இலங்கைப்பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம்

Box No 620 State House,
179 Station Road,
Harrow,
Middlesex,
HA1 2AE
அன்பான தமிழ் இறக்குமதியாளர்களே, வர்த்தகர்களே !

சர்வதேச முண்டுகொடுப்போடு எம் உறவுகள் மீது தினமும் குண்டுமழை பொழிந்து, நூற்றுக்கணக்கில் எம் மக்களை தினமும் கொன்றொழிக்கும் ஸ்ரீலங்கா அரசின் மீது பெரும் பொருளாதார யுத்தம் ஒன்றை முன்னெடுக்க வேண்டிய தேவையை காலம் எங்கள் கைகளில் விட்டிருக்கிறது. சிங்களம் இன்று தனது முழு மனித பொருளாதார வளங்களையும் திரட்டி இக்கொடிய போரை எம்மக்கள் மீது திணித்து வருகின்றது. இதன் மூலம் ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இந்நிலையில் நாம் கொடுக்கும் சிறிய அழுத்தமும் அவனது வீழ்ச்சியை விரைவாக்கும் என்பது பொருளாதார நிபுணர்களின் ஒருமித்த கருத்து.உலகப்பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம், போர்ச்செலவு போன்றவற்றினால் நாள்தோறும் வற்றிச் செல்லும் அந்நியச் செலவாணியை ஈடு செய்ய சிங்களம் வெளிநாட்டில் வதியும் ஸ்ரீலங்கர்களிடமிருந்து முதலீடாகவும், கடனாகவும் பெருமளவு நிதியை சேர்க்க திட்டம் தீட்டி செயற்பட்டு வருகிறது.

பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் சகல தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து BOYCOTT SRI LANKA எனும் போராட்ட இயக்கத்தை வித்திட்டு தொடர்ந்து பலசெயற்திட்டங்களை செயற்படுத்தவும் சிறிலங்காவுக்கு இலாபம் ஈட்டி தரும் தேயிலை, ஆடை ஏற்றுமதி, உல்லாசப்பயணத்துறை, SRILANKAN AIRLINES மற்றும் சிறிலங்காவில் இருந்து இறக்கப்படும் பொருட்களை பகிஷ்கரிக்க நாம் எம்மக்களையும் வேறு இன மக்களையும் கோரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். ஏற்கனவே ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தை வீழ்த்த பல்வேறு நாடுகளில் சுயமாகவும் அமைப்பு ரீதியாகவும் மக்கள் செயற்படத் தொடங்கி உள்ளதை நீங்கள் அறிவீர்கள்.நீங்கள் சிறிலங்காவிலிருந்து இறக்குமதி செய்கின்ற ஒவ்வொரு பொருட்களும் அந்த அரசுக்கு பெரும் அந்நியச்செலாவணியை ஈட்டி தருகிறது என்பதை அறிவீர்கள். இந்தப் பணம் மீண்டும் எங்கள் மக்கள் மீதே குண்டுகளாய் விழுகின்ற கொடுமையும் நடக்கிறது. ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராய் வீதிகளில் இறங்கி பெரும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கின்ற நாமே, எம் மக்கள் மீது வீசுகிற ஒவ்வொரு குண்டுக்கும் மறைமுகமாக பணம் கொடுத்து உதவலாமா என்பதை தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள்.

கடந்த காலங்களில் எம் தாயகம் மீது பற்றுக் கொண்டு நீங்கள் பல வழிகளிலும் ஆற்றிய பங்கை நாம் அறிவோம். இதன் அடுத்த கட்டமாக நாம் முன்னெடுக்கும் பொருளாதார பகிஷ்கரிப்புக்கு உங்கள் அதரவை உறுதி செய்யுங்கள்.இந்த பகிஷ்கரிப்பு போராட்டம் ஸ்ரீலங்கா அரசின் பொருளாதார நலன்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்படுகின்றது என்றபோதும், இதனால் உங்களுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார இழப்புக்களையும் நாம் உணர்கின்றோம். எனினும், சிறீலங்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மாற்றாக, வேறு நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் இந்த தற்காலிக இழப்புக்களை குறுகிய காலத்தில் நீங்கள் ஈடுகட்டமுடியும் அல்லவா ? ஏற்கனவே பல வர்த்தக நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து ஸ்ரீலங்கா பொருட்களின் விற்பனையை நிறுத்தியுள்ளமை இப்பகிஷ்கரிப்பிற்கான பங்களிப்பை உறுதிசெய்துள்ளது. எனவே, நாம் முன்னெடுத்துள்ள இந்த பகிஷ்கரிப்புக்கு உங்கள் ஆதரவு கிட்டுமென உறுதிகொள்கிறோம்.இப்பாரிய பகிஷ்கரிப்பை மட்டக்களப்பு மாநகரத்தில் இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக, அன்னை பூபதியினால் பட்டினி போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளான 19-03-09 வியாழன் அன்று நடைமுறைப்படுத்த உள்ளோம். எம்மண்ணில் தினமும் கொன்று குவிக்கப்படும் அப்பாவி மக்களின் பெயரால் இதனை நாம் உங்களிடம் உரிமையோடும் அன்போடும் வேண்டி நிற்கின்றோம்.

நன்றி.

BOYCOTT SRILANKA
நடவடிக்கை குழு

தொடர்புகளுக்கு -
075 2982 0565 - 075 2982 0566

இலங்கைப்பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம்SocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்