கடையடைப்புக்கு தடையில்லை-தமிர்களை ஏமாற்றும் தமிழக அரசுக்கு விழுந்த இன்னோர் அடி

இலங்கைப் பிரச்சனை தொடர்பாக புதன்கிழமை அன்று தமிழக கட்சிகள் நடத்தவுள்ள "பந்த்" ற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதன்கிழமை இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்தப் போராட்டத்துக்கு தமிழகத்தின் ஆளுங்கட்சிகள் திமுக-காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சியான அதிமுக தவிர மற்றவர்கள் அனைவரும் முழுமையான ஆதரவைத் தந்துள்ளனர்.அரசுப் பணியாளர்கள் தொடங்கி, பல்வேறு தன்னார்வ அமைப்புகள் வரை தீவிர ஆதரவை தாமாகவே முன்வந்து அளித்துள்ளனர்.ஆனால் இந்த முழு அடைப்பை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும், முறியடித்தே தீருவோம் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். போலீசாருக்கும் அதற்கான முழுமையான அடக்குமுறை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.இந்நிலையில் டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் இந்த முழு அடைப்புக்கு எதிராக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. சென்னையைச் சேர்ந்த ஜெயநீதி சரவண சதீஷ்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் நடைபெறவுள்ள பந்த் தொடர்பாக எந்த தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இதில் நீதிமன்றம் என்ன செய்ய முடியும். அது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவற்கான உரிமை என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் தனது தீர்ப்பில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான அந்த பெஞ்ச் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நடைபெறவுள்ள பந்த் தொடர்பாக எந்த தடை உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. இதில் நீதிமன்றம் என்ன செய்ய முடியும். அது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான உரிமை. முழு அடைப்புக்கு எந்தத் தடையும் கிடையாது. இதற்காக இவ்வளவு அவசரமாக மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியமென்ன வந்தது?
என்று அந்தத் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த மனு மீதான விசாரணை வரும் பெப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடையடைப்புக்கு தடையில்லை-தமிர்களை ஏமாற்றும் தமிழக அரசுக்கு விழுந்த இன்னோர் அடிSocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்