"தமிழினப் படுகொலைகள்"- மென்புத்தகம்

இலங்கைத்தீவில் நடைபெற்று வரும் தமிழ் மக்களுக்கு எதிரான அரச வன்முறைகளுக்கு ஒரு நீண்ட சரித்திரம் உண்டு. இதில் மிக மோசமான ஒரு அம்சம் இலங்கை தமிழர்களின் பாரிய அளவிலான படுகொலைகள் ஆகும். இவைகளில் சில தமிழர்களின் ஆழ் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளன.இவை தொடர்பாக வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் 2005 காலப்பகுதியில் வெளியிட்ட தொகுப்புத்தான் "தமிழினப் படுகொலைகள்" இதில் பல்வேறு காலகட்டத்தில் நடைபெற்ற தமிழர்களது அவலங்களை புள்ளிவிபரங்களுடன் காணக்கூடியதாக இருக்கின்றது. அனைத்து தாயகத்தமிழர்களும் வாசிக்கவேண்டிய இத்தொகுப்பை நீங்கள் வாசித்தவுடன் மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

* தமிழினப் படுகொலைகள் பகுதி ஒன்றினை தரவிறக்க. . . .
பகுதி ஒன்று* தமிழினப் படுகொலைகள் பகுதி இரண்டை தரவிறக்க. . . .பகுதி இரண்டுஇப்புத்தகத்தின் பகுதியை ஒரு மாற்றமுமில்லாமலும், வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தினது என்ற அங்கீகாரத்துடனும் மீளப்பதித்து பண இலாபமற்ற நோக்கத்துடன் விநியோகிக்க அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

நன்றி: வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம்

"தமிழினப் படுகொலைகள்"- மென்புத்தகம்SocialTwist Tell-a-Friend

3 பின்னூட்டங்கள்:

இமயவரம்பன் said...

தரவிறக்குவோர் பகிரவும்

சங்கமம்லைவ் said...

அன்பின் நண்பர்களுக்கு

தமிழினப் படுகொலைகள்" மின் நூலினை பதிவிறக்கம் செய்து படிக்க எத்தனித்த பொழுது எழுத்துறு பிரச்சனை வருகிறது. இதனை எப்படி சரி செய்து புத்தகத்தினை படிப்பது. அறியத் தருக.

நன்றி

விஜய்

இமயவரம்பன் said...

வணக்கம் திரு விஜய் அவர்களே

அவ் மென்புத்தகம் மற்றய மென்புத்தகங்களைப்போலவே யுனிக்கேட் எழுத்துருவால் எழுதப்பட்டுள்ளது எனவே புத்தகத்தில் பிழையிருக்கவாய்ப்பில்லை,
சிலவேளைகளில் உங்கள் கணினி இன்னமும் சில யுனிக்கோட் எழுத்துருக்களுக்கு இசைந்து செயற்படவில்லை போலும் ?

நன்றி

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்