பிரித்தானியா சவுத் பாங்க் பல்கலைக் கழக மாணவர்களால் 24மணிநேர உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கையில் போரை நிறுத்தக் கோரியும், உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரியும், இருபத்தி நான்கு மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் ஆரம் பிக்கப்பட்டுள்ளது.31/03/2009மதியம் பன்னிரெண்டு மணிக்கு பிரித்தானியா சவுத் பாங்க் பல்கலைக் கழக மாணவர்களால், மாணவர்கள் வெகு உர்ச்சாகமாக தேசியக் கொடியை உரிய மரியாதையுடன் அணிவகுத்து நின்று, அகவணக்கத்துடன், தேசியக் கொடிப் பாடல் இசைக்க தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

அதன் பின்னர் மறைந்த முன்னால் பிரித்தானிய மாணவரும் ஈகப் பேரொளியுமான முருகதாஸிற்கு சுடர் ஏற்றி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். பின்பு மாணவர்கள் அனைவரும் மலர்தூவி தங்கள் மரியாதையை செலுத்தினர்.மாணவர்கள் அனைவரும் வணக்கம் செலுத்திய பின்னர் வேற்று இன மாணவாகளுக்கு இலங்கையில் இனவாத சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் தமிழின அழிப்புப்போர் பற்றியும், தமிழீழ வரலாறு பற்றியும் எடுத்துரைத்தனர்..
அதே வேளை சிங்கள அரசின் தமிழின அழிப்பை நிறுத்துமாறு பிரித்தானிய தலைமை அதிபர் கோல்டன் பிரவுன் அவர்களுக்கு மாணவர்களால் அஞ்சல் அட்டைகளில் அவர்களின் விபரங்கள் நிரப்பப்பட்டன.பல்கலைக் கழகம் முழுவதும் தமிழின அழிப்பு பற்றியும் எமது பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்றும். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரியும் பல பதாதைகள் ஒட்டப் பட்டுள்ளன.

இதன் தொடக்கமாக மாணவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தி உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவிருந்த பொழுது பல்கலைக் கழகம் தேசியக் கொடியை ஏத்துவதற்கு அனுமதி மறுத்தது. மாணவர்கள் நிர்வாகத்திடம் தாங்கள் நிட்சயம் எங்கள் தேசியக் கோடியை ஏத்துவோம், இது எங்கள் தேசியக் கொடி என்று வாதாடினர். மாணவர்களைக் கட்டுப் படுத்த முடியாத நிர்வாகம் காவல்த்துறை உதவியை நாடினர். விரைந்து வந்த காவல்த் துறையினரிடம் மாணவர்கள் தங்கள் போராட்டம் தொடர்பாகவும் தேசியக் கொடி தொர்பாகவும் விளக்கி கூறினர்.பின் காவல் துறையினர் அனுமதி அளித்தபின் பல்கலைக் கழக நிர்வாகமும் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் : பதிவு

பிரித்தானியா சவுத் பாங்க் பல்கலைக் கழக மாணவர்களால் 24மணிநேர உண்ணாவிரதப் போராட்டம்SocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்