தமிழினத்தை கருவிலேயே அழிக்கின்றது சிங்களப் பேரினவாதம்: கர்ப்பிணிப் பெண்கள், சிசு உட்பட 61 தமிழர்கள் இன்று படுகொலை; 164 பேர் படுகாயம்

வன்னியில் சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய கொடூரமான எறிகணைத் தாக்குதல்களில் கர்ப்பிணிப் பெண்கள், சிசு உட்பட 61 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 164 பேர் படுகாயமடைந்துள்ளனர்.மாத்தளன் கப்பல் வீதி, அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் ஆர்பிஜி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

வலைஞர்மட பகுதியை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று நடத்திய தொலைதூர துப்பாக்கிச் சூட்டின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை துப்பாக்கி ரவை துளைத்துச் சென்றது.இதில் 20 வயதுடைய 8 மாத கர்ப்பிணிப் பெண்ணான சந்திரகுமார் கலைச்செல்வி என்பவரே படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்தார்.

இதேவேளையில் 27 வயதுடைய 6 மாத கர்ப்பிணிப் பெண்ணான ஜெகதீபன் சோதிமலர் என்பவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் 25 வயதுடைய 9 மாதம் கர்ப்பிணிப் பெண்ணான க.பாசமலர் என்பவரின் வயிற்றைத் துழைத்த ரவை, அவரின் சிசுவின் தலையைத் தாக்கியுள்ளது.இதனால், வயிற்றில் இருந்த அந்த சிசு உயிரிழந்து விட்டது. தற்போது ஆபத்தான நிலையில் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், 3 கர்ப்பிணிப் பெண்கள் நிகழ்விடத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர்களை உறுதிப்படுத்த அந்த இடத்தில் ஆட்கள் எவரும் இல்லை. அனைவரும் சிதறி ஓடிவிட்டனர்.ஆனாலும், அந்த இடத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் உயிரிழந்த, கருவுற்ற பெண்களின் உடலங்களை எடுத்து புதைத்தனர்.

இதேவேளையில் மருத்துவமனையில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் உடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.சிறிலங்கா படையினரின் இன்றைய தாக்குதல்களில் 15 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 40 சிறுவர்களும் காயமடைந்துள்ளனர்.இன்றைய தாக்குதலில் மாத்தளன் பகுதியிலேயே அதிகளவிலான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேநேரம், மாத்தளன் கப்பல் வீதியில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பணியாளரான 27 வயதுடைய பாலசிங்கம் சதீஸ்குமார் என்பவரும் இன்றைய தாக்குதலில் படுகாயமடைந்தார்.அத்துடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் சிறீதரன் என்பவரின் மனைவியான 25 வயதுடைய கேதீஸ்வரி என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரம் வருமாறு:

  1. கருணாகரன் சாரதாதேவி (வயது 40)
  2. நீக்கிலாப்பிள்ளை லைனாரட்ணராஜா (வயது 47)
  3. சரவணமுத்து கணபதிப்பிள்ளை (வயது 65)
  4. அந்தோனி அருளானந்தம் (வயது 64)
  5. ஜசிந்தா (வயது 19)
  6. சிறிகாந்தன் யதுர்சன் (வயது 13)
  7. இராசதுரை வசந்தகுமார் (வயது 36)
  8. வேலுப்பிள்ளை இரத்தினசிங்கம் (வயது 48)
  9. நடராசா ராகினி (வயது 40)
  10. சண்முகநாதன் இராசயோகம் (வயது 40)
  11. சிறிதரன் ஜெகதீஸ்வரி (வயது 35)
  12. ஞானசீலன் கோகிலா (வயது 16)
  13. தங்கவேலு கிருஸ்ணமூர்த்தி (வயது 49)
  14. வசந்தகுமார் நந்தினி (வயது 33)
  15. கலைச்செல்வி (வயது 20)
  16. யோகராசா புஸ்பராணி (வயது 40)
  17. சந்திரசேகர் சசிகுமார் (வயது 25)
  18. வியஜகுமார் தமிழினி (வயது 02)
  19. மகாலிங்கம் தேனஜா (வயது 32)
  20. சசிக்குமார் சுதாநந்தினி (வயது 35)
  21. சிவன்பன் ஜானகி (வயது 20)
  22. கணேஸ் சந்திரமோகன் (வயது 39)
  23. சிவகுமார் உதயமலர் (வயது 38)
  24. தர்மலிங்கம் பத்மாவதி (வயது 40)
  25. பஞ்சாட்சரம் (வயது 40)
  26. கிருசிகா (வயது 09)
  27. இராசதுரை வசந்தகுமார் (வயது 36)
  28. சிறிதரன் கேதீஸ்வரி (வயது 25)
  29. சிறிகாந்தன் யதுசன் (வயது 13)
  30. யோகராசா புஸ்பராணி (வயது 40)
  31. மெய்யழகன் வசந்தினி (வயது 25)
  32. இராசதுரை ரஞ்சினி (வயது 23)
  33. சுதந்திரராசா இராசாத்தி (வயது 50)
  34. செல்வலிங்கநாதன் கிருசிகா (வயது 09)
  35. சுப்பிரமணியம் திருநாவுக்கரசு (வயது 08)
  36. வேலாயுதம் சுதர்சினி (வயது 11)
  37. வேலாயுதம் மகேஸ்வரி (வயது 48)
  38. பரமாநந்தம் முத்தலிங்கம் (வயது 48)
  39. தர்மலிங்கம் பத்மாவதி (வயது 40)
  40. சிவகுமார் உதயமாஸ் (வயது 38)
  41. பஞ்சாட்சரம் (வயது 40)
  42. வேலாயுதம் தாரணி (வயது 21)
  43. செல்வரட்ணம் தியாநேசன் (வயது 43)
  44. கணேஸ் கமலேஸ்வரி (வயது 46)
  45. செல்லத்துரை யோகெஸ்வரன் (வயது 55)
  46. சந்திரகுமார் கலைச்செல்வி (வயது 08 மாதங்கள்)
  47. சுப்பிரமணியம் சுஜிபா (வயது 11)
  48. சரவணமுத்த செல்லத்துரை (வயது 48)
  49. செல்வலிங்கம் (வயது 55)
  50. தங்கராசா யொகேஸ்வரி (வயது 39)
  51. சரண்யா (வயது 12)
  52. பாய்க்கியம் (வயது 45)
  53. சந்திரன் கொளரியம்மா (வயது 29)
  54. அருளானந்தம் அந்தோனி (வயது 75)
  55. நடராசா ராசகிளி (வயது 35)
  56. அப்பன் ராசயோகம் (வயது 40)
  57. சிறிதரன் யெகதீஸ்வரி (வயது 30)
  58. கணேஸ் கிருபாகரன் (வயது 16)
  59. செல்வராசா மனோன்மணி (வயது 70)
  60. பெரியசாமி தமிழ்ச்செல்வி (வயது 13)
  61. ஒன்றரை அகவை கார்த்திகா (வயது 02)
ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

செய்திகள் : புதினம்

தமிழினத்தை கருவிலேயே அழிக்கின்றது சிங்களப் பேரினவாதம்: கர்ப்பிணிப் பெண்கள், சிசு உட்பட 61 தமிழர்கள் இன்று படுகொலை; 164 பேர் படுகாயம்SocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்