இலண்டனில் கவனஈர்ப்பு போராட்டம்


பிரித்தானிய மக்களுக்கு ஈழத் தமிழரின் இன்றைய அவல நிலை குறித்து விளக்கும் முகமாகவும், சிறிலங்காவின் தமிழினச் சுத்திகரிப்பை அம்பலப்படுத்துவதற்காகவும் நேற்று இலண்டனில் பல நகரங்களிலும் ஏக காலத்தில் தமிழ் மக்கள் தாயக அவலம் பற்றிய காட்சிகள் கொண்ட பதாதைகள் தாங்கியவாறு வாகனங்களிலும், கால்நடையாகவும் கவன ஈர்ப்பில் ஈடுபட்டனர்.
காலை10மணி தொடக்கம் மாலை 4 மணி வரையும் நடந்த இந்தக் கவன ஈர்ப்பில், புலம்பெயர் தமிழர் தங்கள் இடங்களிலிருந்து மத்திய இலண்டன் பகுதியை நோக்கி வாகனங்களில் சிறிலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழரின் படங்களை ஒட்டியவாறு சென்றனர்..

இதனைப் பார்த்த பலர், இலங்கையில் நடக்கும் தமிழின அழிவைப்பற்றி கேட்டறிந்ததுடன், தங்களால் இவ்அழிவைத் தடுக்க எவ்விதமான உதவிகளை செய்யலாமெனவும் இனி வரும் காலங்களில் தாங்களும் ஒன்று சேர்ந்து இது போன்ற போராட்டங்களில் பங்குபற்ற விரும்புவதாகவும் தெரிவித்தனர்.பிரித்தானிய அரசு தமது நலன்களுக்காக சிறிலங்காவின் தமிழின ஒழிப்பை மறைத்து வரும் இவ்வேளையில், பிரித்தானிய மக்கள் மத்தியில் இந்த கவன ஈர்ப்பு பாரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

'வீரத் தமிழன்' முருகதாசன் தொடர்பாக நேற்றைய தினம் நீண்ட செய்திக் குறிப்பொன்றை பிரித்தானிய முதல் நிலை செய்தித் தாள்களில் ஒன்றான கார்டியன் வெளியிட்டிருந்தது.இந்த செய்திக்கு பிறகு பிரித்தானிய மக்கள் மத்தியில் ஈழத்தமிழர் அவலம் பற்றிய விழிப்பு தோன்றிவரும் இவ்வேளையில் இப்படியான போராட்டங்கள் அதிகாரவர்க்கத்தின் முகத்திரையை கிழிக்க உதவும் என பிரித்தானிய செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

"வியட்நாம் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக அமெரிக்க அரசு முனைப்பாக செயற்பட்ட காலங்களில் இவ்வாறான படங்கள் கொண்ட கவன ஈர்ப்பு போராட்டங்களே அமெரிக்க மக்களின் மனமாற்றத்துக்கும், கொள்கை வகுப்பாளர்களின் கொள்கை மாற்றத்துக்கும் காரணமாக அமைந்தது" என இந்த கவன ஈர்ப்பை பார்த்த, இரண்டாம் உலக யுத்தத்தில் பங்கு பற்றிய ஒரு முதியவர் குறிப்பிட்டார், அவர் மேலும் கூறுகையில் இப்படியான போராட்டங்கள் தொடர்ந் து பல நகரங்களிலும் செய்யப்படவேண்டும் என்றார்.

செய்திகள்,படங்கள் : தமிழ்வின்

இலண்டனில் கவனஈர்ப்பு போராட்டம்SocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்