அவுஸ்திரேலியாவில் தொடரும் போராட்டம்


வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்தி வரும் மனிதப் பேரவலத்தை உடனடியாக நிறுத்தக் கோரியும், உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நான்கு தமிழ் இளைஞர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டங்களை தொடங்கவுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் உட்பட நால்வர் உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்கவிருக்கின்றனர்.
மெல்பேர்ண் நகரில் உள்ள DANDENONG பிராந்தியம் PULTNEY STREET ல் DANDENONG PARK ல் ச.ரமணா, ச.சந்திரன், ஊடகவியலாளரான ப.தெய்வீகன் மற்றும் கோ.பானு ஆகியோர் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்குகின்றனர்.
இவர்கள் முன்வைத்துள்ள நான்கு கோரிக்கைகள் வருமாறு:-
  1. உடனடியாகவும், நிரந்தரமாகவும் நடைமுறைப்படுத்தக் கூடியதுமான போர் நிறுத்தம் மேற்கொள்ளக் கோரி சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.
  2. வன்னியில் உள்ள தமிழ் உறவுகளுக்கு அத்தியாவசியமான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவி ஆகிய அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும் வகையில் சேர்ப்பிக்கப்பட வேண்டும்.
  3. தமிழ் மக்கள் சுதந்திரமாக தங்கள் இருப்பிடங்களை தேர்ந்தெடுக்க அனுமதி கொடுக்கப்பட வேண்டும்.
  4. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் உடனடியான பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும்.
மேற்படி நான்கு அம்சக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வலியுறுத்தும் வரை இந்த உண்ணாநிலை போராட்டத்தில் நான்கு தமிழ் இளைஞர்களும் தொடரவிருக்கின்றனர்.
இவர்களின் உண்ணாநிலை போராட்டத்துக்கு மெல்பேர்ண் வாழ் தமிழ் உறவுகள் ஆதரவு அளித்து இலட்சியத்தின் வெற்றிப்பாதைக்கு உறுதுணையாக வந்து கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

செய்திகள்: தமிழ்வின்

அவுஸ்திரேலியாவில் தொடரும் போராட்டம்SocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்