பிரித்தானியாவில் இந்திய தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

சிறிலங்கா அரசுக்கு இந்தியா வழங்கி வரும் ஆயுத மற்றும் மனித வள உதவிகளை கண்டித்து பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளனர்.பிரித்தானிய தமிழ்ப் பெண்கள் ஏற்பாடு செய்துள்ள இக்கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:00 மணி தொடக்கம் பிற்பகல் 4:00 மணிவரை நடைபெறவுள்ளது.
நிகழ்வு நடைபெறும் இடம்: India House, Aldwych, London, WC 2B 4NA (Nearest Tube Stations: Temple, Holborn, Charing cross)

  • தமிழினப் படுகொலைகளைப் புரியும் மகிந்த அரசுக்கு உதவிகளை வழங்காதே
  • மகிந்த அரசுக்கான இராணுவ உதவிகளை நிறுத்து
  • வன்னியில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்ற உதவி புரியாதே
  • தமிழீழத் தாயகமே எமது முடிவு
  • எமது தேசியத் தலைவர் பிரபாகரன்
  • தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளதால் காலத்தின் தேவை கருதி பெருந்திரளாக மக்களை ஒன்றுகூடுமாறு தமிழ் மகளிர் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்திகள் : புதினம்

பிரித்தானியாவில் இந்திய தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்SocialTwist Tell-a-Friend

1 பின்னூட்டம்:

Anonymous said...

war of india

http://www.puthinam.com/full.php?2beIAdOib0bc9BqVL30ecdA0ir30cc2q0RoS34d247Po5c4a338RPd64d4eASI9jbd0

e01jZfEde

காங்கிரஸ் நம்முடையா உளவாளி பிரிவை மருத்துவர்கள்வுடன் வேவு பாக்க அனுப்பி உள்ளதாக தகவல். இந்த முலம் இலங்கை ராணுவத்திற்கு உதவ முடியுமாம்
இது இந்தியாவின் போர்; சிறிலங்கா ஒரு பொம்மை மட்டுமே.
இந்தப் போர் ஒரு முடிவுக்கு வருவதற்கு இந்தியா விடப்போவதே இல்லை: அதாவது, சிறிலங்கா விரும்பினாலும் கூட இந்தப் போர் நிற்கப்

போவதில்லை.
இந்தியப் படை அதிகாரிகள் - வன்னிப் போர் முனையில் - வெறுமனே பிரதான கட்டளை மையங்களில் மட்டுமன்றி - நேரடியான போர்ச்

செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றனர்.
இந்திய உளவு வானூர்திகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை 24 மணி நேரமும் கண்காணித்தபடியே உள்ளன.
இந்திய கடற் கண்காணிப்பு கதுவீ (Radar) கருவிகள் வங்காள வரிகுடாவை 24 மணித்தியாலமும் கண்காணித்த வண்ணம் உள்ளன.
இந்தியாவின் கண்களுக்கு தப்பி ஒரு மீன்பிடிப் படகு கூட அங்கு நீந்த முடியாது.
ஒரு புறத்தில் போரை நடத்திக்கொண்டு - மறுபுறத்தில், அனைத்துலக நாடுகளிடம் இருந்து வரக்கூடிய அழுத்தங்கள் எல்லாவற்றையும்

முறியடிப்பதற்கான இராஜதந்திர ஆலோசனைகளையும் சிறிலங்காவுக்கு வழங்குகின்றது இந்தியா
பொருளாதாரம் சீரழிந்து சிறிலங்கா வீழ்ந்தாலும், அதனை முட்டுக்கொடுத்து தூக்கிவிட்டு - இந்தியா இந்தப் போரை நடத்தும்.
ஆட்பலம் குறைந்து சிங்களப் படை தவித்தாலும், தன் படைகளை இந்தியா போருக்கு அனுப்பும்
நேற்றும் இன்றும் நாளைக்கும், இனி என்றும் தமிழர்களைப் பழி தீர்த்துக்கொண்டே இருக்கப் போகின்றது காங்கிரசின் இந்தியா.
ஆனால் - தமிழர் இனப் படுகொலையை நிகழ்த்துவது சிறிலங்கா அல்ல; அது இந்தியாவே என்பதை நாம் உணர வேண்டும்.
சிறிலங்கா இப்போது வெறும் பொம்மை மட்டுமே; இது இந்தியா இயக்கும் போர் என்பது எல்லோருக்குமே தெரியும்.

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்