்கள்.
கனடிய பாராளுமனறத்தில் ஆரம்பித்த போராட்டம் சிறிது நேரத்தில் வீதியை நோக்கி நகர ஆரம்பித்தது. தலைநகரின் வீதியில் இறங்கி போக்குவரத்தினை மறித்த கனடியத் தமிழ் மக்கள் தலைநகரின் முக்கிய வீதிகளான Bank Street, O’Conner Drive ஆகிய வீதிகள் உட்பட்ட முக்கிய வீதிகளில் வீதி மறிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அலுவலகங்கள் முடிவடைந்த பின்னர் நகரே ஸ்தம்பித்திருந்தது.
தமிழ் மக்களால் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடையினால் பல கிலோ மீற்றர் நீளத்திற்கு நகரின் பொதுப்போக்குவரத்து வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் நகரமுடியாது நிறுத்தப்பட்டிருந்தன.
வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெருமளவு காவற்றுறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆயினும்,

  • தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் படுகொலையை நிறுத்துவதற்கு சிறீலங்கா இனவெறி அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.
  • உடனடி யுத்த நிறுத்திற்கு சிறீலங்கா அரசைக் கொண்டுவரவேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கனடியத் தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், இவை நடைமுறைப்படுத்தப்படும் வரை தொடர்ச்சியான போராட்டமாக இப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.தலைநகரான ஒட்டாவாவில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை ரொறன்ரோ நகரில் உள்ள மாகாணப் பாரளுமன்றத்திற்கு முன்னாலும் தொடர் போராட்டத்தினை மக்கள் தொடர்ந்த வண்ணமுள்ளனர்.கடும் குளிரையும் பொருட்படுத்தாது கனடியத் தலைநகர் ஒட்டாவா வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கனடியத் தமிழ் சமூகமானது தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை வீதிகளை விட்டு அசையோம் எனும் உறுதியுடன் உள்ளார்கள்.பல்லாயிரக்கணக்கில் பங்கேற்று காலத்தின் கடமையை நிறைவேற்றும்படி ஒருங்கிணைப்பாளர்கள் கனடியத் தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கின்றார்கள். இப் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் மக்களிற்காக தொடர்ச்சியாக பேரூந்து வசதி ஏற்பாட்டாளர்களால் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை ரொறன்ரோ நகரின் பல பாகங்களில் இருந்தும் ஒட்டாவா செல்வதற்காக பேரூந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

செய்திகள்: பதிவு

கனடியத் தமிழரின் தொடர் போராட்டம்: தலைநகரின் வீதிகள் தமிழரால் முடக்கம்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் 5 அம்சக் கோரிக்கைகளுடன் இருவர் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம்

தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் இன அழிப்பைத் தடுத்து, அங்கு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சிவதர்சன் சிவகுமாரவேல் (21) , குட்டி மணியம் (28) ஆகிய இரு இளையவர்களே இவ் உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்துள்ளவர்களாவர்.
பிரித்தானியாவில் தமிழர்களால் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் வெஸ்ட்மினிஸ்ரர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் தமது சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.

  1. சிறிலங்காவில் உடனடியாக நிரந்தரமான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  2. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கீ மூன் அல்லது பிரித்தானியப் பிரதமர் கோடன் பிறவுண் தங்களை நேரில் சந்தித்து தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்து பரிசீலித்து உறுதிமொழி வழங்க வேண்டும்.
  3. வன்னியில் உள்ள மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்.
  4. இலங்கையில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதா அல்லது தனித்து நாடு அமைப்பதா என்பதை அறிய ஐ.நாவின் ஏற்பாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்
  5. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும்.
ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளையே மேற்படி இருவரும் முன்வைத்து தமது சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.
இவர்களது சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக முன்னெடுக்கும் இப்போராட்டம் தாய் தேசத் தமிழுறவுகளின் அவலங்களிற்கு பிரித்தானியாவிடமிருந்து நிரந்தர முடிவு கிட்டும் வரை தொடரும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்' தமிழின விடிவிற்காக இந்திய அரசிற்கு எதிராக உண்ணாநிலையில் இருந்து உயிர்விட்ட தியாகி திலீபனின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது.தொடர் போராட்டத்தில் இறங்கியிருக்கும் மாணவர் சமூகத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைவரையும் இப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றார்கள்.

செய்திகள்: பதிவு

பிரித்தானியாவில் 5 அம்சக் கோரிக்கைகளுடன் இருவர் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் 3 ஆவது நாளாக தொடரும் தமிழர்களின் போராட்டம்: காவல்துறையின் அடக்குமுறையையும் மீறி மக்கள் பேரெழுச்சி




சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தை பிரித்தானிய அரசாங்கம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானியாவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் மாபெரும் மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்திருக்கின்றது.பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தை குறுக்கே வழி மறித்து நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் தொடங்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
இரவு இரவாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொடர்ந்தும் பிரித்தானியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தின் ஊடான போக்குவரத்தை தமிழர்கள் வழிமறித்தனால் பிரித்தானியா நாடாளுமன்ற செயற்பாடுகள் முற்றாக செயலிழந்ததுடன், போக்குவரத்தும் பெரும் நெரிசல் ஏற்பட்டிருக்கின்றது.
  • "சிறிலங்கா அரசே இனப்படுகொலையை நிறுத்து"
  • "தாய்மார்களையும் சிறுவர்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்வதனை நிறுத்து"
  • "எமக்கு தேவை தமிழீழமே"
  • "எமது தலைவர் பிரபாகரனே"
என உரத்த குரலில் உணர்வுபூர்வமாக முழக்கமிட்டு வரும் தமிழர்கள் தமது கைகளில் தமிழீழத் தேசியக் கொடியையும் தமிழீழ தேசியத் தலைவரின் படத்தையும் கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண், இலங்கை பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டி வலியுறுத்தியும் அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் தமிழர்கள் வலியுறுத்தி வருவதாக பிரித்தானிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கை பிரச்சினையில் நடவடிக்கை எடுப்பதாக பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்களிடம் உறுதிமொழி வழங்கிய போதும் அதனை நிராகரித்த தமிழர்கள், தமக்கு உடனடி நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.இந்த தொடர் போராட்டத்தினால் பிரித்தானியாவின் முக்கிய தொடருந்து நிலையமான வெஸ்ட்மினிஸ்டர் நிலையத்தின் சேவைகள் நேற்று இரவுடன் முற்றாக நிறுத்தப்பட்டு ஒலிபெருக்கிகளில் மாற்று வழிப்பாதைகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவித்தல் விடுத்து வருகின்றனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழர்களை அடக்குவதற்காக கலகம் அடக்கும் காவல்துறையினர் கொண்டு வரப்பட்ட போதும் ஆர்ப்பாட்டத்தில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டதால் கலகம் அடக்கும் காவல்துறையினரால் அவர்களை அடக்க முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மேற்படி பகுதிக்குரிய காவல்துறை பேச்சாளர் தெரிவிக்கையில்,
தமிழர்களின் இந்த திடீர் போராட்டம் எமக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எனினும் அமைதியான வழியில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தினை தடுத்து நிறுத்து நோக்கம் எமக்கு இல்லை.அத்துடன், இந்த போராட்டத்துக்கு மேலதிகமாக மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நாம் எந்தவித இடையூறும் விளைவிக்கவில்லை என்றார்.

எனினும், தமிழீழத் தேசியக் கொடியை கையில் ஏந்தியிருந்த நான்கு தமிழ் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.மேலும் பலரை கைது செய்ய முற்பட்ட போது அங்கிருந்த மக்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் எற்பட்டு இறுதியில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் கைவிட்டுள்ளனர். இதனால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தமிழீழத் தேசியக் கொடியை குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கைகளில் ஏந்தியிருக்குமாறு கொடுத்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவியான ஜெயந்தி பரஞ்சோதி கருத்து தெரிவிக்கையில்,
பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அல்லது பிரதமர் கோடன் பிறவுண் இங்கு வந்து தாயகத்தில் இடம்பெற்று வரும் தமிழினப் படுகொலைக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரைக்கும் இங்கிருந்து நாம் வெளியேறப் போவதும் இல்லை. எமக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுதிமொழிகள் தேவையில்லை என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சைமன்ட் கூச் தெரிவிக்கையில்,
தமிழர்களின் 25 வருட கால போராட்டத்துக்கு நான் முழுமையான ஆதரவு வழங்குகின்றேன். தற்போது தான் சரியான தருணம். பிரித்தானிய அரசாங்கம் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழர்கள் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அதற்கு நானும் முழுமையான ஆதரவு வழங்குகின்றேன் என்றார்.

தேம்ஸ் நதிக்குள் குதித்து இருவர் தற்கொலை முயற்சி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்கள் இருவர், நேற்று இரவு தேம்ஸ் நதிக்குள் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்ததால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.எனினும், காவல்துறையினர் படகுகளில் சென்று அவர்களை உடனடியாக மீட்டதுடன், மேலும் பலர் தேம்ஸ் நதிக்குள் குதிக்கலாம் என அச்சத்தில் படகுகளுடன் முழு விழிப்பு நிலையில் உள்ளனர்.அத்துடன், கலகம் அடக்கும் காவல்துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் நோக்கில் பிரித்தானிய காவல்துறையினர் செயற்பட்டு வருகின்ற போதிலும் இன்று மாலை அப்பகுதியில் மேலதிகமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் 3 ஆவது நாளாக தொடரும் தமிழர்களின் போராட்டம்: காவல்துறையின் அடக்குமுறையையும் மீறி மக்கள் பேரெழுச்சிSocialTwist Tell-a-Friend

பிரித்தானியா சவுத் பாங்க் பல்கலைக் கழக மாணவர்களால் 24மணிநேர உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கையில் போரை நிறுத்தக் கோரியும், உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரியும், இருபத்தி நான்கு மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் ஆரம் பிக்கப்பட்டுள்ளது.31/03/2009மதியம் பன்னிரெண்டு மணிக்கு பிரித்தானியா சவுத் பாங்க் பல்கலைக் கழக மாணவர்களால், மாணவர்கள் வெகு உர்ச்சாகமாக தேசியக் கொடியை உரிய மரியாதையுடன் அணிவகுத்து நின்று, அகவணக்கத்துடன், தேசியக் கொடிப் பாடல் இசைக்க தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

அதன் பின்னர் மறைந்த முன்னால் பிரித்தானிய மாணவரும் ஈகப் பேரொளியுமான முருகதாஸிற்கு சுடர் ஏற்றி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். பின்பு மாணவர்கள் அனைவரும் மலர்தூவி தங்கள் மரியாதையை செலுத்தினர்.மாணவர்கள் அனைவரும் வணக்கம் செலுத்திய பின்னர் வேற்று இன மாணவாகளுக்கு இலங்கையில் இனவாத சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் தமிழின அழிப்புப்போர் பற்றியும், தமிழீழ வரலாறு பற்றியும் எடுத்துரைத்தனர்..
அதே வேளை சிங்கள அரசின் தமிழின அழிப்பை நிறுத்துமாறு பிரித்தானிய தலைமை அதிபர் கோல்டன் பிரவுன் அவர்களுக்கு மாணவர்களால் அஞ்சல் அட்டைகளில் அவர்களின் விபரங்கள் நிரப்பப்பட்டன.பல்கலைக் கழகம் முழுவதும் தமிழின அழிப்பு பற்றியும் எமது பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்றும். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரியும் பல பதாதைகள் ஒட்டப் பட்டுள்ளன.

இதன் தொடக்கமாக மாணவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தி உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவிருந்த பொழுது பல்கலைக் கழகம் தேசியக் கொடியை ஏத்துவதற்கு அனுமதி மறுத்தது. மாணவர்கள் நிர்வாகத்திடம் தாங்கள் நிட்சயம் எங்கள் தேசியக் கோடியை ஏத்துவோம், இது எங்கள் தேசியக் கொடி என்று வாதாடினர். மாணவர்களைக் கட்டுப் படுத்த முடியாத நிர்வாகம் காவல்த்துறை உதவியை நாடினர். விரைந்து வந்த காவல்த் துறையினரிடம் மாணவர்கள் தங்கள் போராட்டம் தொடர்பாகவும் தேசியக் கொடி தொர்பாகவும் விளக்கி கூறினர்.பின் காவல் துறையினர் அனுமதி அளித்தபின் பல்கலைக் கழக நிர்வாகமும் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் : பதிவு

பிரித்தானியா சவுத் பாங்க் பல்கலைக் கழக மாணவர்களால் 24மணிநேர உண்ணாவிரதப் போராட்டம்SocialTwist Tell-a-Friend

அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் 28.03.09 (சனிக்கிழமை) 'உரிமைக்குரல்'

ஈழத் தமிழரின் தாயகம் - தேசியம் - தன்னாட்சி உரிமையினை முன்னிலைப்படுத்தி அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் நாளை மறுநாள் மாபெரும் 'உரிமைக்குரல்' நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது."சுதந்திர தமிழீழத்திற்கான உரிமைக்குரல் - Voice to Free Tamil Eelam" எனும் கருப்பொருளில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள இப்பேரணிக்கு தமிழ் இளையோர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.விடுதலை வேண்டி நிற்கும் தமிழினத்திற்குப் புலம்பெயர் உறவுகளின் பிளவுபடாத ஆதரவு, உந்துசக்தியாக அமையும் என்பதால் சிட்னி வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் இளையோர் அமைப்பினர் வேண்டிக்கொள்கின்றனர்.

இடம்: Martin Place
நாள்: 28.03.09 (சனிக்கிழமை)
நேரம்: முற்பகல் 11:00

செய்திகள் : புதினம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் 28.03.09 (சனிக்கிழமை) 'உரிமைக்குரல்'SocialTwist Tell-a-Friend

சிறிலங்காப் பொருட்களுக்கு நாம் கொடுக்கும் விலை - எம்மக்களின் வாழ்விற்கு அது உலை!

உலக அரசுகளின் மௌனப் புன்னகையின் கீழ் தமிழின அழிப்பின் உச்சக்கட்ட நடவடிக்கைகள் எமது தாயகப் பகுதியில் நடந்தேறிவருகின்றன. ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வெளியுலகம் முழு மூச்சுடன் இலங்கை அரசிற்கு வழங்கிவருகின்றது. இவ்வேளையில், நாம் எம்மை அறியாமலேயே சிங்கள அரசின் பொருளாதார வளத்திற்குப் பலம் சேர்ப்பவர்களாகப் புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றோம். புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் செய்யவேண்டியது யாதெனில், எந்தெந்த வகையில் இலங்கை அரசு வருவாயை ஈட்டுகின்றது என்பதைக் கண்டறிந்து, அவ் வழிகளை உடனடியாக மூடவேண்டியதேயாகும்.

முதலில் நாம் அன்றாட மற்றும் ஆடம்பரத் தேவைகளுக்கு இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்போம். அதாவது, உணவு வகைகள் மற்றும் உணவு தயாரிக்கப் பயன்படும் பொருட்கள், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் போன்றவற்றை வாங்குவதை நிறுத்துவோம். ஏனெனில், நுகர்வோன் எதை விரும்புகிறானோ அதையே சில்லறை வியாபாரிகள் கொள்வனவு செய்வார்கள் சில்லறை வியாபாரிகள் எதை விரும்புகிறார்களோ அதையே மொத்த வியாபாரிகள் கொள்வனவு செய்வார்கள். மொத்த வியாபாரியின் தேவைகளே உற்பத்தியாளனை ஊக்குவிக்கின்றது. உற்பத்தி அதிகரித்தால் நாட்டின் வரி வருவாய் அதிகரிக்கும். உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது, நாட்டின் அந்நியச்செலாவணி அதிகரிக்கும். அந்த அந்நியச்செலாவணியைப் பயன்படுத்தி, வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்து, அந்த ஆயுதங்களால் எம்மினத்தை அழித்து வருகிறது இலங்கை அரசு. ஆக மொத்தத்தில், நாம் கொள்வனவு செய்யும் இலங்கையின் உற்பத்திப் பொருட்களே ஆயுதங்களாக மாறி எம்மக்களின் அழிவுக்கு வழிகோலுகிறது. ஆகவே, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களனைவரும் இலங்கை உற்பத்திகளைப் புறக்கணிப்போம். அப்பொருட்களைக் கொள்வனவு செய்யும் வேற்றின மக்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களையும் புறக்கணிக்கச் செய்வோம்.

பொருளாதார நெருக்கடியை இலங்கை அரசிற்கு வழங்குவதன் மூலம், அது முன்னெடுத்து வரும் இன அழிப்புப் போரை நிறுத்த முடியும் அல்லது தளர்த்தவாவது முடியும். எந்நேரமும் இலங்கை அரசிற்கு உதவிவரும் உலகநாடுகளும் பணவீக்கம், வேலையில்லாப் பிரச்சினை, பாரிய உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படுதல் முதலிய பிரச்சினைகளினால் நெருக்கடியிலிருக்கும் இவ்வேளையில், போருக்கான உதவிகளை அவர்களும் செய்ய முன்வர மாட்டார்கள். ஏற்கனவே இலங்கையில், மின்சாரசபை மற்றும் கடதாசித் தொழிற்சாலை போன்றவற்றில் பணிபுரிவோருக்கான ஊதியம் இரண்டு மாதங்களாக வழங்கப்படாத நிலையில், ஊழியர்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். ஆகவே, ஏற்கனவே சிக்கலில் இருக்கும் இலங்கையின் பொருளாதார நிலையை, அதன் உற்பத்திப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் மேலும் சிக்கலில் ஆழ்த்த முடியும். இதனால், சிங்கள மக்களின் கவனம் போரிலிருந்து விடுபட்டு சீரழிந்து வரும் பொருளாதார நிலையை நோக்கித் திரும்பும். இலங்கை அரசிற்கு எதிராக சிங்கள மக்களும் திரும்பும் போது வேறு வழியின்றிப் போரை நிற்றுத்தவேண்டிய நிலைப்பாடு ஒன்று இலங்கைக்கு உருவாகும். அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு கூட, பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கு நெடுநாளாகும். அந்த இடைவெளியில் சாவின் பிடியிலிருக்கும் எங்கள் மக்களை மீட்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.

லக சந்தையில் இலங்கைக்கு அந்நியச்செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் முக்கிய பணப்பயிராக விளங்குவது தேயிலை. பிரித்தானியரால் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள், வனாந்தரமாகக் கிடந்த மலையகப் பகுதியைத் தமது கடின உழைப்பினால் பெரும் செல்வமீட்டும் தேயிலைத் தோட்டங்களாக மாற்றியமைத்தனர். கடுங்குளிராலும், வன விலங்குகளாலும், வசதிக் குறைவினாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல இலட்சங்களைத் தாண்டும். அப்படிப்பட்ட எம் தமிழுறவுகளை இலங்கை சுதந்திரமடைந்ததும், இலங்கை அரசானது அவர்களின் குடியுரிமையைப் பறித்து, நாடற்றவர்களாக்கியது. பல தலைமுறைகளாக அவர்கள் மேற்கொண்ட கடின உழைப்பின் பயனாக உருவான தேயிலைத் தோட்டங்களில் விளைந்த தேயிலையை ஏற்றுமதி செய்து, அதனால் கிடைக்கும் பணவருவாயில், ஆயுதம் கொள்வனவு செய்து, எம் தமிழினத்தின் உயிரைக் குடிக்கிறது இலங்கை அரசு. செந்நிறத் தேநீரை உலகுக்கு வழங்கி, அந்த வருவாயில் தமிழரின் செங்குருதியைக் குடித்து மகிழ்கிறது சிங்கள அரசு. புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம், இதனைப் பல்லின மக்களுக்கும் எடுத்துக் கூறவேண்டும். இலங்கையை உலக சந்தையில் வீழ்ச்சி காணும்படி செய்ய வேண்டும். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களின் பலம் என்ன என்பதை இலங்கை அரசுக்கு நிரூபிக்க வேண்டும்.

அந்நியச்செலாவணியை இலங்கைக்கு சம்பாதித்துக் கொடுக்கும் வியாபாரங்களில் அடுத்து முக்கியத்துவம் பெறுவது, இறக்கி ஏற்றல் வியாபாரம். அதாவது, மூலப்பொருட்களைப்
பிறநாடுகளிலிருந்து தருவித்து, முடிவுப் பொருட்களாக மாற்றுதல் அல்லது பைகளில் அடைத்துப் பெயரிடுதல் போன்றவற்றைச் செய்தபின், ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல்.

அடுத்து முக்கியத்துவம் பெறுவது, தைத்த ஆடைகள் ஏற்றுமதி. தைத்த ஆடைகள் வியாபாரத்தில், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையையே கேந்திர நிலையமாகக் கொண்டு இயங்குகின்றன. ஐக்கிய இராச்சியத்தில், மார்க்ஸ் அன் ஸ்பென்சர் (M&S) இலங்கையிலிருந்து தைத்த ஆடைகளைப் பெருமளவில் கொள்வனவு செய்கிறது. புலம்பெயர்ந்து வாழும் எம்மவர் மத்தியில், இலங்கையின் யானை மார்க் குளிர்பானங்கள், நெஸ்லே மற்றும் மலிபன் தயாரிப்புக்கள் மிகவும் பிரசித்தம் பெற்றுக்
காணப்படுகின்றன. அவற்றைக் கொள்வனவு செய்யாது தவிர்க்க வேண்டும்.

இலங்கையின் பாதுகாப்பற்ற சூழலை மேற்கோள் காட்டி, அங்கு செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளை ஊக்கமிழக்கச் செய்தல், இலங்கையின் விமான சேவையைப் பயன்படுத்தாது தவிர்த்தல், இலங்கை வியாபார நிறுவனங்களின் பங்குகளை வாங்காது தவிர்த்தல், ஏற்கனவே பங்குதாரர்களாக இருப்பின், அப்பங்குகளை விற்றல் மற்றும் இலங்கையின் வங்கிகளில் எமது பெயர்களிலுள்ள சேமிப்பு வைப்புக்கள் முதலிய அனைத்து வங்கிக் கணக்குகளையும் மூடுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம், இலங்கை அரசிற்கு இலாபம் கிடைக்கின்ற பெரும்பாலான
வழிகளை மூட முடியும். இதை ஒவ்வொரு புலம்பெயர்ந்து வாழும் தமிழனும் மேற்கொள்வதுடன், தம்மைச் சுற்றியுள்ளவர்களிடையேயும், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்வோமேயானால், அதனால் கிடைக்கக்கூடிய பலனும், தமிழர் தம் பலமும் வருகின்ற நாட்களில் வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருக்கும். ஐக்கிய இராச்சியத்தின் தமிழ் இளையோரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்பணி வேகமாக முடுக்கிவிடப்பட்டு, வெற்றிகரமாக இலக்கை அடைவதற்கு அனைத்துத் தமிழுறவுகளும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டுமென
உரிமையோடும் அன்போடும் கேட்டுக் கொள்கிறார்கள் தமிழ் இளையோர்கள்.

இவை தொடர்பான மென்புத்தக வடிவிலான அறிவித்தல் தரவிறக்குங்கள்.


தமிழ் இளையோர்கள்
மேலதிக செய்திகளுக்கு :
Boycott Sri Lanka

சிறிலங்காப் பொருட்களுக்கு நாம் கொடுக்கும் விலை - எம்மக்களின் வாழ்விற்கு அது உலை!SocialTwist Tell-a-Friend

அவுஸ்ரேலியாவில் இன உரிமை போராட்டம்

அவுஸ்ரேலியாவில் இன உரிமை போராட்டம்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் இந்திய தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

சிறிலங்கா அரசுக்கு இந்தியா வழங்கி வரும் ஆயுத மற்றும் மனித வள உதவிகளை கண்டித்து பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளனர்.பிரித்தானிய தமிழ்ப் பெண்கள் ஏற்பாடு செய்துள்ள இக்கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:00 மணி தொடக்கம் பிற்பகல் 4:00 மணிவரை நடைபெறவுள்ளது.
நிகழ்வு நடைபெறும் இடம்: India House, Aldwych, London, WC 2B 4NA (Nearest Tube Stations: Temple, Holborn, Charing cross)

  • தமிழினப் படுகொலைகளைப் புரியும் மகிந்த அரசுக்கு உதவிகளை வழங்காதே
  • மகிந்த அரசுக்கான இராணுவ உதவிகளை நிறுத்து
  • வன்னியில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்ற உதவி புரியாதே
  • தமிழீழத் தாயகமே எமது முடிவு
  • எமது தேசியத் தலைவர் பிரபாகரன்
  • தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளதால் காலத்தின் தேவை கருதி பெருந்திரளாக மக்களை ஒன்றுகூடுமாறு தமிழ் மகளிர் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்திகள் : புதினம்

பிரித்தானியாவில் இந்திய தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் (05.03.09) தமிழர்கள் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம்

வன்னி மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் உடனடியாக கிடைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளும்படி ஐக்கிய நாடுகள் சபைக்கும் பிரித்தானிய அரசுக்கும் தெரிவிப்பதற்கான மனிதச் சங்கிலி போராட்டம் ஒன்று லண்டனில் நடைபெற உள்ளது.இந்த மனிதச் சங்கிலி போராட்டம் நாளை வியாழக்கிழமை (05.03.09) பிற்பகல் 1:00 மணியில் இருந்து பிற்பகல் 6:00 மணி வரையும் இடம்பெறவுள்ளது.லண்டனில் மனிதச் சங்கிலி நடைபெறும் பகுதிகளாக:

லண்டன் நகரின் மத்தியில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அண்டர் கிறவுண்ட்டை மையப்படுத்தி, அதனை சுற்றியுள்ள
செறிங் குறஸ்,
கொல்போற்ன்,
ரொட்டணம் கோற்ட் றோட்,
பிக்கடிலி சேற்க்கஸ்,
கிறீன்பார்க்,
கைட்பார்க் கோற்னர்,
விக்டோறியா,
சென்- ஜேம்ஸ் பாற்க் ஆகிய அண்டர் கிறவுண்ட்கள் உள்ள வீதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலதிக விவரம் அறிந்து கொள்ள விரும்புகின்றவர்கள் (44) 7727899358 எனும் செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம்.

செய்திகள்: புதினம்

பிரித்தானியாவில் (05.03.09) தமிழர்கள் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம்SocialTwist Tell-a-Friend

இவா்களுக்கு இவ்வளவு தைரியம் கொடுத்தது யார் ?

கீழுள்ள படங்கள் பிரித்தானியா லெசிஸ்ரர் மாநிலத்தில்சிங்களவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கீத்வாஸ் அவர்களின் பணிமனைக்கு முன்பாக மேற்கொண்ட போராட்டத்தின் போது எடுக்கப்பட்டவை !. ஆனாலும் பணிமனைக்கு முன்பாக மேற்கொண்ட பொய்யான பிரச்சாரப் போராட்டத்திற்கு எதிராக லெசிஸ்ரர் வாழ் தமிழ்மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு அவா்களது போராட்டத்தை எதிர்த்தாலும் அவா்கள் இவ்வளவு துாரம் வந்து விட்டார்களே? இதற்க்கு யார் காரணம்.அடுத்தமுறை அதிகளவிலானோரை அழைத்து வந்தால் நாம் என்ன செய்யப்போகிறோம். இதற்கு பிரித்தானியாவிலுள்ள இலங்கைத்துாதரகம் முழுஆதரவு என முற்றுமுழுதாகத்தெரிந்தபோதும் படிப்படியாக எமது போராட்டங்களை அவா்கள் கொச்சைப்படுத்திவிடுவார்கள் தானே ? இதற்கெல்லாம் நாங்கள் காந்தீயவழியில் தான்போராட்டம் நடாத்தி பதில்சொல்லப்போகிறோமா ? இல்லை.... முடிவு உங்களிடம் தான் உள்ளது. (வேறெந்த நாடுகளிலும் சிங்களவா்கள் அந்த அளவுக்கு போனதாக தகவல்கள் இல்லை இங்கு மட்டும் எப்படி ? யாருக்காவது தகவல் தெரியுமா ? )

படங்கள் : Defence.lk

இவா்களுக்கு இவ்வளவு தைரியம் கொடுத்தது யார் ?SocialTwist Tell-a-Friend