Showing posts with label படம் இணைப்பு. Show all posts
Showing posts with label படம் இணைப்பு. Show all posts

பிரி்த்தானிய அரசின் உறுதிமொழியை அடுத்து பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

கடந்த 24 நாளாக பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் “தமிழ் மறவன்”; பரமேஸ்வரனால் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் பிரித்தானியா அரசாங்கத்தின் உறுதி மொழியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் Simon Huges பழச்சாறு கொடுக்க தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியா அரசு தனக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தான் தற்காலிகமாக உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்தியுள்ளதாகவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் தன்னுடைய போராட்டம் தொடரும் எனவும் தெரித்தார்.இன்று மதியம் 12 மணியளவில் ஊடகங்களுக்கு உரை வழங்கும் போது பரமேஸ்வரன் இதனை அறிவித்துள்ளார்.

பரமேஸ்வரனின் உடல்நிலை மிகவும் தளர்ந்த நிலையில் அவரை பிரித்தானியா அவசர சிகிச்சை பிரிவினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அதன் பின் நாடாளுமன்றத்தில் அவர் சில சந்திப்புகளை தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மாணவர்களால் சுழற்சி முறையிலான உண்ணாநிலை போராட்டம் தொடர்கின்றது. பரமேஸ்வரனின் உண்ணாநிலை இடை நிறுத்தப்பட்டாலும் தங்களுடைய போராட்டம் மக்களின் ஆதரவுடன் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.அத்துடன் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டம் தமிழ் மக்களால் பரமேஸ்வரனின் கூடாரத்தில் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை பரமேஸ்வரனின் 5 அம்ச கோரிக்கையை முன் வைத்து ஸ்கொட்லாண்டின் எடின்பறோ நகரத்தில் மக்களால் போராட்டம் நடாத்தப்படுகின்றது.


செய்திகள்:
தமிழ்வின்

பிரி்த்தானிய அரசின் உறுதிமொழியை அடுத்து பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுSocialTwist Tell-a-Friend

கனடியத் தமிழரின் தொடர் போராட்டம்: தலைநகரின் வீதிகள் தமிழரால் முடக்கம்

சிறீலங்கா இனவெறி அரசின் கொடூர கொலைவெறியினைத் தடுத்து நிறுத்த அழுத்தம் கொடுக்கக்கோரி கனடியத் தலைநகரில் தமிழர்களால் தொடர் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கனடியத் தமிழர் சமூகம் மற்றும் கனடியத் தமிழ் மாணவர்களின் ‘கனடிய அரசாங்கம் செயலில் ஈடுபடும் வரையான தொடர் போராட்டம்’ அழைப்பையேற்று தமிழ் மக்கள் அனைவரும் கனடியத் தலைநகரான ஒட்டாவா நோக்கி அணிதிரண்டு கொண்டுள்ளார்கள். செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, விடிகாலை 6 மணியிலிருந்து பேருந்துகள், தங்கள் தனிப்பட்ட வாகனங்கள் மூலம் போராட்டத்திற்காகத் தலைநகர் நோக்கி மக்கள் சென்று கொண்டுள்ளார்கள்.
கனடிய பாராளுமனறத்தில் ஆரம்பித்த போராட்டம் சிறிது நேரத்தில் வீதியை நோக்கி நகர ஆரம்பித்தது. தலைநகரின் வீதியில் இறங்கி போக்குவரத்தினை மறித்த கனடியத் தமிழ் மக்கள் தலைநகரின் முக்கிய வீதிகளான Bank Street, O’Conner Drive ஆகிய வீதிகள் உட்பட்ட முக்கிய வீதிகளில் வீதி மறிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அலுவலகங்கள் முடிவடைந்த பின்னர் நகரே ஸ்தம்பித்திருந்தது.
தமிழ் மக்களால் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடையினால் பல கிலோ மீற்றர் நீளத்திற்கு நகரின் பொதுப்போக்குவரத்து வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் நகரமுடியாது நிறுத்தப்பட்டிருந்தன.
வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெருமளவு காவற்றுறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆயினும்,

  • தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் படுகொலையை நிறுத்துவதற்கு சிறீலங்கா இனவெறி அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.
  • உடனடி யுத்த நிறுத்திற்கு சிறீலங்கா அரசைக் கொண்டுவரவேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கனடியத் தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், இவை நடைமுறைப்படுத்தப்படும் வரை தொடர்ச்சியான போராட்டமாக இப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.தலைநகரான ஒட்டாவாவில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை ரொறன்ரோ நகரில் உள்ள மாகாணப் பாரளுமன்றத்திற்கு முன்னாலும் தொடர் போராட்டத்தினை மக்கள் தொடர்ந்த வண்ணமுள்ளனர்.கடும் குளிரையும் பொருட்படுத்தாது கனடியத் தலைநகர் ஒட்டாவா வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கனடியத் தமிழ் சமூகமானது தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை வீதிகளை விட்டு அசையோம் எனும் உறுதியுடன் உள்ளார்கள்.பல்லாயிரக்கணக்கில் பங்கேற்று காலத்தின் கடமையை நிறைவேற்றும்படி ஒருங்கிணைப்பாளர்கள் கனடியத் தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கின்றார்கள். இப் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் மக்களிற்காக தொடர்ச்சியாக பேரூந்து வசதி ஏற்பாட்டாளர்களால் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை ரொறன்ரோ நகரின் பல பாகங்களில் இருந்தும் ஒட்டாவா செல்வதற்காக பேரூந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

செய்திகள்: பதிவு

கனடியத் தமிழரின் தொடர் போராட்டம்: தலைநகரின் வீதிகள் தமிழரால் முடக்கம்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் 3 ஆவது நாளாக தொடரும் தமிழர்களின் போராட்டம்: காவல்துறையின் அடக்குமுறையையும் மீறி மக்கள் பேரெழுச்சி




சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தை பிரித்தானிய அரசாங்கம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானியாவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் மாபெரும் மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்திருக்கின்றது.பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தை குறுக்கே வழி மறித்து நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் தொடங்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
இரவு இரவாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொடர்ந்தும் பிரித்தானியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தின் ஊடான போக்குவரத்தை தமிழர்கள் வழிமறித்தனால் பிரித்தானியா நாடாளுமன்ற செயற்பாடுகள் முற்றாக செயலிழந்ததுடன், போக்குவரத்தும் பெரும் நெரிசல் ஏற்பட்டிருக்கின்றது.
  • "சிறிலங்கா அரசே இனப்படுகொலையை நிறுத்து"
  • "தாய்மார்களையும் சிறுவர்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்வதனை நிறுத்து"
  • "எமக்கு தேவை தமிழீழமே"
  • "எமது தலைவர் பிரபாகரனே"
என உரத்த குரலில் உணர்வுபூர்வமாக முழக்கமிட்டு வரும் தமிழர்கள் தமது கைகளில் தமிழீழத் தேசியக் கொடியையும் தமிழீழ தேசியத் தலைவரின் படத்தையும் கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண், இலங்கை பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டி வலியுறுத்தியும் அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் தமிழர்கள் வலியுறுத்தி வருவதாக பிரித்தானிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கை பிரச்சினையில் நடவடிக்கை எடுப்பதாக பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்களிடம் உறுதிமொழி வழங்கிய போதும் அதனை நிராகரித்த தமிழர்கள், தமக்கு உடனடி நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.இந்த தொடர் போராட்டத்தினால் பிரித்தானியாவின் முக்கிய தொடருந்து நிலையமான வெஸ்ட்மினிஸ்டர் நிலையத்தின் சேவைகள் நேற்று இரவுடன் முற்றாக நிறுத்தப்பட்டு ஒலிபெருக்கிகளில் மாற்று வழிப்பாதைகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவித்தல் விடுத்து வருகின்றனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழர்களை அடக்குவதற்காக கலகம் அடக்கும் காவல்துறையினர் கொண்டு வரப்பட்ட போதும் ஆர்ப்பாட்டத்தில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டதால் கலகம் அடக்கும் காவல்துறையினரால் அவர்களை அடக்க முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மேற்படி பகுதிக்குரிய காவல்துறை பேச்சாளர் தெரிவிக்கையில்,
தமிழர்களின் இந்த திடீர் போராட்டம் எமக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எனினும் அமைதியான வழியில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தினை தடுத்து நிறுத்து நோக்கம் எமக்கு இல்லை.அத்துடன், இந்த போராட்டத்துக்கு மேலதிகமாக மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நாம் எந்தவித இடையூறும் விளைவிக்கவில்லை என்றார்.

எனினும், தமிழீழத் தேசியக் கொடியை கையில் ஏந்தியிருந்த நான்கு தமிழ் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.மேலும் பலரை கைது செய்ய முற்பட்ட போது அங்கிருந்த மக்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் எற்பட்டு இறுதியில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் கைவிட்டுள்ளனர். இதனால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தமிழீழத் தேசியக் கொடியை குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கைகளில் ஏந்தியிருக்குமாறு கொடுத்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவியான ஜெயந்தி பரஞ்சோதி கருத்து தெரிவிக்கையில்,
பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அல்லது பிரதமர் கோடன் பிறவுண் இங்கு வந்து தாயகத்தில் இடம்பெற்று வரும் தமிழினப் படுகொலைக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரைக்கும் இங்கிருந்து நாம் வெளியேறப் போவதும் இல்லை. எமக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுதிமொழிகள் தேவையில்லை என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சைமன்ட் கூச் தெரிவிக்கையில்,
தமிழர்களின் 25 வருட கால போராட்டத்துக்கு நான் முழுமையான ஆதரவு வழங்குகின்றேன். தற்போது தான் சரியான தருணம். பிரித்தானிய அரசாங்கம் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழர்கள் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அதற்கு நானும் முழுமையான ஆதரவு வழங்குகின்றேன் என்றார்.

தேம்ஸ் நதிக்குள் குதித்து இருவர் தற்கொலை முயற்சி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்கள் இருவர், நேற்று இரவு தேம்ஸ் நதிக்குள் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்ததால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.எனினும், காவல்துறையினர் படகுகளில் சென்று அவர்களை உடனடியாக மீட்டதுடன், மேலும் பலர் தேம்ஸ் நதிக்குள் குதிக்கலாம் என அச்சத்தில் படகுகளுடன் முழு விழிப்பு நிலையில் உள்ளனர்.அத்துடன், கலகம் அடக்கும் காவல்துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் நோக்கில் பிரித்தானிய காவல்துறையினர் செயற்பட்டு வருகின்ற போதிலும் இன்று மாலை அப்பகுதியில் மேலதிகமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் 3 ஆவது நாளாக தொடரும் தமிழர்களின் போராட்டம்: காவல்துறையின் அடக்குமுறையையும் மீறி மக்கள் பேரெழுச்சிSocialTwist Tell-a-Friend

பிரித்தானியா சவுத் பாங்க் பல்கலைக் கழக மாணவர்களால் 24மணிநேர உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கையில் போரை நிறுத்தக் கோரியும், உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரியும், இருபத்தி நான்கு மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் ஆரம் பிக்கப்பட்டுள்ளது.31/03/2009மதியம் பன்னிரெண்டு மணிக்கு பிரித்தானியா சவுத் பாங்க் பல்கலைக் கழக மாணவர்களால், மாணவர்கள் வெகு உர்ச்சாகமாக தேசியக் கொடியை உரிய மரியாதையுடன் அணிவகுத்து நின்று, அகவணக்கத்துடன், தேசியக் கொடிப் பாடல் இசைக்க தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

அதன் பின்னர் மறைந்த முன்னால் பிரித்தானிய மாணவரும் ஈகப் பேரொளியுமான முருகதாஸிற்கு சுடர் ஏற்றி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். பின்பு மாணவர்கள் அனைவரும் மலர்தூவி தங்கள் மரியாதையை செலுத்தினர்.மாணவர்கள் அனைவரும் வணக்கம் செலுத்திய பின்னர் வேற்று இன மாணவாகளுக்கு இலங்கையில் இனவாத சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் தமிழின அழிப்புப்போர் பற்றியும், தமிழீழ வரலாறு பற்றியும் எடுத்துரைத்தனர்..
அதே வேளை சிங்கள அரசின் தமிழின அழிப்பை நிறுத்துமாறு பிரித்தானிய தலைமை அதிபர் கோல்டன் பிரவுன் அவர்களுக்கு மாணவர்களால் அஞ்சல் அட்டைகளில் அவர்களின் விபரங்கள் நிரப்பப்பட்டன.பல்கலைக் கழகம் முழுவதும் தமிழின அழிப்பு பற்றியும் எமது பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்றும். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரியும் பல பதாதைகள் ஒட்டப் பட்டுள்ளன.

இதன் தொடக்கமாக மாணவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தி உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவிருந்த பொழுது பல்கலைக் கழகம் தேசியக் கொடியை ஏத்துவதற்கு அனுமதி மறுத்தது. மாணவர்கள் நிர்வாகத்திடம் தாங்கள் நிட்சயம் எங்கள் தேசியக் கோடியை ஏத்துவோம், இது எங்கள் தேசியக் கொடி என்று வாதாடினர். மாணவர்களைக் கட்டுப் படுத்த முடியாத நிர்வாகம் காவல்த்துறை உதவியை நாடினர். விரைந்து வந்த காவல்த் துறையினரிடம் மாணவர்கள் தங்கள் போராட்டம் தொடர்பாகவும் தேசியக் கொடி தொர்பாகவும் விளக்கி கூறினர்.பின் காவல் துறையினர் அனுமதி அளித்தபின் பல்கலைக் கழக நிர்வாகமும் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் : பதிவு

பிரித்தானியா சவுத் பாங்க் பல்கலைக் கழக மாணவர்களால் 24மணிநேர உண்ணாவிரதப் போராட்டம்SocialTwist Tell-a-Friend

Hunting the Tigers - SBS - இலங்கையின் தற்போதைய நடப்புக்கள் தொடா்பான ஒளிஆவணத்தொகுப்பு

Hunting the Tigers - SBS இன் Dateline நிகழ்ச்சியில் ஒளிபரப்பான இலங்கையின் தற்போதைய நடப்புக்கள் தொடா்பான ஒளிஆவணத்தொகுப்பு. இறுதிவரை பாருங்கள். பாதுகப்பு அமைச்சா் கோத்தபாய சில உண்மைகளைக் கூறுகிறார். பார்த்துமுடித்த பின் SBS இன் தளத்திற்க்குச்சென்று பின்னுாட்டங்களை இடுவது மட்டுமன்றி George.Negus@sbs.com.au, amos.roberts@sbs.com.au எனும் முகவரிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துவிடுங்கள்.



நன்றி : SBS இணையம்

Hunting the Tigers - SBS - இலங்கையின் தற்போதைய நடப்புக்கள் தொடா்பான ஒளிஆவணத்தொகுப்புSocialTwist Tell-a-Friend

கருவிலிருக்கும் குழந்தைகளையும் தாக்கத்தொடங்கியிருக்கும் இலங்கை அரச படையினா்

தாயின் வயிற்றைக் கிழித்து குழந்தையைத் தாக்கிய படையினர் எறிகணை நெஞ்சை உலுக்கும் சம்பவம்.சிறிலங்காவின் இனப்படுகொலையில் கர்ப்பிணிப் பெண்களும் பலியாகி வருகின்றனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை படையினரின் எறிகணையில் நான்கு கர்ப்பிணிப் பெண்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதேவேளை, கடந்த 2ம் திகதி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் நேற்று சனிக்கிழமை பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். பிறந்த குழந்தையில் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தில் இருந்த எறிகணைத் துண்டு உடனடியாக சத்திர சிகிச்சை செய்யப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.

தேராவில் விசுவமடு பகுதியில் வசித்துவந்த 24 வயதான பிரசாத் சிவதர்சினி என்பவரே படுகாயமடைந்த நிலையில் குழந்தையைப் பெற்றுள்ளார். இதேவேளை, கடும் எறிகணைத் தாக்குதல் அதிர்ச்சியில் ஆறு மாதக் கருவொன்று வயிற்றிலேயே இறந்துள்ளது. 28 வயதான கர்ப்பிணிப் பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வயிற்றில் இருந்து குழந்தை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டபோதும், தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலதிக செய்திகள்:தமிழ்வின்

கருவிலிருக்கும் குழந்தைகளையும் தாக்கத்தொடங்கியிருக்கும் இலங்கை அரச படையினா்SocialTwist Tell-a-Friend

இவா்களுக்கு இவ்வளவு தைரியம் கொடுத்தது யார் ?

கீழுள்ள படங்கள் பிரித்தானியா லெசிஸ்ரர் மாநிலத்தில்சிங்களவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கீத்வாஸ் அவர்களின் பணிமனைக்கு முன்பாக மேற்கொண்ட போராட்டத்தின் போது எடுக்கப்பட்டவை !. ஆனாலும் பணிமனைக்கு முன்பாக மேற்கொண்ட பொய்யான பிரச்சாரப் போராட்டத்திற்கு எதிராக லெசிஸ்ரர் வாழ் தமிழ்மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு அவா்களது போராட்டத்தை எதிர்த்தாலும் அவா்கள் இவ்வளவு துாரம் வந்து விட்டார்களே? இதற்க்கு யார் காரணம்.அடுத்தமுறை அதிகளவிலானோரை அழைத்து வந்தால் நாம் என்ன செய்யப்போகிறோம். இதற்கு பிரித்தானியாவிலுள்ள இலங்கைத்துாதரகம் முழுஆதரவு என முற்றுமுழுதாகத்தெரிந்தபோதும் படிப்படியாக எமது போராட்டங்களை அவா்கள் கொச்சைப்படுத்திவிடுவார்கள் தானே ? இதற்கெல்லாம் நாங்கள் காந்தீயவழியில் தான்போராட்டம் நடாத்தி பதில்சொல்லப்போகிறோமா ? இல்லை.... முடிவு உங்களிடம் தான் உள்ளது. (வேறெந்த நாடுகளிலும் சிங்களவா்கள் அந்த அளவுக்கு போனதாக தகவல்கள் இல்லை இங்கு மட்டும் எப்படி ? யாருக்காவது தகவல் தெரியுமா ? )

படங்கள் : Defence.lk

இவா்களுக்கு இவ்வளவு தைரியம் கொடுத்தது யார் ?SocialTwist Tell-a-Friend

வன்னி மக்களை பட்டினி கொல்கின்றது: 4 நாட்களில் 10 சிறுவர்கள் உட்பட 18 தமிழர்கள் பலி!!

ஒருவேளை கஞ்சியோடு வாழ்வு! உலகம் கைவிட்ட வன்னி மக்களை பட்டினி கொல்கின்றது: 4 நாட்களில் 10 சிறுவர்கள் உட்பட 18 தமிழர்கள் பலி!!

வன்னியில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நில ஆக்கிரமிப்புப் படையெடுப்பு காரணமாகவும், உலகத் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் எதுவும் கிடைக்காத காரணத்தினாலும் ஏற்பட்டுள்ள பட்டினி அவலத்தினால் கடந்த 4 நாட்களில் 10 சிறுவர்கள் உட்பட 18 தமிழர்கள் வன்னியில் உயிரிழந்துள்ளனர்.தொடர்ச்சியான உணவின்மை காரணமாகவும் நீரிழப்பு காரணமாகவும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் - நோய் எதிர்ப்புத் தன்மையை இழந்து விட்டதனாலும் - இவர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என மருத்துவ அறிக்கைகளை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள வெளியே செல்ல முடியாத நிலையில் வீடுகளிலும் பதுங்குழிகளிலும் கூட இவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களில் உயிரிழந்த 18 பேர் தொடர்பாக ஆய்வு செய்த போது நடைபெற்ற மருத்துவ விசாரணைகளில் இவர்களின் சாவுக்கு போதிய உணவின்மை, ஊட்டமின்மை மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மை இழப்பு ஆகியவையே காரணம் என மருத்துவ வட்டாரங்கள் 'புதினம்' செய்தியாளரிடம் உறுதிப்படுத்தியுள்ளன.
முள்ளிவாய்க்கால் பகுதியில் -
கனகசபை பிரவீணன் (வயது 12)
சிவராசா கண்ணன் (வயது 38)

புதுக்குடியிருப்பு, இரணைப்பாலையில் -
சிவநேசன் சுலக்சன் (வயது 12)
மகேஸ்கரன் கர்ணன் (வயது 15)
கருணாகரன் பிருந்தா (வயது 17)
கந்தைஞானி மனோகரன் (வயது 32)
மாத்தளன் பகுதியில் -
சபேசன் சிந்து (வயது ஒன்றரை)
பாலச்சந்திரன் சிவரூபன் (வயது 13)
மகிந்தன் விநோதா (வயது 48)
தேவராசா கஜேந்திரன் (வயது 36)
திருச்செல்வம் சிவகணேசன் (வயது 42)

அம்பலவன்பொக்கணை, இடைக்காடு பகுதியில் -
சிவராசா சக்தி கணேசன் (வயது 03)
மலர்வேந்தன் மகிழன் (வயது 12)
யோகராசா ரவி (வயது 18)

வலைஞர்மடம் பகுதியில் -
அனித்கிப்சன் (வயது 14)
பரமநாதன் புவியரசன் (வயது 17)
சிவகடாட்சம் றமணன் (வயது 23)
சிவகடாட்சம் கார்த்திகாயினி (வயது 14)
ஆகியோரே பட்டினிக்கு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, பல நாட்கள் உணவின்மை காரணமாகவே மயக்கமடைந்த 5 தமிழர்கள் மாத்தளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதன் பொறுப்பதிகாரி 'புதின'த்திடம் தெரிவித்துள்ளார்.மேலும், உணவு மற்றும் மருத்துவ வசதி இல்லாத இதே நிலை தொடர்ந்தால் பட்டினி மற்றும் நோய் காரணமாக இன்னும் சில வாரங்களில் இழப்புக்கள் நூற்றுக்கணக்கில் அமையக்கூடும் எனவும் மருத்துவ தரப்பினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, வாரத்துக்கு 57 சுமையூர்திகள் வரவேண்டிய சூழ்நிலையில் உலக உணவுத் திட்டத்தின் சுமையூர்திகள் எவையும் கடந்த ஒரு மாதமாக வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என மாவட்ட அரச அதிபரின் செயலக வட்டாரங்கள் 'புதின'த்திடம் தெரிவித்தன.

கடந்த இரண்டு நாட்களில் 5 சுமையூர்தி நிவாரணப் பொருட்கள் மட்டுமே உலக உணவுத்திட்டத்தால் செஞ்சிலுவைச் சங்க கப்பல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.இதேவேளை, மரக்கறிகள் எவையுமே வன்னியில் இல்லை. சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களினால் வளம் கொழிக்கும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு வந்த காய்கறிகளை பறிக்க முடியாத நிலையும் மரக்கறி வகைகளை பயிரிட முடியாத நிலை தோன்றியிருப்பதனாலும் மரக்கறி வகைகளுக்கு பாரிய தட்டுப்பாடு வன்னியில் ஏற்பட்டுள்ளது. அத்துடன், 95 விழுக்காடு மக்கள் ஒரு நேர கஞ்சியை மாத்திரமே உண்டு வருகின்ற நிலை காணப்படுகின்றது.குறிப்பாக, சிறுவர்களுக்கு ஊட்ட உணவு என்பது முற்று முழுதாக இல்லாத நிலை காணப்படுவதாக 'புதினம்' செய்தியாளர் தெரிவித்துள்ளார்.தேநீர் குடிப்பதற்கு கூட தேயிலை சீனி எதுவும் இல்லாது அவலம் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

சேய்திகள்:புதினம்

வன்னி மக்களை பட்டினி கொல்கின்றது: 4 நாட்களில் 10 சிறுவர்கள் உட்பட 18 தமிழர்கள் பலி!!SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் தொடங்கியிருக்கும் தமிழருக்கெதிரான சிங்களவா்களின் போராட்டங்கள்.

பிரித்தானியா லெசிஸ்ரர் மாநிலத்தில் சிங்களவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கீத்வாஸ் அவர்களின் பணிமனைக்கு முன்பாக மேற்கொண்ட பொய்யான பிரச்சாரப் போராட்டத்திற்கு எதிராக லெசிஸ்ரர் வாழ் தமிழ்மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இப்போராட்டம் மாலை 2.30 மணியளவில் கார்களில் பதாதைகளை ஒட்டி சிறிலங்கா அரசின் இனப்படுகொலையை வெளிக்கொணருமுகமாக செய்யப்பட்டது.

இப் போராட்டத்தில் முப்பதுக்கும் அதிகமான கார்கள், சிங்களவர்கள் போராட்டம் நடத்திய வீதியூடாகவும் லெசிஸ்ரர் நகரமெங்கும் உலா வந்தவண்ணம் இருந்தன.

செய்திகள்,படங்கள்:தமிழ்வின்

பிரித்தானியாவில் தொடங்கியிருக்கும் தமிழருக்கெதிரான சிங்களவா்களின் போராட்டங்கள்.SocialTwist Tell-a-Friend

பிரித்தானியா-மில்ரன்கீன்ஸ் நகரில் தமிழர் நலன்புரி அமைப்பினர் ஆர்ப்பாட்ட பேரணி

பிரித்தானியா மில்ரன்கீன்ஸ் தமிழர் நலன்புரியமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு ஆரம்பமானது. குறித்த நேரத்திற்கே மக்கள் அனைவரும் மில்ரன்கீன்ஸ் புகையிரத நிலையத்திற்கு முன்னால் கூடி அங்கிருந்து மத்திய வர்த்தகக் கட்டிடம் முன்பாக கூட்டம் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்ட அடத்திற்கு ஊர்வலமாக கோசங்கள் எழுப்பியவாறு மக்கள் உணர்வெழுச்சியுடன் சென்றனர்.

அங்கு குறித்த அளவிற்கு அதிகமாக மக்கள் வந்தடைந்ததன் காரனமாக காவல் துறையினர் அந்த இடத்தில் அனுமதி மறுத்து பின்னர் உடனடியாகவே புகையிரத நிலையத்திற்கு முன்னால் உள்ள வெளியை ஒழுங்கு பண்ணினர்.
அதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் ஊர்வலமாகவே புகையிரத நிலையம் முன்பாக கூடினர். சுமார் 1500க்கும் அதிகமான மக்கள் முன்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் பிலிப் ஸ்ராக்கி அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில் தனது ஆதரவு தொடர்ந்து தமிழ் மக்களுக்கு இருக்கும் எனவும் அத்துடன் தனது அரசாங்கத்திற்கு அதனை அறிவிப்பதாகவும் உடனடியாக அங்கு போர்நிறுத்தம் வேண்டும் எனவும் வலியுறுத்திக் கூறினார்.

செய்திகள் : தமிழ்வின்

பிரித்தானியா-மில்ரன்கீன்ஸ் நகரில் தமிழர் நலன்புரி அமைப்பினர் ஆர்ப்பாட்ட பேரணிSocialTwist Tell-a-Friend

இலண்டனில் கவனஈர்ப்பு போராட்டம்


பிரித்தானிய மக்களுக்கு ஈழத் தமிழரின் இன்றைய அவல நிலை குறித்து விளக்கும் முகமாகவும், சிறிலங்காவின் தமிழினச் சுத்திகரிப்பை அம்பலப்படுத்துவதற்காகவும் நேற்று இலண்டனில் பல நகரங்களிலும் ஏக காலத்தில் தமிழ் மக்கள் தாயக அவலம் பற்றிய காட்சிகள் கொண்ட பதாதைகள் தாங்கியவாறு வாகனங்களிலும், கால்நடையாகவும் கவன ஈர்ப்பில் ஈடுபட்டனர்.
காலை10மணி தொடக்கம் மாலை 4 மணி வரையும் நடந்த இந்தக் கவன ஈர்ப்பில், புலம்பெயர் தமிழர் தங்கள் இடங்களிலிருந்து மத்திய இலண்டன் பகுதியை நோக்கி வாகனங்களில் சிறிலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழரின் படங்களை ஒட்டியவாறு சென்றனர்..

இதனைப் பார்த்த பலர், இலங்கையில் நடக்கும் தமிழின அழிவைப்பற்றி கேட்டறிந்ததுடன், தங்களால் இவ்அழிவைத் தடுக்க எவ்விதமான உதவிகளை செய்யலாமெனவும் இனி வரும் காலங்களில் தாங்களும் ஒன்று சேர்ந்து இது போன்ற போராட்டங்களில் பங்குபற்ற விரும்புவதாகவும் தெரிவித்தனர்.பிரித்தானிய அரசு தமது நலன்களுக்காக சிறிலங்காவின் தமிழின ஒழிப்பை மறைத்து வரும் இவ்வேளையில், பிரித்தானிய மக்கள் மத்தியில் இந்த கவன ஈர்ப்பு பாரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

'வீரத் தமிழன்' முருகதாசன் தொடர்பாக நேற்றைய தினம் நீண்ட செய்திக் குறிப்பொன்றை பிரித்தானிய முதல் நிலை செய்தித் தாள்களில் ஒன்றான கார்டியன் வெளியிட்டிருந்தது.இந்த செய்திக்கு பிறகு பிரித்தானிய மக்கள் மத்தியில் ஈழத்தமிழர் அவலம் பற்றிய விழிப்பு தோன்றிவரும் இவ்வேளையில் இப்படியான போராட்டங்கள் அதிகாரவர்க்கத்தின் முகத்திரையை கிழிக்க உதவும் என பிரித்தானிய செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

"வியட்நாம் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக அமெரிக்க அரசு முனைப்பாக செயற்பட்ட காலங்களில் இவ்வாறான படங்கள் கொண்ட கவன ஈர்ப்பு போராட்டங்களே அமெரிக்க மக்களின் மனமாற்றத்துக்கும், கொள்கை வகுப்பாளர்களின் கொள்கை மாற்றத்துக்கும் காரணமாக அமைந்தது" என இந்த கவன ஈர்ப்பை பார்த்த, இரண்டாம் உலக யுத்தத்தில் பங்கு பற்றிய ஒரு முதியவர் குறிப்பிட்டார், அவர் மேலும் கூறுகையில் இப்படியான போராட்டங்கள் தொடர்ந் து பல நகரங்களிலும் செய்யப்படவேண்டும் என்றார்.

செய்திகள்,படங்கள் : தமிழ்வின்

இலண்டனில் கவனஈர்ப்பு போராட்டம்SocialTwist Tell-a-Friend

முருகதாசனுக்கு ஜெனீவாவில் உலகத்தமிழர்கள் வீரவணக்கம்


சுவிற்சா்லாந்து ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் ஒன்றுகூடலில் அணிதிரண்ட தமிழர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் புரிந்த 'வீரத் தமிழன்' முருகதாசனுக்கு மலர் வணக்கத்தை செலுத்தியுள்ளனர்.ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கடந்த வியாழக்கிழமை (12.02.09) தீக்குளித்து உயிர்த்தியாகம் புரிந்த 'வீரத் தமிழன்' முருகதாசனுக்கு ஐரோப்பாவின் பல பாகங்களில் இருந்தும் திரண்டு வந்த தமிழர்கள் மலர் வணக்கத்தை செலுத்தினர்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு அருகில் உள்ள தேவாலயத்தில் 'வீரத் தமிழன்' முருகதாசனின் உடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10:30 நிமிடத்துக்கு மலர் வணக்கத்துக்காக வைக்கப்பட்டது. ஈழத்தில் தமிழர்கள் மீது சிறீலங்கா அரசு திணித்துள்ள போரினால் மக்கள் படும் அவலத்தைக் கேட்டும், காணொளியில் கண்டும் அதனால் மனம் நொந்த 'வீரத் தமிழன்' முருகதாசன், தாயகத்தில் நிலவும் அவலத்தை உலக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வரும் நோக்கோடு தன்னையே தீக்கு இரையாக்கிய செய்தி கேட்டு துடித்த தமிழர்கள் தமது வணக்கத்தை செலுத்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே தேவாலயத்திற்கு அணி திரண்டு வந்தனர்.

வணக்கத்தை முடித்துக்கொண்ட மக்கள் தங்களது உள்ளக்குமுறலை உலக சமூகத்திற்கு எடுத்துக்கூற பேரணியில் கலந்து கொள்வதற்கு ஜெனீவா பிரதான தொடரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பூங்காவிற்குச் சென்றனர்.

செய்திகள்,புகைப்படங்கள் : புதினம் இணையம்

முருகதாசனுக்கு ஜெனீவாவில் உலகத்தமிழர்கள் வீரவணக்கம்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகதின் முன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.


இலங்கையில் நடைபெறுகின்ற தமிழின சுத்திகரிப்பை உடனே தடுத்து நிறுத்தக்கோரி பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதுவராலயத்தின் முன்னால் பிரித்தானியத் தமிழ் மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை புதன்கிழமை 10மணிமுதல் மதியம் 2 மணிவரை முன்னெடுக்கப்பட்டது.

குழந்தைகள், முதியவர்கள் என வயது வேறுபாடின்றி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றி தங்களது உணர்வுகளை கோஷமிட்டு வெளிப்படுத்திமை வீதியால் சென்ற அனைவரினதும் நெஞ்சை உருக்குவதாய் அமைந்திருந்தது.
அங்கு கூடியிருந்த மக்கள்:
"இந்தியா இந்தியா இலங்கையில் நடக்கும் போரை நிறுத்து"
"நிறுத்து நிறுத்து ஆயுத உதவியை நிறுத்து"
"நிறுத்து நிறுத்து நிதி உதவியை நிறுத்து"
"உதவு உதவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவு"
"இந்திய அரசே கண்ணைத் திறந்து பலியாகும் தமிழனைப் பார்"
"ஜ நா தடை செய்த கொத்துக்குண்டு தமிழனை கொள்வது தெரியவில்லையா?"
"வேண்டும் வேண்டும் சமாதானம் வேண்டும்"
"வேண்டும் வேண்டும் தமிழீழமே வேண்டும்"
போன்ற பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் தமது ஆதங்கங்களை இந்திய அரசின் துரோகத்தனத்திற்கெதிராக வெளிப்படுத்தினர் .

பிரித்தானிய தழிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் மகளிர் அமைப்பு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு இந்த ஏற்பாட்டை செய்திருந்தனர் ஆர்ப்பாட்டதின் முடிவில் இந்திய தூதுவராலயத்தில் மனு கையளிக்கப்பட்டது.

செய்திகள், புகைப்படங்கள்: தமிழ்வின்

பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகதின் முன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.SocialTwist Tell-a-Friend

தமிழீழத்தை விடிவிக்க ஐரோப்பிய இளையோரே ஒன்றிணையுங்கள்

தமிழீழத்தை விடிவிக்க ஐரோப்பிய இளையோரே ஒன்றிணையுங்கள்SocialTwist Tell-a-Friend

பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் மேற்கொண்ட கவனயீர்ப்பு ஒன்றுகூடல்



பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் அமைப்பினரால் 04-02-2009 அன்று Parliament Square மற்றும் Sri Lankan High Commision முன்னால் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது.

நன்றி : வக்தா TV

பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் மேற்கொண்ட கவனயீர்ப்பு ஒன்றுகூடல்SocialTwist Tell-a-Friend

பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் மேற்கொள்ளும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் இணைந்து மேற்கொள்ளும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்று தமிழர்களின் கரிநாளான 04-03-2009 அன்று இருவேறு இடங்களில் நடைபெற இருக்கிறது.

நடைபெறும் இடங்கள் :
இடம் 1 - Parliament Square 3.30 தொடக்கம்
Nearest Tube Station :Lancaster Gate

இடம் 2 - Sri Lankan High Commision
13, Hyde Park Gardens
LONDON W2 2LU
2.00 மணி தொடக்கம் 5.00 மணிவரை
Nearest Tube Station : Westminster, Exit 5

தொடர்புகளுக்கு: www.tyo-uk.org
தொலைபேசி : 075 8830 9496

முக்கிய அறிவித்தல் : அனைவரும் கறுப்பு நிற ஆடை அணிந்து வருமாறு கேட்கப்படுகின்றனர்.



பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் மேற்கொள்ளும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்SocialTwist Tell-a-Friend

கன்பராவில் அனைவரும் அணி திரளுங்கள்

அவுஸ்திரேலியாவின் முக்கிய மாநிலங்களாகிய, சிட்னி, மெல்பன் ஆகிய இடங்களில் இருந்து வரும் வியாழக்கிழமை பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி கன்பராவிற்க்கு திரண்டு காலை 10 மணிக்கு கன்பராவில் இயக்கும் அவுஸ்திரேலிய தேசிய பாராளுமன்றத்தின் முன் கூட்டமொன்று நடைபெற இருக்கின்றது. அனைவரும் திரளுங்கள் தாயக மக்களுக்காக !!!


கன்பராவில் அனைவரும் அணி திரளுங்கள்SocialTwist Tell-a-Friend