வன்னியில் மக்கள் வாழ்விடங்கள் மீது இன்றும் எறிகணைத் தாக்குதல்: 17 தமிழர்கள் பலி; 43 பேர் காயம்

வன்னிப்பெரு நிலப்பரப்பில் பொதுமக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர்.புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.'மக்கள் பாதுகாப்பு வலயம்' என அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த இரண்டு இடங்களிலும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 35 தமிழர்கள் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் மீது இன்று பிற்பகல் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனா்.
வினோஜன் (வயது 09)
இ.இசைக்கீதன் (வயது 19)
வி.நளாஜினி (வயது 36)
ந.சிவகுமார் (வயது 30)
க.விமல் (வயது 30)
ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட வலைஞர்மடத்தில் இன்று பிற்பகல் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 2 தமிழர்கள் காயமடைந்துள்ளனர். பி.விநாயகன் (வயது 21) மற்றும் வீ.விஜேந்திரன் (வயது 29) ஆகியோர் காயமடைந்துள்ளனர்.இதேவேளை, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமி ஒருவர் இன்று சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.யாழ். வடமாராட்சி உடுத்துறையைச் சேர்ந்த பொன்னுத்துரை சுமதா (வயது 10) என்பவரே உயிரிழந்துள்ளார்.

செய்திகள்:புதினம்

வன்னியில் மக்கள் வாழ்விடங்கள் மீது இன்றும் எறிகணைத் தாக்குதல்: 17 தமிழர்கள் பலி; 43 பேர் காயம்SocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்