Showing posts with label அறிவித்தல்கள். Show all posts
Showing posts with label அறிவித்தல்கள். Show all posts

பிரித்தானியப் பாராளுமன்றம் உட்பட தலைநகரின் பல வீதிகள் தமிழ் மக்களால் முடக்கம்


சிறிலங்கா மிக மொசமான இனப்படுகொலையை வன்னியில் இன்று நடத்தியுள்ள நிலையில் பிரித்தானியாவில் தமிழ் மக்கள் பெரும் எழுச்சியடைந்துள்ளனர்.பிரித்தானியாவில் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வரும் மக்கள் இன்று வன்னியில் இடம்பெற்றுள்ள அவலத்தை அறிந்து பெரும் சோகத்துடனும், அச்சத்துடனும் பிரித்தானிய பாராளுமன்றத்தை முடக்கி போராட்டத்தில் குதித்துள்ளனர்.பாராளுமன்றத்திற்கான நான்கு பிரதான வீதிகளும் தமிழ் மக்களால் முடக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்றத்திற்கான போக்குவரத்துக்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.
காணொளி:BBC
செய்திகள்:சங்கதி

பிரித்தானியப் பாராளுமன்றம் உட்பட தலைநகரின் பல வீதிகள் தமிழ் மக்களால் முடக்கம்SocialTwist Tell-a-Friend

அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் 28.03.09 (சனிக்கிழமை) 'உரிமைக்குரல்'

ஈழத் தமிழரின் தாயகம் - தேசியம் - தன்னாட்சி உரிமையினை முன்னிலைப்படுத்தி அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் நாளை மறுநாள் மாபெரும் 'உரிமைக்குரல்' நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது."சுதந்திர தமிழீழத்திற்கான உரிமைக்குரல் - Voice to Free Tamil Eelam" எனும் கருப்பொருளில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள இப்பேரணிக்கு தமிழ் இளையோர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.விடுதலை வேண்டி நிற்கும் தமிழினத்திற்குப் புலம்பெயர் உறவுகளின் பிளவுபடாத ஆதரவு, உந்துசக்தியாக அமையும் என்பதால் சிட்னி வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் இளையோர் அமைப்பினர் வேண்டிக்கொள்கின்றனர்.

இடம்: Martin Place
நாள்: 28.03.09 (சனிக்கிழமை)
நேரம்: முற்பகல் 11:00

செய்திகள் : புதினம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் 28.03.09 (சனிக்கிழமை) 'உரிமைக்குரல்'SocialTwist Tell-a-Friend

சிறிலங்காப் பொருட்களுக்கு நாம் கொடுக்கும் விலை - எம்மக்களின் வாழ்விற்கு அது உலை!

உலக அரசுகளின் மௌனப் புன்னகையின் கீழ் தமிழின அழிப்பின் உச்சக்கட்ட நடவடிக்கைகள் எமது தாயகப் பகுதியில் நடந்தேறிவருகின்றன. ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வெளியுலகம் முழு மூச்சுடன் இலங்கை அரசிற்கு வழங்கிவருகின்றது. இவ்வேளையில், நாம் எம்மை அறியாமலேயே சிங்கள அரசின் பொருளாதார வளத்திற்குப் பலம் சேர்ப்பவர்களாகப் புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றோம். புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் செய்யவேண்டியது யாதெனில், எந்தெந்த வகையில் இலங்கை அரசு வருவாயை ஈட்டுகின்றது என்பதைக் கண்டறிந்து, அவ் வழிகளை உடனடியாக மூடவேண்டியதேயாகும்.

முதலில் நாம் அன்றாட மற்றும் ஆடம்பரத் தேவைகளுக்கு இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்போம். அதாவது, உணவு வகைகள் மற்றும் உணவு தயாரிக்கப் பயன்படும் பொருட்கள், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் போன்றவற்றை வாங்குவதை நிறுத்துவோம். ஏனெனில், நுகர்வோன் எதை விரும்புகிறானோ அதையே சில்லறை வியாபாரிகள் கொள்வனவு செய்வார்கள் சில்லறை வியாபாரிகள் எதை விரும்புகிறார்களோ அதையே மொத்த வியாபாரிகள் கொள்வனவு செய்வார்கள். மொத்த வியாபாரியின் தேவைகளே உற்பத்தியாளனை ஊக்குவிக்கின்றது. உற்பத்தி அதிகரித்தால் நாட்டின் வரி வருவாய் அதிகரிக்கும். உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது, நாட்டின் அந்நியச்செலாவணி அதிகரிக்கும். அந்த அந்நியச்செலாவணியைப் பயன்படுத்தி, வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்து, அந்த ஆயுதங்களால் எம்மினத்தை அழித்து வருகிறது இலங்கை அரசு. ஆக மொத்தத்தில், நாம் கொள்வனவு செய்யும் இலங்கையின் உற்பத்திப் பொருட்களே ஆயுதங்களாக மாறி எம்மக்களின் அழிவுக்கு வழிகோலுகிறது. ஆகவே, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களனைவரும் இலங்கை உற்பத்திகளைப் புறக்கணிப்போம். அப்பொருட்களைக் கொள்வனவு செய்யும் வேற்றின மக்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களையும் புறக்கணிக்கச் செய்வோம்.

பொருளாதார நெருக்கடியை இலங்கை அரசிற்கு வழங்குவதன் மூலம், அது முன்னெடுத்து வரும் இன அழிப்புப் போரை நிறுத்த முடியும் அல்லது தளர்த்தவாவது முடியும். எந்நேரமும் இலங்கை அரசிற்கு உதவிவரும் உலகநாடுகளும் பணவீக்கம், வேலையில்லாப் பிரச்சினை, பாரிய உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படுதல் முதலிய பிரச்சினைகளினால் நெருக்கடியிலிருக்கும் இவ்வேளையில், போருக்கான உதவிகளை அவர்களும் செய்ய முன்வர மாட்டார்கள். ஏற்கனவே இலங்கையில், மின்சாரசபை மற்றும் கடதாசித் தொழிற்சாலை போன்றவற்றில் பணிபுரிவோருக்கான ஊதியம் இரண்டு மாதங்களாக வழங்கப்படாத நிலையில், ஊழியர்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். ஆகவே, ஏற்கனவே சிக்கலில் இருக்கும் இலங்கையின் பொருளாதார நிலையை, அதன் உற்பத்திப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் மேலும் சிக்கலில் ஆழ்த்த முடியும். இதனால், சிங்கள மக்களின் கவனம் போரிலிருந்து விடுபட்டு சீரழிந்து வரும் பொருளாதார நிலையை நோக்கித் திரும்பும். இலங்கை அரசிற்கு எதிராக சிங்கள மக்களும் திரும்பும் போது வேறு வழியின்றிப் போரை நிற்றுத்தவேண்டிய நிலைப்பாடு ஒன்று இலங்கைக்கு உருவாகும். அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு கூட, பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கு நெடுநாளாகும். அந்த இடைவெளியில் சாவின் பிடியிலிருக்கும் எங்கள் மக்களை மீட்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.

லக சந்தையில் இலங்கைக்கு அந்நியச்செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் முக்கிய பணப்பயிராக விளங்குவது தேயிலை. பிரித்தானியரால் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள், வனாந்தரமாகக் கிடந்த மலையகப் பகுதியைத் தமது கடின உழைப்பினால் பெரும் செல்வமீட்டும் தேயிலைத் தோட்டங்களாக மாற்றியமைத்தனர். கடுங்குளிராலும், வன விலங்குகளாலும், வசதிக் குறைவினாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல இலட்சங்களைத் தாண்டும். அப்படிப்பட்ட எம் தமிழுறவுகளை இலங்கை சுதந்திரமடைந்ததும், இலங்கை அரசானது அவர்களின் குடியுரிமையைப் பறித்து, நாடற்றவர்களாக்கியது. பல தலைமுறைகளாக அவர்கள் மேற்கொண்ட கடின உழைப்பின் பயனாக உருவான தேயிலைத் தோட்டங்களில் விளைந்த தேயிலையை ஏற்றுமதி செய்து, அதனால் கிடைக்கும் பணவருவாயில், ஆயுதம் கொள்வனவு செய்து, எம் தமிழினத்தின் உயிரைக் குடிக்கிறது இலங்கை அரசு. செந்நிறத் தேநீரை உலகுக்கு வழங்கி, அந்த வருவாயில் தமிழரின் செங்குருதியைக் குடித்து மகிழ்கிறது சிங்கள அரசு. புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம், இதனைப் பல்லின மக்களுக்கும் எடுத்துக் கூறவேண்டும். இலங்கையை உலக சந்தையில் வீழ்ச்சி காணும்படி செய்ய வேண்டும். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களின் பலம் என்ன என்பதை இலங்கை அரசுக்கு நிரூபிக்க வேண்டும்.

அந்நியச்செலாவணியை இலங்கைக்கு சம்பாதித்துக் கொடுக்கும் வியாபாரங்களில் அடுத்து முக்கியத்துவம் பெறுவது, இறக்கி ஏற்றல் வியாபாரம். அதாவது, மூலப்பொருட்களைப்
பிறநாடுகளிலிருந்து தருவித்து, முடிவுப் பொருட்களாக மாற்றுதல் அல்லது பைகளில் அடைத்துப் பெயரிடுதல் போன்றவற்றைச் செய்தபின், ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல்.

அடுத்து முக்கியத்துவம் பெறுவது, தைத்த ஆடைகள் ஏற்றுமதி. தைத்த ஆடைகள் வியாபாரத்தில், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையையே கேந்திர நிலையமாகக் கொண்டு இயங்குகின்றன. ஐக்கிய இராச்சியத்தில், மார்க்ஸ் அன் ஸ்பென்சர் (M&S) இலங்கையிலிருந்து தைத்த ஆடைகளைப் பெருமளவில் கொள்வனவு செய்கிறது. புலம்பெயர்ந்து வாழும் எம்மவர் மத்தியில், இலங்கையின் யானை மார்க் குளிர்பானங்கள், நெஸ்லே மற்றும் மலிபன் தயாரிப்புக்கள் மிகவும் பிரசித்தம் பெற்றுக்
காணப்படுகின்றன. அவற்றைக் கொள்வனவு செய்யாது தவிர்க்க வேண்டும்.

இலங்கையின் பாதுகாப்பற்ற சூழலை மேற்கோள் காட்டி, அங்கு செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளை ஊக்கமிழக்கச் செய்தல், இலங்கையின் விமான சேவையைப் பயன்படுத்தாது தவிர்த்தல், இலங்கை வியாபார நிறுவனங்களின் பங்குகளை வாங்காது தவிர்த்தல், ஏற்கனவே பங்குதாரர்களாக இருப்பின், அப்பங்குகளை விற்றல் மற்றும் இலங்கையின் வங்கிகளில் எமது பெயர்களிலுள்ள சேமிப்பு வைப்புக்கள் முதலிய அனைத்து வங்கிக் கணக்குகளையும் மூடுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம், இலங்கை அரசிற்கு இலாபம் கிடைக்கின்ற பெரும்பாலான
வழிகளை மூட முடியும். இதை ஒவ்வொரு புலம்பெயர்ந்து வாழும் தமிழனும் மேற்கொள்வதுடன், தம்மைச் சுற்றியுள்ளவர்களிடையேயும், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்வோமேயானால், அதனால் கிடைக்கக்கூடிய பலனும், தமிழர் தம் பலமும் வருகின்ற நாட்களில் வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருக்கும். ஐக்கிய இராச்சியத்தின் தமிழ் இளையோரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்பணி வேகமாக முடுக்கிவிடப்பட்டு, வெற்றிகரமாக இலக்கை அடைவதற்கு அனைத்துத் தமிழுறவுகளும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டுமென
உரிமையோடும் அன்போடும் கேட்டுக் கொள்கிறார்கள் தமிழ் இளையோர்கள்.

இவை தொடர்பான மென்புத்தக வடிவிலான அறிவித்தல் தரவிறக்குங்கள்.


தமிழ் இளையோர்கள்
மேலதிக செய்திகளுக்கு :
Boycott Sri Lanka

சிறிலங்காப் பொருட்களுக்கு நாம் கொடுக்கும் விலை - எம்மக்களின் வாழ்விற்கு அது உலை!SocialTwist Tell-a-Friend

அவுஸ்ரேலியாவில் இன உரிமை போராட்டம்

அவுஸ்ரேலியாவில் இன உரிமை போராட்டம்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் இந்திய தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

சிறிலங்கா அரசுக்கு இந்தியா வழங்கி வரும் ஆயுத மற்றும் மனித வள உதவிகளை கண்டித்து பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளனர்.பிரித்தானிய தமிழ்ப் பெண்கள் ஏற்பாடு செய்துள்ள இக்கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:00 மணி தொடக்கம் பிற்பகல் 4:00 மணிவரை நடைபெறவுள்ளது.
நிகழ்வு நடைபெறும் இடம்: India House, Aldwych, London, WC 2B 4NA (Nearest Tube Stations: Temple, Holborn, Charing cross)

  • தமிழினப் படுகொலைகளைப் புரியும் மகிந்த அரசுக்கு உதவிகளை வழங்காதே
  • மகிந்த அரசுக்கான இராணுவ உதவிகளை நிறுத்து
  • வன்னியில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்ற உதவி புரியாதே
  • தமிழீழத் தாயகமே எமது முடிவு
  • எமது தேசியத் தலைவர் பிரபாகரன்
  • தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளதால் காலத்தின் தேவை கருதி பெருந்திரளாக மக்களை ஒன்றுகூடுமாறு தமிழ் மகளிர் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்திகள் : புதினம்

பிரித்தானியாவில் இந்திய தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் (05.03.09) தமிழர்கள் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம்

வன்னி மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் உடனடியாக கிடைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளும்படி ஐக்கிய நாடுகள் சபைக்கும் பிரித்தானிய அரசுக்கும் தெரிவிப்பதற்கான மனிதச் சங்கிலி போராட்டம் ஒன்று லண்டனில் நடைபெற உள்ளது.இந்த மனிதச் சங்கிலி போராட்டம் நாளை வியாழக்கிழமை (05.03.09) பிற்பகல் 1:00 மணியில் இருந்து பிற்பகல் 6:00 மணி வரையும் இடம்பெறவுள்ளது.லண்டனில் மனிதச் சங்கிலி நடைபெறும் பகுதிகளாக:

லண்டன் நகரின் மத்தியில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அண்டர் கிறவுண்ட்டை மையப்படுத்தி, அதனை சுற்றியுள்ள
செறிங் குறஸ்,
கொல்போற்ன்,
ரொட்டணம் கோற்ட் றோட்,
பிக்கடிலி சேற்க்கஸ்,
கிறீன்பார்க்,
கைட்பார்க் கோற்னர்,
விக்டோறியா,
சென்- ஜேம்ஸ் பாற்க் ஆகிய அண்டர் கிறவுண்ட்கள் உள்ள வீதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலதிக விவரம் அறிந்து கொள்ள விரும்புகின்றவர்கள் (44) 7727899358 எனும் செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம்.

செய்திகள்: புதினம்

பிரித்தானியாவில் (05.03.09) தமிழர்கள் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம்SocialTwist Tell-a-Friend

இலங்கைப்பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம்

Box No 620 State House,
179 Station Road,
Harrow,
Middlesex,
HA1 2AE
அன்பான தமிழ் இறக்குமதியாளர்களே, வர்த்தகர்களே !

சர்வதேச முண்டுகொடுப்போடு எம் உறவுகள் மீது தினமும் குண்டுமழை பொழிந்து, நூற்றுக்கணக்கில் எம் மக்களை தினமும் கொன்றொழிக்கும் ஸ்ரீலங்கா அரசின் மீது பெரும் பொருளாதார யுத்தம் ஒன்றை முன்னெடுக்க வேண்டிய தேவையை காலம் எங்கள் கைகளில் விட்டிருக்கிறது. சிங்களம் இன்று தனது முழு மனித பொருளாதார வளங்களையும் திரட்டி இக்கொடிய போரை எம்மக்கள் மீது திணித்து வருகின்றது. இதன் மூலம் ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இந்நிலையில் நாம் கொடுக்கும் சிறிய அழுத்தமும் அவனது வீழ்ச்சியை விரைவாக்கும் என்பது பொருளாதார நிபுணர்களின் ஒருமித்த கருத்து.உலகப்பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம், போர்ச்செலவு போன்றவற்றினால் நாள்தோறும் வற்றிச் செல்லும் அந்நியச் செலவாணியை ஈடு செய்ய சிங்களம் வெளிநாட்டில் வதியும் ஸ்ரீலங்கர்களிடமிருந்து முதலீடாகவும், கடனாகவும் பெருமளவு நிதியை சேர்க்க திட்டம் தீட்டி செயற்பட்டு வருகிறது.

பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் சகல தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து BOYCOTT SRI LANKA எனும் போராட்ட இயக்கத்தை வித்திட்டு தொடர்ந்து பலசெயற்திட்டங்களை செயற்படுத்தவும் சிறிலங்காவுக்கு இலாபம் ஈட்டி தரும் தேயிலை, ஆடை ஏற்றுமதி, உல்லாசப்பயணத்துறை, SRILANKAN AIRLINES மற்றும் சிறிலங்காவில் இருந்து இறக்கப்படும் பொருட்களை பகிஷ்கரிக்க நாம் எம்மக்களையும் வேறு இன மக்களையும் கோரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். ஏற்கனவே ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தை வீழ்த்த பல்வேறு நாடுகளில் சுயமாகவும் அமைப்பு ரீதியாகவும் மக்கள் செயற்படத் தொடங்கி உள்ளதை நீங்கள் அறிவீர்கள்.நீங்கள் சிறிலங்காவிலிருந்து இறக்குமதி செய்கின்ற ஒவ்வொரு பொருட்களும் அந்த அரசுக்கு பெரும் அந்நியச்செலாவணியை ஈட்டி தருகிறது என்பதை அறிவீர்கள். இந்தப் பணம் மீண்டும் எங்கள் மக்கள் மீதே குண்டுகளாய் விழுகின்ற கொடுமையும் நடக்கிறது. ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராய் வீதிகளில் இறங்கி பெரும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கின்ற நாமே, எம் மக்கள் மீது வீசுகிற ஒவ்வொரு குண்டுக்கும் மறைமுகமாக பணம் கொடுத்து உதவலாமா என்பதை தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள்.

கடந்த காலங்களில் எம் தாயகம் மீது பற்றுக் கொண்டு நீங்கள் பல வழிகளிலும் ஆற்றிய பங்கை நாம் அறிவோம். இதன் அடுத்த கட்டமாக நாம் முன்னெடுக்கும் பொருளாதார பகிஷ்கரிப்புக்கு உங்கள் அதரவை உறுதி செய்யுங்கள்.இந்த பகிஷ்கரிப்பு போராட்டம் ஸ்ரீலங்கா அரசின் பொருளாதார நலன்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்படுகின்றது என்றபோதும், இதனால் உங்களுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார இழப்புக்களையும் நாம் உணர்கின்றோம். எனினும், சிறீலங்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மாற்றாக, வேறு நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் இந்த தற்காலிக இழப்புக்களை குறுகிய காலத்தில் நீங்கள் ஈடுகட்டமுடியும் அல்லவா ? ஏற்கனவே பல வர்த்தக நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து ஸ்ரீலங்கா பொருட்களின் விற்பனையை நிறுத்தியுள்ளமை இப்பகிஷ்கரிப்பிற்கான பங்களிப்பை உறுதிசெய்துள்ளது. எனவே, நாம் முன்னெடுத்துள்ள இந்த பகிஷ்கரிப்புக்கு உங்கள் ஆதரவு கிட்டுமென உறுதிகொள்கிறோம்.இப்பாரிய பகிஷ்கரிப்பை மட்டக்களப்பு மாநகரத்தில் இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக, அன்னை பூபதியினால் பட்டினி போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளான 19-03-09 வியாழன் அன்று நடைமுறைப்படுத்த உள்ளோம். எம்மண்ணில் தினமும் கொன்று குவிக்கப்படும் அப்பாவி மக்களின் பெயரால் இதனை நாம் உங்களிடம் உரிமையோடும் அன்போடும் வேண்டி நிற்கின்றோம்.

நன்றி.

BOYCOTT SRILANKA
நடவடிக்கை குழு

தொடர்புகளுக்கு -
075 2982 0565 - 075 2982 0566

இலங்கைப்பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம்SocialTwist Tell-a-Friend

தமிழீழத்தை விடிவிக்க ஐரோப்பிய இளையோரே ஒன்றிணையுங்கள்

தமிழீழத்தை விடிவிக்க ஐரோப்பிய இளையோரே ஒன்றிணையுங்கள்SocialTwist Tell-a-Friend

வெள்ளை மாளிகைக்கு முன் அணி திரளுங்கள்



வெள்ளை மாளிகைக்கு முன் அணி திரளுங்கள்SocialTwist Tell-a-Friend

பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் மேற்கொள்ளும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் இணைந்து மேற்கொள்ளும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்று தமிழர்களின் கரிநாளான 04-03-2009 அன்று இருவேறு இடங்களில் நடைபெற இருக்கிறது.

நடைபெறும் இடங்கள் :
இடம் 1 - Parliament Square 3.30 தொடக்கம்
Nearest Tube Station :Lancaster Gate

இடம் 2 - Sri Lankan High Commision
13, Hyde Park Gardens
LONDON W2 2LU
2.00 மணி தொடக்கம் 5.00 மணிவரை
Nearest Tube Station : Westminster, Exit 5

தொடர்புகளுக்கு: www.tyo-uk.org
தொலைபேசி : 075 8830 9496

முக்கிய அறிவித்தல் : அனைவரும் கறுப்பு நிற ஆடை அணிந்து வருமாறு கேட்கப்படுகின்றனர்.



பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் மேற்கொள்ளும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்SocialTwist Tell-a-Friend

சிங்களத்தின் சுதந்திரநாள் தமிழர்களின் அடிமைநாள்

வரும் 4ம் திகதி FRANCEஇல்....
சிங்கள இனவாதிகளின் கைகளில்சிக்குண்டு நாளும் பொழுதும் மரணத்துள் வாழும் நிலைகண்டு மெளனம் காக்கும் சர்வதேசத்தின் மனசாட்சியை உலுக்கும் படி ஒன்றுகூடுங்கள்.

சிங்களத்தின் சுதந்திரநாள் தமிழர்களின் அடிமைநாள்SocialTwist Tell-a-Friend

கன்பராவில் அனைவரும் அணி திரளுங்கள்

அவுஸ்திரேலியாவின் முக்கிய மாநிலங்களாகிய, சிட்னி, மெல்பன் ஆகிய இடங்களில் இருந்து வரும் வியாழக்கிழமை பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி கன்பராவிற்க்கு திரண்டு காலை 10 மணிக்கு கன்பராவில் இயக்கும் அவுஸ்திரேலிய தேசிய பாராளுமன்றத்தின் முன் கூட்டமொன்று நடைபெற இருக்கின்றது. அனைவரும் திரளுங்கள் தாயக மக்களுக்காக !!!


கன்பராவில் அனைவரும் அணி திரளுங்கள்SocialTwist Tell-a-Friend