பிரித்தானியா-மில்ரன்கீன்ஸ் நகரில் தமிழர் நலன்புரி அமைப்பினர் ஆர்ப்பாட்ட பேரணி

பிரித்தானியா மில்ரன்கீன்ஸ் தமிழர் நலன்புரியமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு ஆரம்பமானது. குறித்த நேரத்திற்கே மக்கள் அனைவரும் மில்ரன்கீன்ஸ் புகையிரத நிலையத்திற்கு முன்னால் கூடி அங்கிருந்து மத்திய வர்த்தகக் கட்டிடம் முன்பாக கூட்டம் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்ட அடத்திற்கு ஊர்வலமாக கோசங்கள் எழுப்பியவாறு மக்கள் உணர்வெழுச்சியுடன் சென்றனர்.

அங்கு குறித்த அளவிற்கு அதிகமாக மக்கள் வந்தடைந்ததன் காரனமாக காவல் துறையினர் அந்த இடத்தில் அனுமதி மறுத்து பின்னர் உடனடியாகவே புகையிரத நிலையத்திற்கு முன்னால் உள்ள வெளியை ஒழுங்கு பண்ணினர்.
அதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் ஊர்வலமாகவே புகையிரத நிலையம் முன்பாக கூடினர். சுமார் 1500க்கும் அதிகமான மக்கள் முன்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் பிலிப் ஸ்ராக்கி அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில் தனது ஆதரவு தொடர்ந்து தமிழ் மக்களுக்கு இருக்கும் எனவும் அத்துடன் தனது அரசாங்கத்திற்கு அதனை அறிவிப்பதாகவும் உடனடியாக அங்கு போர்நிறுத்தம் வேண்டும் எனவும் வலியுறுத்திக் கூறினார்.

செய்திகள் : தமிழ்வின்

பிரித்தானியா-மில்ரன்கீன்ஸ் நகரில் தமிழர் நலன்புரி அமைப்பினர் ஆர்ப்பாட்ட பேரணிSocialTwist Tell-a-Friend

சிறிலங்காவின் வான், கடல், தரைப் படைகள் இணைந்து வன்னியில் கோரத் தாக்குதல்: 143 தமிழர்கள் படுகொலை; 350 பேர் காயம்

வன்னியில் சிறிலங்காவின் முப்படையினரும் இணைந்து நடத்திய கோரத் தாக்குதல்களில் நேற்றும் இன்றும் 143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 350 காயமடைந்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன்,அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் மாலை வரை சிறிலங்காவின் தரை, கடல், வான் படையினர் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 98 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 265 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் மீது நேற்று முழுநாளும் சிறிலங்காவின் தரை, கடல், வான் படையினர் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 45 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றும் இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களின் போது -தரைப்படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களையும் -கடலில் இருந்து கடற்படையினர் பீரங்கித் தாக்குதல்களையும் -வான் படையினர் எம்.ஐ.-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் மூலம் தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர் என வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

செய்திகள் : புதினம்

சிறிலங்காவின் வான், கடல், தரைப் படைகள் இணைந்து வன்னியில் கோரத் தாக்குதல்: 143 தமிழர்கள் படுகொலை; 350 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

பதுங்குகுழியில் வாழ்கை நடாத்தும் ஆசிரியரின் பேட்டி

வன்னியில் தினந்தினம் அரச படையினரால் நடாத்தப்படும் எறிகணைத் தாக்குதல்களை சமாளிப்பதற்க்காக தினமும் பதுங்குகுழியில் வாழ்க்கை நடாத்தும் ஆசிரியர் ஒருவரின் பேட்டி. இவர் தற்சமயம் மாத்தளன் பகுதியில் வசித்து வருகிறார்.


பதுங்குகுழியில் வாழ்கை நடாத்தும் ஆசிரியரின் பேட்டிSocialTwist Tell-a-Friend

US Subcommittee to hear genocide charges against Sri Lanka

Attorney Bruce FeinIn an invited written testimony to the hearing on "Recent Developments in Sri Lanka" before the Foreign Relations Subcommittee on Middle East and Asia, at the Dirksen Senate Building Tuesday, Bruce Fein, former U.S. associate deputy attorney general, details the recent violence by the Sri Lanka Government against Tamils civilians under "impenetrable media blackout and eviction of all outside observers...has crossed the line into genocide, which justified a criminal investigation under United States laws."

Fein was contacted by Senator Robert Casey’s office (D. Pa.), Chairman of the Senate Foreign Relations Subcommittee on Middle East and South Asia, and was invited to provide written testimony on, “Recent Violence in Sri Lanka” for the official hearing record, Fein said.
Fein's written testimony to U.S Foreign Relations Subcommittee hearings

Memorandum from US Tamil Associations

Written Testimony: Karen Parker

Human Rights lawyer, Karen Parker J.D., and a Group of US Tamil Associations also submitted a written testimony, and a detailed memorandum respectively to the Subcommittee hearings.
The three live witnesses had been previously selected. Senator Casey’s office also informed Fein that the Embassy of Sri Lanka had also been invited to submit a written statement.

Detailing the structural aspects of the slow genocide Fein accuses Colombo of perpertrating against Tamils, the testimony says: "All previous well-known genocides which have occurred since the end of World War II have been characterized by a massive number of murders in a small defined locality occurring in a short time period and carried out by an actor seeking the total physical extermination of a particular ethnic group. The post-1945 genocide cases often cited are: the Holocaust, the Kurds in Iraq, the Srebrenica massacre, and Rwanda.

"
By contrast, Sri Lanka’s genocide against Tamils has taken place over a number of years and is more characterized by widespread, prolonged displacement and destruction of the community’s physical and cultural base than murder. For this and also wider geopolitical reasons, the destruction of the Sri Lankan Tamils is less well-understood in the world at large as a case of genocide," Fein says in the testimony.
Live broadcast of Hearing @ 2:30 p.m. (EST)

Describing the latest violence on Tamils, Fein says "[b]est estimates from neutral persons in Sri Lanka place the death toll of innocent Tamil civilians in the predominantly Tamil northeast over the past two months at more than 2,000. The number of injured probably exceeds 10,000. The number of displaced persons most likely approximates 350,000. None of these figures, however, can be confirmed at present with direct testimony," Fein says.

"The Sinhalese Buddhist GOSL is the reason we are reduced to conjecture. It has imposed a media blackout. It has evicted all NGOs. It has evicted all humanitarian aid workers. It has evicted the Sri Lanka Monitoring Mission. It has evicted the International Committee of the Red Cross. No independent news reporter or neutral witness may observe the conflict between the all Sinhalese “Tamil free” armed forces and security services of Sri Lanka and the Tamil Tigers. Neither are there outside eyewitnesses to the; nor the indiscriminate violence that rains down daily on innocent Tamil civilians whether in hospitals, temples, churches, schools, or “safe zones” - an Orwellian term to describe the forced concentration of Tamil civilians into a tiny area to increase the efficiency of their physical destruction in whole or in substantial part by the Sinhalese majority."
Fein recommends to the Subcommittee to adopt the following measures:

  • Seek an international arms embargo on Sri Lanka in the United Nations Security Council under Chapter 7 of the United Nations Charter;
  • List Sri Lanka (along with Sudan, Iran, Syria, and Cuba) as a state sponsor of terrorism under United States laws, which would trigger various sanctions;
  • Freeze the United States assets of Gotabhaya Rajapaksa and Sarath Fonseka;
  • Deny visas to the GOSL leadership, including President Mahinda Rajapaksa;
  • Vote against economic aid to the GOSL at the World Bank and IMF;
  • Deny Sri Lankan goods favorable tariff treatment;
  • List Mahinda Rajapaksa, Gotabhaya Rajapaksa, and Sarath Fonseka as specially designated terrorists under Executive Order 13224.
  • Support a “One country, two systems” political solution to the ethnic conflict in Sri Lanka.
  • Withdraw the United State Ambassador from Colombo until the genocide and indiscriminate killing of Tamil civilians by the Sinhalese Buddhist GOSL ceases.
and concludes, "[f]or decades, the primary horrors in Sri Lanka have been inflicted on Tamil civilians by the GOSL. Like triage, their plight should be addressed first though genocide prosecutions or otherwise.
Bruce Fein is the counsel for U.S. based legal activist group Tamils Against Genocide.

News : TAMILNET

US Subcommittee to hear genocide charges against Sri LankaSocialTwist Tell-a-Friend

வன்னியில் தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் கொலைவெறித் தாக்குதல்: 22 தமிழர்கள் படுகொலை; 41 பேர் காயம்

வன்னியில் சிறிலங்கா படையினரின் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் இன்றும் 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கம் தானே அறிவித்த மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய 'மக்கள் பாதுகாப்பு வலய'பகுதிகள் மீது இன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் காலை 10:00 மணிவரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர்.
உ.மகேஸ்வரி (வயது 45)
யோ.வனிதா (வயது 21)
ச.தர்மலிங்கம் (வயது 68)
இ.வாகினி (வயது 26)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர் விவரம் கிடைக்கப்பெறவில்லை.
யோ.இந்திராணி (வயது 41)
த.யோகராசா (வயது 41)
இ.ரவீந்திரகுமார் (வயது 39)
வ.ராதிகா (வயது 40)
உ.அனுராஜ் (வயது 18)
த.சரஸ்வதி (வயது 57)
இ.வரன் (வயது 11)
இ.நளினி (வயது 16)
பா.டினேஸ் (வயது 14)
க.அமிர்தலிங்கம் (வயது 52)
பொ.புண்ணியமூர்த்தி (வயது 38)
க.யேந்தபத்மினி(வயது 54)
க.ஆனந்தன் (வயது 34)
ஆ.யுவனேஸ்
நிரோசன் (வயது 26)
சி.புலேந்திரன் (வயது 21)
சு.புஸ்பானந்தன் (வயது 33)
ஆ.குகனேசன் (வயது 27)
பாலேந்திரன் (வயது 26)
புவனேஸ்வரி (வயது 21)
ஆகியோர் காயமடைந்துள்ளனர். ஏனையோரின் பெயர் விவரம் கிடைக்கப்பெறவில்லை.

செய்திகள்: புதினம்

வன்னியில் தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் கொலைவெறித் தாக்குதல்: 22 தமிழர்கள் படுகொலை; 41 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

தொடரும் தமிழின அழிப்பு: பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் வன்னியில் இன்று 21 தமிழர்கள் படுகொலை; 53 பேர் காயம்

வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் 21 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 53 காயமடைந்துள்ளனர்.
மாத்தளன் மருத்துவமனைக்கு அருகில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 5:00 மணியளவில் சிறிலங்கா படையினர் பீரங்கி தாக்குதலை நடத்தியுள்ளனர்.இதில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலின் போது மருத்துவமனையின் சுவர் மற்றும் கூரை என்பன சேதமாகின. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் பெரும் அவலப்பட்டனர்.
கிருசாந்தன் (வயது 17)
இயலவன் (வயது 11)
ப.கமலேஸ்வரி (வயது 40)
ப.தேசிகன் (வயது 07)
த.ஸ்ரீ (வயது 43)
க.லவன் (வயது 13)
ஜெ.பார்த்தீபன் (வயது 20)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கி தாக்குதலில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
த.யசித்தா (வயது 08)
செ. புவனேந்திரன் (வயது 27)
தி. எறப்பதாஸ் (வயது 45)
த. தேசியன்
சி.விஜலட்சுமி (வயது 42)
ந.சிறிதரன் (வயது 40)
சி நிருசன் (வயது 15)
நா.தவமணிதேவி (வயது 49)
த.குயிலன் (வயது 02)
இ.துளசிகன் (வயது 05)
கி. அருளானந்தம் (வயது 33)
ச.திலக் (வயது 30)
ந.சுதாகரன் (வயது 31)
சி.சர்வலட்சுமி (வயது 31)
பூ.தேவி (வயது 35)
ர.கலைச்செல்வி (வயது 19)
ர.உசானந்தன் (வயது 24)
ச.யோகேஸ்வரி (வயது 54)
கு.சர்வானநந்தினி (வயது 21)
ஜெ.சூரியமாலா (வயது 25)
ப.பவித்திரா (வயது 04)
கு.சுரேந்திரன் (வயது 27)
பெ.அமலாம்பிகை (வயது 21)
ப.றெசானி (வயது 13)
செ. பரமேஸ்வரன் (வயது 34)
செ.தர்மசீலன் (வயது 30)
ந.உதயராஜ் (வயது 29)
இ.அருந்தவம் (வயது 23)
த.பன்னீர்செல்வம் (வயது 36)
நா.அருள்ராஜ் (வயது 47)
செ.யம்பக் (வயது 16)
நா.பகீரதன் (வயது 18)
ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீது இன்று பிற்பகல் 4:50 நிமிடமளவில் சிறிலங்கா வான் படையின் மிக்-27 ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 வயதுச் சிறுவன் உட்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ரவீந்திரன் வினித் (வயது 04)
ரவீந்திரன் வினோஜன் (வயது 14)
ரவீந்திரன் மதீனா (வயது 33)
டேவிட் ரவீந்திரன் (வயது 38)
தவராசா அஜந்தன் (வயது 22)
ஆகியோர் உடலங்கள் சிதறி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

செய்திகள் : புதினம்

தொடரும் தமிழின அழிப்பு: பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் வன்னியில் இன்று 21 தமிழர்கள் படுகொலை; 53 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

தொடர்ந்தும் கொலைப் பொறியாகும் 'மக்கள் பாதுகாப்பு வலயம்': 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை

வன்னியில் சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதி மீது இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.வலைஞர்மடம், பொக்கணை ஆகிய 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் இன்று திங்கட்கிழமை காலை 5:30 நிமிடத்துக்கும் பின்னர் பிற்பகல் 3:30 நிமிடத்துக்கும் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 49 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவர்.

செய்திகள்: புதினம்

தொடர்ந்தும் கொலைப் பொறியாகும் 'மக்கள் பாதுகாப்பு வலயம்': 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலைSocialTwist Tell-a-Friend

Statement diplomacy of EU

Significantly deviating from its earlier position of justifying war on 'terrorism', the EU Council Conclusions on Sri Lanka, Monday, stressed the need for Government of Sri Lanka (GOSL) and the LTTE to comply with ‘provisions of international humanitarian law and principles of the laws of war’, treating them as equal parties engaged in war. Taking this stance, the EU called for an immediate Ceasefire. The EU also reiterated its intention to send a Troika as soon as possible. However, the rest of the EU conclusions are the usual rhetoric, ending with the never implemented GSP+investigation on Sri Lanka, political observers said.
Full text of the EU Statement follows:

Council Conclusions on SRI LANKA
2925th GE ERAL AFFAIRS Council meeting
Brussels, 23 February 2009

The Council adopted the following conclusions:

  1. The EU has been following closely developments in Sri Lanka. The EU is deeply concerned about the evolving humanitarian crisis and vast number of Internally Displaced People (IDPs) trapped by the fighting in northern Sri Lanka, as well as the continuing reports of high civilian casualties. To prevent the loss of civilian life, the EU stresses the need for the provisions of international humanitarian law and the principles of the laws of war to be respected by parties to a conflict. The EU calls on the Government of Sri Lanka and the LTTE to comply with these laws.
  2. The EU calls for an immediate cease-fire thereby providing for the establishment of full and unrestricted access, allowing humanitarian aid to be safely delivered and allowing civilians to leave the conflict area. The EU condemns the LTTE's use of violence and intimidation to prevent civilians from leaving the conflict area.
  3. The EU urges the Sri Lankan Government to ensure that the temporary camps for IDPs and the screening process for access to them are in compliance with international standards and that independent monitoring be allowed. The UN, the ICRC, and other humanitarian organizations need to have full access to these camps. These above conditions must be met for the EU to be in a position to provide the required humanitarian assistance.
  4. he EU remains convinced that the long standing conflict in Sri Lanka cannot be resolved by military means. A military defeat of the LTTE will only reemphasize the need to find a political solution in order to ensure a lasting peace. The EU recalls the Co-Chairs Statement issued on 03/02/09 and reiterates its intention to send a Troika as soon as possible.
  5. The EU calls on the LTTE to lay down its arms and to renounce terrorism and violence once and for all, end the inhuman use of child soldiers and forced recruitment, and participate in a political process to achieve a just and lasting solution. The EU calls on the authorities of Sri Lanka to engage in an inclusive political process, which addresses the legitimate concerns of all communities.
  6. The EU remains deeply concerned about grave violations of human rights, in particular the cases of enforced disappearances, extra-judicial killings as well as harassments, intimidations, attacks on the media and human rights defenders and the climate of impunity. The EU calls on the Sri Lankan authorities to take decisive action to tackle human rights abuses, to guarantee press freedom and to disarm paramilitary groups in Government controlled areas. The EU views with concern the draft ‘Prohibition of Forcible Conversions’ bill.
  7. The EU underlines the importance of the Sri Lankan authorities to cooperate in the GSP+ investigation into the effective implementation of the International Covenant on Civil and Political Rights, the Convention against Torture and the Convention on the Rights of the Child."
நன்றி : TamilNet

Statement diplomacy of EUSocialTwist Tell-a-Friend

கொலைக் களமாகும் 'மக்கள் பாதுகாப்பு வலயம்': இன்றும் வன்னியில் 48 தமிழர்கள் படுகொலை; 55 பேர் காயம்

வன்னியில் சிறிலங்கா அரசாங்கம் தான் அறிவித்த மக்கள் பாதுகாப்பு வலய பகுதிக்குள் மக்களை வரவழைத்து கொலைக்களமாக்கி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 55 பேர் காயமடந்துள்ளனர்.'மக்கள் பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த மாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் ஆகிய பகுதிகள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர்.
சிவகுமார் அஐித் (வயது 10)
அ.கமலினி (வயது 06)
புலேந்திரன் (வயது 53)
து.குலசிங்கம் (வயது 65)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வ.குணசிங்கம் (வயது 33)
க.பார்த்தீபன் (வயது 35)
க.அற்புதம் (வயது 04)
அ.இராஜேந்திரம் (வயது 49)
அ.சுகந்தினி (வயது 29)
அ.தனுசன் (வயது 04)
அ.கமலா (வயது 25)
மு.திருஞானசம்மந்தன் (வயது 47)
த.சர்வகலாஜினி (வயது 11)
வேல்பாதம் (வயது 55)
கி.செல்லத்துரை (வயது 55)
சு.ஆறுமுகம் (வயது 67)
ம.மணிமாறன் (வயது 28)
த.இராஐ்குமார் (வயது 26)
க.மனோகரன் (வயது 35)
க.நந்தகுமார் (வயது 58)
கோ.சிலுவைராசா (வயது 28)
மு.இராசேந்திரம் (வயது 42)
ஜெ.உசா (வயது 18)
ஜெ.ஜெனிதன் (வயது 25)
அ.முனியாண்டி (வயது 40)
சி.தர்மேந்திரன் (வயது 28)
செ.தினேஸ்குமார் (வயது 18)
ம.ரூபினி (வயது 17)
ப.சரஸ்வதி (வயது 26)
ஆ.சுகந்தினி (வயது 29)
ஐ.இராசேந்திரம் (வயது 49)
லோகாம்பிகை (வயது 33)
த.தர்சிகா (வயது 21)
து.குலசிங்கம் (வயது 63)
எஸ்.சிலுவைராசா (வயது 28)
க.சிவசத்தியகுமார் (வயது 26)
ம.கருநாணந்தி (வயது 60)
க.மேரி (வயது 22)
செ.சத்தியமூர்த்தி (வயது 50)
க.பகீதரன் (வயது 18)
தே.கேதீஸ்வரன் (வயது 13)
சு.இராணி (வயது 42)
கே.மேரிலூர்த்தி (வயது 64)
அ.சந்திரகலா (வயது 16)
மே.மணிமாலா (வயது 43)
ம.பரஞ்சோதி (வயது 48)
க. சரஸ்வதி (வயது 42)
தே.தவீதராசா (வயது 34)
கா.பரமசிவமூர்த்தி (வயது 55)
நா.சசிக்குமார் (வயது 15)
நா.ஜெனிராஐ் (வயது 22)
சி.நல்லையா (வயது 52)
பா.லோகன் (வயது 30)
செ.கனகாம்பிகை (வயது 50)
சு.குவேந்திரவதனி (வயது 35)
பெ.கதிர்வேலு (வயது 72)
செ.சரோஐா (வயது 35)
அ.பிரியங்கா (வயது 17)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

செய்திகள்: புதினம்

கொலைக் களமாகும் 'மக்கள் பாதுகாப்பு வலயம்': இன்றும் வன்னியில் 48 தமிழர்கள் படுகொலை; 55 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

இலண்டனில் கவனஈர்ப்பு போராட்டம்


பிரித்தானிய மக்களுக்கு ஈழத் தமிழரின் இன்றைய அவல நிலை குறித்து விளக்கும் முகமாகவும், சிறிலங்காவின் தமிழினச் சுத்திகரிப்பை அம்பலப்படுத்துவதற்காகவும் நேற்று இலண்டனில் பல நகரங்களிலும் ஏக காலத்தில் தமிழ் மக்கள் தாயக அவலம் பற்றிய காட்சிகள் கொண்ட பதாதைகள் தாங்கியவாறு வாகனங்களிலும், கால்நடையாகவும் கவன ஈர்ப்பில் ஈடுபட்டனர்.
காலை10மணி தொடக்கம் மாலை 4 மணி வரையும் நடந்த இந்தக் கவன ஈர்ப்பில், புலம்பெயர் தமிழர் தங்கள் இடங்களிலிருந்து மத்திய இலண்டன் பகுதியை நோக்கி வாகனங்களில் சிறிலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழரின் படங்களை ஒட்டியவாறு சென்றனர்..

இதனைப் பார்த்த பலர், இலங்கையில் நடக்கும் தமிழின அழிவைப்பற்றி கேட்டறிந்ததுடன், தங்களால் இவ்அழிவைத் தடுக்க எவ்விதமான உதவிகளை செய்யலாமெனவும் இனி வரும் காலங்களில் தாங்களும் ஒன்று சேர்ந்து இது போன்ற போராட்டங்களில் பங்குபற்ற விரும்புவதாகவும் தெரிவித்தனர்.பிரித்தானிய அரசு தமது நலன்களுக்காக சிறிலங்காவின் தமிழின ஒழிப்பை மறைத்து வரும் இவ்வேளையில், பிரித்தானிய மக்கள் மத்தியில் இந்த கவன ஈர்ப்பு பாரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

'வீரத் தமிழன்' முருகதாசன் தொடர்பாக நேற்றைய தினம் நீண்ட செய்திக் குறிப்பொன்றை பிரித்தானிய முதல் நிலை செய்தித் தாள்களில் ஒன்றான கார்டியன் வெளியிட்டிருந்தது.இந்த செய்திக்கு பிறகு பிரித்தானிய மக்கள் மத்தியில் ஈழத்தமிழர் அவலம் பற்றிய விழிப்பு தோன்றிவரும் இவ்வேளையில் இப்படியான போராட்டங்கள் அதிகாரவர்க்கத்தின் முகத்திரையை கிழிக்க உதவும் என பிரித்தானிய செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

"வியட்நாம் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக அமெரிக்க அரசு முனைப்பாக செயற்பட்ட காலங்களில் இவ்வாறான படங்கள் கொண்ட கவன ஈர்ப்பு போராட்டங்களே அமெரிக்க மக்களின் மனமாற்றத்துக்கும், கொள்கை வகுப்பாளர்களின் கொள்கை மாற்றத்துக்கும் காரணமாக அமைந்தது" என இந்த கவன ஈர்ப்பை பார்த்த, இரண்டாம் உலக யுத்தத்தில் பங்கு பற்றிய ஒரு முதியவர் குறிப்பிட்டார், அவர் மேலும் கூறுகையில் இப்படியான போராட்டங்கள் தொடர்ந் து பல நகரங்களிலும் செய்யப்படவேண்டும் என்றார்.

செய்திகள்,படங்கள் : தமிழ்வின்

இலண்டனில் கவனஈர்ப்பு போராட்டம்SocialTwist Tell-a-Friend

வன்னியில் மக்கள் வாழ்விடங்கள் மீது இன்றும் எறிகணைத் தாக்குதல்: 17 தமிழர்கள் பலி; 43 பேர் காயம்

வன்னிப்பெரு நிலப்பரப்பில் பொதுமக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர்.புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.'மக்கள் பாதுகாப்பு வலயம்' என அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த இரண்டு இடங்களிலும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 35 தமிழர்கள் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் மீது இன்று பிற்பகல் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனா்.
வினோஜன் (வயது 09)
இ.இசைக்கீதன் (வயது 19)
வி.நளாஜினி (வயது 36)
ந.சிவகுமார் (வயது 30)
க.விமல் (வயது 30)
ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட வலைஞர்மடத்தில் இன்று பிற்பகல் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 2 தமிழர்கள் காயமடைந்துள்ளனர். பி.விநாயகன் (வயது 21) மற்றும் வீ.விஜேந்திரன் (வயது 29) ஆகியோர் காயமடைந்துள்ளனர்.இதேவேளை, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமி ஒருவர் இன்று சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.யாழ். வடமாராட்சி உடுத்துறையைச் சேர்ந்த பொன்னுத்துரை சுமதா (வயது 10) என்பவரே உயிரிழந்துள்ளார்.

செய்திகள்:புதினம்

வன்னியில் மக்கள் வாழ்விடங்கள் மீது இன்றும் எறிகணைத் தாக்குதல்: 17 தமிழர்கள் பலி; 43 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

முருகதாசனுக்கு ஜெனீவாவில் உலகத்தமிழர்கள் வீரவணக்கம்


சுவிற்சா்லாந்து ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் ஒன்றுகூடலில் அணிதிரண்ட தமிழர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் புரிந்த 'வீரத் தமிழன்' முருகதாசனுக்கு மலர் வணக்கத்தை செலுத்தியுள்ளனர்.ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கடந்த வியாழக்கிழமை (12.02.09) தீக்குளித்து உயிர்த்தியாகம் புரிந்த 'வீரத் தமிழன்' முருகதாசனுக்கு ஐரோப்பாவின் பல பாகங்களில் இருந்தும் திரண்டு வந்த தமிழர்கள் மலர் வணக்கத்தை செலுத்தினர்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு அருகில் உள்ள தேவாலயத்தில் 'வீரத் தமிழன்' முருகதாசனின் உடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10:30 நிமிடத்துக்கு மலர் வணக்கத்துக்காக வைக்கப்பட்டது. ஈழத்தில் தமிழர்கள் மீது சிறீலங்கா அரசு திணித்துள்ள போரினால் மக்கள் படும் அவலத்தைக் கேட்டும், காணொளியில் கண்டும் அதனால் மனம் நொந்த 'வீரத் தமிழன்' முருகதாசன், தாயகத்தில் நிலவும் அவலத்தை உலக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வரும் நோக்கோடு தன்னையே தீக்கு இரையாக்கிய செய்தி கேட்டு துடித்த தமிழர்கள் தமது வணக்கத்தை செலுத்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே தேவாலயத்திற்கு அணி திரண்டு வந்தனர்.

வணக்கத்தை முடித்துக்கொண்ட மக்கள் தங்களது உள்ளக்குமுறலை உலக சமூகத்திற்கு எடுத்துக்கூற பேரணியில் கலந்து கொள்வதற்கு ஜெனீவா பிரதான தொடரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பூங்காவிற்குச் சென்றனர்.

செய்திகள்,புகைப்படங்கள் : புதினம் இணையம்

முருகதாசனுக்கு ஜெனீவாவில் உலகத்தமிழர்கள் வீரவணக்கம்SocialTwist Tell-a-Friend

BBC தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இலங்கைத்தூதுவரின் கருத்துக்கள்

இலங்கை தொடர்பான செய்திகளை தமிழக தொலைக்காட்சிகள் (மக்கள் தொலைக்காட்சி தவிர ) வெளியிடுகின்றனவோ இல்லையோ வெளிநாட்டு தொலைக்காட்சிகள் கடமைக்கேனும் வெளியிடுகின்றன.அந்தவகையில் BBC தொலைக்காட்சி ஒர் செய்தித்தொகுப்பினை ஒளிபரப்பியிருந்தது.



நன்றி : BBC

BBC தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இலங்கைத்தூதுவரின் கருத்துக்கள்SocialTwist Tell-a-Friend

"வெள்ளை மாளிகை" முன்பாக வட அமெரிக்க தமிழர்கள் நாளை பிரமாண்டமான பேரணி: எல்லோரையும் அணிதிரள வேண்டுகோள்!

தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசால் முன்னெடுக்கப்படும் இன அழிப்புப் போரை நிறுத்தி, வன்னி மக்களைக் காப்பாற்றுமாறு அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவை கோரும் பிரமாண்டமான தமிழர் பேரணி அமெரிக்கத் தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காலத்தின் தேவையும், கட்டாயமும் கருதி இந்தப் பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு வட-அமெரிக்கத் தமிழர்கள் எல்லோரையும் பேரணி ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றார்கள்.அரச தலைவர் பராக் ஓபாமாவையும் அமெரிக்க வெளியுறவு இராஜாங்கச் செயலர் ஹிலறி கிளின்டன் அம்மையார் அவர்களையும் நாம் வேண்டிக் கேட்கவுள்ளோம்" என இந்த பேரணி ஏற்பாட்டின் செய்தித் தொடர்பாளர் வோசிங்டன் டி.சி. நகரில் இருந்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் -
மரியாதைக்குரிய பராக் ஒபாமா அவர்கள், அமெரிக்காவின் அரச தலைவராக மட்டுமன்றி, இந்த உலகத்தின் தலைவராகவும் ஆகி - நீதி மறுக்கப்பட்ட மக்களின் ஒரே நம்பிக்கை ஒளியாக இன்று விளங்குகின்றார். அதனாலேயே எமக்கான நீதி கிடைக்க வழி செய்யுமாறு கேட்டு நாங்களும் அவரிடம் போகின்றோம்
அதுமட்டுமல்லாது -
அமெரிக்காவின் முன்னைய நிர்வாகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற கொள்கை தான், அரசியல் அபிலாசைகளுக்கான நியாயமான எங்கள் விடுதலைப் போரை, "பயங்கரவாதம்" எனத் தவறாகக் கொச்சைப்படுத்தி தமிழர்களை இன்றும் சீரழிக்கின்றது.
பழைய அமெரிக்க நிர்வாகத்தின் அந்த கொள்கையை அடிப்படையாக வைத்துப் போரை நடத்தித்தான், சிறிலங்கா இன்றும் எம் மக்களைக் கொன்று குவிக்கின்றது. அந்த வகையில் தமிழர்கள் மீது பூசப்பட்டுள்ள இந்த "பயங்கரவாத"ச் சாயத்தை அகற்றி - எமக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டிய ஒரு தார்மீகக் கடமையும் அதிபர் ஒபாமா அவர்களுக்கு உண்டு. அதனாலேயும் தான் நாம் அவரிடம் செல்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர், வட அமெரிக்கத் தமிழர்களை நோக்கிய ஒரு செய்தியாக -
"வட-அமெரிக்காவில் வாழ்கின்ற எங்களால், வன்னி மக்களுக்காக இன்று செய்யக் கூடிய ஆகக் குறைந்தது இது தான். அதனால், வட-அமெரிக்கத் தமிழர்கள் எல்லோரையும் - அவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் சரி, கனடாவில் வாழ்ந்தாலும் சரி - உரிமையோடு வற்புறுத்தி, அன்போடு கட்டாயப்படுத்தி," இந்தப் பேரணிக்கு வருமாறு அழைப்பு விடுத்த அவர்

அமெரிக்காவிலும், கனடாவிலும் - எல்லா மாநிலங்களிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் இந்த பேரணிக்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்கின்றனர் எனவும், அதனால், பயண உதவி தேவையான தமிழர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள செயற்பாட்டாளர்களை நேரடியாகவோ, அல்லது info@tamilsagainstgenocide.org என்ற மின்னஞ்சல் முகவரியில் பேரணி ஏற்பாட்டின் மையச் செயலகத்தையோ தொடர்பு கொள்ளுமாறும் வேண்டிக்கொண்டார்.

அதேவேளை, இந்த பேரணி நடைபெறும் அதே நேரத்தில் - அதே இடத்தில் - சிறிலங்கா அரசால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு பேரணியும் நடைபெறவுள்ளது பற்றி கருத்து தெரிவித்த அவர் -

சிறிலங்கா அரசால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்த பேரணியையும் மீறி எமது குரல் அரச தலைவர் ஒபாமாவுக்கும், அமெரிக்க அரசுக்கும் கேட்க வேண்டும் என்பதற்காகவே, பல்லாயிரக்கணக்கில் அங்கு அணிதிரளுமாறு தமிழர்களிடம் நாம் வேண்டுகின்றோம் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் -
"இந்த நாடு அழகானது யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எந்தக் கருத்தையும் வெளியிடும் சுதந்திரத்தை இது எல்லோருக்கும் கொடுத்திருக்கின்றது. சிறிலங்காவின் பேரணியில் பங்கேற்போருக்கு இருக்கும் இந்த உரிமைகளை நாம் மதிக்கின்றோம்," என்று தெரிவித்ததுடன் -

"தமிழர்களாகிய நாம் மிகவும் பண்பான ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த உலகின் மரியாதைக்கும் உரியவர்கள். எங்களது இந்தப் பெருமைகளை நாம் காக்க வேண்டும். அதனால், பேரணியில் பங்கேற்கும் தமிழர்கள் - எந்த வகையான ஆத்திரமூட்டல் செயல்களுக்கும் உள்ளாகாமல் - பொறுமையுடனும் நிதானத்துடனும் எங்கள் கோரிக்கைகளை வலிமையுடன் முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். அப்போது தான் நாம் சொல்கின்ற செய்தி உரியவர்களுக்கு சரியாகப் போய்ச் சேரும்" எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

செய்திகள் : புதினம்

தொடர்புடைய முந்திய பதிவொன்று =>


"வெள்ளை மாளிகை" முன்பாக வட அமெரிக்க தமிழர்கள் நாளை பிரமாண்டமான பேரணி: எல்லோரையும் அணிதிரள வேண்டுகோள்!SocialTwist Tell-a-Friend

வன்னியில் இன்று அதிகாலையிலிருந்து அகோர எறிகணைத் தாக்குதல்: 46 தமிழர்கள் படுகொலை 126 பேர் காயம்

வன்னிப் பகுதியில் இன்று அதிகாலையில் இருந்து சிறிலங்கா படையினர் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர்.புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் 24 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இவர்களின் உடலங்கள் உறவினர்களால் அந்த அந்த இடங்களிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளன.இரணைப்பாலை, ஆனந்தபுரம், வலஞர்மடம், மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று அதிகாலை 2:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் 10 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 70 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
நா.சிவகுமார் (வயது 29)
க.பாலசுந்தரம் (வயது 45)
பா.பவானி (வயது 38)
சி.அனுசா (வயது 22)
தி.நளாயினி (வயது 33)
க.நாதன்லேக்கா (வயது 16)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்களின் உடலங்களை உறவினர்கள் அடக்கம் செய்துவிட்டு சென்ற காரணத்தினால் பெயர் விவரம் கிடைக்கப்பெறவில்லை.
இதில் வலைஞர்மடம் சிறிலங்கா படையினர் அறிவித்த 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

வலைஞர்மடத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கிருஸ்ணபிள்ளை இசைக்கீரன் (8 மாதம்)
கிருஸ்ணபிள்ளை சயந்தன் (வயது 05)
கிருஸ்ணபிள்ளை யதுர்சன் (வயது 05)
ஆகிய மூவரும் சகோதரர்கள் ஆவர்.

போ.புஸ்பலதா (வயது 07)
ந.கமலேஸ்வரி (வயது 26)
ஜீனஸ்ரீ (வயது 19)
பு.ராமசாமி (வயது 52)
அ.நாகம்மா (வயது 61)
யோ.அந்தோனிப்பிள்ளை (வயது 65)
ச.மயூரன் (வயது 15)
இ.குமுதா (வயது 26)
வ.வசந்தரூபன் (வயது 28)
சி.ரத்தினம் (வயது 58)
கு.விஜயஸ்ரீ (வயது 28)
ச.சின்னத்தம்பி (வயது 82)
ஜெ.பிலோமினா (வயது 32)
அ.நீதினி (வயது 54)
க.இராசேந்திரன் (வயது 32)
ந.நந்தகுமாரி (வயது 30)
வ.சிவராசா (வயது 50)
க.துர்க்கா (வயது 12)
த.பாலகுமார் (வயது 28)
கு.சுரேஸ் (வயது 33)
செ.சின்னம்மா (வயது 62)
த.சூரியகுமார் (வயது 32)
கி.சேகர் (வயது 28)
அ.விவேகானந்தன் (வயது 60)
பெ.நடராசா (வயது 52)
த.சக்திவேல் (வயது 32)
பவானந்தி (வயது 32)
மா.தியாகராசா (வயது 68)
த.குகானந்தன் (வயது 36)
க.கிருஸ்ணபிள்ளை (வயது 75)
சி.பவானி (வயது 42)
க.விமல் (வயது 30)
ந.ஜெயபாலன் (வயது 30)
க.சரோசினிதெவி (வயது 39)
து.கிருபாயினி (வயது 31)
பரமேஸ்வரி (வயது 56)
செல்வரஞ்சிதம் (வயது 60)
தவதர்சன் (வயது 17)
குமுதா (வயது 10)
ஜெயரூபன் (வயது 35)
மகாலிங்கம் (வயது 55)
ஜெயந்தன் (வயது 23)
புஸ்பமாலா (வயது 64)
நிலவன் (வயது 29)
குணபாலசிங்கம் (வயது 33)
சு.சந்திரன் (வயது 26)
சி.பிறேசன் (வயது 09)
பசுமதிசுதா (வயது 26)
ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்களின் பெயர் விவரம் கிடைக்கப்பெறவில்லை.

முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளரும் நெக்கட் பணிப்பாளருமான திருமதி சிறீகந்தராசா சாந்தி (வயது 43) இடது காலினை இழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பில் உள்ள பொக்கணை பகுதி மீது இன்று காலை 7:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர்.

செய்திகள்: புதினம்

வன்னியில் இன்று அதிகாலையிலிருந்து அகோர எறிகணைத் தாக்குதல்: 46 தமிழர்கள் படுகொலை 126 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகதின் முன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.


இலங்கையில் நடைபெறுகின்ற தமிழின சுத்திகரிப்பை உடனே தடுத்து நிறுத்தக்கோரி பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதுவராலயத்தின் முன்னால் பிரித்தானியத் தமிழ் மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை புதன்கிழமை 10மணிமுதல் மதியம் 2 மணிவரை முன்னெடுக்கப்பட்டது.

குழந்தைகள், முதியவர்கள் என வயது வேறுபாடின்றி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றி தங்களது உணர்வுகளை கோஷமிட்டு வெளிப்படுத்திமை வீதியால் சென்ற அனைவரினதும் நெஞ்சை உருக்குவதாய் அமைந்திருந்தது.
அங்கு கூடியிருந்த மக்கள்:
"இந்தியா இந்தியா இலங்கையில் நடக்கும் போரை நிறுத்து"
"நிறுத்து நிறுத்து ஆயுத உதவியை நிறுத்து"
"நிறுத்து நிறுத்து நிதி உதவியை நிறுத்து"
"உதவு உதவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவு"
"இந்திய அரசே கண்ணைத் திறந்து பலியாகும் தமிழனைப் பார்"
"ஜ நா தடை செய்த கொத்துக்குண்டு தமிழனை கொள்வது தெரியவில்லையா?"
"வேண்டும் வேண்டும் சமாதானம் வேண்டும்"
"வேண்டும் வேண்டும் தமிழீழமே வேண்டும்"
போன்ற பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் தமது ஆதங்கங்களை இந்திய அரசின் துரோகத்தனத்திற்கெதிராக வெளிப்படுத்தினர் .

பிரித்தானிய தழிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் மகளிர் அமைப்பு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு இந்த ஏற்பாட்டை செய்திருந்தனர் ஆர்ப்பாட்டதின் முடிவில் இந்திய தூதுவராலயத்தில் மனு கையளிக்கப்பட்டது.

செய்திகள், புகைப்படங்கள்: தமிழ்வின்

பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகதின் முன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.SocialTwist Tell-a-Friend

வன்னியில் புதன் அதிகாலை சிறிலங்கா கோரத் தாக்குதல்: 49 சிறுவர்கள் உட்பட 108 தமிழர்கள் தூக்கத்திலேயே கொத்துக் குண்டுகளுக்கு பலி; 223 காயம்

வன்னியில் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளில் இன்று புதன்கிழமை அதிகாலை வேளை சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களில் 108 தமிழர்கள் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 223 பேர் காயமடைந்துள்ளனர்.
"மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை இருளில் 2:00 மணி தொடக்கம் 5:00 மணிவரை கொரடூரமான கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

ஆட்லெறி கொத்துக் குண்டுகள், மோட்டார் எறிகணைகள், பல்குழல் வெடிகணைகள் என 200-க்கும் அதிகமான குண்டுகள் இன்று அதிகாலை மக்கள் மீது வீழ்ந்து வெடித்துள்ளன.
தூக்கத்தில் இருந்த பெருமளவிலான மக்கள் படுகொலை செய்யப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.கொல்லப்பட்டவர்களில் 49 சிறுவர்களும், 21 பெண்களும் அடங்குவர்.
அப்பகுதியில் இருந்து மக்களின் பெரும் ஓலங்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளதாகவும் "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளார்.அதிகாலை வேளை இருளில் நடைபெற்ற தாக்குதல் என்பதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து - அவலப்பட்டு - நாலாபக்கமும் சிதறி ஓடிய வண்ணம் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
மேலதிக தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

செய்திகள் : புதினம்

வன்னியில் புதன் அதிகாலை சிறிலங்கா கோரத் தாக்குதல்: 49 சிறுவர்கள் உட்பட 108 தமிழர்கள் தூக்கத்திலேயே கொத்துக் குண்டுகளுக்கு பலி; 223 காயம்SocialTwist Tell-a-Friend

இலங்கையில் போரில் சிக்குண்டுள்ள மக்களின் அவல நிலை குறித்து ஐ.நா. கவலை

கடந்த சில நாட்களாக இலங்கையின் போர் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களின் நலன் குறித்த கவலை அதிகரித்து இருப்பதாக ஐ.நா மன்றம் கூறியிருக்கிறது.
இலங்கையில் உள்ள ஐ.நா. மன்ற வதிவிட மனித நேய ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், பாதுகாப்பு வலயம் என்று ஒரு பகுதி அரசால் அறிவிக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு ஓரளவு நிம்மதி ஏற்பட்டிருந்தாலும், நேற்றிலிருந்து அந்தப்பகுதியிலும் சண்டை நடப்பதாக செய்திகள் கூறுவதாக கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் செறிந்து தங்கியுள்ள பகுதிகளில் சண்டையை தவிர்க்குமாறு இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் இருதரப்பாரையுமே, ஐ.நாமன்றத்தின் இவ்வறிக்கை கோரியிருக்கிறது.

பொதுமக்கள் போர்ப் பிரதேசங்களிலிருந்து வெளியேறுவதை விடுதலைப்புலிகள் தொடர்ந்து தீவிரமாக தடுத்து வருவதாகக் கூறும் ஐ.நா.மன்றம், வெளியேறும் மக்கள் சுடப்படும் மற்றும் சில சமயங்களில் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருவதாகக் கூறுகிறது.

ஐ.நா. மன்றத்தின் 15 பணியாளர்கள், அவர்களின் 35 பெண்கள் மற்றும் 40 குழந்தைகள் உள்ளிட்ட 75 குடும்ப உறுப்பினர்கள், விடுதலைப்புலிகளால் இந்தப் பகுதியிலிருந்து வெளியேறாமல் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கூறும் இந்த அறிக்கை, இந்த குழந்தைகளில் 15 குழந்தைகளுக்கு சுவாசம் தொடர்பான வியாதிகள் வந்திருப்பதாகவும், இது அந்தப்பகுதியில் மனித நேய உதவி அனுப்பபடவேண்டியதன் அவசியத்தைக் காட்டுவதாகவும் கூறுகிறது.

இந்த ஐ.நா.மன்ற பணியாளர்களில் ஒருவர் விடுதலைப்புலிகளால் ஞாயிறன்று பலவந்தமாக அவர்களது படையணியில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறும் இந்த அறிக்கை, 14 வயதே ஆன சிறார்கள் விடுதலைப்புலிகளால் அவர்களது அணியில் சேர்க்கப்பட்டுவருவதாகத் தெரிவதாகவும் கூறியிருக்கிறது.

இவ்வாறு சேர்க்கப்பட்ட ஐ.நா. மன்றப் பணியாளரை விடுதலைப்புலிகள் உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும், வெளியேற விரும்பும் மக்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்றும் ஐ.நா.மன்றம் கோருகிறது.

உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் உடனடியாக வன்னிப் பகுதியில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு வழங்கப்படவேண்டிய தேவை இருப்பதை சுட்டிக்காட்டும் ஐ.நா.மன்றம், இருதரப்புகளும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு ஒழுங்கான மற்றும் மனிதநேய அடிப்படையிலான தீர்வைக் காணவேண்டும் என்றும் கோரியிருக்கிறது.

செய்திகள்: தமிழ்வின்

இலங்கையில் போரில் சிக்குண்டுள்ள மக்களின் அவல நிலை குறித்து ஐ.நா. கவலைSocialTwist Tell-a-Friend

தமிழீழத்தை விடிவிக்க ஐரோப்பிய இளையோரே ஒன்றிணையுங்கள்

தமிழீழத்தை விடிவிக்க ஐரோப்பிய இளையோரே ஒன்றிணையுங்கள்SocialTwist Tell-a-Friend

"மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகள் மீது கொத்துக்குண்டு எறிகணை தாக்குதல்: 53 தமிழர்கள் படுகொலை; 158 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் மற்றும் தேவிபுரம் ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினர் நேற்றும் இன்றும் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 158 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு மற்றும் மாத்தளன்
புதுக்குடியிருப்பு மற்றும் மாத்தளன் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கம் இன்று காலை வரை சிறிலங்கா படையினர் கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 34 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தேவிபுரம் - ஞாயிற்றுக்கிழமை இரவு
தேவிபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதியில் இடம்பெயர்ந்த மக்களை இலக்கு வைத்து நேற்று இரவு சிறிலங்கா படையினர் கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.இதில் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
கபிலன் (வயது 07)
முகிலன் (வயது 10)
கீர்த்தனா (வயது 12)
சாரங்கன் (வயது 10)
துசியந்தினி (வயது 37)
ஆறுமுகம் (வயது 88)
சந்திரகலா (வயது 49)
பாலசுப்பிரமணியம் (வயது 67)
தர்மரத்தினம் (வயது 49)
சிவபாக்கியம் (வயது 48)
எழிலரசி (வயது 37)
ஆகியோர் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தேவிபுரம் - திங்கட்கிழமை காலை
தேவிபுரம் "மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது இன்று அதிகாலை முதல் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 89 பேர் காயமடைந்துள்ளனர்.
தேவிபுரம் பகுதியில் மக்களுக்கான உணவு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் மூன்று பணியாளர்களும் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பெ.சுப்பிரமணியம் (வயது 40)
சு. சிவகுமார் (வயது 32)
பெ.இராசேந்திரம் (வயது 30)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் மருந்துப் பொருட்கள் முடிவடைந்த காரணத்தினால் கடந்த இரண்டு நாட்களில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

செய்திகள்: புதினம்

"மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகள் மீது கொத்துக்குண்டு எறிகணை தாக்குதல்: 53 தமிழர்கள் படுகொலை; 158 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

CNN தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாயக மக்களின் அவலத்தின் சிறுதுளி



நன்றி CNN

CNN தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாயக மக்களின் அவலத்தின் சிறுதுளிSocialTwist Tell-a-Friend

வெள்ளை மாளிகைக்கு முன் அணி திரளுங்கள்



வெள்ளை மாளிகைக்கு முன் அணி திரளுங்கள்SocialTwist Tell-a-Friend

கொலைப் பொறி ஆகின்றது புதுப் "பாதுகாப்பு வலயம்": வன்னியில் நேற்றும் இன்றும் 134 தமிழர்கள் படுகொலை; 208 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் மற்றும் கோம்பாவில் பகுதியிலும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 208 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுமாத்தளன் - சனிக்கிழமை இரவு
சிறிலங்கா படையினரின் "பாதுகாப்பு வலயம்" என்ற அறிவிப்பை அடுத்து புதுமாத்தளன் பகுதியில் மக்கள் மிகச் செறிவாக அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் அவர்களை கொன்றொழிக்கும் நோக்குடன் தாக்குதகள் சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. புதுமாத்தளன் நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்தும் அப்பகுதி மக்கள் வாழ்விடங்களை இலக்கும் வைத்தும் சிறிலங்கா படையினர் செறிவான ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 12 சிறுவர்கள் உட்பட 78 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 132 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுமாத்தளன் - ஞாயிற்றுக்கிழமை காலை
புதுமாத்தளன் "மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுமாத்தளன் - ஞாயிற்றுக்கிழமை மாலை
இதே பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழைமை பிற்பகல் 3:00 மணியளவில் பொதுமக்களை நோக்கி சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் -
யோ.ஜெகதீபன் (வயது 16)
செல்வராசா செல்வகுமார் (வயது 32)
சி.திருச்செல்வம் (வயது 33)
சு.குகாஜினி (வயது 35)
பு.இராசம்மா (வயது 55)
சோ.யோகானந்தராசா (வயது 47)
வ.நிசாந்தன் (வயது 26)
சி.காமினிதேவி (வயது 63)
சி.நாகவதனி
ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் - இரண்டு ஆண்கள் மற்றும் பெண் ஒருவரின உடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் மக்கள் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதியில் உள்ள மக்கள் வாழ்விடம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அம்பலவன்பொக்கணை
அம்பலவன்பொக்கணை "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதி மீது இன்று ஞாயிறு இரவு 7:35 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியதில் ஒரு சிறுவன் உட்பட 5 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு
புதுக்குடியிருப்பு பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து நேற்று சனிக்கிழமை இரவு 10:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத்தாக்குதலில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் 5 சிறுவர்களும் 4 பெண்களும் அடங்குவர்.பூநகரியைச் சேர்ந்த இவர்களின் 3 குடும்பத்தினரும் ஒன்றாக இடம்பெயர்ந்து பல இடங்களில் தங்கியிருந்து, கடைசியாக புதுக்குடியிருப்புக்கு வந்து தற்காலிக கொட்டகை கட்டி தரித்திருந்த வேளையில் சிறிலங்கா படையினர் இவர்கள் மீது கொத்துக்குண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.இதில் சம்பவ இடத்திலேயே 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உடலங்கள் அந்த இடத்திலேயே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் அவர்கள் தற்காப்புக்காக வெட்டியிருந்த திறந்த காப்பகழிகளில் அடக்கம் செய்யப்பட்டன.

கோம்பாவில்
கோம்பாவில் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 10:15 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் கொத்துக் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மகேந்திரன் மற்றும் பத்மநாதன் ஆகியோரின் குடும்பங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

மகேந்திரன் சுபாஜினி (வயது 14)
மகேந்திரன் சஞ்சீவன் (வயது 20)
செல்லையா மகேந்திரன் (வயது 80)
மகேந்திரன் சுலோசனாதேவி (வயது 51)
மகேந்திரன் சோபிதா (வயது 26)
மகேந்திரன் தயாளினி (வயது 25)
செல்லையா இராசம்மா (வயது 69)
வி.பத்மநாதன் (வயது 38)
பத்மநாதன் தமிழனி (வயது 01
பத்மநாதன் ரேணுசா (வயது 03)
பத்மநாதன் கோகிலராணி (வயது 06)
பத்மநாதன் சோதிஜா (வயது 09)
பத்மநாதன் கேதீஸ்வரி (வயது 31)
ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 4 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் உடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

செய்திகள்: புதினம்

கொலைப் பொறி ஆகின்றது புதுப் "பாதுகாப்பு வலயம்": வன்னியில் நேற்றும் இன்றும் 134 தமிழர்கள் படுகொலை; 208 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

பயங்கரவாத அரசின் தமிழ் இன அழிப்பின் கொடூரம்: தமிழ் பெண்களை கட்டாய கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள படை உத்தரவு

வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படையின் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக வவுனியா மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது உயிராபத்தைக் கருத்தில் கொண்டு தனது பெயரை வெளியிட வேண்டாம் என வேண்டிக்கொண்ட வவுனியா மருத்துவமனையில் உயர் பொறுப்பு வகிக்கும் மருத்துவ அதிகாரி ஒருவர், இந்த அதிர்ச்சித் தகவலை நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே போரினால் அவலப்பட்டு வரும் தமிழ் கர்ப்பிணிப் பெண்களை, கருக்கலைப்பு செய்து கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றி கருக்கலைப்புக்கு உடன்பட வைக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சில பெண்கள், சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட அனுமதி விண்ணப்ப படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைக்கப்பட்ட பின்பு கருக்கலைப்புக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.

நிம்மதி இல்லாமையாலும், நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவதாலும், ஏமாற்றப்பட்டதாலும் பல பெண்கள் ஏற்கெனவே கருக்கலைப்பு செய்து கொண்டு விட்டதாக அந்த மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

சிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதியில், சிறிலங்கா படை அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு உட்பட்டு செயற்பட வேண்டியிருப்பதால் தமிழர்களாக இருந்துகொண்டே இளம் தமிழ் சந்ததி ஒன்றை அழிக்கும் வேலைக்கு துணை போக வேண்டி இருப்பதாக வவுனியா மருத்துமனை தமிழ் மருத்துவ அதிகாரிகள் பலர் வேதனைப்படுவதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மருத்துவ அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்

செய்திகள் : தமிழ்வின்

பயங்கரவாத அரசின் தமிழ் இன அழிப்பின் கொடூரம்: தமிழ் பெண்களை கட்டாய கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள படை உத்தரவுSocialTwist Tell-a-Friend

காயமடைந்தோர் (400 நோயாளரில் 250நோயாளர் )கப்பல் மூலம் வெளியேறினர்



காயமடைந்தோர் (400 நோயாளரில் 250நோயாளர் )கப்பல் மூலம் வெளியேறினர்SocialTwist Tell-a-Friend

புலம்பெயர் மக்களால் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி மரணம்

சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி மரணமடைந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாயகத்தில் இருந்து தாயகத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள் வழியாகவும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தவர் சத்தியமூர்த்தி ஆவார்.

வன்னியில் உள்ள ஊடக இல்லத்தில் இருந்து ஊடகப் பணியை இவர் ஆற்றி வந்த இவர், யாழ். மண்டைதீவை தாய் மண்ணாகக் கொண்டவர்.

மட்டக்களப்பு பொலன்னறுவ மன்னம்பிட்டியில் நீண்டகாலம் வாழ்விடமாகக் கொண்ட இவர், ஒரு பிள்ளையின் தந்தையும் ஆவார்.
நாளை அது நானாக இருக்கலாம். - சத்தியமூர்த்தி அவர்களின் பேட்டி ஒன்றிலிருந்து




புலம்பெயர் மக்களால் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி மரணம்SocialTwist Tell-a-Friend

வன்னியில் படையினரின் எறிகணை வீச்சில் நேற்று (புதன்) 34 பொதுமக்கள் படுகொலை; 46 பேர் காயம்: மருத்துவமனை மீதும் தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டம் தேவிபுரம், வள்ளிபுனம் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 34 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் காயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்ட 15 பேர், போதிய மருத்துவ சிகிச்சை வசதிகள் ஏதும் அற்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.

நீண்ட தூர போக்குவரத்து, சீரற்ற பாதை, மக்கள் பல்லாயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து கொண்டிருப்பதால் ஏற்பட்ட நெரிசல், சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல் என்பவற்றால் காயமடைந்தோரை மருத்துவ சிகிச்சைக்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட தாமதமும் காயமடைந்தோர் அநியாயமாக உயிரிழக்க காரணமாகி விட்டன.

மருத்துவமனை மீது தாக்குதல்

இதேவேளை, தேவிபுரத்தில் இயங்கி வரும் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது நேற்று அதிகாலை 1:00 முதல் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதனால் மருத்துவமனையில் இருக்கும் நோயாளர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் : தமிழ்வின்

வன்னியில் படையினரின் எறிகணை வீச்சில் நேற்று (புதன்) 34 பொதுமக்கள் படுகொலை; 46 பேர் காயம்: மருத்துவமனை மீதும் தாக்குதல்SocialTwist Tell-a-Friend

தற்கொலைத் தாக்குதல் என படையினர் பொய்ப் பிரச்சாரம்: படையினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே மக்கள் பலி

விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலிலேயே நேற்று சுந்தரபுரம் பகுதியில் பொதுமக்களும் படையினரும் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில், இடம்பெயர்ந்து வந்த மக்கள் மீது படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே அவர்கள் கொல்லப்பட்டதாக தெரியவருகின்றது.
மக்கள் கொல்லப்பட்ட இடத்தை படம்பிடித்துக் காட்டியிருந்த சிறீலங்கா இராணுவத் தரப்பு அங்கு படையினருக்கு சேதங்கள் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரங்களையும் காண்பிக்கவில்லை.

அத்துடன் குண்டு வெடித்து காயம்பட்டதற்கான அடையாளங்கள் இல்லாமல் துப்பாக்கி வேட்டுக்களிலேயே மக்கள் கொல்லப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே திட்டமிட்ட ரீதியில் சர்வேதச ஒத்துழைப்புடன் இனப்படுகொலையை கொடூரமாகப் புரிந்துவரும் சிறீலங்கா அரசின் இன்னொரு படுகொலை வடிவம் இதுவென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ் மக்களின் படுகொலை குறித்து வாய் மூடி மௌனம் காக்கும் அமெரிக்க (தூதர்) தொடக்கம், மனித உரிமைகள் அமைப்புகள் வரைக்கும் உடனடியாக இந்தச் சம்பவம் குறித்து ஆராயாமல் பிரச்சாரங்களை தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தற்கொலைத் தாக்குதல் என படையினர் பொய்ப் பிரச்சாரம்: படையினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே மக்கள் பலிSocialTwist Tell-a-Friend

சிறிலங்கா படையினரின் தாக்குதலால் காயமடைந்தோரை கப்பலில் கொண்டு செல்லும் முயற்சி தடை

சிறிலங்கா படையினரின் எறிகணை, பல்குழல் வெடிகணை, வான் தாக்குதல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் காயமடைந்த பொதுமக்களை கப்பலில் கொண்டு செல்ல அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இன்று மேற்கொண்ட முயற்சி சிறிலங்கா படையினரின் தாக்குதலினால் தடைப்பட்டுள்ளது.
காயமடைந்தோரை மேலதிக சிகிச்சைக்காக கப்பல் மூலம் யாழ்ப்பாணத்துக்கும் புல்மோட்டைக்கும் கொண்டு செல்வதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் முயற்சியை மேற்கொண்டது.

மாத்தளன் கடற்கரையில் இருந்து நோயாளர்களை ஏற்றிச் செல்வதற்காக அந்த இடத்தை தெரிவு செய்து அதனை அறிவிப்பதற்கு கடற்கரைப் பகுதிக்கு இன்று திங்கட்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் சென்ற போது சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலை அடுத்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரி அந்த இடத்தில் இருந்து தப்பியோடி வந்து விட்டார்.

அத்துடன், சிறிலங்கா அரசாங்கம் அனைத்துல செஞ்சிலுவைச் சங்கத்தினை வன்னியை விட்டு வெறியேற வேண்டும் என உத்தரவிட்டதனையடுத்து அவர்களும் இன்று வன்னியை விட்டு

கப்பலில் வெளியேற இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா படையினரின் தாக்குதலால் காயமடைந்தோரை கப்பலில் கொண்டு செல்லும் முயற்சி தடைSocialTwist Tell-a-Friend

கொலைகார கோத்தபாயவின் அகங்காரப்பேட்டி



கொலைகார கோத்தபாயவின் அகங்காரப்பேட்டிSocialTwist Tell-a-Friend

வன்னியில் தொடரும் கொடூரம் : வான்படை இலக்குப் பார்த்துச் சொல்ல- தரைப்படை நடத்திய தாக்குதல்: சுதந்திரபுரத்தில் இன்று மட்டும் 72 தமிழர்கள் படுகொலை

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திபுரம் பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் இன்று நடத்திய கண்மூடித்தனமான கொலைத் தாக்குதலில் - இதுவரை 72 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 198 பேர் காயமடைந்துள்ளதாகவும், தாக்குதல் நடைபெற்ற பகுதி கண்கொண்டு பார்க்க முடியாத அளவுக்கு பெரும் அவலம் மிகுந்ததாக இருப்பதாகவும் அந்த இடத்தில் இருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சுதந்திரபுரம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியில் இருந்து பிற்பகல் 3:00 மணிவரை சிறிலங்கா படையினர் கடும் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இரண்டு மைல் நீளம் தூரத்துக்கு - மிகச் செறிவாக - பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது, சிறிலங்கா வான்படை வேவு வானூர்தி வட்டமிட்டு நோட்டம் பார்த்துக்கொண்டிருக்கையில் இந்த பீரங்கித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிறு மற்றும் நடுத்தர ஊர்திகளிலும் மற்றும் நடந்தும் மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த வேளையில் மக்களை வேண்டும் என்றே இலக்கு வைத்து வெறித்தனமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் என பெருமளவு தமிழர்கள் உடல் சிதறிக் கொல்லப்பட, மேலும் பெருமளவிலானோர் படுகாயமடைந்து வீழ்ந்த பெரும் அவலம் அங்கு நிலவியது.

கொல்லப்பட்டவர்களின் உடல்களையோ, அல்லது காயமடைந்து வீழ்ந்தோரையோ மீட்டு எடுக்க முடியாத அளவுக்கு சிறிலங்கா படையினர் தொடர்ந்து கடுமையான பீரங்கி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வந்தனர் எனவும், இதனால் காயமடைந்தோரை மீட்க முற்பட்டவர்களும் காயங்களுக்கு உள்ளாகி வீழ்ந்தனர் எனவும் அந்த இடத்தில் இருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பிற்கல் 3:00 மணியளவில் எறிகணைத் தாக்குதல் ஓய்ந்த பின்பு காயமடைந்தவர்கள் மீட்கப்பட்ட போது - காயமடைந்த பலர் இறந்து போயிருந்தனர். இறந்தவர்கள் போக, காயமடைந்த நிலையில் இருந்த 198 பேர் மீட்கப்பட்டனர்.

காயமடைந்தோர் பலர் மீட்கப்பட்ட போதும் - தற்போது மருத்துவமனைகள் எதுவும் வன்னியில் இல்லாத நிலையில் - மரங்களின் கீழும், கொட்டகைகளின் கீழம், வெறும் பாய்களின் மீது வைத்தே அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

இருந்தாலும் - மீட்புப் பணிகளை முழுமையாக செய்யப்பட முடியாத அளவுக்கு - வன்னியில் எஞ்சியிருக்கும் ஒரே போக்குவரத்துப் பாதையான பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதியை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதாக "புதினம்" செய்தியாளர் அங்கிருந்து தெரிவிக்கின்றார்.

இன்று நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 72 என முதற்கட்ட தகவல்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் மீட்புப்பணிகள் முழுமையாக நடைபெறாத நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

ஊர்திகள் பலவற்றின் மேல் பீரங்கிக் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததால், அவற்றில் இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்த பல தமிழர்கள் குடும்பம் குடும்பமாக - ஒட்டுமொத்தமாக - அழிக்கப்பட்ட கொடுமைகளும் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சிதறிய உடலங்களும், இரத்தச் சிதறல்களும், சிதறிய உடமைகளும், தீர்ப்பற்றி எரிந்து கொண்டிக்கும் ஊர்திகளுமாக - அந்த இடம் பெரும் அவலம் நிறைந்ததாகக் காணப்படுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செய்திகள் : புதினம் இணையம்

வன்னியில் தொடரும் கொடூரம் : வான்படை இலக்குப் பார்த்துச் சொல்ல- தரைப்படை நடத்திய தாக்குதல்: சுதந்திரபுரத்தில் இன்று மட்டும் 72 தமிழர்கள் படுகொலைSocialTwist Tell-a-Friend

வன்னி பகுதிகளில் இன்றும் (சனி) படையினர் ஆட்லறி கொத்துக் குண்டு தாக்குதல்: 65 தமிழர்கள் பலி; 226 பேர் காயம்

வன்னியின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமையும் சிறிலங்கா படையினர் ஆட்லெறி பீரங்கிகள் மூலம் கொத்துக்குண்டுத் தாக்குதல்களை நடத்த தொடங்கியுள்ளனர். இத்தாக்குதல்களில் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 226 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

ஆட்லெறி பீரங்கியின் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்ற போது அவற்றுக்குள்ளிருந்து சிறிய குண்டுகள் 50 மீற்றருக்கும் கூடுதலான விட்டப் பகுதிக்கு பறந்து சென்று குறித்த நேரத்தில் வெடித்து பாரிய அழிவுகளை ஏற்படுத்துகின்றன.

தேவிபுரம்

முல்லைத்தீவு - தேவிபுரம் பகுதியில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீதும், மக்கள் குடியிருப்புக்கள் மீதும் இன்று சனிக்கிழமை, சிறிலங்கா படையினர் 2 மணி நேரமாக நடத்திய எறிகணைத் தாக்குலில் 21 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, தேவிபுரம் - புதுக்குடியிருப்பு வீதியில், ஈருளிகளிலும், உந்துருகளிலும் மற்றும் ஊர்திகளிலும் மக்கள் செறிவாக இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது அவர்களை இலக்கு வைத்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 12:20 மணியளவில் சிறிலங்கா வான்படையின் "எஃப்-07" வானூர்திகள் மூலம் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 48 பேர் காயமடைந்துள்ளனர். மக்கள் பயணித்துக் கொண்டிருந்த 6 ஈருளிகள், 4 உந்துருளிகள் என்பன முற்றாக அழிவடைந்துள்ளன.

அப்பகுதி மீது தொடர்ந்து சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்துவதால் படுகாயமடைந்த மக்களை உடனடியாக மீட்டு சிகிச்சை வழங்க முடியாத அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன என தெரிவிக்கின்றனர்.

இதே பகுதியை இலக்குவைத்து மீண்டும் பிற்பகல் 3:20 மணியளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் மேலும் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.இதில் பொதுமக்களின் 2 உழுஊர்திகள் எரிந்து நாசமாகியுள்ளன.இதேவேளை தேவிபுரத்தில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 17 ஆல் உயர்ந்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 54 ஆல் உயர்ந்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் உடலங்களும் காயமடைந்தவர்களும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இதன்படி அங்கு கொல்லப்பட்ட தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

அதேவேளை, முல்லைத்தீவு இரணைப்பாலை, ஆனந்தபுரம், கைவேலி ஆகிய பகுதிகளில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதனால் தற்போது வீதியோரங்களிலேயே மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மரங்களில் கீழ்தான் அறுவைச் சிகிச்சைகள் கூட நடைபெறுகின்றன என அங்கிருந்து கடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகள் : தமிழ்வின்

வன்னி பகுதிகளில் இன்றும் (சனி) படையினர் ஆட்லறி கொத்துக் குண்டு தாக்குதல்: 65 தமிழர்கள் பலி; 226 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

வன்னியில் தொடரும் அவலம் - "பொன்னம்பலம் மருத்துவமனை" குண்டுவீசி அழிப்பு: 61 நோயாளர்கள் உட்பட 126 தமிழர்கள் கோரப் படுகொலை; 238 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் இயங்கி வந்த "மருத்துவர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை" மீது சிறிலங்கா வான்படையின் "மிக்" ரக வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் அங்கு காயங்களுக்காக சிகிச்சை பெற்று வந்த 61 தமிழர்கள் உட்பட 126 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 238 பேர் காயமடைந்துள்ளனர்.புதுக்குடியிருப்பில் உள்ள "மருத்துவர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை" மீது நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் சிறிலங்கா வான்படை குறிவைத்து குண்டுத் தாக்குதலை நடத்தியது.

இதில், அங்கு காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் இருந்த நிலைலேயே மருத்துவமனை முற்றாக அழிக்கப்பட்டு விட்டது.

இதில் 61 வரையான நோயாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் "புதினம்" செய்தியாளரிடம் தெரிவித்துள்ளன.

இந்த நோயாளர்களில் பெருமளவிலானோர் தமது உறவினர்களின் தொடர்புகளை இழந்து, அவர்களின் தொடர்பிற்காக காத்திருந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார். இத்தாக்குதலின் போது வீதியால் சென்று கொண்டிருந்த 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த மருத்துவமனை வளாகத்தின் மீது நடைபெற்ற வான் தாக்குதலின் தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் தொடர்ந்து எறிகணைத் தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதால் மீட்புப் பணிகளை சரிவரச் செய்ய முடியாது இருக்கின்றது.

ஆட்டிலெறி கொத்துக் குண்டு

சிறிலங்கா படையினர் தற்போது ஆட்லெறி பீரங்கிகள் மூலம் கொத்துக்குண்டுத் தாக்குதல்களை நடத்த தொடங்கியுள்ளனர்.ஆட்லெறி பீரங்கியின் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்ற போது - அவற்றுக்குள்ளிருந்து சிறிய குண்டுகள் 50 மீற்றருக்கும் கூடுதலான விட்டப் பகுதிக்கு பறந்து சென்று குறித்த நேரத்தில் வெடித்து பாரிய அழிவுகளை ஏற்படுத்துகின்றன.

தேவிபுரம்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீதும், மக்கள் குடியிருப்புக்கள் மீதும் இன்று சனிக்கிழமை, சிறிலங்கா படையினர் 2 மணி நேரமாக நடத்திய எறிகணைத் தாக்குலில் 21 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளனர்.

தேவிபுரம் - புதுக்குடியிருப்பு வீதியில், ஈருளிகளிலும், உந்துருகளிலும் மற்றும் ஊர்திகளிலும் மக்கள் செறிவாக இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது - அவர்களை இலக்கு வைத்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 12:20 நிமிடத்துக்கு சிறிலங்கா வான்படையின் "எஃப்-07" வானூர்திகள் மூலம் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 48 பேர் காயமடைந்துள்ளனர். மக்கள் பயணித்துக்கொண்டிருந்த 6 ஈருளிகள், 4 உந்துருளிகள் என்பன சிதைந்து சிதறிக் கிடக்கின்றன.

அப்பகுதி மீது தொடர்ந்து சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்துவதால் படுகாயமடைந்த மக்களை உடனடியாக மீட்டு சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக உயிரிழப்புக்கள் இன்னும் அதிகரித்து வருகின்றன என "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதே பகுதியை குறிவைத்து மீண்டும் பிற்பகல் 3:20 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் மேலும் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.இதில் பொத மக்களின் 2 உழுஊர்திகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இதேவேளை, தேவிபுரத்தில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 17 ஆல் உயர்ந்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 54 ஆல் உயர்ந்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் உடலங்களும் காயமடைந்தவர்களும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இதன் படி - அங்கு கொல்லப்பட்ட தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆகவும் இப்போது உள்ளது.

அதேவேளை, முல்லைத்தீவு - இரணைப்பாலை, ஆனந்தபுரம், கைவேலி ஆகிய பகுதிகளில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதனால் தற்போது வீதியோரங்களிலேயே மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மரங்களில் கீழ்தான் அறுவைச் சிகிச்சைகள் கூட நடைபெறுகின்றன என அவற்றை நேரில் பார்த்த "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

செய்திகள் : புதினம் இணையம்

வன்னியில் தொடரும் அவலம் - "பொன்னம்பலம் மருத்துவமனை" குண்டுவீசி அழிப்பு: 61 நோயாளர்கள் உட்பட 126 தமிழர்கள் கோரப் படுகொலை; 238 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

"தமிழினப் படுகொலைகள்"- மென்புத்தகம்

இலங்கைத்தீவில் நடைபெற்று வரும் தமிழ் மக்களுக்கு எதிரான அரச வன்முறைகளுக்கு ஒரு நீண்ட சரித்திரம் உண்டு. இதில் மிக மோசமான ஒரு அம்சம் இலங்கை தமிழர்களின் பாரிய அளவிலான படுகொலைகள் ஆகும். இவைகளில் சில தமிழர்களின் ஆழ் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளன.இவை தொடர்பாக வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் 2005 காலப்பகுதியில் வெளியிட்ட தொகுப்புத்தான் "தமிழினப் படுகொலைகள்" இதில் பல்வேறு காலகட்டத்தில் நடைபெற்ற தமிழர்களது அவலங்களை புள்ளிவிபரங்களுடன் காணக்கூடியதாக இருக்கின்றது. அனைத்து தாயகத்தமிழர்களும் வாசிக்கவேண்டிய இத்தொகுப்பை நீங்கள் வாசித்தவுடன் மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

* தமிழினப் படுகொலைகள் பகுதி ஒன்றினை தரவிறக்க. . . .
பகுதி ஒன்று* தமிழினப் படுகொலைகள் பகுதி இரண்டை தரவிறக்க. . . .பகுதி இரண்டுஇப்புத்தகத்தின் பகுதியை ஒரு மாற்றமுமில்லாமலும், வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தினது என்ற அங்கீகாரத்துடனும் மீளப்பதித்து பண இலாபமற்ற நோக்கத்துடன் விநியோகிக்க அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

நன்றி: வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம்

"தமிழினப் படுகொலைகள்"- மென்புத்தகம்SocialTwist Tell-a-Friend

வன்னிக் கொலைக்களத்தில் வெள்ளிக்கிழமை 48 தமிழர்கள் பலி்; 174 பேர் காயம்

வன்னியில் இன்று சிறிலங்கா படையினர் பரவலாக நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 174 பேர் காயமடைந்துள்ளனர்.

மாத்தளான்
முல்லைத்தீவு மாத்தளான் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் ஆட்லெறி பீரங்கித் தாக்குதலில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 13 பேர் காயமடைந்துள்ளனர்.

தேவிபுரம்
முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் இன்று பிற்பகல் 12:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் சிறுவர்களான சகோதரர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தேவிபுரம் ஆற்றங்கரைப் பகுதியில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்களின் குடிசைகள் மீது இன்று முழு நாளும் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியதில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

சுதந்திரபுரம்
முல்லைத்தீவு சுதந்திரபுரம் வீட்டுத்திட்டம் மீது இன்று பிற்பகல் 4:35 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதலில் 6 தமிழர்களை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்துள்ளனர்.

மூங்கிலாறு
முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதி மீது இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்ளை நடத்தியதில் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உடையர்கட்டு
முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியதில் 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வள்ளிபுனம்
முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதி மீது இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 14 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மூங்கிலாறு, உடையார், வள்ளிபுனம் ஆகிய மூன்று இடங்களிலும் நடந்த தாக்குதல்களில் மட்டும் மொத்தமாக 64 பேர் காயமடைந்துள்ளனர்.


தகவல் : புதினம் இணையம்

வன்னிக் கொலைக்களத்தில் வெள்ளிக்கிழமை 48 தமிழர்கள் பலி்; 174 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

உடையார்கட்டு மருத்துவமனை மீதும் இடம்பெயர்ந்த மக்கள் மீதும் இன்று எறிகணைத் தாக்குதல்: 43 பேர் படுகொலை; 155 பேர் காயம்

வன்னியில் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீதும் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீதும் இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 43 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 155 பேர் காயமடைந்துள்ளனர்.பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அமைந்துள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீது இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு நோயாளர் காவு ஊர்திகளும் மருந்து களஞ்சியமும் முற்றாக சேதமடைந்துள்ளன.

சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலினால் புதுக்குடியிருப்பு மருத்துவமனை முற்றாக சேதமடைந்துள்ளதனால் வன்னியில் உள்ள மக்களுக்கு தற்போது சேவையாற்றி வருவது உடையார்கட்டு மருத்துவமனை ஆகும்.

இந்த மருத்துவமனையையும் இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான சுதந்திரபுரம், இருட்டுமடு, வள்ளிபுனம், தேவிபுரம் ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீது இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

சுதந்திரபுரம் பகுதி மீது இன்று பகல் முழுவதும் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 58 பேர் காயமடைந்துள்ளனர்.கொல்லப்பட்டவர்களின் 10 உடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இருட்டுமடுப்பகுதியில் இன்று பகல் முழுவதும் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 16 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 42 பேர் காயமடைந்துள்ளனர்.வள்ளிபுனம் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

தேவிபுரம் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய பல்குழல் வெடிகணைத் தாக்குதலில் 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளனர்

செய்தி : புதினம் இணையம்

உடையார்கட்டு மருத்துவமனை மீதும் இடம்பெயர்ந்த மக்கள் மீதும் இன்று எறிகணைத் தாக்குதல்: 43 பேர் படுகொலை; 155 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் மேற்கொண்ட கவனயீர்ப்பு ஒன்றுகூடல்



பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் அமைப்பினரால் 04-02-2009 அன்று Parliament Square மற்றும் Sri Lankan High Commision முன்னால் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது.

நன்றி : வக்தா TV

பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் மேற்கொண்ட கவனயீர்ப்பு ஒன்றுகூடல்SocialTwist Tell-a-Friend

ஈழம் தொடர்பான CNN செய்திகள்




இலங்கை தொடர்பான செய்திகளை தமிழக தொலைக்காட்சிகள் (மக்கள் தொலைக்காட்சி தவிர ) வெளியிடுகின்றனவோ இல்லையோ வெளிநாட்டு தொலைக்காட்சிகள் கடமைக்கேனும் வெளியிடுகின்றன.
ஒளிப்படம் : CNN

ஈழம் தொடர்பான CNN செய்திகள்SocialTwist Tell-a-Friend