"சனல் - 4" புதிய வீடியோப்படங்கள் முகாம் சேற்றுத் தரையில் சக்தி இழந்து துவண்டு கிடக்கும் அகதிகளின் கோலம்!

வன்னியில் இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எந்தளவுக்கு மோசமான நிலையில் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் புதிய காணொலியை பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் 'சனல் - 4' தொலைக்காட்சி வெளியிட்டிருக்கின்றது.

நன்றி : புதினம், Channel 4

"சனல் - 4" புதிய வீடியோப்படங்கள் முகாம் சேற்றுத் தரையில் சக்தி இழந்து துவண்டு கிடக்கும் அகதிகளின் கோலம்!SocialTwist Tell-a-Friend

சுட்டுக்கொல்லப்படும் எம்மக்கள் - Channel 4 செய்திகள் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை வீடியோ ஆதாரங்களுடன் வெளியானது



சிங்களச் சிப்பாய்களால் தமிழ் மக்கள் சுட்டுக்கொல்லப்படுவதை ஒளிப்படமாக இன்று இங்கிலாந்தில் இருந்து இயங்கும் Channel 4 தொலைக்காட்சி ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.

சுட்டுக்கொல்லப்படும் எம்மக்கள் - Channel 4 செய்திகள் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை வீடியோ ஆதாரங்களுடன் வெளியானதுSocialTwist Tell-a-Friend

இலங்கை அரசின் குற்றங்களை ஆதாரங்களோடு வெளிக்கொணரும் பிரித்தானியாவின் Channel - 4 சேவை

இலங்கை அரசின் குற்றங்களை ஆதாரங்களோடு வெளிக்கொணரும் பிரித்தானியாவின் Channel - 4 சேவைSocialTwist Tell-a-Friend

இடைத்தங்கல் முகாமில் பாலியல் கொடுமைகள் : வெளிக்கொணருகிறது மற்றுமொரு சர்வதேச ஊடகமான Sky News


பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப்பிரதேசத்திற்கு வந்த தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் நடைபெறும் கொடுமைகள் பற்றி மற்றுமொரு சர்வதேச ஊடகம் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. பிரித்தானியாவின் Chanel4 தொலைக்காட்சிச் சேவை முதல் தடவையாக இடைத்தங்கல் முகாம்களில் வதியும் மக்களின் துயரங்களைப் பதிவு செய்தது.அதைத் தொடர்ந்து அந்தச் செய்திச் சேவையின் செய்தியாளர்கள் சிறிலங்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டார்கள்.

தற்போது மற்றுமொரு பிரபல சர்வதேசம் ஊடகமாகிய SkyNews இடைத்தங்கல் முகாம் கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.ஸ்கை நியூஸ் செய்தி சேவையின் ஆசிய பிராந்தியத்துக்கான நிருபர் அலெக்ஸ் க்ரௌவ்போர்ட் (Alex Crawford) தனது ஆய்வறிக்கையில் மோதல்களினால் இடம்பெயர்ந்து வந்து, இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களில், பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம் இளைஞர்கள் தனியாக கொண்டு செல்லப்படுதல் என்பவை நடைபெறுவதாக அவை குறித்து ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

தமது வீடுகளை இழந்து சுமார் இரண்டு இலட்சத்துக்கு அதிகமான மக்கள் 40 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கட்டுள்ள போதும், அவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தனித்தனியாக பிரிக்கப்படுகின்றனர். என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இம்மக்களுடன் விடுதலை புலிகளின் போராளிகள் கலந்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுவதாகவும் தெரிவித்த அவர், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணியை பேட்டி எடுத்த போது,

பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதும், இளைஞர்கள் காணாமற் போவதும் நடைபெறுவதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.பாதிப்புக்குள்ளானவர்களுக்கு என்ன நடைபெறுகிறது என்பது தொடர்பாக எமக்கு தெரிவதில்லை. காரணம் அவர்களை பற்றி தகவல்கள் எதுவும் கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச தொண்டு நிறுவனங்களில் ஒன்றான 'ஒக்ஸ்பாம்' (Oxfam) இன் தலைமை அதிகாரியான டேவிட் தெரிவிக்கையில் எம்மால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிப்பொருட்கள் வழங்குவதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விடுதலை புலிகளின் ஆதரவாளர்களாக இருப்பவர்களுக்கு NGO தொண்டு நிறுவன ஊழியர்கள் கரிசனை காட்டுவதாக எம்மீது மறைமுகமாக குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

இடைத்தங்கல் முகாம்களில் சிறுவர் துஷ்பிரயோகம் நடைபெறுவது தொடர்பாக, அலெக்ஸ், அரசாங்க பத்திரிகையாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பிய போது, இடைத்தங்கல் முகாம்களில் (Blue - eyed) சிறுவர்கள் இருப்பதாகவும், தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு, இது மகிழ்ச்சிகரமானதாக இருக்கலாம், அப்படியாயின் இம்முகாம்களில் நடைபெறும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பு அவர்களே எனவும் அரசாங்க தரப்பால் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது

இடைத்தங்கல் முகாமில் பாலியல் கொடுமைகள் : வெளிக்கொணருகிறது மற்றுமொரு சர்வதேச ஊடகமான Sky NewsSocialTwist Tell-a-Friend

'மக்கள் பாதுகாப்பு வலயம்' கொலைக்களமாக எரிந்து கொண்டிருக்கிறது: அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன்

'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் அப்பகுதியில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அப்பகுதி தொடர்ந்தும் எரிந்து கொண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் பரப்புரைப் பேச்சாளர் திலீபன் தெரிவித்துள்ளார்.வன்னியில் உள்ள தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டுமாயின் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் இது தங்களது கடைசி வேண்டுகோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை மிகச்செறிவான ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களையும் வெள்ளைப் பொஸ்பரஸ் அடங்கிய இரசாயன ஆயுதங்களையும் கொண்டு தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. இதனால் 'மக்கள் பாதுகாப்பு வலய'ப் பகுதி தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கிறது.

உயிரிழந்த மக்களின் உடலங்கள் வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன. படுகாயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்கான எந்தவித வசதியும் இங்கு இல்லை. மருத்துவமனைகள் அற்ற நிலையிலும் மருத்துவ வசதிகள் அற்ற நிலையிலும் படுகாயமடைந்த மக்கள் வீதிகளில் கிடந்தவாறு கெஞ்சி அழுதவண்ணம் உள்ளனர். ஆனால் எந்த வசதியும் அற்ற நிலையில் அவர்களுக்கு எதுவுமே செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.

இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் கொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.இங்குள்ள ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேரை காப்பாற்ற வேண்டுமாயின் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இதனை எமது கடைசி வேண்டுகோளாகக் கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர்.

செய்திகள்: புதினம்

'மக்கள் பாதுகாப்பு வலயம்' கொலைக்களமாக எரிந்து கொண்டிருக்கிறது: அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன்SocialTwist Tell-a-Friend

ஒரே இரவில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை!: பீரங்கிக் குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம்

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நோக்கி சிறிலங்கா படையினா நேற்றிரவு தொடக்கம் நடத்திய உச்சகட்ட கோரத் தாக்குதலில் 1,112-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட பகுதிகளை நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு 7:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் சகலவிதமான நாசகார ஆயுதங்களையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருவதாக வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இத்தாக்குதலினால் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் தூங்கிக்கொண்டிருந்த பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்தும் உள்ளனர்.பெருமளவிலான மக்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் காணப்படுகின்றன. காயமடைந்தவர்களில் பலர் காயங்களுடன் தரையில் கிடந்தவாறு தங்களைக் காப்பாற்றுமாறு அவலக்குரல் எழுப்புவதாகவும் 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அத்துடன் வீதி, வீதியாக மக்களின் உடலங்கள் காணப்படுவதாகவும் மீட்க முடியாத அளவுக்கு சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள் தொடர்ச்சியாகவும் தீவிரவமாகவும் இருக்கின்றது எனவும் காயமடைந்தவர்களை எடுத்துச் செல்வதற்கு பணியாளர்கள் எவரும் இல்லை என்றும் 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.இதுவரையில் 1,112 பேரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் இருப்பதால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000-க்கும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.முள்ளிவாய்க்காலில் இயங்கும் தற்காலிக மருத்துவமனைக்கு காயமடைந்த நிலையில் 814 பேர் இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் 112 சிறுவர்களும் அடங்குவதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ அத்தியகட்சகர் வீரகத்தி சண்முகராஜா தெரிக்கின்றார்.

மருத்தவமனைக்கு கொண்டுவரப்பட்ட 257 உடலங்களில் 67 பேர் சிறுவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.இதேவேளையில் சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் நட்டாங்கண்டல் மருத்துவமனையும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

செய்திகள் : புதினம்

ஒரே இரவில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை!: பீரங்கிக் குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவின் Channel - 4 சேவையில் வவுனியா முகாம்கள் தொடர்பான செய்திகள்

பிரித்தானியாவின் Channel - 4 தெலைக்காட்சிச் சேவையில் இன்று இடம்பெற்ற செய்திக் கண்ணோட்டத்தில் வவுனியாவின் முகாம்கள் தொடர்பாகவும் அங்குள்ள பணியாளர்கள் தெரிவித்த செய்திகளையும் தொகுத்து வழங்கியிருந்தனர்.


வவுனியாவின் வடக்குப்பகுதியிலுள்ள இடம் பெயர்ந்த தமிழ் அகதிகள் தடுப்பு முகாமிலிருந்து பிரித்தானிய Channel - 4 தொலைக் காட்சிச் சேவைக்குக் கிடைத்த செய்திகள் பிரகாரம் இளம் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவிற்கு உள்ளாவதக தெரியவருகிறது.அரசு சாரா ஊடகவியளார்கள் சுதந்திரமாக அனுமதிக்கப்படாத நிலையில், ஒளிப்படக் கருவியை மறைத்துவைத்து முகாமிற்குள் நுளைந்த Channel - 4 செய்தியாளர் ஒருவர் முதல் தடவையாக சுதந்திரமாக சில செய்திகளை ஆவணப்படுத்தியுள்ளார்.இச்செய்தி ஒளிப்பதிவானது முதல் தடவையாக சுதந்திரமாகப் பதிவுசெய்யப்பட்ட செய்தியென Channel - 4 கூறுகிறது.

நிக் பட்டனின் இச் செய்தி அறிக்கையின் படி இளம் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவது தவிர, இறந்த உடல்கள் முகாம்களுள் வெளியான இடங்கள் நாட்கணக்கில் கவனிப்பாரற்றுக் கிடப்பதாகவும் மேலும் கூறும் சனல் 4 செய்திகள் இம்முகாம்களில் எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை என மேலும் தெரிவிக்கிறது. தன்னை அடையாளம் காட்டவிரும்பாத உதவி அமைப்பாளர் ஒருவர், தனது முகாமில் நான்கு இறந்த உடல்கள் மூன்று நான்கு நாட்களாக கவனிப்பரற்றுக் கிடந்ததாகக் குறிப்பிடுகிறார்.

பிள்ளைகளுக்கு உணவு வழங்கமுடியாத தாய்மாரைப் காண்பதாகக் கூறும் இவர், ஒரு தாய் இரண்டு கரண்டி பாலுக்காக தன்னிடம் கெஞ்சி மன்றாடியதாகவும் குறிப்பிடுகிறார்.பல குழந்தைகள் தாய் தந்தையர் இல்லாமல் தவிக்கவிடப்பட்டுள்ளதாக முகாம் வாசி ஒருவர் குறிப்பிடுகிறார். இங்கு எமக்கு வாழ்க்கையில்லை இது ஒரு சிறைச்சாலை என மேலும் குறிப்பிடுகிறார்.உணவிற்காக நெரிசலில் சிக்குண்டு இறந்து போன இரு சிறார்களைப் பார்த்ததாக மேலும் சாட்சியமளிக்கும் இவர், புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வந்த தமிழர்களை மிரட்டுவதே அரசின் நோக்கம் எனவும் குறிப்பிடுகிறார்.

ஒரு பெண் உதவிப் பணியாளர் சாட்சியமளிக்கையில் இளம் பெண்கள் இராணுவத்தால் பிரித்தெடுக்கப்பட்டு, பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறுகிறார். முகாம்களிலிருந்து தனிமைப்படுத்தப்படும் பெரும்பாலனவர்க மீண்டும் திரும்புவதில்லை எனக் குறிப்பிடுகின்றார்.பெண்கள் எல்லோர் முன்னிலையிலும் குளிக்கவேண்டிய நிலையிலிருப்பதாகவும் இது அவர்களின் மிகப் பெரும் பாதுகாப்புப் பிரச்சனையாக இருப்பதாகவும் தெரிவிக்கும் இச்செய்தி நேற்று குளியற் பகுதியில் மூன்று பெண்களின் இறந்த உடல்கள் காணப்பட்டதாகவும் கூறுகிறது.

இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என லண்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.

எழுத்துருவில் : இனியொரு...

பிரித்தானியாவின் Channel - 4 சேவையில் வவுனியா முகாம்கள் தொடர்பான செய்திகள்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் அவசரகால கவனயீர்ப்புப் போராட்டம்

சிங்கள அரச பயங்கரவாத படைகள் உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட இரசாயன படைக்கருவிகளுடன் 160.000 க்கு மேற்ப்பட்ட எமது உறவுகள் மீது எந்த நேரமும் தாக்குதல் நடாத்த தாயாராகிவரும் இந்த காலப்பகுதியை பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழீழமக்கள் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர்.

எனவே இக்காலப்பகுதியில் சகலவிதமான களியாட்ட விழாக்களையும் முற்றாக புறக்கணித்து எமது சகல நேரங்களையும் எமது உறவுகளை காக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவோம். எமது கவனயீர்ப்பு நிகழ்வுகளின் எதிரொலியாகவே மேற்கத்தேய நாடுகள் சில சிறிலங்கா அரசின் எமது மக்கள் மீதான இனப்படுகொலையை தடுக்க முயற்சிப்பதாக காட்ட முயல்கின்றனர்.

சிறிலங்கா இனவாத அரசானது எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாது எமது தமிழ் இனம் மீது ஒரு இனப்படுகொலையை நடாத்திக்கொண்டுள்ளது. ஆகவே எமது புலம் பெயர்மக்களின் தொடர்ச்சியான கவனயீர்ப்பு நிகழ்வுகளே மேற்கத்தேய நாடுகளை இதயசுத்தியுடன் இந்த நிகழ்கால உலகின் மிகப்பெரும் மனித அவலத்தை நிறுத்தமுடியும் என்ற எமது அசைக்கமுடியாத நம்பிக்கையுடனேயே இந்த அவசரகால பிரகடனத்தை நாம் செய்துள்ளோம்.

நாம் இங்கே ஒரு அமைதியான நாட்டில் எமது சகல உடல் உறுப்புகளுடனும் வாழ்கின்றோம் ஆனால் எமது உறவுகளின் நிலமை? எல்லோரும் யோசிப்போம் எமது உறவுகளை காப்பாற்ற உடனடியாக செயலாற்றுவோம். சகல களியாட்ட நிகழ்வுகளையும் பிற்போடுவோம் எமக்கு ஒரு காலம் வரும் அப்போது நாம் எல்லோரும் சேர்ந்து எமது களியாட்ட நிகழ்வுகளை கொண்டாடுவோம்.

நாம் இங்கே எந்தவகையான நிகழ்வுகள் களியாட்ட நிகழ்வு என்று கூறவில்லை காரணம் கவனயீர்ப்பு நிகழ்வு தவிர்ந்த சகல நிகழ்வுகளுமே களியாட்டங்கள் தான் உடனே தவிர்த்துகொள்ளுங்கள்.சில இனவிரோதிகள் எமது மக்களின் இன உணர்வை மழுங்கடிப்பதற்காக சில களியாட்ட நிகழ்வுகளை நடாத்த முயற்சிப்பதாகவும் நாம் அறிந்துள்ளோம்.

மக்களே!!

இனவிரோதிகளையும் எமது மக்களின் அவலங்களில் குளிர் காயமுயற்சிப்பவர்களையும் அடையாளம் கண்டு அவர்களை எமது சமூகத்தில் இருந்து புறம்தள்ளுங்கள்.!!!
விழிப்புத் தான் விடுதலையின் வேர்!
பிரித்தானியாவாழ் தமிழீழ மக்கள்.

எனக்குறிப்பிடப்பட்டுள்ள அந்த அழைப்பில் நாளை புதன்கிழமை காலை 7மணிக்கு சீனத்துதரகம் முன்பாகஆரம்பிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். எமது மக்களை சிறிலங்கா அரசின் இனப்படுகொலையில் இருந்து காப்பாற்ற உடன் செயலாற்றுவோம் என மேலும் குறிப்பிட்டுள்ள ஏற்ப்பாட்டாளர்கள் எமது மக்களை காப்பாற்ற ஒன்றுகூடாமல் இருந்துவிட்டு பின் கவலைப்படுவதில் எந்தவித பயனும் இல்லை நாளைநாளை செல்வோம் என கூறாமல் உடனே முதல்நாளே சீனத்துதரகம் முன்ஒன்றுகூடுமாறு அன்பாகவும் கண்டிப்பாகவும் அழைப்புவிடுத்துள்ளனர்.

இடம்: CHINESE EMBASSY, 49-51 PORTLAND PLACE, LONDON. W 1 1JL
அன்மைய தொடருந்து நிலையம் : REGENNTS' PARK & GREAT PORTLAND STREET
காலம் : காலை 7மணி

செய்திகள் : சங்கதி

பிரித்தானியாவில் அவசரகால கவனயீர்ப்புப் போராட்டம்SocialTwist Tell-a-Friend

முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: நோயாளர்கள் உட்பட 64 பேர் பலி; 87 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளனர்.மக்கள் பாதுகாப்பு வலயமான முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவந்த முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மீது இன்று சனிக்கிழமை காலை 7:00 மணி தொடக்கம் 9:20 நிமிடம் வரை சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை அகோரமாக நடத்தியதாக 'புதினம்' செய்தியாளர் வன்னியில் இருந்து தெரிவிக்கின்றார்.

முதலாவது எறிகணைத் தாக்குதலில் 22 பேரும் இரண்டாவது தடவையாக நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் அதிகமானோரும் கொல்லப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் கூறுகின்றார்.

ஆறுக்கும் அதிகமான எறிகணைகள் மருத்துவமனை மீதும் சூழவுள்ள பகுதிகளிலும் வீழ்ந்து வெடித்தன.இத்தாக்குதலில் ஏற்கனவே காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 87 பேர் காயமடைந்தனர்.கொல்லப்பட்டவர்களில் நோயாளர்கள், நோயாளர்களுக்கு உதவியாக இருந்தவர்கள், வெளியிடங்களில் இருந்து சிகிச்சை பெறவந்த வெளிநோயாளர்கள் என பலரும் அடங்குவர்.

இத்தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டதனை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ அத்தியகட்சகர் வீரகத்தி சண்முகராஜா உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

செய்திகள் : புதினம்

முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: நோயாளர்கள் உட்பட 64 பேர் பலி; 87 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

பிரி்த்தானிய அரசின் உறுதிமொழியை அடுத்து பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

கடந்த 24 நாளாக பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் “தமிழ் மறவன்”; பரமேஸ்வரனால் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் பிரித்தானியா அரசாங்கத்தின் உறுதி மொழியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் Simon Huges பழச்சாறு கொடுக்க தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியா அரசு தனக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தான் தற்காலிகமாக உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்தியுள்ளதாகவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் தன்னுடைய போராட்டம் தொடரும் எனவும் தெரித்தார்.இன்று மதியம் 12 மணியளவில் ஊடகங்களுக்கு உரை வழங்கும் போது பரமேஸ்வரன் இதனை அறிவித்துள்ளார்.

பரமேஸ்வரனின் உடல்நிலை மிகவும் தளர்ந்த நிலையில் அவரை பிரித்தானியா அவசர சிகிச்சை பிரிவினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அதன் பின் நாடாளுமன்றத்தில் அவர் சில சந்திப்புகளை தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மாணவர்களால் சுழற்சி முறையிலான உண்ணாநிலை போராட்டம் தொடர்கின்றது. பரமேஸ்வரனின் உண்ணாநிலை இடை நிறுத்தப்பட்டாலும் தங்களுடைய போராட்டம் மக்களின் ஆதரவுடன் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.அத்துடன் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டம் தமிழ் மக்களால் பரமேஸ்வரனின் கூடாரத்தில் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை பரமேஸ்வரனின் 5 அம்ச கோரிக்கையை முன் வைத்து ஸ்கொட்லாண்டின் எடின்பறோ நகரத்தில் மக்களால் போராட்டம் நடாத்தப்படுகின்றது.


செய்திகள்:
தமிழ்வின்

பிரி்த்தானிய அரசின் உறுதிமொழியை அடுத்து பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுSocialTwist Tell-a-Friend

தமிழ் தேசிய ஊடகங்களை குறிவைத்து அழிக்கும் கூட்டுச்சதி-தமிழ்க்கதிர்,சங்கதி தளங்கள் செயலிழந்தன

தமிழ்த் தேசிய ஊடகங்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் கூட்டுச் சதி நடவடிக்கையில் தற்போது சங்கதி, தமிழ்க்கதிர் இணையத்தள ஊடகங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.
தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன அழிப்பு நடவடிக்கையை பல்வேறு ஆதாரங்களுடன் உடனுக்குடன் வெளியிட்டுவந்த இந்த ஊடகங்கள் சிறீலங்கா - இந்தியாவின் கூட்டுச் சதியில் சிதைக்கப்பட்டுள்ளதை நாங்கள் வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.

முன்னர் பதிவு இணையத்தளமும் இவ்வாறான ஒரு நெருக்கடிக்குள் சிக்குண்டு மீண்டிருந்தது. அதேபோல், தமிழர் தாயகத்தின் இனப்படுகொலையை மறைப்பதற்கு இந்த சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடித்து, மக்கள் அவலத்தையும், இனப்படுகொலைகளின் ஆதாரங்களையும் மீண்டும் சங்கதி, தமிழ்க்கதிர் ஊடகங்கள் விரைவில் வாசகர்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்.

அத்துடன், எமது இணையத்தள தரவுகளின் அடிப்படையில் உலகில் சங்கதியும், தமிழ்க்கதிரும் பார்வையிடுவோர் எண்ணிக்கையில் இலங்கை முதலிடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

செய்திகள்: தமிழ்வின்

பி.கு : எமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களில் படி இத்தளங்களுக்கு அதிகளவு வேண்டுகோள்களை அனுப்பி அவற்றை கையாள முடியாததாலேயே தளங்கள் செயல் இழக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. Dos Attack எனப்படும் முறையில் இது செயல் படுத்தப்படும். அதாவது குறிப்பிட்ட சில மென்பொருட்கள் மூலம் ஓர் வேண்டுகோளை 20,000 வேண்டுகோளாகவோ அல்லது அதற்க்கு மெற்பட்டதாகவோ ஓர் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட தளத்திற்க்கு அனுப்பும் போது போதிய தாங்குசக்தி இல்லாமையால் செயலிழந்து போகின்றது. இதனால் தளத்தின் தரவுகளுக்கு பாதிப்பு ஏற்படமாட்டாது. தளம் தற்காலிகமாக செயல் இழக்கும்.

எனவே தமிழ்க்கதிர்,சங்கதி தளங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்

தமிழ் தேசிய ஊடகங்களை குறிவைத்து அழிக்கும் கூட்டுச்சதி-தமிழ்க்கதிர்,சங்கதி தளங்கள் செயலிழந்தனSocialTwist Tell-a-Friend

முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது படையினர் கோரத் தாக்குதல்: 278 பொதுமக்கள் பலி; 298 பேர் காயம்

முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை வேளையில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் கடற்படையினரின் பீரங்கித் தாக்குதல்களில் 58 சிறுவர்கள் உட்பட 278 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 298 பேர் காயமடைந்துள்ளனர்.முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் மட்டும் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

இரட்டைவாய்க்கால், சாளம்பன், முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, இரட்டைப்பனையடி ஆகிய பகுதிகளே சிறிலங்கா படையினரின் ஆட்லறி எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத அவலநிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் நோயாளர்களை ஏற்றிச்செல்லும் கப்பலில் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்கு வந்து அனைத்துலக செஞ்சிலுவை சங்கக் குழுவின் அதிகாரிகள் நிலைமைகளை பார்வையிட்டனர்.பார்வையிட்ட பின்னர் பிற்பகல் 1:30 நிமிடத்துக்கு சென்றதும் பிற்பகல் 3:00 மணியளவில் மருத்துவமனை மீது ஆட்லெறி எறிகணைத் தாக்குதல் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டது.

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு, இரத்த வங்கி, அறுவைச் சிகிச்சைக்கூடப் பகுதியில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர்களில் 19 பேர் கொல்லப்பட்டதுடன் 30 நோயாளர்கள் மேலும் காயமடைந்தனர்.இன்று புதன்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை நடத்தப்பட்ட சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் 58 சிறுவர்கள் உட்பட 278 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 298 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா கடற்படை பீரங்கித்தாக்குதலில் 10 பேர் துறைப் பகுதியில் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் நோயாளர்களை ஏற்றும் ஒழுங்கமைப்பில் ஈடுபடும் கடற்றொழிலாளர் சங்க சமாசத்தின் பொருளாளர் சதாசிவம் நாகராசாவும் உயிரிழந்தார்.மேலும் கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் பல பகுதிகளில் மீட்கப்படாமல் சிதறி கிடப்பதாகவும் அங்கிருந்து கடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனரக போர்க் கலங்களை பயன்படுத்தமாட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக நாடுகளுக்கு உறுதியளித்திருந்தது.ஆனாலும் இத்தாக்குதல்கள் கனரக போர்க் கலங்களை மக்கள் மத்தியில் சிறிலங்கா படையினர் பயன்படுத்துகின்றனர் என்பதை வெளிக்காட்டியுள்ளது.

செய்திகள்: தமிழ்வின்

முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது படையினர் கோரத் தாக்குதல்: 278 பொதுமக்கள் பலி; 298 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

24ம் நாளாகத் தொடரும் திரு.பரமேஸ்வரனின் உண்ணாநோன்பு போராட்டம்

24ம் நாளாகத் தொடரும் திரு.பரமேஸ்வரனின் உண்ணாநோன்பு போராட்டம்SocialTwist Tell-a-Friend

இலங்கை இராணுவத்தினரிடம் தஞ்சம் புகுந்த வன்னி மக்களின் அவலநிலை

வன்னியில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான வன்னி மக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சம் அடைந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றார்கள்.இவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்குச் சென்ற இராணுவத்தினர் ஒலிபெருக்கி மூலம் உங்கள் பிள்ளைகள் ஒருநாள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தாலும் தயவு செய்து முன்னரே பதிவு செய்து கொள்ளுங்கள் என உத்தரவிட்டனர்.

அத்துடன் உங்கள் பிள்ளைகளுக்கு எங்களால் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது. உங்கள் பிள்ளைகளை உங்களிடமிருந்து பிரிக்கமாட்டோம். பதிவு செய்யாமல் உங்களின் பிள்ளைகள் யாராவது விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்ததாக எங்களுக்குத் தெரியவரும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்கள்.இதை நம்பிய பெற்றோர் தங்களின் பிள்ளைகளைப் பதிவு செய்தார்கள். பதிவு செய்த பின் பிள்ளகளை பெற்றோருடன் விட்டுச்சென்ற இராணுவத்தினர் மறுநாள் காலையில் அனைத்து முகாமுகளுக்கும் சென்று, விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என பதிவு செய்த ஆண்கள் பெண்கள் என 400 ற்கும் மேற்பட்டவர்களை பலவந்தமாக ஏற்றி சென்றுள்ளனர்.

இவர்களின் நிலை என்ன என்று தெரியாமல் பெற்றோர்கள் தவிக்கின்றார்கள்.

செய்திகள்: தமிழ்வின்

இலங்கை இராணுவத்தினரிடம் தஞ்சம் புகுந்த வன்னி மக்களின் அவலநிலைSocialTwist Tell-a-Friend

புறப்படுங்கள் தமிழர்களே பிரித்தானிய பாராளுமன்றம் நோக்கி...

கடந்த 21 நாட்களாக பிரித்தானியாவில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பரமேஸ்வரனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சற்றுமுன்னர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரின் இருதயம் துடிக்கும் வேகம் குறைவடைந்துள்ளதாக அறியப்படுகிறது.

பரமேஸ்வரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலையில் பிரித்தானியாவில் பாரிய எதிர்விளைவுகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. மாணவ சமூகம் தற்போது அவர் உண்ணாவிரதமிருக்கும் திடலில் குவிய ஆரம்பித்துள்ளனர். பரமேஸ்வரனின் இதயம் துடிப்பது குறைய ஆரம்பித்திருக்கலாம் ஆனால் அவரின் மன உறுதியும் இ பிரித்தானியா வாழ் தமிழர்களின் உணர்வும் இன்னமும் குறையவில்லை.

21 நாட்களாக ஆகாரமின்றி தன்னை வருத்தி ஈழத்தில் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட இவர் ஏற்றிய தீபம் தற்போது பிரித்தானிய தமிழரிடையே கொளுந்துவிட்டு எரிகின்ற நெருப்பாக மாறியுள்ளது. கடந்த 2 தினங்களாக நீர் அருந்துவதை கூட தவிர்த்துவிட்ட பரமேஸ்வரனின் நிலை இன்று மதியம் கவலையளிக்கும் நிலைக்கு சென்றுள்ளது.

இனியும் நாம் பொறுத்திருந்து என்ன செய்யப்பொகிறோம். ?? புறப்படுங்கள் தமிழர்களே பிரித்தானிய பாராளுமன்றம் நோக்கி...

புறப்படுங்கள் தமிழர்களே பிரித்தானிய பாராளுமன்றம் நோக்கி...SocialTwist Tell-a-Friend

"மீட்கப்பட்ட மக்கள்"

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மக்கள் மிகப்பெரும் மனித அவலத்தில் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டுள்ளனர் என அந்த இரு இடங்களில் இருந்தும் 'புதினம்' செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக அவர்கள் அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசின் அறிவித்தலின் படி - இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக புள்ளி விபரங்களை காட்டியுள்ளது.ஆனாலும் அவர்களில் பெரும் பகுதியினர் இன்னும் வவுனியாவில் உள்ள நலன்புரி முகாமுக்கு கொண்டுவரப்படவில்லை.இன்னும் பலர் பற்றிய புள்ளி விபரங்கள் மாத்திரமே உள்ளனவே தவிர அவர்களின் நிலை பற்றி சிறிலங்கா அரசு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

இவர்களில் பலர், வவுனியாவில் - ஆள் நடமாட்டம் அற்ற - ஓமந்தை மகாவித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில் சிறிலங்கா படையினரால் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை கணக்கு எடுத்துப் பதிவு செய்வதாகக் கூறி சிறிலங்கா படையினர் அங்கு தங்கவைத்து அவர்களைத் தரம் பிரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை அந்த பகுதியில் ஏராளமான இளவயது ஆண், பெண்கள் குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்கப்பட்டு வேறு எங்கோ கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பல குடும்பங்களில் வளர்ந்த வயதானவர்களையே பிரித்து வைத்து - அவைகளைச் சேரவிடாமல் சிறிலங்கா படையினர் தடுத்தும் வருகின்றனர்.

மாற்றுப் புடவை இன்றி உடுத்த உடையுடன் வந்தவர்களை தான் மீட்டு எடுத்து காப்பாற்றுவதாக சிறிலங்கா அரசு வெளியில் செய்துவரும் பரப்புரைக்கு அமைய அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகள் துளிகூட இன்னும் வழங்கப்படவில்லை. சிறிலங்கா அரசு மற்றும் படைத்தரப்பு அறிவிப்பு படி - 80 ஆயிரம் வரையான மக்கள் இன்னனும் ஓமந்தையில் பதிவுகளுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதுவித அடிப்படை வசதியும் அற்ற நிலையில் - மக்கள் நடமாட்டம் எதுவும் அற்ற சூழலில் - ஓமந்தை மகாவித்தியாலய கட்டடம் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிளில் அந்த மக்கள் சிறிலங்கா படையினரின் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.இது மட்டுமல்லாமல் - வவுனியா பகுதியில் இருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கூடச் சந்திக்க சிறிலங்கா படையினர் அனுமதி மறுத்துள்ளனர்.கடந்த திங்கட்கிழமை (20.04.09) தொடக்கம் மாலை ஒருவேளை மாத்திரம் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகின்றது.அத்துடன், குடிப்பதற்கு குளிப்பதற்கு இயற்கை கடன்களின் வசதிக்கு தேவையான தண்ணீர் முற்றுமுழுதாக அற்ற நிலையில் உள்ளது.இதேவேளையில் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மக்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளதாக அறிய முடிகின்றது.

முன்னரே இடம்பெயர்ந்து வந்த 6 ஆயிரம் வரையான மக்களுடன் தற்போது வந்துள்ள மேலும் பல ஆயிரம் மக்களையும் சிறிலங்கா படையினர் ஒரிரு இடங்களிலேயே தங்க வைத்துள்ளதுடன், யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட மக்களின் சரியான எண்ணிக்கை இதுவரை சிறிலங்கா படையினரால் வெளியிடப்படவில்லை.

தென்மராட்சியில் - நாவற்குழி பனை ஆராய்ச்சி நிலையம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி, கொடிகாமம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, திருநாவுக்கரசு வித்தியாலயம், மிருசுவில் திருக்குடும்ப கன்னியர் மடம், கைதடி சைவச் சிறார் இல்லம், கைதடி ஆயுள்வேத மருத்துவமனை மாணவர் விடுதி ஆகிய இடங்களில் இந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கும் அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.உடுத்த உடையுடன் வந்த இவர்கள் மாற்றுத்துணி கூட இல்லை.

பாடசாலை தண்ணீர் தொட்டிக்குள் சிறிலங்கா படையினரால் தண்ணீர் நிரப்பி விடப்பட்டு குடிநீராக அருந்தும்படி சொல்லப்பட்டுள்ளனர். இருந்தபோதும் - அதனை அள்ளி எடுப்பதற்கு சிறு கிண்ணம் கூட வழங்கப்படாததால், அவர்கள் காற்றில் பறந்து வரும் பிளாஸ்டிக் பைகளை தேடி எடுத்து அவற்றை வைத்து தண்ணீர் அள்ளி குடிக்கும் அவலத்தில் இருக்கின்றனர்.எல்லா மக்களையும் கட்டடங்களுக்குள் தங்க வைக்க முடியாத இட நெருக்கடி இருப்பதால் - பாடசாலை மைதானங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் - குறிப்பாக குழந்தைகள் - கொளுத்தும் வெயிலின் தாக்கத்தாலும், பசியாலும் துடிக்கின்றனர்.இந்த கொடுமைகளை நேரடியாகப் பார்த்தும் கூட, இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி ஏதும் செய்ய முடியாதுவாறு சிறிலங்கா படையினர் தடுத்து வருகின்றனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் படும் கொடுமைகளை வீதியால் செல்லும் ஏனைய தமிழர்கள் கண்டுவிடுவதை அறிந்த சிறிலங்கா படையினர், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடசாலை வேலிகள் மற்றும் மதில்களுக்கு உயரமாக மறைப்பிட்டு வருகின்றதுடன், அந்தப் பகுதிகளுக்கச் செல்லவிடாது மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.இதேவேளையில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முற்புற வாயில் கதவைக்கூட தகரம் இட்டு முட்கம்பிகளால் மறைப்பிட்டு வைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் பிற்பகல் 4:00 மணிக்கு மாத்திரம் ஒருவேளை உணவு வழங்கப்படுகின்றது. ஏனைய நேரங்களில் உணவு வழங்கப்படுவதில்லை.

இதற்குள் - யாழ்ப்பாணத்தில் இப்போது பொக்குளிப்பான், அம்மை நோய் பலருக்கு ஏற்பட்டுள்ளதால் இந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கும் அவை பரவும் ஆபத்து உருவாகின்றது.இதேநேரம் கடந்த சில நாட்களாக - பலாலி நோக்கி - கடும் காவலுக்கு மத்தியில் - 4 பேருந்துகளில் வன்னியில் இருந்து வந்த இளைய ஆண், பெண்கள் பலர் விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் பலர் கதறி அழுத நிலையில் பேருந்துகளில் ஏற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட்டதை வீதியோரங்களில் நின்ற பெருமளவு மக்கள் கண்டுள்ளனர்.

செய்திகள்:புதினம்

"மீட்கப்பட்ட மக்கள்"SocialTwist Tell-a-Friend

சிறிலங்கா படையினரின் பாரிய படை நடவடிக்கையினால் பெரும் மனிதப் பேரவலம்: இன்று 988 தமிழர்கள் படுகொலை

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்டு வரும் பாரிய படை நடவடிக்கையின் போது பெரும் மனிதப் பேரவலம் நிகழ்ந்துள்ளது. இதில் 988-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதியை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை தன்னிடம் உள்ள அனைத்து நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

அதேவேளையில் மக்கள் மீதும் மக்கள் வாழ்விடங்கள் மீதும் ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, கனரக துப்பாக்கி, தொலைதூர துப்பாக்கி மற்றும் வான் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் அகோரமாக நடத்தியுள்ளனர்.இதில் 988-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.ஏலவே பொக்கணைப் பகுதிக்குச் சென்ற மக்களை கேடயமாக பாவித்துக்கொண்டு பாரிய நடவடிக்கையினை சிறிலங்கா படையினர் மேற்கொண்டதுடன், அதற்கு ஒத்துழைக்காத மக்கள் மீதும் சரசமாரியான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும் இதிலும் பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.பொதுமக்களின் இழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

செய்திகள்:புதினம்

சிறிலங்கா படையினரின் பாரிய படை நடவடிக்கையினால் பெரும் மனிதப் பேரவலம்: இன்று 988 தமிழர்கள் படுகொலைSocialTwist Tell-a-Friend

பிரித்தானியப் பாராளுமன்றம் உட்பட தலைநகரின் பல வீதிகள் தமிழ் மக்களால் முடக்கம்


சிறிலங்கா மிக மொசமான இனப்படுகொலையை வன்னியில் இன்று நடத்தியுள்ள நிலையில் பிரித்தானியாவில் தமிழ் மக்கள் பெரும் எழுச்சியடைந்துள்ளனர்.பிரித்தானியாவில் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வரும் மக்கள் இன்று வன்னியில் இடம்பெற்றுள்ள அவலத்தை அறிந்து பெரும் சோகத்துடனும், அச்சத்துடனும் பிரித்தானிய பாராளுமன்றத்தை முடக்கி போராட்டத்தில் குதித்துள்ளனர்.பாராளுமன்றத்திற்கான நான்கு பிரதான வீதிகளும் தமிழ் மக்களால் முடக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்றத்திற்கான போக்குவரத்துக்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.
காணொளி:BBC
செய்திகள்:சங்கதி

பிரித்தானியப் பாராளுமன்றம் உட்பட தலைநகரின் பல வீதிகள் தமிழ் மக்களால் முடக்கம்SocialTwist Tell-a-Friend

பரமேஸ்வரனிடமிருந்து அழைப்பு - பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும் திரண்டு வாருங்கள்

பரமேஸ்வரனிடமிருந்து அழைப்பு - பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும் திரண்டு வாருங்கள்SocialTwist Tell-a-Friend

ஜனவரி தொடக்கம் மார்ச் வரையில் 3546 தமிழர்கள் படுகொலை படங்களுடன் விபரம் வெளியிடப்பட்டுள்ளது

வன்னியில் சிங்கள படையினரின் தமிழின படுகொலையில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் மார்ச் மாதம் வரையில் 3546 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 8370பேர் படுகாயமடைந்துள்ளதாக War Without Witness in Sri Lanka என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 23ஆம் திகதி வரையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையினையே அந்த அமைப்பு வெளியிட்டுள்ளதுடன் கொல்லப்பட்டர்களின் விபரங்கள் சிலவற்றினை படங்களுடன் விபரங்களையும் இணைத்துவெளியிட்டுள்ளது.இலங்கை அரசாங்கத்தினால் மக்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பிரதேசங்கள் மீது அதன் படைகள் நடத்திய தாக்குதலிலேயே அதிகமான தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மென்புத்தகத்தை தரவிறக்க..




ஜனவரி தொடக்கம் மார்ச் வரையில் 3546 தமிழர்கள் படுகொலை படங்களுடன் விபரம் வெளியிடப்பட்டுள்ளதுSocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவின் Channel - 4 தெலைக்காட்சிச் சேவையில் இன்று இடம்பெற்ற இலங்கைக் கண்ணோட்டம்

பிரித்தானியாவின் Channel - 4 தெலைக்காட்சிச் சேவையில் இன்று இடம்பெற்ற இலங்கைக் கண்ணோட்டம்SocialTwist Tell-a-Friend

தமிழர் விடுதலைப் போராட்டமும் புதிய தலைமுறையின் வரலாற்றுப் பணியும்

சிங்களம் தனது இறுதி அழித்தொழிப்பிற்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது என்பதன் தார்ப்பரியத்தை விளங்காமல், ஆகக்குறைந்தது எங்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக்கூட அறிந்து கொள்ள முடியாதளவிற்கு நமது மக்கள் துண்டாடப்பட்டிருக்கின்றனர்.

ஈழத்தில் இருக்கும் தீவிர தமிழ்த் தேசிய ஆதரவு சக்திகள் கூட ஒருவித மனச்சோர்வுடனும் பதட்டத்துடனும் கானப்படுகின்றனர்.சில தினங்களுக்கு முன்னர் மூத்த அரசியல் ஆய்வாளரும் எனது நண்பருமான ஒருவருடன் பேசிபோது 'நான் பழைய நாவல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன் வேறு என்னதான் செய்வது இங்கிருந்து," என்று மிகுந்த மனச் சோர்வுடன் கூறினார்.

ஈழத்தில் இருக்கும் தமிழ்த் தேசிய சக்திகளின் மனச்சோர்வு இரண்டு நிலைப்பட்டது.மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறதே என்பது ஒன்று.

அடுத்தது களநிலைமைகளில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகள்.எனது கருத்தியல் நண்பர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சல் எனக்கும் ஏற்படாமலில்லை.

ஆனால் மனச்சோர்வும் பதட்டமும் எந்த நன்மையையும் ஏற்படுத்தப்போவதில்லை. கால யதார்த்தத்தை கருத்தில் கொண்டே நாம் இயங்க வேண்டியிருக்கிறது.

இந்த நிலைமைகள் சாதாரணமாக பார்த்தால் எதோ தனிமனித சோர்வு அல்லது மனவருத்தம் என்பது போன்று தெரியலாம். ஆனால் அடிப்படையில் இதன் அரசியல் உள்ளடக்கம் மிகவும் ஆபத்தானது.அடிப்படையில் நமது தேசிய அரசியல் மிகுந்த நுட்பத்துடன் அழிக்கப்பட்டு வருகின்றது என்பதுதான் உண்மை.

இதன் ஆரம்பம்தான் சில கிலோமீற்றர் தொலைவில் நமது தேசத்தின் ஒருபகுதி மக்கள் அழித்தொழி;க்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஏனைய பகுதிகளில் அது குறித்த எந்தவொரு கரிசனையும் இல்லாமல் கோயில் திருவிழாவிலும், கும்பாபிஷேகங்களிலும் நமது மக்களால் ஆர்வத்துடன் பங்கு கொள்ள முடிகின்றது.

நிலத்தில் இருக்கும் ஒரு தலைமுறை மிகவும் நேர்த்தியாக விடுதலை அரசியலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் அடுத்த தலைமுறையினர் மத்தியில் விடுதலை அரசியல் கருத்துக்களை கொண்டு சேர்க்கும் பணியை ஏற்றிருந்த கருத்திலாளர்கள் ஊடவியலாளர்கள் அனைவரும் மௌனிகளாக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த பின்புலத்தில்தான் நமது தேசத்தின் முழுக்கவனமும் புலம்பெயர் தமிழ் மக்களை நோக்கி திரும்பியிருக்கிறது. புலம்பெயர் தலைமுறையிலிருந்துதான் நமது தேசத்தின் அடுத்த கட்ட அரசியல் தொடங்கப் போகின்றது.ஆரம்பத்தில் போராட்டத்திற்கான பின்தளம் என்ற நிலையில் மட்டுமே நோக்கப்பட்ட புலம்பெயர் சூழல் தற்போது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான பிரதான அரசியல் தளமாக மாறியிருக்கின்றது.

மேற்கின் மூலம் சிறிலங்காவை நெருக்குவது என்ற அர்த்தத்தில் மட்டுமே புலம்பெயர் போராட்டங்களை சிலர் நோக்குவதுண்டு. அவ்வாறு நோக்குவது தவறானது.தமிழர் தேசத்தின் பிரச்சனைக்கு சிங்களத்துடன் சேர்ந்து அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் தீர்வு முறையின் காலம் முடிந்துவிட்டது.

மேற்கு அரசுகள் அவ்வாறானதொரு தீர்வை முன்மொழியும் தகுதியையும் இழந்துவிட்டன. ஒரு தேசியப் பிரச்சனைக்கு ஒரு தேசம் தனக்கானதொரு தேசிய அரசை உருவாக்குவதே ஒரேயொரு தீர்வு என்பதை தேசியத்தின் இயக்க விதிகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நிரூபித்துள்ளன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உச்ச இலக்கை அடைவதற்கான வரலாற்று பொறுப்பு புலம்பெயர் தலைமுறையினர் கைக்கு மாறியிருக்கிறது.அந்த இலக்கை அடைவதற்கு நமது தேசத்திற்கு இருக்கும் ஒரேயொரு ஆதாரம் புலம்பெயர் தலைமுறைதான்.

இதுவரை நமது அரசியல் இலக்கினை அடைவதற்கு இராணுவ வெற்றி என்ற ஒரு வழிமுறை பற்றியே நாம் அதிகம் அழுத்தியிருக்கிறோம்.ஆனால் தற்போதைய சூழலில் அதற்கு சமாந்தரமாக குறிப்பாக சொல்வதானால் இன்னும் சற்று மேலாக அரசியலை அழுத்த வேண்டிய காலத்தில் பிரவேசித்திருக்கிறோம்.

இதனை ஏற்றுக்கொள்வது சற்று கடினமாக இருந்தாலும் இதுதான் யதார்த்தம்.தற்போதைய அரசியல் நிலைமைகளை அவதானித்தால் நாம் ஒரு வியடத்தை தெளிவாக அவதானிக்கலாம்.

அது, புலம்பெயர் போராட்டங்களினால் மேற்கு மயப்படுத்தப்பட்டிருக்கும் தமிழர் அரசியலை தனது இராஜதந்திர வழிமுறைகள் மூலம் கட்டுப்படுத்த முடியாத சிங்களத்தின் தோல்வி, தற்போது மேற்குடனான முரண்பாடாக உருமாறிவருகிறது.

புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியை கருத்தில் கொண்டே ஒபாமா தலைமையிலான புதிய அமெரிக்க அரசுடன் தமிழர்கள் நெருங்கலாம் என்ற அச்சத்தில் எதிர் பிரச்சாரத்திற்காக அதிக நிதியை ஒதுக்கியுள்ளது கொழும்பு.

இதுவரை மேற்குலகம் இலங்கை அரசியல் மீதான தலையீட்டிற்கான ஒரு முகவராகவே (Pநயஉந யுபநnஉல ழக றநளவ) நோர்வேயை பயன்படுத்தி வந்தது.ஆனால் சிங்களம் தற்போது தடாலடியாக இலங்கையின் சமாதானத் தொடர்புகளிலிருந்து நோர்வேயை விலக்கியுள்ளது. இதன் மூலம் மேற்கின் இலங்கை மீதான சமாதான ஊடாட்டங்களை கொழும்பு மட்டுப்படுத்தியுள்ளது.

மேற்குலகம் யுத்த நிறுத்தத்திற்கான கரிசனையை வெளிப்படுத்தி வரும் சூழலில் நோர்வேயை முழுமையாக நீக்கியிருப்பதானது ஒருவகையில் மேற்கின் கரிசனையை சிங்களம் புறம் தள்ளியிருக்கிறது என்பதாகவும் நாம் கொள்ளலாம்.கொழும்பு பிராந்திய சக்திகளுடன் நெருக்கமான தொடர்புகளை பேணிவரும் சூழலில் மேற்குடன் முரண்படுவது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளும் நிலையிலுமில்லை.

நோர்வே நீக்கப்பட்டிருப்பதன் மூலம் இலங்கை மீதான முழுமையான ஈடுபாடு இந்தியாவின் வசமாகியுள்ளது. இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் கொழும்பு இந்திய ஆலோசனையை நிச்சமாக பெற்றிருக்கும்.ஏலவே மேற்கின் அதிக கவனம் இலங்கை மீது குவிந்து வருவதை ஓருவித அச்சத்துடனேயே இந்தியா அவதானித்து வந்தது.இந்த சூழலில் மேற்கின் சமாதான தொடர்பாளரை நீங்கியிருப்பதன் மூலம் அந்த அச்சத்தை சிங்களம் போக்கியிருக்கிறது.

கொழும்பிற்கும், மேற்கிற்குமான முரண்பாடுகளின் இடையில்தான் நமது செயற்பாடுகளை நகர்த்த வேண்டியிருக்கிறது. அதனை புலம்பெயர் சமூகங்களால்தான் செய்ய முடியும்.இது மிகுந்த நிதானத்துடன் கையாள வேண்டிய ஒன்றுமாகும். மேற்கின் ஜனநாயக வரம்புகளுக்குள் நின்று கொண்டே இதனை சாதிக்க வேண்டியிருக்கிறது.

காலத்தை தவற விடுவோமாயின் நமது அரசியல் ஒரு நூற்றாண்டு நோக்கி பின்தள்ளப்படுவது நிச்சயம். நமது அரசியல் பின்தள்ளப்படுவது என்பதும் நாம் அழிவது என்பதும் வேறு வேறல்ல.அமெரிக்கன் வீசிய குண்டுகளின் கீழே வியட்நாமியர் அழவில்லை.
அமெரிக்கன் விசிறிய நச்சுக் காற்றினால் அவர்கள் நடுக்கமுறவில்லை.
கூடி எழுந்தனர்.
குலையுறாது நிமிர்ந்தனர்.
விழுந்தவர் போக எஞ்சியோர் விடுதலையை தொடர்ந்தனர்.
தாயினும் பெரியது தாயகம் வாழ்வதிலும் பெரியது வரலாற்றுக் கடன்.
தலைமுறைக்கான பணி தாங்கி நடப்பதே மனுக்குலத்திற்குரிய மணிமகுடம்.
ஈழத் தமிழர் எவராயினும் எங்கிருப்பவராயினும் காலக் கடைமையை கையிலெடுப்போமெனில் நாளை நமதாகும்.
இல்லையெனில் இழிவுற்றுச் சாவோம்.

- புதுவை இரத்தினதுரை -

தமிழர் விடுதலைப் போராட்டமும் புதிய தலைமுறையின் வரலாற்றுப் பணியும்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் 9 வது நாளாகத் தொடரும் ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க சதி !

பிரித்தானியா பாராளுமன்றம் முன் 9 வது நாளாகத் தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.மக்களின் எழுச்சிப் போராட்டத்தை எப்படியாவது முடக்க பிரித்தானியாக் காவல் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.எனினும் அது கைகூடாத நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து வருகின்றனர்.

எனினும் தொடரும் ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க சில தீய சக்திகள் சதி வேலைகளிலும் இறங்கியுள்ளன.வழமையாக இரவு பகல் பாராது போராட்டங்களில் கலந்துகொள்ளும் தாயக மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படுவது வழக்கம். இன்று மாலையும் அது போலவே சிலர் சிறுவர்களிடையே மயக்கமருந்து கலக்கப்பட்ட இனிப்புகளை வழங்கியிருக்கின்றனர் இதனால் 2 சிறுவர்கள் உடனடியாக மயக்கமாகியுள்ளனர். இதனையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. உடனடியாக விரைந்து செயற்பட்ட மாணவர்களும் பிரித்தானிய காவற்துறையினரும் இனிப்புக்களை வழங்கிய இருவரை பிடித்ததோடு ஏனையோரையும் தேடி வருகின்றனர்.

இவ்வாறான கோழைத்தனமான செயற்பாடுகள் இனியும் நடைபெறும் என்பதால் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறு காவற்துறையினரும் மாணவர்களும் தாயக உறவுகளிடம் கேட்டுக்கொள்கின்றனர்

இது தொடர்பான அறிக்கை ஒலி வடிவில்

பிரித்தானியாவில் 9 வது நாளாகத் தொடரும் ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க சதி !SocialTwist Tell-a-Friend

அவுஸ்திரேலியாவில் தொடரும் போராட்டம்


வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்தி வரும் மனிதப் பேரவலத்தை உடனடியாக நிறுத்தக் கோரியும், உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நான்கு தமிழ் இளைஞர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டங்களை தொடங்கவுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் உட்பட நால்வர் உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்கவிருக்கின்றனர்.
மெல்பேர்ண் நகரில் உள்ள DANDENONG பிராந்தியம் PULTNEY STREET ல் DANDENONG PARK ல் ச.ரமணா, ச.சந்திரன், ஊடகவியலாளரான ப.தெய்வீகன் மற்றும் கோ.பானு ஆகியோர் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்குகின்றனர்.
இவர்கள் முன்வைத்துள்ள நான்கு கோரிக்கைகள் வருமாறு:-
  1. உடனடியாகவும், நிரந்தரமாகவும் நடைமுறைப்படுத்தக் கூடியதுமான போர் நிறுத்தம் மேற்கொள்ளக் கோரி சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.
  2. வன்னியில் உள்ள தமிழ் உறவுகளுக்கு அத்தியாவசியமான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவி ஆகிய அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும் வகையில் சேர்ப்பிக்கப்பட வேண்டும்.
  3. தமிழ் மக்கள் சுதந்திரமாக தங்கள் இருப்பிடங்களை தேர்ந்தெடுக்க அனுமதி கொடுக்கப்பட வேண்டும்.
  4. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் உடனடியான பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும்.
மேற்படி நான்கு அம்சக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வலியுறுத்தும் வரை இந்த உண்ணாநிலை போராட்டத்தில் நான்கு தமிழ் இளைஞர்களும் தொடரவிருக்கின்றனர்.
இவர்களின் உண்ணாநிலை போராட்டத்துக்கு மெல்பேர்ண் வாழ் தமிழ் உறவுகள் ஆதரவு அளித்து இலட்சியத்தின் வெற்றிப்பாதைக்கு உறுதுணையாக வந்து கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

செய்திகள்: தமிழ்வின்

அவுஸ்திரேலியாவில் தொடரும் போராட்டம்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் உண்ணா நிலை போராட்டம் மேற்கொள்ளும் பரமெஸ்வரன், சிவா உலகுக்கு வெளியிட்ட அறிக்கை.

தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் இன அழிப்பைத் தடுத்து, அங்கு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சிவதர்சன் சிவகுமாரவேல் (21) , குட்டி மணியம் (28) ஆகிய இரு இளையவர்களே இவ் உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்துள்ளவர்களாவர்.அவர்கள் உலகுக்குச் வெளியிட்ட அறிக்கை.



பிரித்தானியா ,
08-04-2009 .

எங்கள் அன்பான தமிழீழ மக்களே,
இது தமீழம் மலருவதற்கான நேரம். தனித்தமிழீழம் மலர்ந்தாலொழிய இதற்கு வேறு தீர்வே இல்லை.

எங்கள் அண்ணன் தியாக தீபம் திலீபன் அண்ணா வழியில் மீண்டும் உலகிற்கு உணர்த்துவோம். நாம் என்றும் அமைதியான நிலையான நிரந்தரமான சமாதானத்தை மட்டுமே விரும்புகிறவர்கள்.
தமிழர்கள் என்றுமே எவருக்கும் எந்த நாட்டினருக்கும் எதிரிகளாக இருந்ததில்லை. அனைவரும் எமது நன்பர்களே. எமது எதிரி எதைக்கொண்டு தாக்கினானோ அதைக்கொண்டே திருப்பித்தாக்கி எமது விடுதலை போராட்டத்தை துவக்கிவைத்தார் எமது தலைவர், பாசமிகு அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

எமது விடுதலைப்போராட்டத்திற்கு நாம் மீண்டும் மீண்டும் நம் கரம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாம் எவ்வித பின்வாங்கலும் செய்யப்போவதில்லை. எமக்கு அடுத்த சந்ததிக்கு நாம் எமது அழகான தமிழீழத்தை மட்டும்தான் கொடுக்கவேண்டுமே தவிர ஆயுதப்போராட்டத்தையோஅல்லது அறவழிப்போராட்டத்தையோ அல்ல.

தமிழீழத்தை போராடி பெற வேண்டியதே எமது முக்கிய கடமை. எமது இந்த அறவழிப்போராட்டமானது இந்நாட்டின் சட்டதிட்டத்திற்கு அமைவாகவே நாம் நடத்துகிறோம். ஆகவே மக்களே எவ்வித தயக்கமுமின்றி விரைந்து திரண்டு வந்து குரல் கொடுங்கள். இங்கே நாம் விதைக்கும் இந்த விதை அனைத்து நாட்டிலும் ஆழவிருச்சமாக அகண்டு விரிந்து ஆழ வேரூண்ட வேண்டும்.

அந்தந்த நாட்டில் வாழும் தமிழீழ மக்களே! கிளர்ந்தெழுந்துங்கள். இது எமக்கான நேரம், தேசியத்தலைவரே கூறியிருக்கின்றார், மாணவர்களே எமது தூண்கள். தமிழர்களையும் தமிழீழத்தையும் தாங்க அனைத்து நாடுகளிலும் அணி அணியாக திரண்டுவாருங்கள் தூண்களே! இந்த தூண்கள் என்றும் எதற்கும் சாயாத தூண்கள்.

கிபிராலும் அடிக்க முடியாதது, ஆட்லரியாலும் வீழ்த்த முடியாது, மல்ட்டிபரலாலும் மடிக்க முடியாத தூண்களே! திரண்டு கிழந்து எழுந்து வாருங்கள்.

தமிழீழம் பெற விரைந்து வாருங்கள்.

அன்புடன்
பரமேசுவரன்
சிவா


செய்திகள்: பதிவு

பிரித்தானியாவில் உண்ணா நிலை போராட்டம் மேற்கொள்ளும் பரமெஸ்வரன், சிவா உலகுக்கு வெளியிட்ட அறிக்கை.SocialTwist Tell-a-Friend

கனடியத் தமிழரின் தொடர் போராட்டம்: தலைநகரின் வீதிகள் தமிழரால் முடக்கம்

சிறீலங்கா இனவெறி அரசின் கொடூர கொலைவெறியினைத் தடுத்து நிறுத்த அழுத்தம் கொடுக்கக்கோரி கனடியத் தலைநகரில் தமிழர்களால் தொடர் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கனடியத் தமிழர் சமூகம் மற்றும் கனடியத் தமிழ் மாணவர்களின் ‘கனடிய அரசாங்கம் செயலில் ஈடுபடும் வரையான தொடர் போராட்டம்’ அழைப்பையேற்று தமிழ் மக்கள் அனைவரும் கனடியத் தலைநகரான ஒட்டாவா நோக்கி அணிதிரண்டு கொண்டுள்ளார்கள். செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, விடிகாலை 6 மணியிலிருந்து பேருந்துகள், தங்கள் தனிப்பட்ட வாகனங்கள் மூலம் போராட்டத்திற்காகத் தலைநகர் நோக்கி மக்கள் சென்று கொண்டுள்ளார்கள்.
கனடிய பாராளுமனறத்தில் ஆரம்பித்த போராட்டம் சிறிது நேரத்தில் வீதியை நோக்கி நகர ஆரம்பித்தது. தலைநகரின் வீதியில் இறங்கி போக்குவரத்தினை மறித்த கனடியத் தமிழ் மக்கள் தலைநகரின் முக்கிய வீதிகளான Bank Street, O’Conner Drive ஆகிய வீதிகள் உட்பட்ட முக்கிய வீதிகளில் வீதி மறிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அலுவலகங்கள் முடிவடைந்த பின்னர் நகரே ஸ்தம்பித்திருந்தது.
தமிழ் மக்களால் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடையினால் பல கிலோ மீற்றர் நீளத்திற்கு நகரின் பொதுப்போக்குவரத்து வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் நகரமுடியாது நிறுத்தப்பட்டிருந்தன.
வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெருமளவு காவற்றுறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆயினும்,

  • தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் படுகொலையை நிறுத்துவதற்கு சிறீலங்கா இனவெறி அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.
  • உடனடி யுத்த நிறுத்திற்கு சிறீலங்கா அரசைக் கொண்டுவரவேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கனடியத் தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், இவை நடைமுறைப்படுத்தப்படும் வரை தொடர்ச்சியான போராட்டமாக இப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.தலைநகரான ஒட்டாவாவில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை ரொறன்ரோ நகரில் உள்ள மாகாணப் பாரளுமன்றத்திற்கு முன்னாலும் தொடர் போராட்டத்தினை மக்கள் தொடர்ந்த வண்ணமுள்ளனர்.கடும் குளிரையும் பொருட்படுத்தாது கனடியத் தலைநகர் ஒட்டாவா வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கனடியத் தமிழ் சமூகமானது தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை வீதிகளை விட்டு அசையோம் எனும் உறுதியுடன் உள்ளார்கள்.பல்லாயிரக்கணக்கில் பங்கேற்று காலத்தின் கடமையை நிறைவேற்றும்படி ஒருங்கிணைப்பாளர்கள் கனடியத் தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கின்றார்கள். இப் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் மக்களிற்காக தொடர்ச்சியாக பேரூந்து வசதி ஏற்பாட்டாளர்களால் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை ரொறன்ரோ நகரின் பல பாகங்களில் இருந்தும் ஒட்டாவா செல்வதற்காக பேரூந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

செய்திகள்: பதிவு

கனடியத் தமிழரின் தொடர் போராட்டம்: தலைநகரின் வீதிகள் தமிழரால் முடக்கம்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் 5 அம்சக் கோரிக்கைகளுடன் இருவர் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம்

தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் இன அழிப்பைத் தடுத்து, அங்கு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சிவதர்சன் சிவகுமாரவேல் (21) , குட்டி மணியம் (28) ஆகிய இரு இளையவர்களே இவ் உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்துள்ளவர்களாவர்.
பிரித்தானியாவில் தமிழர்களால் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் வெஸ்ட்மினிஸ்ரர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் தமது சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.

  1. சிறிலங்காவில் உடனடியாக நிரந்தரமான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  2. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கீ மூன் அல்லது பிரித்தானியப் பிரதமர் கோடன் பிறவுண் தங்களை நேரில் சந்தித்து தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்து பரிசீலித்து உறுதிமொழி வழங்க வேண்டும்.
  3. வன்னியில் உள்ள மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்.
  4. இலங்கையில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதா அல்லது தனித்து நாடு அமைப்பதா என்பதை அறிய ஐ.நாவின் ஏற்பாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்
  5. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும்.
ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளையே மேற்படி இருவரும் முன்வைத்து தமது சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.
இவர்களது சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக முன்னெடுக்கும் இப்போராட்டம் தாய் தேசத் தமிழுறவுகளின் அவலங்களிற்கு பிரித்தானியாவிடமிருந்து நிரந்தர முடிவு கிட்டும் வரை தொடரும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்' தமிழின விடிவிற்காக இந்திய அரசிற்கு எதிராக உண்ணாநிலையில் இருந்து உயிர்விட்ட தியாகி திலீபனின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது.தொடர் போராட்டத்தில் இறங்கியிருக்கும் மாணவர் சமூகத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைவரையும் இப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றார்கள்.

செய்திகள்: பதிவு

பிரித்தானியாவில் 5 அம்சக் கோரிக்கைகளுடன் இருவர் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம்SocialTwist Tell-a-Friend

வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணை, வான் தாக்குதல்: 3 குழந்தைகளும் 11 சிறுவர்களும் உட்பட 31 தமிழர்கள் படுகொலை

வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, வான் மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 3 குழந்தைகளும் 11 சிறுவர்களும் உட்பட 31 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகளை நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, ஆர்பிஜி உந்துகணை, தொலைதூர துப்பாக்கிச் சூட்டு மற்றும் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 31 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 3 குழந்தைகளும் 11 சிறுவர்களும் அடங்குவர்.

  1. இராசமாணிக்கம் ஜோதிகா (8 மாத குழந்தை)
  2. சிவசக்தி தேவதாசன் (வயது 02)
  3. பாஸ்கரன் லோகேஸ்வரன் (வயது 2 வருடம் 6 மாதம்)
  4. சேதுகாவலன் மயூரதன் (வயது 05)
  5. தர்மேந்திரன் (வயது 06)
  6. தர்மேந்திரன் கார்த்திகா (வயது 06)
  7. கந்தசாமி தனுசன் (வயது 08)
  8. லோகநாதன் லோஜிதா (வயது 09)
  9. டினோசிலா (வயது 09)
  10. லோகநாதன் திசா (வயது 09)
  11. முருகானந்தம் தர்மினி (வயது 12)
  12. பாக்கியராஜா மதுசனா (வயது 13)
  13. முத்துலிங்கம் கம்சனா (வயது 14)
  14. தர்மராஜ் கிருத்திகா (வயது 14)
  15. சோதி (வயது 48)
  16. சிவராசா (வயது 35)
  17. பஞ்சலிங்கம் தனஞ்சிநாத் (வயது 28)
  18. ம.சந்திரன் (வயது 69)
  19. சிவகுருநாதன் புனிதலட்சுமி (வயது 57)
  20. இ.சுபாசினி (வயது 30)
  21. தில்லைநாதன் சுமதி (வயது 38)
  22. லோகநாதன் ஹேமா (வயது 32)
  23. சிவசுப்பிரமணியம் பாஸ்கரன் (வயது 34)
  24. செ.சுடரேந்தி (வயது 33)
  25. தர்மலிங்கம் வீரசிங்கம் (வயது 54)
  26. இந்திரராஜா (வயது 42)
  27. கேசவன் புனிதமலர் (வயது 32)
  28. செல்வரட்னம் செல்வமணி (வயது 38)
  29. கந்தையா கருணாகரன் (வயது 29)
  30. சிவபாதராஜா பார்வதி (வயது 42)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினரின் தொலைதூர துப்பாக்கிச் சூட்டில் நாள்தோறும் பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.உணவுப் பொருட்களுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களே சிறிலங்கா படையினரின் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வருகின்றனர். அம்பலவன்பொக்கணை பகுதியில் நேற்று வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த 52 வயதுடைய இரத்தினம் சண்முகலிங்கம் என்பவர் சிறிலங்கா படையினரின் தொலைதூர துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளையில் அம்பலவன்பொக்கணை தொடக்க சுகாதார நிலையத்தில் இயங்கும் செம்மலை மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்திருந்த 22 வயதுடைய யோகேஸ்வரன் பரிமளா மற்றும் 18 வயதுடைய அ.ராகுலன் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது இவ்வாறிருக்க, சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக சிறுவர்களும் முதியவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உளவளத்துணையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.சிறார்கள் மத்தியில் பழக்கங்களில் மாற்றம், முதியவர்கள் மத்தியில் நோய்த்தாக்கம் அதிகரித்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.அதேவேளையில் சிறார்கள் மத்தியில் ஊட்டச்சத்து பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, சிறிலங்கா படையினர் அடிக்கடி கப்பல் மீது தாக்குதல் நடத்துவதனனால் உணவுப்பொருட்களை ஏற்றுவதிலும் நோயாளர்களை கப்பலில் ஏற்றுவதிலும் பெரும் இடர்கள் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாச தலைவர் ம.குணசிங்கராசா தெரிவித்துள்ளார்.

செய்திகள்: புதினம்

வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணை, வான் தாக்குதல்: 3 குழந்தைகளும் 11 சிறுவர்களும் உட்பட 31 தமிழர்கள் படுகொலைSocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் 3 ஆவது நாளாக தொடரும் தமிழர்களின் போராட்டம்: காவல்துறையின் அடக்குமுறையையும் மீறி மக்கள் பேரெழுச்சி




சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தை பிரித்தானிய அரசாங்கம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானியாவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் மாபெரும் மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்திருக்கின்றது.பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தை குறுக்கே வழி மறித்து நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் தொடங்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
இரவு இரவாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொடர்ந்தும் பிரித்தானியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தின் ஊடான போக்குவரத்தை தமிழர்கள் வழிமறித்தனால் பிரித்தானியா நாடாளுமன்ற செயற்பாடுகள் முற்றாக செயலிழந்ததுடன், போக்குவரத்தும் பெரும் நெரிசல் ஏற்பட்டிருக்கின்றது.
  • "சிறிலங்கா அரசே இனப்படுகொலையை நிறுத்து"
  • "தாய்மார்களையும் சிறுவர்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்வதனை நிறுத்து"
  • "எமக்கு தேவை தமிழீழமே"
  • "எமது தலைவர் பிரபாகரனே"
என உரத்த குரலில் உணர்வுபூர்வமாக முழக்கமிட்டு வரும் தமிழர்கள் தமது கைகளில் தமிழீழத் தேசியக் கொடியையும் தமிழீழ தேசியத் தலைவரின் படத்தையும் கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண், இலங்கை பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டி வலியுறுத்தியும் அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் தமிழர்கள் வலியுறுத்தி வருவதாக பிரித்தானிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கை பிரச்சினையில் நடவடிக்கை எடுப்பதாக பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்களிடம் உறுதிமொழி வழங்கிய போதும் அதனை நிராகரித்த தமிழர்கள், தமக்கு உடனடி நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.இந்த தொடர் போராட்டத்தினால் பிரித்தானியாவின் முக்கிய தொடருந்து நிலையமான வெஸ்ட்மினிஸ்டர் நிலையத்தின் சேவைகள் நேற்று இரவுடன் முற்றாக நிறுத்தப்பட்டு ஒலிபெருக்கிகளில் மாற்று வழிப்பாதைகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவித்தல் விடுத்து வருகின்றனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழர்களை அடக்குவதற்காக கலகம் அடக்கும் காவல்துறையினர் கொண்டு வரப்பட்ட போதும் ஆர்ப்பாட்டத்தில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டதால் கலகம் அடக்கும் காவல்துறையினரால் அவர்களை அடக்க முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மேற்படி பகுதிக்குரிய காவல்துறை பேச்சாளர் தெரிவிக்கையில்,
தமிழர்களின் இந்த திடீர் போராட்டம் எமக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எனினும் அமைதியான வழியில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தினை தடுத்து நிறுத்து நோக்கம் எமக்கு இல்லை.அத்துடன், இந்த போராட்டத்துக்கு மேலதிகமாக மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நாம் எந்தவித இடையூறும் விளைவிக்கவில்லை என்றார்.

எனினும், தமிழீழத் தேசியக் கொடியை கையில் ஏந்தியிருந்த நான்கு தமிழ் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.மேலும் பலரை கைது செய்ய முற்பட்ட போது அங்கிருந்த மக்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் எற்பட்டு இறுதியில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் கைவிட்டுள்ளனர். இதனால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தமிழீழத் தேசியக் கொடியை குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கைகளில் ஏந்தியிருக்குமாறு கொடுத்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவியான ஜெயந்தி பரஞ்சோதி கருத்து தெரிவிக்கையில்,
பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அல்லது பிரதமர் கோடன் பிறவுண் இங்கு வந்து தாயகத்தில் இடம்பெற்று வரும் தமிழினப் படுகொலைக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரைக்கும் இங்கிருந்து நாம் வெளியேறப் போவதும் இல்லை. எமக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுதிமொழிகள் தேவையில்லை என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சைமன்ட் கூச் தெரிவிக்கையில்,
தமிழர்களின் 25 வருட கால போராட்டத்துக்கு நான் முழுமையான ஆதரவு வழங்குகின்றேன். தற்போது தான் சரியான தருணம். பிரித்தானிய அரசாங்கம் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழர்கள் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அதற்கு நானும் முழுமையான ஆதரவு வழங்குகின்றேன் என்றார்.

தேம்ஸ் நதிக்குள் குதித்து இருவர் தற்கொலை முயற்சி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்கள் இருவர், நேற்று இரவு தேம்ஸ் நதிக்குள் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்ததால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.எனினும், காவல்துறையினர் படகுகளில் சென்று அவர்களை உடனடியாக மீட்டதுடன், மேலும் பலர் தேம்ஸ் நதிக்குள் குதிக்கலாம் என அச்சத்தில் படகுகளுடன் முழு விழிப்பு நிலையில் உள்ளனர்.அத்துடன், கலகம் அடக்கும் காவல்துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் நோக்கில் பிரித்தானிய காவல்துறையினர் செயற்பட்டு வருகின்ற போதிலும் இன்று மாலை அப்பகுதியில் மேலதிகமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் 3 ஆவது நாளாக தொடரும் தமிழர்களின் போராட்டம்: காவல்துறையின் அடக்குமுறையையும் மீறி மக்கள் பேரெழுச்சிSocialTwist Tell-a-Friend

பிரித்தானியா சவுத் பாங்க் பல்கலைக் கழக மாணவர்களால் 24மணிநேர உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கையில் போரை நிறுத்தக் கோரியும், உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரியும், இருபத்தி நான்கு மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் ஆரம் பிக்கப்பட்டுள்ளது.31/03/2009மதியம் பன்னிரெண்டு மணிக்கு பிரித்தானியா சவுத் பாங்க் பல்கலைக் கழக மாணவர்களால், மாணவர்கள் வெகு உர்ச்சாகமாக தேசியக் கொடியை உரிய மரியாதையுடன் அணிவகுத்து நின்று, அகவணக்கத்துடன், தேசியக் கொடிப் பாடல் இசைக்க தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

அதன் பின்னர் மறைந்த முன்னால் பிரித்தானிய மாணவரும் ஈகப் பேரொளியுமான முருகதாஸிற்கு சுடர் ஏற்றி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். பின்பு மாணவர்கள் அனைவரும் மலர்தூவி தங்கள் மரியாதையை செலுத்தினர்.மாணவர்கள் அனைவரும் வணக்கம் செலுத்திய பின்னர் வேற்று இன மாணவாகளுக்கு இலங்கையில் இனவாத சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் தமிழின அழிப்புப்போர் பற்றியும், தமிழீழ வரலாறு பற்றியும் எடுத்துரைத்தனர்..
அதே வேளை சிங்கள அரசின் தமிழின அழிப்பை நிறுத்துமாறு பிரித்தானிய தலைமை அதிபர் கோல்டன் பிரவுன் அவர்களுக்கு மாணவர்களால் அஞ்சல் அட்டைகளில் அவர்களின் விபரங்கள் நிரப்பப்பட்டன.பல்கலைக் கழகம் முழுவதும் தமிழின அழிப்பு பற்றியும் எமது பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்றும். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரியும் பல பதாதைகள் ஒட்டப் பட்டுள்ளன.

இதன் தொடக்கமாக மாணவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தி உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவிருந்த பொழுது பல்கலைக் கழகம் தேசியக் கொடியை ஏத்துவதற்கு அனுமதி மறுத்தது. மாணவர்கள் நிர்வாகத்திடம் தாங்கள் நிட்சயம் எங்கள் தேசியக் கோடியை ஏத்துவோம், இது எங்கள் தேசியக் கொடி என்று வாதாடினர். மாணவர்களைக் கட்டுப் படுத்த முடியாத நிர்வாகம் காவல்த்துறை உதவியை நாடினர். விரைந்து வந்த காவல்த் துறையினரிடம் மாணவர்கள் தங்கள் போராட்டம் தொடர்பாகவும் தேசியக் கொடி தொர்பாகவும் விளக்கி கூறினர்.பின் காவல் துறையினர் அனுமதி அளித்தபின் பல்கலைக் கழக நிர்வாகமும் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் : பதிவு

பிரித்தானியா சவுத் பாங்க் பல்கலைக் கழக மாணவர்களால் 24மணிநேர உண்ணாவிரதப் போராட்டம்SocialTwist Tell-a-Friend

வன்னியில் வான், எறிகணைத் தாக்குதல்: இன்றும் 21 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை; 154 பேர் படுகாயம்

வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 21 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 154 பேர் காயமடைந்துள்ளனர்.'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் வான் குண்டுத் தாக்குதல், ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் கொத்துக்குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.இதில் 21 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 154 பேர் காயமடைந்துள்ளனர்.மக்களின் கூடார வதிவிடங்கள் மீதே சிறிலங்கா படையினர் இன்று பல நூற்றுக்கணக்கான எறிகணைகளை வீசியுள்ளனர்.மேலும் 28 வயதுடைய உதயகுமார் சந்திரிகா எனும் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொத்துக்குண்டு தாக்கியதில் படுகாயமடைந்ததால் அவரின் சிசு அரைகுறையாக வெளியில் வந்துள்ளது.
வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால் பகுதிகளிலேயே அதிகளவிலான மக்கள் கொத்துக்குண்டுத் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

  1. புலேந்திரன் பகிர்த்தனா (வயது 08)
  2. முருகையா சின்னம்மா (வயது 45)
  3. கந்தையா கேதீஸ்வரி (வயது 14)
  4. முருகையா செல்வேந்திரன் (வயது 30)
  5. முருகையா ரஞ்சனி (வயது 18)
  6. மாரிமுத்து இலட்சுமி (வயது 65)
  7. வேலும் மயிலும் சூரியகுமார் (வயது 36)
  8. சூரியகுமார் கார்த்திகேசன் (வயது 05)
  9. அரியதாஸ் விக்கினேஸ்வரி (வயது 32)
  10. பொன்னையா சுப்பிரமணியம் (வயது 57)
  11. ரவிக்குமார் சஜீவன் (வயது 11)
  12. அருள்தாஸ் தர்சிகா (வயது 08)
  13. தியாகராசா ஜிதா (வயது 48)
  14. கனகராசா பிரதீபன் (வயது 20)
  15. கனகலிங்கம் கோமதி (வயது 45)
  16. கனகலிங்கம் வசந்தகுமாரி (வயது 16)
  17. கனகலிங்கம் சாந்தகுமாரி (வயது 17)
  18. செல்வராசா ஜனார்த்தன் (வயது 16)
  19. ஜெயராசா தர்மிலன் (வயது 12)
  20. சூரியராசா வேல்விழி (வயது 39)
  21. யோகநாதன் பிரதீபா (வயது 26)
  22. மதியாவதனம் மணிவண்ணன் (வயது 29)
  23. பூமிபாலு விமலாதேவி (வயது 39)
  24. ஜெயராசா சுபாசினி (வயது 29)
  25. ஜெயராசன் ரதீபன் (வயது 13)
  26. செல்வேந்திரன் பத்மலோஜினி (வயது 30)
  27. வரதராசா சின்னராசா (வயது 45)
  28. இதயரூபன் கவிதா (வயது 32)
  29. இதயரூபன் விதுசா (வயது 03)
  30. கணபதிப்பிள்ளை ஜெதீஸ்வரன் (வயது 32)
  31. சின்னராசா ரத்தினமணி (வயது 48)
  32. துஸ்யந்தன் சுவீற்றி (வயது 22)
  33. வரதராசா சின்னராசா (வயது 46)
  34. முத்துசாமி வடிவேல் (வயது 47)
  35. இராமலிங்கம் பிரதீபன் (வயது 18)
  36. கனகலிங்கம் சாந்தகுமாரி (வயது 16)
  37. மேகநாதன் செலஸ்ரீனா (வயது 22)
  38. லட்சுமிகாந்தன் மாரிமுத்து (வயது 67)
  39. கந்தசாமி ரூபிகா (வயது 09)
  40. செல்வராசா நிசாந்தன் (வயது 16)
  41. மாடசாமி புவனேந்திரராசா (வயது 24)
  42. கிருசாந்தி (வயது 10)
  43. இராசு சிவகலா (வயது 25)
  44. வீரசாமி நாகம்மா (வயது 70)
  45. சர்வானந்தகரன் நிசாந்தி (வயது 24)
  46. புவேந்திரமகாராசா பகிர்த்தனா (வயது 14)
  47. மதியபரணம் ரோமியா (வயது 10)
  48. மதியாபரணம் இந்திராதேவி (வயது 43)
  49. மதியாபரணம் பார்த்தீபன் (வயது 14)
  50. முருகையா செல்வேந்திரன் (வயது 25)
  51. முருகையா ரஞ்சனி (வயது 19)
  52. முருகையா சின்னம்மா (வயது 56)
  53. ரவிக்குமார் சக்திவேல் (வயது 11)
  54. கார்த்திகேயன் பிந்துசா (வயது 07)
  55. பாலகுமாரன் பிரணவன் (வயது 09)
  56. தேவதாஸ் கவிதா (வயது 10)
  57. கோமகன் பிருந்தா (வயது 05)
  58. செல்வநாதன் பத்மலோஜா (வயது 30)
  59. கந்தசாமி ரூபிகா (வயது 11)
  60. முத்துச்சாமி மணிவேல் (வயது 45)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டனர்.
செய்திகள் : புதினம்

வன்னியில் வான், எறிகணைத் தாக்குதல்: இன்றும் 21 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை; 154 பேர் படுகாயம்SocialTwist Tell-a-Friend

வன்னியில் தொடரும் சிறிலங்காவின் இனப்படுகொலை: இன்றும் 16 சிறுவர்கள் உட்பட 49 தமிழர்கள் படுகொலை; 125 பேர் காயம்

வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 16 சிறுவா்கள் உட்பட 49 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 125 பேர் படுகாயமடைந்துள்ளனர். வலைஞர்மடத்தில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளன் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.இதில் 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அம்பலவன்பொக்கணையில் உள்ள பிள்ளையார்கோவில் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.இதில் 10 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால், இடைக்காடு மற்றும் பச்சைப்புல்மோட்டைப் பகுதிகளை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.இதில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 125 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டவர்களின் பெயர் விபரம் வருமாறு:
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான

  1. புலேந்திரமகாராஜா ராஜஸ்ரீ (வயது 30)
  2. புலேந்திரமகாராஜா புவிராசி (வயது 08)
  3. புலேந்திரமகாராஜா பைந்தனா (வயது 07)
  4. புலேந்திரமகாராஜா வைஸ்ணவி (வயது ஒன்றரை மாதம்)
  5. குலசேகரம் கந்தையா (வயது 65)
  6. பாலசுந்தரம் யுவராஜ் (வயது 49)
  7. பார்த்தீபன் (வயது 37)
  8. தவராசா டினு (வயது 03)
  9. தம்பிராசா ஜோன் நிவாஸ் (வயது 26)
  10. தியாகசிங்கம் கருணாநிதி (வயது 53)
  11. கோவிந்தசாமி (வயது 63)
  12. சுதாகரன் சுதர்மன் (வயது 12)
  13. மரியதாஸ் கேதீஸ்வரி (வயது 29)
  14. அன்ரனி மரியமலர் (வயது 32)
  15. காந்தரூபன் ஞானம்மா (வயது 35)
  16. குகநேசன் சுசீலா (வயது 45)
  17. கனகசபை கந்தசாமி (வயது 45)
  18. கனகசபை அழகம்மா (வயது 73)
  19. கோவிந்தசாமி இராசம்மா (வயது 53)
  20. கறுப்பையா தர்மலிங்கம் (வயது 55)
  21. வேலாயுதம் சுதாகர் (வயது 32)
  22. தேசிங்கு கருணாநிதி (வயது 53)
  23. கவிபாலன் சயந்தன் (வயது 07)
  24. கந்தையா புஸ்பராசர் (வயது 46)
  25. தவராசா டிலானி (வயது 03)
  26. தவராசா தர்மிளா (வயது 19)
  27. தவராசா தீபமலர் (வயது 40)
  28. தவராசா நிலக்சன் (வயது 12)
  29. கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 23)
  30. கணேசலிங்கம் யமுனாராணி (வயது 48)
  31. தர்மலிங்கம் தவராசா (வயது 38)
  32. காந்தரூபன் (வயது ஒன்றரை )
  33. காந்தரூபன் லதா (வயது 34)
  34. செ.புஸ்பராணி (வயது 48)
  35. கந்தன் தம்பையா (வயது 76)
  36. மருதன் கேதாரா (வயது 20)
  37. சேதுமாதவன் கிருஸ்ணன் (வயது 32)
  38. கார்மேகன் காருண்யா (வயது ஒன்றரை)
  39. தேவிபாலன் மதுசன் (வயது 5 மாதம்)
  40. வே.சின்னத்தம்பி (வயது 35)
  41. பா.குணாளன் (வயது 12)
  42. விஜிதரன் புவிதா (வயது 08)
  43. மதுரவாணன் பார்கவி (வயது 10)
  44. ஞானராஜ் மருதன் (வயது 07)
  45. கணேசலிங்கம் புவிதன் (வயது 03)
  46. கவிராசன் கவிதா (வயது 04)
  47. கேவின்ராஜ் பிருந்தன் (வயது 05)
  48. கோபாலபிள்ளை பார்கவி (வயது 25)
  49. தம்பிப்பிள்ளை மார்க்கண்டு (வயது 30)
ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்

செய்திகள் : புதினம்

வன்னியில் தொடரும் சிறிலங்காவின் இனப்படுகொலை: இன்றும் 16 சிறுவர்கள் உட்பட 49 தமிழர்கள் படுகொலை; 125 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் 28.03.09 (சனிக்கிழமை) 'உரிமைக்குரல்'

ஈழத் தமிழரின் தாயகம் - தேசியம் - தன்னாட்சி உரிமையினை முன்னிலைப்படுத்தி அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் நாளை மறுநாள் மாபெரும் 'உரிமைக்குரல்' நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது."சுதந்திர தமிழீழத்திற்கான உரிமைக்குரல் - Voice to Free Tamil Eelam" எனும் கருப்பொருளில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள இப்பேரணிக்கு தமிழ் இளையோர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.விடுதலை வேண்டி நிற்கும் தமிழினத்திற்குப் புலம்பெயர் உறவுகளின் பிளவுபடாத ஆதரவு, உந்துசக்தியாக அமையும் என்பதால் சிட்னி வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் இளையோர் அமைப்பினர் வேண்டிக்கொள்கின்றனர்.

இடம்: Martin Place
நாள்: 28.03.09 (சனிக்கிழமை)
நேரம்: முற்பகல் 11:00

செய்திகள் : புதினம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் 28.03.09 (சனிக்கிழமை) 'உரிமைக்குரல்'SocialTwist Tell-a-Friend

தமிழினத்தை கருவிலேயே அழிக்கின்றது சிங்களப் பேரினவாதம்: கர்ப்பிணிப் பெண்கள், சிசு உட்பட 61 தமிழர்கள் இன்று படுகொலை; 164 பேர் படுகாயம்

வன்னியில் சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய கொடூரமான எறிகணைத் தாக்குதல்களில் கர்ப்பிணிப் பெண்கள், சிசு உட்பட 61 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 164 பேர் படுகாயமடைந்துள்ளனர்.மாத்தளன் கப்பல் வீதி, அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் ஆர்பிஜி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

வலைஞர்மட பகுதியை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று நடத்திய தொலைதூர துப்பாக்கிச் சூட்டின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை துப்பாக்கி ரவை துளைத்துச் சென்றது.இதில் 20 வயதுடைய 8 மாத கர்ப்பிணிப் பெண்ணான சந்திரகுமார் கலைச்செல்வி என்பவரே படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்தார்.

இதேவேளையில் 27 வயதுடைய 6 மாத கர்ப்பிணிப் பெண்ணான ஜெகதீபன் சோதிமலர் என்பவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் 25 வயதுடைய 9 மாதம் கர்ப்பிணிப் பெண்ணான க.பாசமலர் என்பவரின் வயிற்றைத் துழைத்த ரவை, அவரின் சிசுவின் தலையைத் தாக்கியுள்ளது.இதனால், வயிற்றில் இருந்த அந்த சிசு உயிரிழந்து விட்டது. தற்போது ஆபத்தான நிலையில் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், 3 கர்ப்பிணிப் பெண்கள் நிகழ்விடத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர்களை உறுதிப்படுத்த அந்த இடத்தில் ஆட்கள் எவரும் இல்லை. அனைவரும் சிதறி ஓடிவிட்டனர்.ஆனாலும், அந்த இடத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் உயிரிழந்த, கருவுற்ற பெண்களின் உடலங்களை எடுத்து புதைத்தனர்.

இதேவேளையில் மருத்துவமனையில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் உடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.சிறிலங்கா படையினரின் இன்றைய தாக்குதல்களில் 15 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 40 சிறுவர்களும் காயமடைந்துள்ளனர்.இன்றைய தாக்குதலில் மாத்தளன் பகுதியிலேயே அதிகளவிலான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேநேரம், மாத்தளன் கப்பல் வீதியில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பணியாளரான 27 வயதுடைய பாலசிங்கம் சதீஸ்குமார் என்பவரும் இன்றைய தாக்குதலில் படுகாயமடைந்தார்.அத்துடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் சிறீதரன் என்பவரின் மனைவியான 25 வயதுடைய கேதீஸ்வரி என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரம் வருமாறு:

  1. கருணாகரன் சாரதாதேவி (வயது 40)
  2. நீக்கிலாப்பிள்ளை லைனாரட்ணராஜா (வயது 47)
  3. சரவணமுத்து கணபதிப்பிள்ளை (வயது 65)
  4. அந்தோனி அருளானந்தம் (வயது 64)
  5. ஜசிந்தா (வயது 19)
  6. சிறிகாந்தன் யதுர்சன் (வயது 13)
  7. இராசதுரை வசந்தகுமார் (வயது 36)
  8. வேலுப்பிள்ளை இரத்தினசிங்கம் (வயது 48)
  9. நடராசா ராகினி (வயது 40)
  10. சண்முகநாதன் இராசயோகம் (வயது 40)
  11. சிறிதரன் ஜெகதீஸ்வரி (வயது 35)
  12. ஞானசீலன் கோகிலா (வயது 16)
  13. தங்கவேலு கிருஸ்ணமூர்த்தி (வயது 49)
  14. வசந்தகுமார் நந்தினி (வயது 33)
  15. கலைச்செல்வி (வயது 20)
  16. யோகராசா புஸ்பராணி (வயது 40)
  17. சந்திரசேகர் சசிகுமார் (வயது 25)
  18. வியஜகுமார் தமிழினி (வயது 02)
  19. மகாலிங்கம் தேனஜா (வயது 32)
  20. சசிக்குமார் சுதாநந்தினி (வயது 35)
  21. சிவன்பன் ஜானகி (வயது 20)
  22. கணேஸ் சந்திரமோகன் (வயது 39)
  23. சிவகுமார் உதயமலர் (வயது 38)
  24. தர்மலிங்கம் பத்மாவதி (வயது 40)
  25. பஞ்சாட்சரம் (வயது 40)
  26. கிருசிகா (வயது 09)
  27. இராசதுரை வசந்தகுமார் (வயது 36)
  28. சிறிதரன் கேதீஸ்வரி (வயது 25)
  29. சிறிகாந்தன் யதுசன் (வயது 13)
  30. யோகராசா புஸ்பராணி (வயது 40)
  31. மெய்யழகன் வசந்தினி (வயது 25)
  32. இராசதுரை ரஞ்சினி (வயது 23)
  33. சுதந்திரராசா இராசாத்தி (வயது 50)
  34. செல்வலிங்கநாதன் கிருசிகா (வயது 09)
  35. சுப்பிரமணியம் திருநாவுக்கரசு (வயது 08)
  36. வேலாயுதம் சுதர்சினி (வயது 11)
  37. வேலாயுதம் மகேஸ்வரி (வயது 48)
  38. பரமாநந்தம் முத்தலிங்கம் (வயது 48)
  39. தர்மலிங்கம் பத்மாவதி (வயது 40)
  40. சிவகுமார் உதயமாஸ் (வயது 38)
  41. பஞ்சாட்சரம் (வயது 40)
  42. வேலாயுதம் தாரணி (வயது 21)
  43. செல்வரட்ணம் தியாநேசன் (வயது 43)
  44. கணேஸ் கமலேஸ்வரி (வயது 46)
  45. செல்லத்துரை யோகெஸ்வரன் (வயது 55)
  46. சந்திரகுமார் கலைச்செல்வி (வயது 08 மாதங்கள்)
  47. சுப்பிரமணியம் சுஜிபா (வயது 11)
  48. சரவணமுத்த செல்லத்துரை (வயது 48)
  49. செல்வலிங்கம் (வயது 55)
  50. தங்கராசா யொகேஸ்வரி (வயது 39)
  51. சரண்யா (வயது 12)
  52. பாய்க்கியம் (வயது 45)
  53. சந்திரன் கொளரியம்மா (வயது 29)
  54. அருளானந்தம் அந்தோனி (வயது 75)
  55. நடராசா ராசகிளி (வயது 35)
  56. அப்பன் ராசயோகம் (வயது 40)
  57. சிறிதரன் யெகதீஸ்வரி (வயது 30)
  58. கணேஸ் கிருபாகரன் (வயது 16)
  59. செல்வராசா மனோன்மணி (வயது 70)
  60. பெரியசாமி தமிழ்ச்செல்வி (வயது 13)
  61. ஒன்றரை அகவை கார்த்திகா (வயது 02)
ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

செய்திகள் : புதினம்

தமிழினத்தை கருவிலேயே அழிக்கின்றது சிங்களப் பேரினவாதம்: கர்ப்பிணிப் பெண்கள், சிசு உட்பட 61 தமிழர்கள் இன்று படுகொலை; 164 பேர் படுகாயம்SocialTwist Tell-a-Friend

வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணை- துப்பாக்கிச் சூடு: 25 சிறுவர்கள் உட்பட 102 தமிழர்கள் படுகொலை

வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை தொடக்கம் நடத்திய அகோர எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 140 பேர் காயமடைந்துள்ளனர்.'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம், இடைக்காடு, முள்ளிவாய்க்கால் மற்றும் அம்பலவன்பொக்கணை பகுதிகளில் இன்று திங்கட்கிழமை சிறிலங்கா படையினர் அதிகாலை தொடக்கம் அகோர எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர்.இதில் 25 சிறுவர்கள் உட்பட 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறார்கள் உட்பட 140 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்களில் நெக்கோட் நிறுவனப் பணியாளரும் கூட்டுறவுச் சங்கப்பணியாளர்கள் மூவரும் அடங்குகின்றனர்.

இதேவேளையில் மாத்தளன் பகுதியை நோக்கி இன்று காலை தொடக்கம் இரவு 7:00 மணிவரை சிறிலங்கா படையினர் நடத்திய அகோர ஆட்லெறி எறிகணை, ஆர்பிஜி உந்துகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் மட்டும் 68 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இடைவிடாது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முழுமையாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதிகமானோர் உடல் சிதறிப் பலியானதாகவும் வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தொடர்ச்சியான எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதல்களால் இப்பகுதியில் காயமடைந்தவர்களை மீட்புப் பணியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர் என்று 'புதினம்' செய்தியாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளையில் கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிவாரணக் கிளை மற்றும் அதன் தலைமைப் பணியகம் களஞ்சியம் ஊர்திகள் தரித்து நின்ற பகுதிகள் எல்லாம் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகின. அவை பெரும் அழிவுகளுக்கு உட்பட்டன. மேலும் நிவாரணம் பெற வந்தவர்கள் அதிகளவில் கொல்லப்பட்டும் காயமடைந்துள்ளனர் என்றும் எமது செய்தியாளர் கூறுகின்றார்.கொல்லப்பட்டவர்களில் இன்று மாலை வரை அடையாளம் காணப்பட்டவர்களின் பெயர் விபரம் வருமாறு:

  • து.நாகேஸ்வரி (வயது 26)
  • வீ.நெல்சன்குமார் (வயது 34)
  • வீ.உதயசேகர் (வயது 43)
  • சு.பாலசுப்பிரமணியம் (வயது 34)
  • சு.பாலசிங்கம் (வயது 45)
  • த.தருமலட்சுமி (வயது 60)
  • சு.மாரி (வயது 52)
  • கே.ரஜனிகாந்த் (வயது 29)
  • மோ.தர்சிகன் (வயது 06)
  • க.பஞ்சலிங்கம் (வயது 50)
  • தா.அற்புதம் (வயது 60)
  • தா.ஸ்ரீஸ்கந்தராசா (வயது 47)
  • ப.சந்திராதேவி (வயது 40)
  • வே.ஆறுமுகம் (வயது 75)
  • வெ.குஞ்சுப்பனி (வயது 76)
  • சி.சண்முகநாதன் (வயது 57)
  • கா.கலைவரதராசா (வயது 54)
  • வீ.சசிதரன் (வயது 38)
  • ல.சசிதரன் (வயது 37)
  • த.யோகமணி (வயது 36)
  • தே.தேவசகாயம் (வயது 59)
  • தே.அமராவதி (வயது 49)
  • கு.நாகேஸ்வரன் (வயது 21)
  • கே.ரஞ்சித் (வயது 28)
  • யோ.தர்சிகா (வயது 06)
  • கி.காவியா (வயது 30)
  • வி.செல்லையா (வயது 78)
  • செ.மாரிமுத்து (வயது 88)
  • சே.தவராசா (வயது 45)
  • த.கௌரி (வயது 25)
  • ம.தேனுஜா (வயது 03)
  • ந.ஜதுர்சிகன் (வயது 02 மாதங்கள்)
  • செ.லக்சனா (வயது 08 மாதங்கள்)
  • த.விபுசன் (வயது 13)
  • ச.கல்பனா (வயது 05)
  • செ.லக்சனா (வயது 08)
  • சிறீ.நிலானி (வயது 13)
  • மி.மரியமலர் (வயது 13)
  • க.துசியந்தன் (வயது 10)
  • சு.யதீஸ்வரன் (வயது 04)
  • சு.ஜனதீசன் (வயது 07)
  • சு.சந்திரகலா (வயது 17)
  • நீ.பாலகுமார் (வயது 11)
  • சி.கலைவாணி (வயது 35)
  • இ.கண்மணி (வயது 74)
  • க.ரீற்றா (வயது 47)
  • வீ.வீரம்மா (வயது 60)
  • கி.கணேசராசா (வயது 35)
ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.இதேவேளையில் கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த உலக உணவுத்திட்ட நிவாரணப்பொருட்கள், பொருட்களை ஏற்றி-இறக்க அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவால் வழங்கப்பட்ட எரிபொருள் மற்றும் நிவாரணப் பொருட்களை ஏற்றும் சுமையூர்திகள், உழுவூர்திகள் என்பனவும் சிறிலங்கா படையினரின் இன்றைய எறிகணைத் தாக்குதல்களில் அழிவுற்றுள்ளன.

செய்திகள்:புதினம்

வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணை- துப்பாக்கிச் சூடு: 25 சிறுவர்கள் உட்பட 102 தமிழர்கள் படுகொலைSocialTwist Tell-a-Friend